(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, October 26, 2013

சகோ.அல்தாபியின் பேட்டியும் - சர்ச்சையும் - சமாளிப்பும்.

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பா.ஜா.க.வுக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவாம்..!!!  என்ற செய்தி வெளியானதுடன்

நேரம் பார்த்து காத்திருந்தவர்களுக்கு அல்வா சாப்பிட்ட திருப்தி...

ததஜ அதிருப்தியாளர்கள் முகநூலில் தங்களால் முடிந்த அளவிற்கு தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தை விமர்சித்து விளாசினார்கள்..

அதிலும் சிலர் ஒரு படி மேலே போய் ததஜ தலைமை ப.ஜா.க விற்கு ஆதரவு என்று பகிரங்கமாக அறிவித்து விட்டது என்றெல்லாம் ஸ்டேட்டஸ் போடுகிற அளவிற்கு சென்றதை காணமுடிந்தது..

ததஜ வின் மேல் கொண்ட காழ்புணர்ச்சியின் காரணமாக சிலர் வெளியான செய்தியை திரித்தும் , மிகைபடுத்தியும் பேசி வருகிறார்கள் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் இவ்விசயத்தில் தவறான போக்கை கையாண்டுள்ளது என்பதும் உண்மை.

10% இட ஒதுக்கீடு கொடுத்தால் பாஜாக விற்கு ஆதரவு என்று தௌஹீத் ஜமாஅத் அறிவித்து விட்டதாக செய்தி வெளியானதற்கு முதல் காரணம் சத்தியம் தொலைகாட்சியில் வெளியான செய்தி தான்.

ததஜ மட்டுமல்ல எந்த இஸ்லாமிய அமைப்பும் பிஜெபிக்கு ஆதரவு அளிக்க முன்வராது .. மார்க்க விசயத்தில் கருத்து வேற்றுமை இருந்தபோதும் .. முஸ்லீம்களின் ரத்தம் குடிக்கும் பிஜேபி யோடு எந்த ஒரு முஸ்லீம் அமைப்பும் ரத்தபந்த உறவை ஏற்படுத்தி கொல்லாது என்பது ஊர் அறிந்த ஒன்று... இருப்பினும் எப்படி ததஜ இப்படி அறிவித்தது  எங்கே தவறு ஏற்பட்டது என்று பார்த்தால் ...

தொலைகாட்சி ஒன்றுக்கு ததஜ நிர்வாகிகளில் ஒருவரான அல்தாபி கொடுத்த பேட்டி தான் இந்த சர்ச்சைக்கு காரணம்....

அவர் கும்பகோணத்தில்  தொலைக்காட்சி நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது, நிருபர் பா.ஜ.க இடஒதுக்கீடு கொடுத்தால் ஆதரிப்பீர்களா ? என்று கேள்வி கேட்க.

அதற்கு அல்தாபி கூறிய பதில்  :

பா.ஜ.க முஸ்லீம்களுக்கான  இடஒதுக்கீட்டை  ஆரம்பத்தில் இருந்து எதிர்பவர்கள் .. எனவே ஒரு வாதத்திற்கு சொல்லப்படலாம் ஒரு வேலை அது நடக்கும் என்று சொன்னால் (10% இட ஒதுக்கீடு பாஜக கொடுத்தால்  )மற்ற விசயங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அதற்கு ஆதரவு தெரிவிப்பதற்கும் முஸ்லீம்கள் தயாராகவே இருகிறார்கள் ஏனென்றால் முஸ்லீம்களின் கல்வி , பொருளாதார சூழ்நிலை அந்த அளவிற்கு அகலபாதாளத்தில் இருக்கிறது.

இந்த நன்மையை செய்ததற்க்காக  இந்த ஒரு தேர்தலில் வாக்களித்து (பா.ஜ.க)வெற்றி பெற செய்வதற்கு கண்டிப்பாக நாங்கள்  வாக்களிப்போம்.

இது தான் அவர் பேசியதாக டி.வி யில் வந்தது ...

இதை எந்த வகையில் பார்த்தாலும் அல்தாபி பேசியது தவறு , அவசியமற்றது , தேவையற்றது தான்.

இந்நிலையில்  தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தலைமை அல்தாபி பேசியது தவறு அதை திரும்பபெறுகிறோம் என்று தெளிவான மறுப்பை கூறி விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது..

இதற்கு  ததஜ உடனடியாக இணையத்தில் விளக்கம் அளித்தது..மேற்கண்ட விளக்கம் அல்தாபியின் கருத்து அவரின் தனிபட்ட கருத்து என்று வாதிட உதவுமே தவிர .. அல்தாபியின் கருத்திற்கு மறுப்பாக அமையாது.

மேலும் செய்தி வெளியான அதே சத்தியம் தொலைகாட்சியில் இதற்க்கு நேரடி விளக்கமும் அளிக்கபட்டுள்ளது.

டிவியில் வெளியான அல்தாபியின் பேட்டியும் - ததஜ வின் விளக்கமும்

ரியாதிலிருந்து மாநிலப் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் விளக்க வீடியோ

இந்த நேரடி விளக்கத்திலும் எந்த மறுப்பையும் முறையாக ததஜ நிர்வாகிகள் முன்வைக்கவில்லை மாறாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக மற்றவர்களை தான் குறை கூறினார்கள்.

நடக்காது ஒரு வேலை ப.ஜா.க 10 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தால் மற்றவிஷயங்களை புறம்தள்ளி விட்டு ஆதரிப்போம் ஒரு முறை வாக்களித்து வெற்றி பெற செய்வோம் என்று தெளிவாக பேட்டியில் அல்தாபி கூறுகிறார்.

நடக்காது என்று தெரிந்தபிறகு ஏன் இவ்வளவு விளக்கம் .. வேறு ஒரு இயக்கம் இதை செய்து இருந்தால் நீங்கள் எப்படி அதை பார்ப்பீர்கள். இதே வேறு யாரும் செய்து இருந்தால் ததஜவால்  அது எப்படி விமர்சிக்கபட்டிருக்கும்  ??
ததஜ சகோதரர்கள் கடுமையாக விமர்சித்து இருப்பார்கள்.

கடைசி வரை அல்தாபி பேசியதை ததஜ சகோதரர்கள்  நியாயபடுத்தினார்களே தவிர , அவர் தவறாக விளக்கமளித்து விட்டார் , அவர் அப்படி சொல்லி இருக்க கூடாது என்று கூட  எந்த இயக்க சகோதார்களும் சொன்னதாக தெரியவில்லை.

இதில் இன்னொரு விசயம் என்னவென்றால் அல்தாபி பேசியதால் தான் இந்த சர்ச்சை எழுந்தது ஆனால் அவர் பேசியதில் தவறில்லை என்று சொன்னால் அவரே தன்னிலை விளக்கம் அளித்திருக்கலாம் . சம்மந்தபட்டவரே விளக்க வீடியோவாது வெளியிட்டு இருக்கலாம். இது வரை சகோ.அல்தாபி விளக்கம் அளிக்கவில்லை.

மார்க்கத்தில் வளைந்து கொடுக்காதவர்கள் , மார்க்கத்தில் உறுதியாக, துணிவோடு  இருப்பவர்கள் என்று உணர்ச்சி போங்க பேசும் சகோதரர்கள்.
தவறுதலாக நடந்து விட்ட ஒரு தவறை .. இது தவறு தான் என்று சொல்வதில் தயக்கம் காட்டியது ஏன் ...?  எதற்கு சமாளிப்பு ,தேவையற்ற விளக்கங்கள் , வியாக்கியானங்கள் எல்லாம் ...  ??????

இது காழ்புணர்ச்சியாழ் விளைந்த  விமர்சனம் அல்ல..

தற்போது திருச்சியில் நடந்த ஜும்மா உரையில் அல்தாபி மறுப்பு அளித்துள்ளார்.

2 comments:

  1. ப.ஜ.க. வுக்கும் த.த.ஜ.வுக்கும்உரவுஉன்டு

    ReplyDelete
  2. ப.ஜ.க. வுக்கும் த.த.ஜ.வுக்கும்உரவுஉன்டு

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...