(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Tuesday, March 22, 2011

மார்க் துறைமுகத்தை எதிர்த்து வெட்டாற்று பாலம் முன்பு சாலை மறியல்..

அஸ்ஸலாமு அழைக்கும்....

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக !

கடந்த சில மாதங்களாக வாஞ்சூரில் உள்ள மார்க்-காரைக்கால் துறைமுகதால் சுற்றுசூழல் மாசுபடுவதை கண்டித்து போராட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் நடத்தப்பட்டன.. அதற்காக முழுமையான எந்த நடவடிக்கையும் துறைமுகம் எடுக்கவில்லை தற்காலிகமாக தண்ணீர் தொளித்து நிலக்கரி துகள்களை காற்றில் பரவாமல் கட்டுப்படுத்தி வருகிறது.. ஆதலால் 22.3.11 இன்று நாகூர் முழுவதும் கடையடைப்பு மற்றும் வெட்டாற்று பாலம் முன்பு அணைத்து கட்சி இயக்கம் ஜமாஅத் மக்கள் போராட்டக்குழு (AKIJMPK) சார்பாக அறிவிக்கப்பட்டது.

குறிப்பிட்டப்படி ஊர் முழுவதும் கடைஅடைக்கபட்டது. காலை 11 மணிக்கு பாலத்தடியில் சிறிது சிறிதாக கூட்டம் கூடியது. துறைமுகத்தை கண்டித்தும் ,நாகை நகராட்சி அதிகாரிகளை கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட கலெக்டர் வரவேண்டும் என்று கோரிக்கையும் வைக்கப்பட்டது போலீசார் குவிக்கப்பட்டனர்..


காவல்துறையினர் சமரச முயற்சியில் ஈடுப்பட்டனர். இறுதியாக தாசில்தார் வந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கலெக்டரை இன்று மாலை குழுவாக வந்து சந்திக்கும்படி கேட்டுகொண்டதற்கு இணங்க போராட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டது.இன்ஷாஅல்லாஹ் நல்ல ஒரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்ப்பாக்கலாம்.

இந்த போராட்டங்களை பொருத்தவரை பலருக்கு நிலக்கரி துகள்களால் ஏற்படும் பாராதூரமான விஷயங்கள் தெரியவில்லை மிக அலட்சியமாக இருகிறார்கள்.

பலருக்கு இந்த போராட்டத்தின் முக்கியத்தும் தெரியவில்லை பலருக்கு போராட்டம் நடக்கிறது என்று தெரிந்தும் கலந்துகொள்ள மனமில்லை..
மாற்று மத சகோதர்கள் கூட இது மக்கள் பிரச்சனை என்று புரிந்துகொண்டு போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் ஆனால் நம்மவர்கள் பலர் ஊரில் இருந்து கண்டுகொள்ளாமல் இருகிறார்கள்.

ஒரு பக்கம் ஒற்றுமை ஒற்றுமை என்று பேசுகிறார்கள்.. ஆனால் செயல்பாடு என்று வரும்போது பலர் கலந்து கொள்வதில்லை. தனி அமைப்பாக செய்தால் அது அமைப்பு சார்பாக ஆகிவிடும் என்று தான் பொதுவாக அழைப்புவிடபட்டது ஆனாலும் ஏனோ பலர் எனக்கென்ன என்று இருந்துவிடுகிறார்கள். 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...