(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Tuesday, August 27, 2013

காரைக்கால் : பொய் வழக்குகளை புதுச்சேரி அரசு வாபஸ் பெற வேண்டும்

காரைக்காலில் முஸ்லிம் சகோதரர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை புதுச்சேரி அரசு வாபஸ் பெற வேண்டும் 

காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் கோரிக்கை

காரைக்கால் பகுதி இஸ்லாமிய மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள், அநீதிகள் மற்றும் அராஜகங்களை களைவதற்காகவும், இஸ்லாமிய மக்களுக்கு தேவையானவைகளை அரசிடமிருந்து பெறுவதற்காகவும் காரைக்கால் நகரில் உள்ள அனைத்து ஜமாஅத், இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகளில் உள்ள முஸ்லிம்கள் உள்ளடக்கிய காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் ஆலோசனை கூட்டம் 25.08.2013 அன்று காரைக்காலில் நடைபெற்றது, கூட்டத்தில் காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் தலைவராக முஹம்மது யாசீன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார், ஜமாஅத்கள் , இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றிலிருந்து ஒவ்வொருவர் தேர்வு செய்யப்பட்டு 25 நபர்கள் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர், மேலும் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களாக 5 நபர்கள் நியமிக்கப்பட்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த ஜமாஅத் கூட்டமைப்பில் காரைக்கால் பகுதியில் அனைத்து பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகள், த.மு.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, SDPI, மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளில் உள்ள முஸ்லிம் பிரதிநிதிகள், இஸ்லாமிய சங்கங்களில் உள்ள நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அபூல் அமீன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

1. சென்ற 16.8.2013 அன்று 28 இஸ்லாமிய சகோதரர்கள் பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளதை இக்கூட்டம் கண்டிப்பதோடு, உடனடியாக அந்த 28 இஸ்லாமிய சகோதரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென புதுச்சேரி அரசை இக்கூட்டம் கேட்டு கொள்கிறது.

2. 22.07.2013 அன்று பிஜேபி கட்சி நடத்திய முழு கடை அடைப்பின்போது, பிஜேபி யினரால் திறந்திருந்த கடைகளை அடைக்க சொல்லி நடைபெற்ற வன்முறையின் போது ஒரு கடை உடைக்கப்பட்டு, அதனால் அங்கு கூடிய முஸ்லிம்களை பார்த்து காரைக்கால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் முஸ்லிம்களை கொச்சைப்படுத்தும் விதமாக மனம் புண்படும்படி பேசியதின் விளைவாக கொந்தளிப்புடன் கூடிய முஸ்லிம்களை கட்டுப்படுத்தி, அமைதியான முறையில் மக்களை அழைத்து வந்து காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் SP மீது நடவடிக்கை எடுக்க மனு அளிக்கவந்த சமுதாய தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அன்று நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளாதவர்கள் என 15 முஸ்லிம்கள் மீது 107 வழக்கு போடப்பட்டுள்ளதை இக்கூட்டம் வன்மையாக கண்டிப்பதுடன், அந்த 107 வழக்கை உடனயாக வாபஸ் பெற வேண்டுமென இக்கூட்டம் புதுச்சேரி அரசை கேட்டு கொள்கிறது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...