(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, November 11, 2011

அண்ணாவிற்கு ஆப்பு வைத்த ஆர்.எஸ்.எஸ்...!!


 ஊடகங்கள் நினைத்தால்  யாரையும் மகாத்மா ஆக்கிவிட முடியும் எனபதற்க்கு சான்று அன்னா ஹசாரே !

ஊழலுக்கு எதிரான போராட்டம் என்று ஆரம்பித்த அன்னா ஹசாரே ... இப்போது காங்கிரஸ் எதிர்ப்பில் தான் முனைப்போடு இருக்கிறார். காரணம் காங்கிரஸ்ல் ஊழல் செய்கிறதாம்..?  இந்தியாவில் காங்கிரஸ் கட்சி தான் முதல் முதலில்  ஊழல் செய்கிறதா என்ன ?

இந்தியாவில் காங்கிரஸ் கட்சி மட்டும் தான் ஊழல் செய்துவருவது போல் காங்கிரஸ் கட்சியை குறிவைத்தே அண்ணாவின் செயல்பாடுகள் இருந்துவருகின்றன.. ஆனால் இவர் குறித்து கேள்வி எழுப்பினால் தான் நடுநிலையாளன் என்பது போல் தன் பேச்சை மாற்றிகொள்வார் இந்த நாடக நாயகன்.

70 வயதுக்காரரான அன்னா ஹசாரே, மராத்திய மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் காந்தி குல்லா போட்டிருந்தாலும் முஸ்லீம்களின் குல்லாக்களை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸின் கோட்பாடுகளில் அவர் மிகவும் ஈடுபாடுடையவர் என்ற செய்தி அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆரம்பத்திலிருந்து வந்துகொண்டிருந்தன.

குறிப்பாக இதை ஆரம்பத்திலிருந்தே திக்விஜய்சிங் வெளிப்படையாக சொல்லி வந்தார் .. தன்னிடம் அதற்கு ஆதாராம் இருப்பதாகவும் சொல்லிவந்தார் இருப்பினும் ,அவர் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர் என்பதால் இவ்விசயத்தின் நம்பகதன்மையில் சிலர் சந்தேகம் எழுப்பினர்.

இதற்கு ஏற்ப அன்னாவும் எனக்கும் பிஜெபி, அர்.எஸ்.எஸிற்கும் சம்பந்தமில்லை என்று கூறி தனது காந்தி கெட்டப்பை முறையாக கையாண்டு வந்தார்.

நான் பிஜெபிக்கு ஆதரவு இல்லை என்று ஒரு புறம் சொல்லிக்கொண்டு மறுபுறம் காங்கிரசுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று கூறி பிஜேபிக்கு வாக்கு சேகரிக்கிறார் (?)

இந்நிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களின் மத்தியில் அதிகாரபூர்வமான முறையில் பேசி கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸின் சர் சங்சலாக் (தலைவர்) மோகன்ராவ் பகவத் ஆர்.எஸ்.எஸுக்கும் அன்னா ஹசாரேவுக்கும் இடையேயான உறவு நீண்ட கால நெருங்கிய உறவு என்ற உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பிக்குமாறு அன்னாவை தூண்டியது தாங்கள் தான் என்றும் அவர் கூறி அண்ணாவிற்கு ஆப்பு வைத்துள்ளனர் மேலும் “ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு அன்னாவிடமிருந்து அழைப்பு வராததால் தாங்கள் நேரடியாக பங்கேற்கவில்லை என்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கலந்து கொள்வதை தாம் தடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்(?)
நாங்கள் தான் இந்த போராட்டத்தை தூண்டியது என்று ஒருபுறம் ஆர்.எஸ்.எஸ் கூறிவிட்டு தங்களுக்கு அழைப்பு இல்லை என்று கூறுவது சிறுபிள்ளைதனமானது. நிகழ்ச்சி ஏற்ப்பாட்டலாருக்கு யார் அழைப்பு விடுப்பது (?) மேலும் இவர்களின் திட்டம் மக்கள் அண்ணாவை ஒரு நடுநிலையாளராக –சமூக ஆர்வலராக, இந்த கால காந்தியாக பார்க்க வேண்டும் என்பதும் அதன் மூலம் காங்கிரஸ் எதிர்ப்பு வலுபெரும் இதனால் வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதே .. 

இவை எல்லாம் நடைபெற வேண்டும் என்றால் அண்ணாவின் போராட்டத்திற்கு நேரடி ஆதரவோ , போராட்டத்தில் கட்சி சார்பில் பங்கேற்பதோ கூடாது என்ற சூழ்ச்சி தான் காரணம்.

   
அதுமட்டுமால்லாமல் அன்னாவிடம் பேசியது போல் பாபா ராம்தேவிடமும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பிக்குமாறு ஆர்.எஸ்.எஸ் தான் வலியுறுத்தியாதாகவும் கூறியுள்ளார் .ஆக தற்போது எல்லாமே உள்ளடி வேலைகள் என்பது வெட்டவெளிச்சம்.இவை அனைத்தும் நாடகங்கள் என்பது மீண்டும் ,மீண்டும் அம்பலமாகி இந்தியாவின் தற்போதைய காந்தி அன்னா ஹசாரே முகத்தில் கரியை பூசியிருக்கிறது அர்.எஸ்,எஸ்.

ஆர்.எஸ்.எஸ் இப்போது ஒப்புக்கொண்டதற்கு காரணம் இருக்கு...
அண்ணாவிற்கு நல்ல செல்வாக்கு கிடைத்துவிட்டது அவரின் பின்புலம் நாம் தான் என்று சரியான நேரத்தில் அறிவிப்பதன் மூலம் நம் செல்வாக்கையும் உயர்த்திகொள்ளலாம் என்று அர்.எஸ்,எஸ் எண்ணியது தான் முதன்மை காரணம்.

அண்ணாவை பிஜெபிக்கு BRAND MODELஆக கொண்டுவரும் முயற்சியில் தான் அண்ணாவை சமூக சேவகர் என்ற பெயரில் மறைமுகமாக களமிறக்கியது ஆர்.எஸ்.எஸ் ஆனால் அதைபோல் ஆரம்பத்தில் நரபலி மோடியை புகழ்ந்துதள்ளி தனது பிறப்பிடத்தை வெளிபடுத்திய அன்னா ஹசாரே மக்களின் ஏகோபித்த எதிர்ப்பால் பிறகு பின்வாங்கிகொண்டார் அதிலிருந்து இன்றுவரை அவர் பா..., ஆர்.எஸ்.எஸ். சை பற்றி வாய்திறக்கவில்லை.. 


 ஆனால் திக்விஜய்சிங் விடவில்லை அண்ணாவை இயக்குபவர்கள் ஆர்.எஸ்.எஸ். என்று கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் அண்ணாவால் திக்விஜய்சிங்கின் விமர்சனத்தை பொருத்துக்கொள்ள முடியாமல் திக்விஜய்சிங்கை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று கூறினார். ஆனால் வந்துகொண்டிருக்கும் செய்தியை பார்த்தால்... அண்ணாவை தான் முதலில் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். 

ஒருவேளை அண்ணா ஹசாரேவிற்கு Multiple Personality Disorder
இருக்குமோ என்று என்ன தோன்றுகிறது.


மீடியாவினால் கவனிக்கபடாத ஒரு விஷயம் நடந்தேறி இருக்கிறது. .. 

காந்திய சேவா மற்றும் சத்யாகிரக பிரிகேட் ஆகிய அமைப்புகளின் பொதுச் செயலாளராக இருப்பவர் சாம்பு தத் என்ற காந்தியவாதி. இவரும், இவரது அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேரும் லோக்பால் விவகாரம் தொடர்பாக கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். இவர்களே, ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா வேண்டுமென்ற கோரிக்கையுடன் முதன் முதலில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள்.


ஆனால், சாம்பு தத்திற்குப் பின்னர் அதே கோரிக்கையுடன் போராட்டத்தை ஆரம்பித்த அன்னா ஹஸாரேவும் அவர் குழுவுமே இந்திய ஊடகங்களில் "ஊழலுக்கு எதிரான போராட்ட நாயகர்களாக" நிறைந்து நின்றனர். அப்படியெனில், ஹஸாரேக்கு முன்னரே போராட்டத்தை ஆரம்பித்திருந்த சாம்பு தத் குழுவின் போராட்டம் என்ன ஆனது? இதுவரை சாம்பு தத்தின் போராட்டம் குறித்த செய்திகள் வெளியாகாததன் காரணம் என்ன? நடந்தவை குறித்து காந்தியவாதி சாம்பு தத்தே கூறுகிறார்:


"எங்களைக் கிரண் பேடியும், சுவாமி அக்னிவேஷும் அணுகி எங்களது போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். தாங்கள் இதுதொடர்பாக போராடப் போவதாகவும், அதற்காக உங்களது போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்றும் கோரினர்.


அதற்கு மதிப்பளித்து நாங்களும் போராட்டத்தைக் கைவிட்டோம். ஆனால் அப்படிச் செய்திருக்கக் கூடாது என்று இப்போது உணர்கிறேன். நாங்கள் உறுதியுடன் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் அவர்களிடம் அதை எதிர்பார்க்காமல் நம்பி மோசம் போய் விட்டோம்.


அன்னா குழுவினர் யாருமே ஸ்திரமானவர்களாக இல்லை; உறுதியானவர்களாக இல்லை; உண்மையானவர்களாக இல்லை. குறிப்பாக அரவிந்த் கேஜ்ரிவால் தன் மீதான மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டார். அந்தக் குழுவில் இருப்பவர்கள் எல்லாம் ஆமாம் சாமிகளாக உள்ளனர். எந்தவிதமான உறுதியும் அவர்களிடம் இல்லை.

காங்கிரஸ் போட்டியிடும் இடங்களில் எல்லாம் எதிர்த்துப் பிரசாரம் செய்வோம் என்பது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. ஹஸாரேவும் தனது நிலையை அடிக்கடி மாற்றி வருகிறார். முதலில் காங்கிரஸை எதிர்க்க மாட்டேன் என்றார். தற்போது எதிர்த்துப் பிரசாரம் செய்வேன் என்கிறார்.
என்று அவர் கூறியுள்ளார்.
ஆயிரம் அண்ணா ஹசாரேக்கள் வந்தாலும் ஒரு சமூகத்தை அப்படியே வைத்துக்கொண்டு, ஊழலை மட்டும் எப்படி ஒழித்து விட முடியும்?
ஏற்றத் தாழ்வுகள், ஆதிக்கங்கள், சுரண்டல்கள், உலகமயமாதல் என்னும் பெயரில் பன்னாட்டு நிறுனங்கள் நடத்தும் பகற்கொள்ளைகள் எல்லாம் அப்படியே இருக்குமாம். ஊழலை மட்டும் ஒழித்துவிடுவார்களாம்.

அதையும் தான் பார்ப்போமே ..!!

1 comment:

 1. இரத்த வகை கண்டறியும் முகாம்

  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....
  இன்ஷா அல்லாஹ் வருகின்ற 10/12/2011 சனிக்கிழமை அன்று திட்டச்சேரி,
  பிராகிராமம், கட்டுமாவடி மற்றும் ப.கொந்தகை அனைத்து சமுதாய மக்களின் நலன்
  கருதி இலவச இரத்த வகை கண்டறியும் முகாம் மற்றும் விழிப்புனர்வு நிகழ்ச்சி
  நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  ... ... இந்த முகாம் சிறப்பாக அமைய கீழ்கண்ட உதவிகள் தேவைப்படுகிறது.

  1.இரத்த வகை கண்டறிதல் (300 நபர்களுக்கு) : Rs.6000
  2.ஆட்டோ அலோவன்ஸ் : Rs.1700
  3.blood group card அடித்தல்(300 நபர்களுக்கு) : Rs.1500
  4.lab technician-குழுவிற்கு
  (டீ , சாப்பாடு ,ஸ்நேக்ஸ்) : Rs.2000
  5.லித்தோஸ் (100 nos) : Rs.800
  6.நோட்டீஸ் (1000 nos) : Rs.800

  மேற்கண்ட பணிகள் செய்வதற்கு தோராயமாக ரூ15,000 தேவைப்படுகிறது.
  நன்கொடையாளர்களால் மட்டுமே இந்த முகாம் சிறப்பாக நடத்தமுடியும். உங்களது
  நன்கொடைகளை தாராளமாக எங்களுக்கு உதவுங்கள். அல்லாஹ் இதற்குன்டான நிறைவான
  கூலியை ஈருலகிலும் தந்தருள்வானாக.....

  தொடர்புக்கு: 96007 04944, 95438 12048
  www.deenulislamtty.weebly.com

  அனைவருக்கும் இதை அனுப்பவும்

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...