அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.
இந்திய மாணவர இஸ்லாமிய அமைப்பு (Sio)- வின் சார்பாக நாகூர் ஹமீதிய்யா நர்ஸரி பள்ளி அரங்கத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான "தேர்வு வழிக்காட்டுதல் நிகழ்ச்சி" இன்று மாலை மக்ஃரிப் தொழுகைக்கு பிறகு நாகூர் முஸ்லிம் சங்கத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. Sio-வின் நாகை மாவட்டத் தலைவர் சகோ. H. சமீம் அக்தர்.B.E., இந்நிகழ்வி்ற்க்கு தலைமைத் தாங்கினார்.
நாகூர் ஹிலுரு ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மெளலவி. சாதாத் அவர்கள் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அதை தொடர்ந்து "கல்வியின் தத்துவம் - Philosophy of Education" என்பதை குறித்து தனது உரையின் வாயிலாக விளக்கினார் Sioவின் நாகை மாவட்ட முன்னால் தலைவர் J. முஹம்மது ரியாஸ்.M.Com.,
அதை தொடர்ந்து தேர்வு வழிக்காட்டுதல் பயிற்ச்சியை தன்முனைப்பு பயிற்சியாளரும், ஆசிரியருமான ஜனாப். முஹம்மது சலீம் M.SC, B.ED.., இதில் தேர்வு காலங்களில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள், உளவியல் தயாரிப்பு, தன்னம்பிக்கை, உணவு பழக்க வழக்கம், படிக்கும் முறை, தேர்வெழுதும் முறை என பல கோணங்களிலும் மிக சிறந்த ஆலோசனைகளை அவர் வழங்கினார்.
நிகழ்ச்சி முழுவதையும் அழகாக தொகுத்து வழங்கினார் Sioவின் நாகை மாவட்ட துணை செயலாளர் H.முஹம்மது ரியாஸ் அஹமது.
இந்நிகழ்வில் 100க்கும் மேற்ப்பட்ட மாணவ- மாணவிகளும், 60க்கும் மேற்ப்பட்ட பெற்றோர்களும் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
நன்றி : அஸ்லம்.
நன்றி : அஸ்லம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன