(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, May 2, 2012

நாகூர் கந்தூரி சந்தனக்கூடு ஊர்வலத்தில் இருவர் பலி ..!



நாகையை அடுத்த நாகூர் தர்கா கந்தூரி விழா கடந்த 22 - ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக் கூடு ஊர்வலம் நேற்று இரவு நடைபெற்றது.

நாகையில் உள்ள அபிராமி அம்மன்(?) திருவாசலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு வந்தது. சந்தனக் கூடு ஊர்வலத்திற்கு முன் பல்லக்கு சென்று கொண்டிருந்தது. இதில் நாகை புதுத்தெருவை சேர்ந்த தமிம் அன்சாரி (29), கீழக் கொல்லை தெருவை சேர்ந்த சபீர் என்கிற அப்துல் ஹமீம் (23) மற்றும் கீழமாத்தூரை சேர்ந்த ஆசீக் (21), ஆதியத்த மங்கலத்தை சேர்ந்த ரிஜிவானி அலி (21) ஆகியோர் அமர்ந்து இருந்தனர்.



இந்த பல்லக்கு நாகை குஞ்சாலி மரைக்காயர் வீதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அப்பகுதியில் பாதாள சாக்கடைக்கு குழி தோண்டப்பட்டு இருந்தது. இதில் பல்லக்கு வந்த போது திடீரென தடுமாறியது. அப்போது மேலே சென்ற மின் வயர் மீது பல்லக்கு உரசியது. அதில் மின்சாரம் பரவியது. பல்லக்கு மீது மின்சாரம் பாய்ந்ததில் அதில் உட்கார்ந்திருந்த தமிம் அன்சாரி, அப்துல் ஹமீம் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் இறந்தனர்.(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)

மேலும் ஆசீக், ரிஜிவானி அலி ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குஅவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மின்சாரம் தாக்கி பலியான தமீம் அன்சாரி லோடு ஆட்டோ டிரைவராகவும், அப்துல் ஹமீம் ஆட்டோ டிரைவராகவும் வேலை பார்த்து வந்தனர். இந்த சம்பவம் குறித்து நாகப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கந்தூரி விழாவில் 2 பேர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் நாகையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அல்லாஹ் இந்த சகோதரர்களின் பாவங்களை மன்னிப்பானாக ..

ஜசாகல்லாஹ் : சுல்தான் கபீர் 


2 comments:

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...