காதல் கத்திரிக்காய் என்று விதவிதமா எத்துன சினிமா எடுத்திருப்பீர்கள் ..?
நீங்கள் காட்டிய சினிமாவிலிருந்து ஒரு சீன் உங்க சொந்த வாழ்க்கைல நடந்துவிட்டால் உங்களால் தாங்க முடிகிறதா இயக்குனர்களே ??
வா என்று கண் கலங்கியவாறு அழைத்தார். ஆனால் தாமினி தந்தையின்
அழைப்பை ஏற்கவில்லை. காதலனுடன்தான் செல்வேன் என்றார்.
--- அடுத்த படத்துல இந்த சீன் வெச்சா நல்ல பீல் இருக்கும்...
நீங்கள் காட்டிய சினிமாவிலிருந்து ஒரு சீன் உங்க சொந்த வாழ்க்கைல நடந்துவிட்டால் உங்களால் தாங்க முடிகிறதா இயக்குனர்களே ??
அடுத்து படத்திற்கு நல்ல கதை கிடைச்சாச்சு சேரன் சார் ..
சொந்த கதை -சோக கதை ........
" மகளிடம் சேரன் கெஞ்சினார். உன்னை எதுவும் செய்ய மாட்டேன் வீட்டிற்கு
வா என்று கண் கலங்கியவாறு அழைத்தார். ஆனால் தாமினி தந்தையின்
அழைப்பை ஏற்கவில்லை. காதலனுடன்தான் செல்வேன் என்றார்.
--- அடுத்த படத்துல இந்த சீன் வெச்சா நல்ல பீல் இருக்கும்...
உருக உருக காதல் படங்களை எடுத்து .. மக்களை வழிகெடுத்து விட்டு .. உண்மையான காதல் , உன்னதமான காதல் என்று வசனம் பேசிவிட்டு இப்ப தனக்கு என்ற உடன்.. குத்துதோ... ?...
காதல் வசனம் பேசி சேர்த்து வைக்க வேண்டியது தானே ?
எதுவும் அவன் அவனுக்கு வந்தா தான் பா தெரியும்..
ஏன் பா இப்படி காதல் மோகத்தில் படத்தை எடுத்து பிஞ்சி உள்ளங்களில்
தவறான எண்ணங்களை உருவாக்குகிறீர்கள் என்று நாம் கேட்டால் ..
உடனே வரிந்துகட்டிகொண்டு...
" உலகத்தில் நடக்கிறத தானே சினிமாவில் எடுக்கிறோம் என்று நியாயம் பேசினார்கள் இந்த அறிவுஜீவிகள்..டைரக்டர்கள்.. சினிமா கூத்தாடிகள்..
ஆனால் தன் வீட்டுல் அதே பஞ்சாயத்து வரும்போது என்ன சொல்கிறார்கள்...
ஒரு குடும்ப தலைவன் பேசுவது போல் பொறுப்பாக பேசுகிறார்கள்..
சேரன் சொல்கிறார் :
காதலன் கேட்டவனு தெரிஞ்சும் எந்த அப்பனாவது அவனோடு விடுவானா என்று ...
விடமாட்டான் தான் ஆனால் நீங்கள் விட்டுத்தான் ஆகவேண்டும் சார்
நீங்கள் எடுத்த . எவ்ளவோ திரைப்படங்களில் ரவுடி ஹீரோவை -ஹீரோயின் காதலித்து நன்றாக இல்லையா ..?
கெட்ட காதலனை நல்லவனாக காதலி மாற்றுவார்களே அதே மாதிரி
உங்கள் மகளும் மாற்றுவாள் என்று நம்புங்கள் சார்..
நீங்கள் தானே நடக்குறத தான் சினிமாவில் எடுக்கிறோம் என்கிறீர்கள் ..
நடக்கிறது நடக்கும்னு கம்முனு போகவேண்டியது தானே ...
ஏன் அழுது புலம்புகிறீர்கள் ... ஆசையாக பெற்று சீராட்டி , பாராட்டி வளர்த்த மகள் யாரோ ஒருவனுக்காக உன்னை விட்டு போகிறாளே என்ற மனஅழுத்தம் தானே ..
இதே அழுத்தம் தான் அனைத்து பெற்றோர்களுக்கும் இருக்கும் சார் ..
எதுவும் அவன் அவனுக்கு வந்தா தான் பா தெரியும்..
சேரனின் மகள் தன் அப்பாவிற்கு எதிராக வழக்கு தொடுக்கும் அளவிற்கு இன்று செல்கிறார் என்றால் அது கூட சினிமா திறந்துவிட்ட சிந்தனை தான்.
இதை மற்ற இயக்குனர்கள்
படிப்பினையாக கொண்டு காதல் சினிமாக்களை எடுத்து மக்களை காதல் போதையில் கொண்டு செல்வதை
நிறுத்த வேண்டும் .. இல்லையென்றால்
சினிமா – மேலும் சீரழிவை நோக்கி மக்களை இழுத்து செல்லும்
என்பதே நிதர்சனமான உண்மை.
"தன் வினை தன்னய சுடும்" ,
ReplyDelete"முற்பகல் சையின் பிற்பகல் தனகே வரும்" ,
"அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்"
இன்று இந்த அனைத்தும் உண்மை ஆகி போனது