(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, October 7, 2010

எந்திரன் விமர்சனம்– ரஜினியின் தீவிர ரசிகர்களுக்காக...


கிட்டத்தட்ட 150 கோடி பொருட்செலவில் பேயன் ,பைத்தியகாரென் ஊர்ல நிறைய பேர் இருகிரானுவோ என்று நன்கு தெரிந்துகொண்டு கலாநிதிமாறன் மூலம் எடுக்கபட்ட படம் தான் எந்திரன்.

வேல வெட்டி இல்லாம பொழுதை கழிக்க வந்து பார்க்கும் இந்த படத்திற்கு கொடுக்கபட்ட பில்டப்பா எப்பா தாங்க முடியல...

ஒரு சினிமா படம் எடுத்தா ,அந்த படம் ஓடுனாலும் , நின்னாலும் படத்தை தயாரிப்பவர்  படத்தில் நடித்தவர்களுக்கு ,வேலை செய்தவர்களுக்கு எல்லோருக்கும் சம்பளத்த கொடுத்துடுவாறு.. நடிச்சவனுக்கு அஞ்சு பைச செலவாகாது..

பேயன் பைத்தியகாரன் தமிழ் நாட்ல நரையா இருப்பதனால படத்த தயாரிச்சவனுக்கும் கவலை இல்ல.. ஆனா அஞ்சு காசுக்கு பிரோஜனம் இல்லாம, இருக்குற வேலையையும்  செய்யாம, பெத்தவங்கள கவனிக்காம, தண்ணி அடிச்சிக்கிட்டு , சிகரட்ட ஊதிக்கிட்டு தலைவா தலைவா என்று சுய நினைவை இழந்து கத்திகிட்டு , விசில் ஊதிகிட்டு டான்ஸ் ஆடும்..
ரசாக்களா நீங்கள் தெளியவும் மாட்டிங்க , திருந்தவும் மாட்டிங்களா?

நடிகர்களின் மேல் உள்ள பக்தி முத்தி முதிர்ச்சி நிலையை அடைந்து புத்தி பேதலித்துவிட்டது தெரியவந்துள்ளது. 

 1. மாதா பிதா ரஜினி தெய்வம்
 2. ரஜினி ஏழைகளின் கடவுள்
 3. சூரியன் சாட்சி இனி எந்திரன் ஆட்சி..
 4. எங்க தலைவர அடிச்சிக்க ஆளே கிடையாது..
 5. ரஜினி கட்டோட்டுக்கு பாலாபிசேகம்
 6. ரஜினி கட்டோட்டுக்கு சந்தன அபிசேகம்
 7. எந்திரன் படப்பெட்டி பூஜை
 8. எந்திரன் படப்பெட்டி மேளதாளங்களுடன் ஊர்வலம்.
 9. எந்திரன் வெற்றிக்காக மொட்டை அடிப்பது
 10. எந்திரன் வெற்றிக்காக அலகு குத்துவது
 11. எந்திரன் வெற்றிக்காக ஆயிரத்தொரு குடம் தண்ணி எடுத்து நேத்திக்கடன் செய்வது.
 12. தியேட்டர்களை அலங்கரிப்பது
 13. நாட்டிய கலைஞர்களின் ஆடல் பாடல் ....

என்று இவர்கள் சொல்வதையும்,செய்வதையும் அடிக்கி கொண்டே போகலாம்...தன் சுய நினைவை முற்றிலுமாக இழந்து தறிகெட்டு போகும் இந்த இளம் தலைமுறைகளை பார்க்கும்போது கோபத்தை விட பரிதாபம் தான் மிகைக்கிறது..http://www.youtube.com/watch?v=OxtAOJ0cH6Q&feature=related

பலர் தன் தாய் தந்தையை கூட மதிப்பதில்லை , மரியாதை செலுத்துவதில்லை, நேசிப்பதில்லை .. ஆனால் ஒன்றுக்கும் பிரோஜனமில்லாத நடிகனை கடவுள் நிலைக்கு உயர்த்துகிறார்கள்.

யாரை இவர்கள் கடவுள் என்கிறார்களோ அவர் எனக்கு
பால் தாக்கரே கடவுள் மாதிரி என்கிறார்.. மீண்டும் , மீண்டும் அடேய் நான் காவி கூடாரம்டா என்று பலமுறை சொல்லி விட்டார் இந்த வேடதாரி..
ஆனால் நம்ம பசங்களுக்கு அதெல்லாம் முடியாது,
 ரஜினி மாதிரி வருமா ? ஸ்டைல் , ஸ்டைல் தான்..
என்ன கெட்டப்பு , என்ன பஞ்ச் டயலாக் சான்சே இல்ல போ...

தலைவரு அரசியலுக்கு வரணும்.. நல்லாட்சி நடக்கணும்
இப்படியாக சினிமா போதையில் இருந்தா என்னத்த சொல்றது,, 

ஏதோ ஒன்றும் தெரியாத பாமரன் மட்டும் இதை செய்வதில்லை.., கல்வியில் மேன்பட்டுள்ள நகரங்களின் நிலைமையும் இது தான்..

நாம் சொல்லவருவது என்ன வென்றால் ...

எவன் எக்கேடு கேட்டு வேண்டாலும் போறான்- ஒரு முஸ்லிம் எப்டி இருக்கனும் !  ஒரு நல்ல முன்உதாரணமாக இருக்க வேணாமா ?

பல முஸ்லிம் சகோதர்கள் ரசிகர் மன்றங்களில் தங்களுடைய நேரத்தையும் , வாலிபத்தையும் , மறுமையையும் நாசமாக்கி கொள்கிறார்கள்..

அவன் கோடி கோடியா சம்பாதிக்கிறான், நீ என்ன பண்ற ?

அவன் சம்பாதிகிறதுக்கு நீ உன் கை காச போட்டுட்டு, 
தலைவா! கலக்கிட்ட என்று பேட்டி வேற குடுக்குற..
அசிங்கமா இல்ல..?

சகோதர்களே !
நாம் முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கும்,அவனது தூதருக்கும் கட்டுப்பட்டவர்கள். நாம் மாற்று மத சகோதர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

அவர்களோடு சேர்ந்து கூத்தடிப்பது நாமும் அவர்களை சார்ந்தவர்கள் என்ற நிலைக்கு கொண்டு சென்றுவிடும்.

நாம் சத்தியத்தில் இருக்கிறோம் ஆனால் அவர்கள் அசத்தியத்தில் இருகிறார்கள்.. நாளை இன்ஷாஅல்லாஹ் அவர்களுக்கு சத்திய இஸ்லாம் கிடைத்தால் , அவர்கள் முற்றிலும் மனம்மாறி திருந்தலாம்.. ஆனால் நாம் முஸ்லிம் என்று சொல்லி கொண்டே ஈமானுக்கு வேட்டு வைக்கு நிலைக்கு சென்று கொண்டு இருகிறோம்...

எச்சரிக்கை தேவை....!

அல்லாஹ் நம்மை பரிபூரண ஈமானோடு மரணிக்க செய்வானாக...

5 comments:

 1. allah enna seidar unakku.
  mara tamilanin tamil nadum natu tamil makkalum ungaluku idam kodutha tamilanai thavaraga pesa unaku yar anumathi koduthadu

  ReplyDelete
 2. சகோதரர் ஆனந்த் ,

  தங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக !

  அல்லாஹ் உங்களுக்கு எனக்கு உயிரை கொடுத்து வாழவைத்து இருக்கிறார்.

  உங்களுக்கு ரஜினி என்னத்த கொடுத்தார் ?

  நான் பிறந்த சொந்த பூமியில் நான் வசிக்க யார் இடம் கொடுப்பது ? மற்றவர்கள் இடம் கொடுக்க அவர்கள் யார் சகோதரே ?.. இந்த உலக பூமி இறைவனை தவிர யாருக்கும் சொந்தமில்லை .. நேற்று வாழ்ந்தவர்கள் இன்று இல்லை , இன்று வாழும் நாம் நாளை இருக்க மாட்டோம் .. என்ன சகோதரே பேசிகொண்டு இருகிறீர் ?.... முதலில் எல்லா மனிதர்களையும் மனிதர்களாக பாருங்கள் ...அவன் தமிழன் , இவர் ஆந்திரா காரன் என்று பிளவு படுத்தாதீர்கள் .. சரி அப்படியே பார்த்தால் கூட தமிழ் நாட்டில் பிறந்தவரா ரஜினி காந்த் ??? சொல்லுங்கள் ... மக்களை சுரண்டி , ஏமாற்றி பிழைக்கும் யாரை பற்றியும் பேசுவதற்கு யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை

  ReplyDelete
 3. nagore flash avarglaey mudhalil salam vargalukku sonnathey thappu

  ReplyDelete
 4. தங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக !

  சகோதரரே ..

  மாற்று மத சகோதரர்களுக்கு ஸலாம் சொல்வது இஸ்லாத்தில் தடுக்கபட்டது கிடையாது.

  இல்லை சொல்ல கூடாது என்றால் அதற்க்கான ஆதாரத்தை தந்தால் திருத்திகொள்கிறேன்

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...