(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, June 19, 2013

நாகூர் மகாலெட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிக்கு அரசு தடை

நாகை மாவட்டத்தில் 13 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் உரிய அனுமதியின்றி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அந்தப் பள்ளிகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அனுமதி பெறாமல் செயல்படும் பள்ளிகளைக் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோரைக் கொண்ட குழு மூலம் நாகை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில், நாகை மாவட்டத்தில் 13 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் உரிய அனுமதியின்றி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த 13 பள்ளிகளின் செயல்பாட்டுக்கும் மாவட்டக் கல்வி நிர்வாகம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.


தடை செய்யப்பட்ட பள்ளிகள் விவரம்:

கொட்டாரக்குடி பிரைட் இன்டர்நேஷனல் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி,

மருங்கூர் பழனிவேல் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில்,

திருவெண்காடு விவேகானந்தா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, 


சுவாமி விவேகானந்தா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, 

அர்ரஹ்மான் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி.

 திருஇந்தளூர் ஐடியல் கிட்ஸ் பள்ளி, 


மகாதானத்தெரு யூரோகிட்ஸ் பள்ளி, 

சீனிவாசபுரம் மதர் கிட்ஸ் பள்ளி,

சோழசக்கரநல்லூர் குட்லக் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,

நீடுர் அல் பிர்ல்லியண்ட் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி.

நாகை பிளே ஸ்கூல்,

நாகூர் மகாலெட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,


கீழையூர் தாமரை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி 

ஆகிய 13 பள்ளிகள் அனுமதியின்றி செயல்பட்டதன் காரணமாக, செயல்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


மேலும் நாகூர் வினித் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,

வேதாரண்யம் குரவப்புலம் விஜயலெட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஆகிய 2 பள்ளிகளையும் நடத்த விருப்பமில்லை என அந்தப் பள்ளிகளின் நிர்வாகத்தினர் தெரிவித்ததன் காரணமாக, 2 பள்ளிகளும் மூடப்படுகிறது

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...