(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, August 15, 2012

சுதந்திர இந்தியாவில் - சுதந்திரமில்லா ஓர் தேசம் !!

எல்லை பாதுகாப்பு படையில் COMMANDO INSTRUCTOR பணி புரியும் ஒரு சராசரி இந்திய குடிமகனின் பதிவு ...


விடைகள் தான் இந்தியாவிடமே இல்லை ?????????????






மாலை இருட்டிய பின் காஷ்மீரில் யாரும் வெளியே சுற்ற முடியாது. ராத்திரி நேரம் கருத்தரங்கம் போறேன் பதிவர் கூட்டம் நடத்துறேன்னு திரிஞ்சா அப்ப்புறம் மார்ச்சுவரி போஸ்ட் மார்ட்டம்தான்.அதாவது காலை விடிந்தது முதல் மாலை இருட்டும் வரை மட்டுமே நீங்கள் சாலையில் நடமாட முடியும்.

பகலிலும் அடையாள அட்டை இல்லாமல் சென்றால் சந்தேகத்தின் பேரில் நீங்கள் கைது செய்யப்படலாம்.அடையாள அட்டைகளை ரயில் பயணங்களில் எவ்வளவு நியாபகமாக எரிச்சலோடு எடுத்து செல்கிறோம் நாம்?மறந்து போனால் கைது என்று அறிவித்தால் எப்படி இருக்கும்?

வாகன சோதனை என்ற பெயரில் உங்களின் வாகனமும் நீங்களும் பலமுறை சோதனை செய்யப்படும்போதும் தாமதப்படுத்தும்போதும் எப்படி உணர்வீர்கள்?சுதந்திரமாக?

போர்வைக்குள் குறுந்தகவல் அனுப்பும் அன்பர்களே போராட்ட பரப்புரை செய்யும் நண்பர்களே அங்கே இந்த பருப்பெல்லாம் வேகாது.காஷ்மீரில் குறுந்தகவல் தடை என்பதை அறிவீர்களா?ஒரே நாடு ஒரே சிம் என்று புரட்சி செய்யும் இந்தியா காஷ்மீர் சிம் கார்டுகள் ஜம்மு காஷ்மீர் தவிர்த்து எங்கேயும் செயல்பட அனுமதிப்பதில்லை.அப்படின்னா


 காஷ்மீர் தேசம் தனி என்பதை ஒப்பு கொள்வீர்களா?

உங்கள் ஊரை எப்போது வேண்டுமானாலும் முற்றுகை இடலாம் முடக்கி வைக்கலாம் சோதனை போடலாம் என்றால் சம்மதிப்பீர்களா?அவ்வாறு செய்யும்போது பெண்களிடம் கொஞ்சம் அப்படி இப்படி என்று நடைபெற்றால் கண்மூடிக்கொள்வோமா?இல்லை கொல்வோமா?

கடைகளில் செய்திதாளால் சுற்றப்பட்டு கருப்பு பாலிதீனில் வைத்து தரப்படும் நாப்கின் வைத்துள்ள கைப்பையை வேறு ஆண்களிடம் தருவீர்களா சகோதரிகளே? வாகன சோதனையின் போது அவ்வாறு வேற்று மனிதன் தன் கைப்பையை சோதனையின் பேரில் திறப்பதும் நாப்கினை எடுத்து பிதுக்கி பார்க்கும்போது உணரும் அவமானமும் வெறுப்பும் நீங்கள் அனுபவித்ததுண்டா சகோதரிகளே?

உங்களால் பாதுகாப்புபடை வாகனங்களை மீறி சாலையில் வண்டி ஓட்ட முடியாது.எதிர் பாரா விதமாக நீங்கள் பாதுகாப்பு படை வீரர்களின் வாகனங்களுக்கு வழி தரவில்லை என்றால் பலவித மொழிகளில் உங்கள் பிறப்பு சந்தேகிக்கப்படும்.பதில் பேசும் பட்சம் தாக்கப்படுவீர்கள்.

சந்தேகக் கைதுகளில் தாக்கப்பட்டு உயிரிழக்கும் காஷ்மீரிகளுக்கு குரல் எழுப்ப முடியாது.எழுப்பினால் நமது வீட்டு தொலைக்காட்சிகள் காஷ்மீரில் கலவரம் என்று கலகம் செய்யும்.நாமும் துலுக்க பயலுவளுக்கு வேற வேலை இல்லை என்று மென்று துப்புவோம்.வாழ்க சுதந்திரம்.

கைது செய்யப்பட்ட காஷ்மீரி மனிதர் 35 வயதுக்கு மேல் இருக்கும்.


ஆயுதங்கள் எங்கே உள்ளன என்று பல விதங்களில் விசாரணை.



அடி உதைக்கு பயந்து அவர் சும்மானாச்சும் ஓரிடம் சொல்லி கொஞ்ச நேரம் தப்பித்து மூச்சு வாங்க ஏமாந்து திரும்பிய நாங்கள் அவரை முதலில் நிர்வாணப்படுத்தி மல்லாக்க படுக்க வைத்தோம். 



ஏசு போல கை கால்களை விரித்து வைத்து ஒவ்வொரு கை கால்களின் மேல் ஆளுக்கொருவர் ஏறி நின்று கொள்ள வலுக்கட்டாயமாக திறக்கப்பட்ட அவர் வாயில் வாளி வாளியாக குளிர்ந்த தண்ணீர் மூச்சு திணற திணற ஊற்றப்பட்டது.



வாய் மூடாமல் கெட்டியாக பிடித்து கொண்ட பாவிகளில் ஒருவன் நான்.
நீர் நிறைந்த அந்த வாய் மூச்சு காற்றை கேட்குமா? தேசிய கீதம் பாடுமா?





எனது அதிகாரி ஒருவர் மாலையில் சிலரை பிடித்து கொண்டு வந்து தேநீர் கொடுத்து பாயாசம் கொடுத்து அப்புறமாக இரவினில் அடித்து துவைப்பார்.அது அவர் சுதந்திரமாம்.

இப்படி குரல்வளையை இறுக்கி பிடித்து கொண்டு கருத்து சுதந்திரம் தருகிறேன் பேசுங்கள் ஆனால் செயல்படுத்த முடியாது என்பது எப்படி உண்மையான சுதந்திரம் ஆகும்?அதை கொண்டாடுங்கள் என்றால் மனசார எப்படி முடியும்?

நீங்கள் அனுபவித்து பாருங்களேன் இப்படியெல்லாம் உங்கள் ஊரில் நடந்தால் எப்படி இருக்கும் என்று?

இதை அனுபவித்து விட்டு சொல்லட்டும். எனது இந்தியா வாழ்க என்று


Thanks -Mgpt Caa

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...