(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, March 19, 2011

நாகை வேட்பாளரும் - பட்டாசு வரவேற்பும்...!!

அஸ்ஸலாமு அழைக்கும் ( வரஹ்)... 
வரும் சட்டமன்ற தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் தி.மு.க கூட்டணி கட்சியான இந்தியன்  யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக  நம் ஊரை சார்ந்த தொழிலதிபர் சகோதர்  எம். முஹம்மது ஷேக் தாவூது போட்டியிடுகிறார்.

பொது நல ஊழியரான இவர் நாகூர் கல்வி அறக்கட்டளையின் தலைவராகவும், கவுதியா சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இந்த ஸ்தாபனங்களின் சார்பில் ஆண், பெண் கல்வி நிலையங்கள், தர்மஸ்தானங்கள் நடைபெற்று வருகின்றன.
நாகூர் மாடர்ன் மெட்ரிக் பள்ளி தாளாளராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக போட்டியிட்டாலும் தனி சின்னம் கிடைக்காமல் தி.மு.க வின் உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிடுகிறார்.
மேலும் நேற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மூன்று வேட்பாளர்களை கூட்டணி கட்சிகளின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.கருணாநிதியிடம் மாநில தலைவர் கே.எம். காதர் மொய்தீன் அறிமுகப்படுத்தினார். உடன் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர்கள் அப்து...ல் பாசித்(வாணியம்பாடி), அல்தாப் ஹுசைன் (துறைமுகம்), ஷேக் தாவூத் (நாகை), அப்துல் ரஹ்மான் எம்.பி, நிர்வாகிகள் அபுபக்கர், கமுதி பஷீர், ஜைனுலாபுதீன், சம்சுதீன் ஆகியோர் உள்ளனர்

முதல்வர் சந்திப்பிற்கு பின் நேற்று இரவு நாகூருக்கு வந்த வேட்பாளர்  ஷேக் தாவூத்க்கு தர்கா வாசலில் பட்டாசு வெடித்து வரவேற்ப்பு அளித்தனர் தொண்டர்கள்...
இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா இதெல்லாம் கண்டுக்கபுடாது.

ஆளும் கட்சி ஆதரவு இருப்பதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக  பலர் கருத்து...

நல்லது நடந்தா சர்த்தான்...:-)

தொடர்ந்து  மற்ற வேட்பாளர்களின் விபரங்களும் இன்ஷாஅல்லாஹ் விரைவில் உங்கள் நாகூர் ப்ளாஷ்ல்..  

1 comment:

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...