(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, August 19, 2013

Dr.அப்துல்லாஹ்விற்கு நேர்வழிகாட்டி அழைத்துகொண்டான் அல்லாஹ்..!!

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பெரியார்தாசன் என்று நாத்திகராக அறியப்பட்டு , பிறகு உண்மையான இறை தேடலுக்கு தன்னை உட்படுத்தி கொண்டு 2010ல்  சத்திய இஸ்லாத்தை உண்மை என்று ஏற்றுகொண்டு  அப்துல்லாஹ்வாக தன்னை இறை மறுப்பிலிருந்து மீட்டுக்கொண்ட சகோதரர் Dr.அப்துல்லாஹ் அவர்கள் நேற்று நள்ளிரவு மரணித்தார்கள்..

                          "இன்னலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்"


அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து மறுமை வாழ்வை வெற்றி பெற செய்வானாக..

இஸ்லாத்தை ஏற்றுகொண்ட நாள் முதல் தாவா களத்தில் முழுமூச்சாக இறங்கி செயல்பட்டார்கள்... பல ஊர்களுக்கும் , பல நாடுகளும் சென்று முஸ்லீம்களுக்கும்  தாவா பயிற்சிகளை வழங்கியுள்ளார்கள்...
அல்ஹம்துலில்லாஹ்...

அண்மைகாலமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் விளைவாக சென்னையில்  சிகிச்சை பெற்று வந்தார்கள் ..அல்லாஹ்வின் நாட்டப்படி  நள்ளிரவு  சுமார் 1:30மணி அளவில் மௌத்தாகிவிட்டார்கள்..

அப்துல்லாஹ் அவர்களின் சொற்பொழிவுகள் எப்படி இருக்கும் என்று யாருக்கும் சொல்லிகாட்ட தேவையில்லை .. தனது  பேச்சால் அனைவரையும் கட்டி போடுபவர்..

அப்துல்லாஹ் அவர்கள் சிறந்த மனத்தத்துவ நிபுணரரும் கூட .. பலரை தனது பேச்சாற்றலால் மனமாற்றத்தை ஏற்படுத்தினார்கள்...இதை பயன்படுத்தி நான் இஸ்லாத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பேன் என்று முழுவதுமாக செயல்பட்டார் ...

அப்துல்லாஹ் அவர்கள்  இன்று நம்மோடு இல்லை என்று நினைக்கும் போது மனம் கனக்கிறது ..அவரின் பங்களிப்பு நமக்கு தேவை தான் .. இருப்பினும் அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் .. அவனது நாட்டப்படியே அனைத்தும் நிகழ்கிறது..இஸ்லாமிய கொள்கைகளுக்கு நேர் எதிர் கொள்கையில் இருந்தவரை அல்லாஹ் அவரின் உள்ளதை புரட்டி இஸ்லாத்தில் நுழைவிக்க வைத்து அவருக்கு வளமான மறுமைவாழ்விற்கு வழிவகுத்து கொடுத்துவிட்டான்.

அவர் செய்த நற்காரியங்களை அல்லாஹ் பொருந்திகொண்டு .. மறுமையில் மகத்தான கூலி வழங்க வேண்டி நாம் அனைவரும் பிரார்த்திப்போம்..

மேலும்  நாம் அனைவரும் மரணிக்கும் போது முஸ்லீம்களாக ஈமானோடு மரணிக்க அல்லாஹ்விடம்  துஆ செய்ய வேண்டும்..

முஸ்லீமாக இருப்பதைவிட மரணிக்கும் போது முஸ்லீமாக ஈமானோடு மரணிப்பதில் தான் மறுமை வெற்றி இருக்கிறது ..

அந்த பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்கவேண்டும்.

அல்லாஹ் ஒருவனுக்கே அனைத்து புகழும்...

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...