(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, July 9, 2016

ஆதாரம் கொண்டு வர முடியுமா – மீடியாக்களுக்கு பகிரங்க சாவல் விடுத்துள்ள ஜாகிர் நாயக்


பிஜேபி மீது தற்போது எழுந்துள்ள 45 ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்புவதற்காக மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் விதம் ஜாகிர் நாயக் குறி்த்த சர்ச்சையை எழுப்பியுள்ளது பிஜேபி அரசு.
பிஜேபி அரசு மீது எழுந்த 45 ஆயிரம் கோடி ஊழல் குற்றசாட்டை குறித்து வாய் திறக்காத நேஷனல் மீடியாக்கள் ஜாகிர் நாயக் சர்ச்சையை தூக்கி பிடிக்கின்றது.
இஸ்லாம் மதத்தை சாராத சமூக ஆர்வலர்கள் இது குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மீடியாவில் ஜாகிர் நாயகிற்கு எதிராக பேசும்  டைம்ஸ் நவ் அர்னாப் பிஜேபியின் பின்னனியை சோ்ர்ந்தவர் என சோசியல் மீடியாவில் பல முறை விமர்சிக்கப்பட்டவர் என்பதும் இதை உறுதிப்படுத்துகின்றது.

தனது மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜாகிர் நாயக் அவர்கள் ஒட்மொத்த இந்திய மீடியாவிற்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
அதில் , ”பங்களாதேஷ் ல் நடந்த தாக்குதலுக்கு நான் தான் காரணம் எனது பேச்சால் தான் அவ்வாறு நடந்தது என பங்களாதேஷ் அரசு தெரிவித்திருப்பதாக ஆதாரப்புர்வமான ஒரு செய்தியை கொண்டு வாருங்கள் பார்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் தான் மலேசியாவிற்கு சென்று அங்குள்ள அனைத்து அமைச்சர்களையும் சந்தித்து வந்தேன் எனக்கு அங்கு தடை விதித்துள்ளதாக மீடியாக்கள் அப்பட்டமாக அவதூறு பரப்புகின்றது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷ் அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தானே பேசியதாகவும் அவர்கள், நாங்கள் எதுவும் அப்படி சொல்ல வில்லை அந்த செய்தியை நாங்கள் நம்புவும் இல்லை எனக் பங்களாதேஷ் அரசு அதிகாரிகள் தெரிவித்ததாகவும் ஜாகிர் நாயக் அவா்கள் இதில் கூறியுள்ளார்கள்.
ஜாகிர் நாயக்கின் இந்த பேச்சை உறுதிப்படுத்தும் விதமாக பங்களாதேஷ் அரசு இன்று ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. இதில் பங்களாதேஷ் ன் உள்துறை அமைச்சர் அசாத்துஸ்ஸமான் அவர்கள் இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு தொடர்பு உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். Source : http://www.bbc.com/news/world-asia-36462026
சம்பந்தபட்ட அரசே ஒன்றும் சொல்லதா நிலையில் வரிந்து கட்டிக் கொண்டு பிஜேபி அரசு வருவது ஏன் மீடியாக்கள் முனைப்பு காட்டுவது ஏன் ? முஸ்லிம்களுக்கு இந்தியாவில் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இதற்கு காரணம் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.
ஜாகிர் நாயகம் வெளியிட்டுள்ள வீடியோ அவரது இந்த சாவை ஏற்க மீடியாக்கள் தயாரா ?

Wednesday, February 17, 2016

நாகூர் கடற்கரையை சுத்தம் செய்யும் பணி - JAQH அழைப்பு


அஸ்ஸலாமு அழைக்கும்..,

குப்பை கூலங்களின் கூடாரமாக காட்சியளிக்கும் , நாகூர் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியை JAQH சார்பாக செய்ய  முடிவெடுத்துள்ளது வரவேற்கதக்கது.

நம் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்துகொள்ள வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. அதுவும் கடற்கரை என்பது மிக முக்கியமான ஓர் அழகான பொது இடம் , அதை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

இதில் கவனிக்கபட வேண்டிய விஷயம் என்ன வென்றால் ஊர் மக்களைவிட , தர்காவிற்கு வரும் வெளியூர் மக்களே அதிக அளவில் கடற்கடரையில் நேரத்தை செலவிடுகிறார்கள்.., இந்த அளவிற்கு குப்பை கடற்கரையில் சேர்வதற்கும் அவர்களே முக்கிய காரணம். 

இதற்க்கு தர்கா நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை ,நாகூரை சுற்றுலா தளம் என்று பெருமையாக சொல்லிகொள்ளும் இவர்கள் அதற்குண்டான பராமரிப்புகளை செய்கிறார்களா..? நாகை நகராட்சி இதை கண்டுகொள்கிறதா ?


JAQH இந்த தூய்மை பணியை செய்ய முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது.
எனினும் இன்னும் ஒரு மாதத்தில் நாகூர் கந்தூரி வர இருக்கிறது , வெளியூர் மக்கள் அதிகஅளவில் வந்துபோவார்கள் .. கடற்கரையில் தற்போதுள்ள குப்பை கூலங்கள் அகற்றப்பட்ட வேகத்தில் மீண்டும் சேர ஆரம்பிக்கும் என்றே என்ன தோன்றுகிறது.

எனவே தர்கா நிர்வாகமே இதற்க்கு பொறுப்பேற்று , தொடர்ந்து  தூய்மைபடுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும்.  




Monday, February 15, 2016

SIO நடத்திய தேர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.
இந்திய மாணவர இஸ்லாமிய அமைப்பு (Sio)- வின் சார்பாக நாகூர் ஹமீதிய்யா நர்ஸரி பள்ளி அரங்கத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான "தேர்வு வழிக்காட்டுதல் நிகழ்ச்சி" இன்று மாலை மக்ஃரிப் தொழுகைக்கு பிறகு நாகூர் முஸ்லிம் சங்கத்தில் சிறப்பாக நடைப்பெற்றது. Sio-வின் நாகை மாவட்டத் தலைவர் சகோ. H. சமீம் அக்தர்.B.E., இந்நிகழ்வி்ற்க்கு தலைமைத் தாங்கினார்.
 நாகூர் ஹிலுரு ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மெளலவி. சாதாத் அவர்கள் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 
அதை தொடர்ந்து "கல்வியின் தத்துவம் - Philosophy of Education" என்பதை குறித்து தனது உரையின் வாயிலாக விளக்கினார் Sioவின் நாகை மாவட்ட முன்னால் தலைவர் J. முஹம்மது ரியாஸ்.M.Com.



அதை தொடர்ந்து தேர்வு வழிக்காட்டுதல் பயிற்ச்சியை தன்முனைப்பு பயிற்சியாளரும், ஆசிரியருமான ஜனாப். முஹம்மது சலீம் M.SC, B.ED.., இதில் தேர்வு காலங்களில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள், உளவியல் தயாரிப்பு, தன்னம்பிக்கை, உணவு பழக்க வழக்கம், படிக்கும் முறை, தேர்வெழுதும் முறை என பல கோணங்களிலும் மிக சிறந்த ஆலோசனைகளை அவர் வழங்கினார். 
நிகழ்ச்சி முழுவதையும் அழகாக தொகுத்து வழங்கினார் Sioவின் நாகை மாவட்ட துணை செயலாளர் H.முஹம்மது ரியாஸ் அஹமது.


இந்நிகழ்வில் 100க்கும் மேற்ப்பட்ட மாணவ- மாணவிகளும், 60க்கும் மேற்ப்பட்ட பெற்றோர்களும் கலந்துக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

நன்றி : அஸ்லம்.

Sunday, February 14, 2016

கௌதியா மேல்நிலை பள்ளியில் PFI நடத்திய கல்வி & வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி.

அஸ்ஸலாமு அழைக்கும்.

பாப்புலர் பிரான்ட் ஆஃப் இந்தியா  என்ற சமூதாய அமைப்பின் மூலம் நமது கௌதியா மேல்நிலை பள்ளியில் மாணவ , மனைவியர்களுக்கான கல்வி மற்றும் வாழ்க்கை வழிகாட்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இது போன்ற நிகழ்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். பள்ளி நிர்வாகமும் இது போன்ற நிகழ்ச்சிகளை மாணவர்களுக்கு நடத்தி பள்ளியின் கல்விதிறன் மேம்பட உதவி செய்ய வேண்டும்.

PFI இது போன்ற நிகழ்ச்சிகளை ஒவ்வொரு வருடமும் நடத்த வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம். வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.














Monday, January 4, 2016

தொடர்ந்து காற்றில் பரவிவரும் நிலக்கரி துகள்கள், கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

அஸ்ஸலமு அழைக்கும்..

மீண்டும் நிலக்கரி துகள் அதிகஅளவில் ஊர் முழுவதும் காற்றில் பரவி வருவதால் பிரச்சனை அதிகரித்துள்ளது. இதை கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் கலந்துகொள்ளுங்கள்.

இதற்க்கு நிரந்தரதீர்வை எட்டும்வரை ஓயாமல் போராடவேண்டும் என்பதே நம் அனைவரின் வேண்டுகோள்.


Related Posts Plugin for WordPress, Blogger...