நாகூர் ஆட்டோ கேப்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பாக புதிய கட்டண விபரம் வெளியிடபட்டுள்ளது.
இதில் நாகூர் லோக்கல் கட்டணம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. நாகூரை சுற்றிஉள்ள ஊர்களுக்கு உள்ள கட்டண விபரம் வெளியிடபட்டுள்ளது.
இதில் கவனிக்கபட வேண்டிய விஷயம் என்னவென்றால் இவர்கள் வெளியிட்ட நோட்டீஸ்ல் " இன்றைய தினம் வரை அனைத்து ஆட்டோ கேப்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நஷ்டத்தில் தான் ஆட்டோவை இயக்கி கொண்டு இருக்கிறோம் " என்று குறிப்பிட்டுள்ளனர்.
என்ன கொடுமை இது ?? இது எவ்வளவு பெரிய அபத்தம் .. இவ்வளவு நாளா எந்த இலாபமும் இல்லாமல் தான் நீங்கள் எல்லாம் ஆட்டோ ஓட்டுகிறீர்களா..?
இது சாத்தியமா ?...
ஆட்டோ கட்டணம் ஏற்றுவதற்கு ஏன் இப்படி ஒரு பொய்...
போதிய வருமானம் இல்லை ஆதலால் கட்டணம் ஏற்றப்படுகிறது என்று போட வேண்டியது தானே ...
சரி அது இருக்கட்டும் ...
பீச்சுக்கு , ரயில்வே ஸ்டேஷனுக்கு , பங்களா தோட்டத்திற்கு லோக்கல் கட்டணம் 40 ருபாய் வாங்குகிறீர்களே இது சரியா ? சகோதர்களே...
இவையெல்லாம் நாகூரில் இல்லையா ?..
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன