(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Tuesday, November 15, 2011

அப்துல்கலாம் தீவிரவாதியாக இருக்கலாம்(?)- அமெரிக்கா

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமை தீவிரவாதியாக இருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் சந்தேகித்து  சோதனை என்கிற பெயரில் மீண்டும் ஷூ, கோட்டை கழற்றச் சொல்லி 2வது முறையாக அமெரிக்க அதிகாரிகள் அவரை அவமதித்துள்ளனர்.

அப்துல் கலாமை சோதனை என்கிற பெயரில் அமெரிக்க அதிகாரிகள் அவமதிக்கும் செயல் அவ்வபோது நடக்கும் மாமூலான ஒன்று தான். பிறகு  இந்தியா கண்டனம் தெரிவிப்பதும் பிறகு இந்தியாவிடம் அமெரிக்க அரசு சிறுபிள்ளைதனமாக மன்னிப்பு கேட்பதும, உடனே தன் மானம்கெட்ட பெருந்தன்மையை வெளிபடுத்தி அமெரிக்காவை இந்தியா மன்னித்து விடுவதும் வழக்கமான ஒன்று.


கடந்த 2009ம் ஆண்டும் இதேபோலத்தான் கலாமை அவமதித்தனர். அப்போது டெல்லி விமான நிலையத்தில் வைத்தே கலாமை அவமதித்து இந்தியர்களை அதிர வைத்தனர் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள். வேறு ஒரு நாட்டுக்காரன் இந்தியாவிற்கு வந்து ஒரு இந்தியனை அதுவும் முன்னாள் குடியரசு தலைவரை அவமதிக்கிறான் இருந்தாலும் இந்த சம்பவத்தை அப்போது மத்திய அரசு பெரிதாக கண்டு கொள்ளவில்லை. மீடியாவில் செய்திகள் வெளியான பின்னர்தான் உப்புக்குச் சப்பு கண்டனத்தை தெரிவித்தது மத்திய அரசு. உடனே அமெரிக்க அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர். அவ்ளோதான் மேட்டர் ஓவர்.

தற்போது மீண்டும் கடந்த அக்டோபர் 29ம் தேதியன்று இந்த சம்பவம் நியூயார்க் விமான நிலையத்தில் நடந்துள்ளது. அன்றைய தினம் டெல்லி திரும்புவதற்காக ஜான் எப் கென்னடி விமான நிலையத்திற்கு வந்தார் அப்துல் கலாம். அப்போது விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கலாமை சோதனையிட வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு அவரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

இதையடுத்து கலாமின் கோட், சட்டையைத் தடவிப் பார்த்து வெடிகுண்டு இருக்கிறதா, வெடிபொருள் இருக்கிறதா என்று சோதனையிட்டனர். பின்னர் அவரை அனுமதித்தனர். அதன் பின்னர் கலாம் ஏர் இந்தியா விமானத்திற்குள் ஏறி வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். 

இந்த சமயத்தில் திடீரென பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திற்குள் புகுந்தனர். கலாமை மீண்டும் சோதனையிட முயன்றனர். இதற்கு ஏர் இந்தியா விமானிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். கலாம் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி, மிக மிக முக்கியப் பிரமுகர், பாதுகாப்பு சோதனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர் என்று வாதிட்டனர்.

ஆனால் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாத அமெரிக்க அதிகாரிகள் கலாமிடம் ஷூவைக் கழற்றுமாறும், கோட்டைக் கழற்றுமாறும் கூறியுள்ளனர். இப்போதும் கலாம் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்காமல் சொன்னதைச் செய்தார். ஏர் இந்தியா விமானிகளுக்கும், விமானத்தில் இருந்தவர்களுக்கும் அமெரிக்க அதிகாரிகளின் செயல் பெரும் கொதிப்பைக் கொடுத்தது.

ஷூவை பெற்ற அமெரிக்க அதிகாரிகள் அதை முழுமையாக பரிசோதித்தனர்.கோட்டையும் பரிசோதித்தனர்.பின்னர் அதை கலாமிடம் கொடுத்து விட்டுத் திரும்பிச் சென்றனர் என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

தற்போது நடந்துள்ள 2வது சம்பவத்திற்கு மத்திய அரசு உடனடியாக கண்டனம் (இதனால் ஒன்றும் ஆகபோரதில்லை) தெரிவித்துள்ளது. காரணம் கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரத்தில் கலாம் களம் இறங்கி அணு உலைக்கு ஆதரவாக பேச ஆரம்பித்திருப்பதால் இந்த உடனடி எதிர்ப்பைக் காட்டி தனது அக்கறையை காட்டியுள்ளது மத்திய அரசு என்று தெரிகிறது.

அப்துல் கலாமை பொருத்தவரை அவரை பற்றி இந்தியர்களை விட அமெரிக்கர்களுக்கு நன்கு தெரியும். அவர் இந்தியா குடியரசு தலைவர் என்பதையும் தாண்டி அவர் ஒரு விஞ்ஞானி என்பது அமெரிக்க அதிகாரிகளுக்கு நன்கு தெரியும் ஆனாலும் அவர்கள் அவமதிப்பார்கள் அதற்கு காரணம் அவர் இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் என்பதனால் அல்ல மாறாக அவர் ஒரு முஸ்லீம் என்பதனால் என்பதை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த அவமதிப்பு கலாமிற்கு மட்டும் நடந்தவை அல்ல.. அனைவராலும் அறியப்பட்ட திரைப்பட நடிகர்கள் ஷாருக்கான், முஹம்மது குட்டி இஸ்மாயில் என்ற மம்மூட்டி போன்றவர்களுக்கும் நடந்துள்ளது இன்னும் சொல்லபோனால் எத்தனையோ முஸ்லிம்களும்,முஸ்லீம் பெயர்வைத்திருப்பவர்களும் அவமதிக்கபட்டுள்ளார்கள் ,அவமதிக்கபடுகிறார்கள் காரணம் அவர்கள் முஸ்லீம் பெயர் அடையாளத்தை உடையவர்கள் அவர்கள் பயங்கரவாதிகள் (??) என்பதனால்...

அமெரிக்கா இதன் மூலம் சொல்ல வருகிறது என்னவென்றால்...
நீ இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தாலும் சரி ,பெரிய நடிகனாகயிருந்தாலும் சரி ,யாராக இருந்தாலும் நீ முஸ்லீம் என்றால் , உன்னுடைய பெயர் முஸ்லீம் என்றால் நாங்கள் நிச்சயமாக சோதிப்போம் ,அவமதிப்போம் ஏனென்றால் முஸ்லீம்கள் தீவிரவாதிகள். இது தான் அமெரிக்கர்கள் உலக மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு விடுக்கும் செய்து. இது ஒன்றும் நமக்கு புதிதில்லையே என்று நீங்கள் சொல்வது புரிகிறது.

இந்நிலையில் இவ்விசயத்தில் இந்தியாவிற்கு கொஞ்சம் லேசா ரோசம் வந்திருக்கிறது.. மத்தியவெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து மேலும் அவர் “"இந்திய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமைச் சோதனையிட்டது போன்ற சம்பவங்கள் நிறுத்தப்படாவிட்டால், இந்தியா வரும் அமெரிக்க உயர் அதிகாரிகளை நாங்களும் சோதனைக்கு உட்படுத்துவோம்" என கூறியுள்ளனர்.

இதுல என்ன காமெடி என்றால் “அமெரிக்க அதிகாரிகள் யாரும் இந்தியாவிற்கு வந்தால் ராஜ மரியாதையுடன் மாமியார் வீட்டுக்கு வந்து செல்வது போல் செல்கிறார்கள் அவர்களுக்கு எந்த கட்டுப்பாடுமில்லை,இதுவரை சோதனைக்கு எந்த உயர் அதிகாரிகளையும் உட்படுத்தியதில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்  எஸ்.எம்.கிருஷ்ணா வழிமொழிந்துள்ளது வெட்கக்கேடு.
 
இதிலும் இன்னொரு வெட்கக்கேடு என்னவென்றால் இந்தியாவில் உள்ள அணைத்து விமான நிலையங்களிலும் வெளிநாட்டினருக்கு –வெளிநாட்டு
PASSPORT வைத்திருப்பவர்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.                 இந்த நாட்டின் குடிமகனுக்கு எந்த வித சலுகையும்,முன்னுரிமையும் வழங்கப்படுவதில்லை.

நாம் வெளிநாட்டிற்கு சென்றால் அவர்கள் நம்மை இரண்டாம் பட்சமாக தான் நடத்துகிறார்கள்.அந்த நாட்டு குடிமக்களுக்கு தான் முன்னுரிமை 
அளிக்கிறார்கள்.அவர்கள் செய்வது சரி தான்.

ஆனால் நம் நாட்டிலேயே நாம் இரண்டாம்பட்சமாக தான் நடத்தப்படுகிறோம் ...!!! 


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...