அந்நாளையில் பெரும் தோட்டமாக இருந்த
இப்பகுதி மிக குறுகிய காலத்தில் விலை உயர்ந்த மாடி வீடுகள் உருவான குடியிருப்பு
பகுதியாக மாறியது காலத்தின் மாற்றமாகும்..
கிட்டத்தட்ட 200 க்கு மேல் புதிய மாடி வீடுகள்..இன்னும் நூற்றுக்கணக்கான புதிய
வீடுகள் கட்டப்படுகின்றன.மேலும் மக்கள் குடிவந்த வண்ணம் இருக்கின்றனர்.பத்து
தெருக்களுக்கு மேல் அமைந்துள்ளது ..பக்கத்தில் கிரஷண்ட் ஸ்கூலும் உள்ளது
..
அருமையான மக்கள் ,அமைதியான சூழல் .இத்தனை இருந்தும்
இந்தப்பகுதிக்கு நகராட்சி மூலம் எந்த ஒரு வாழ்வாதாரப் பயனும் இதுவரை கிடைக்கவில்லை
..
என்ன காரணம் என கேட்டால் இந்த பகுதி
இன்னும் முனிசிபல் அப்ருவல் ஆகவில்லையாம்..அதனால் குடிநீர் குழாய் வசதி,தெரு மின்விளக்கு கம்பங்கள், தெருவிளக்கு,ரோடு வசதி ,,போன்ற அடிப்படையான தேவைகள் நகராட்சி
மூலம் பங்களா தோட்ட மக்களுக்கு இதுவரை கிடைக்காமல் இருப்பது பல அல்லல்களை
இன்னல்களை தருகிறது ..
குறிப்பாக சுத்த சுகாதார வசதியும்
கிடையாது . வீட்டுக்கு மின் இணைப்பு கம்பங்கள் கூட அவரவர் சொந்த செலவில் தான்
நட்டப்படுகின்றன...
புகைப்படத்தில் காண்பது பங்களா
தோட்டத்து எல்லா தெரு முனைகளிலும் குப்பைகள் கோபுரமாய் குவிந்து கிடந்தாலும்
நகராட்சி அள்ளுவதுக் கிடையாது .அதையும் நாங்கள் தான் கூட்டிப் பெருக்கி எரித்து
விடுகிறோம்..வார்டு கவுன்சிலரோ கண்டுக் கொள்ளாமல் கவுன் அணிந்து சுற்றுகிறார்..
இதற்கு யாரும் முயற்சி செய்வது போலும்
தெரியவில்லை ..அவரவர் இருக்கின்ற காலி மனையை அதிக விலைக்கு எப்படி விற்பது என்ற
செயல்பாட்டில்தான் உள்ளனர்...
மேலும் நகராட்சிக்கு அதிகமான வருவாய்
தரக்கூடியது இப்பகுதி..பாதாள சாக்கடை திட்ட பணி இந்த பகுதியில் இதுவரை நடக்கா
விட்டாலும் அதற்கான தொகை ரூபாய் 5000 எல்லா
வீடுகளிலும் வசூல் செய்யப்பட்டு விட்டது ..காரணம் அதை முதலில் செலுத்தினால்தான்
பட்டா பெயர் மாற்றுதல், சப்டிவிஷன்,புதிய வரி போடுதல் இவைகள் செய்ய முடிகிறது
..இங்கு கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு
புதிய வரியாக வருடத்திற்கு பெருந்தொகை நிர்ணயிக்கப்பட்டு (((ஒரு வீட்டிற்கு
குறைந்தது ரூபாய் 1400 ல் இருந்து 5000 வரை)) வசூல் செய்யப்படுகிறது..லஞ்சம் கிஞ்சம் எல்லாம் அதிகம்
கொடுத்தாலும் பழைய வரியில் இருந்து புதிய வரி பத்து மடங்கு அதிகம்
செலுத்துகிறோம்.முனிசிபல் அப்ருவல் இல்லாததால் அடிப்படை வசதி செய்து தராத
நகராட்சி நம்மிடம் வரியைத் தீட்டிப் பிடுங்குகிறது..நாமும் வாய் மூடி செலுத்தி
வருகிறோம் ..
அப்ருவல் இல்லையென்று வரி போடாமல் இருக்க வேண்டியதுதானே..?
நகராட்சி மூலம் நாம் அனைத்து அடிப்படை
வசதிகளை உரிமையோடு தட்டுக் கேட்டுப் பெற பங்களா தோட்ட மக்கள் எல்லாம் ஒன்று கூடி
ஓர் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் குரல் கொடுத்தால் நிச்சயம் காரியம் நடக்கும்
..தேர்தல் வந்தால் நாம் புறகணிக்க வேண்டும் .வார்டு கவுன்சிலர் மேல் புகார்
கொடுக்க வேண்டும் ..வரி கொடா இயக்கத்தை துவக்க வேண்டும் ..ஓட்டுக் கேட்டு
வருபவரை ஓட ஓட விரட்ட வேண்டும் ..
இப்படி விழிப்புணர்வு பெற்றால்தான்
செழிப்புணர்வு பெற முடியும் ..மழைக்காலத்தில் எத்தனை இன்னல்களை சந்திக்கின்றோம்
ரோடு இல்லாததால் எத்தனை அல்லல்களை சுமக்கின்றோம்..இரவில் தெரு விளக்கு
இல்லாததால் நடமாட எப்படி எல்லாம் பயப்படுகின்றோம்.நாய்கள் பன்றிகள் இவற்றின்
தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ஆபத்தும் விளைகிறது..
பங்களா
தோட்டத்து மக்களின் அவல நிலையை நாகை நகராட்சியும் நாகூரை சேர்ந்த நகராட்சி துணைத்
தலைவர் ,மற்றும் நகராட்சி உறுப்பினர்கள்
கவனத்தில் கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தர முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை
உங்கள் முன் வைக்கின்றோம் முதலில் குவிந்துக் கிடக்கும் குப்பையை அகற்ற ஏற்பாடு
செய்ய வேண்டும் ..வாழ்க நகராட்சி!!வளர்க சீச்சீ!!
நன்றி (செய்தியும் & புகைப்படமும் ): கவிஞர் நாகூர் காதர்ஒலி..
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன