அஸ்ஸலாமு அழைக்கும்..,
குப்பை கூலங்களின் கூடாரமாக காட்சியளிக்கும் , நாகூர் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியை JAQH சார்பாக செய்ய முடிவெடுத்துள்ளது வரவேற்கதக்கது.
நம் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்துகொள்ள வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. அதுவும் கடற்கரை என்பது மிக முக்கியமான ஓர் அழகான பொது இடம் , அதை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
இதில் கவனிக்கபட வேண்டிய விஷயம் என்ன வென்றால் ஊர் மக்களைவிட , தர்காவிற்கு வரும் வெளியூர் மக்களே அதிக அளவில் கடற்கடரையில் நேரத்தை செலவிடுகிறார்கள்.., இந்த அளவிற்கு குப்பை கடற்கரையில் சேர்வதற்கும் அவர்களே முக்கிய காரணம்.
இதற்க்கு தர்கா நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை ,நாகூரை சுற்றுலா தளம் என்று பெருமையாக சொல்லிகொள்ளும் இவர்கள் அதற்குண்டான பராமரிப்புகளை செய்கிறார்களா..? நாகை நகராட்சி இதை கண்டுகொள்கிறதா ?
JAQH இந்த தூய்மை பணியை செய்ய முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது.
எனினும் இன்னும் ஒரு மாதத்தில் நாகூர் கந்தூரி வர இருக்கிறது , வெளியூர் மக்கள் அதிகஅளவில் வந்துபோவார்கள் .. கடற்கரையில் தற்போதுள்ள குப்பை கூலங்கள் அகற்றப்பட்ட வேகத்தில் மீண்டும் சேர ஆரம்பிக்கும் என்றே என்ன தோன்றுகிறது.
எனவே தர்கா நிர்வாகமே இதற்க்கு பொறுப்பேற்று , தொடர்ந்து தூய்மைபடுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன