(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, May 28, 2015

புதுப் பொலிவுடன் பளிச்சிடும் தமிழக அரசின் இணையதளம்

தமிழக அரசின் இணையதளம் புதுப் பொலிவுடன் பளிச் எனக் காணப்படுகிறது. பல்வேறு பொதுமக்கள் சேவைப் பிரிவும் இதில் தற்போது இடம் பெற்றுள்ளது. 

தமிழக அரசின் இணையதளம்

உட்கார்ந்த இடத்திலிருந்தே பல சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள இந்த தளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. பிறப்பு, இறப்பு சான்று பெறுவதற்கான விண்ணப்பம், ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிப்பது ஆகியவற்றுக்கு தனித் தனியாக அரசுத் துறைகளின் இணையதளத்திற்குப் போகாமல் இந்தத் தளத்திலேயே அத்தனைத் துறைகளுக்கும் ரவுண்டு அடித்து விட்டு வர முடியும். தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் இணையதளம் அமைந்துள்ளது. 

நில உரிமை விவரங்கள் (Encumbarance Certificate), பத்திரப் பதிவு சேவைகள் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன. பிறப்பு, இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பம், இருப்பிடச் சான்று, ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம், நேட்டிவிட்டி சான்றிதழ் ஆகியவற்றுக்கு விண்ணப்பக்கத் தேவையான படிவங்களை டவுன்லோட் செய்து கொள்ளும் வசதியும் இடம் பெற்றுள்ளது. 

அரசின் நலத் திட்டங்கள் உள்ளிட்ட விஷயங்களும் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. தமிழக அரசின் அன்றைய முக்கிய நிகழ்வு குறித்த புகைப்படங்கள், பத்திரிக்கை செய்திக் குறிப்புகள் உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. மற்றபடி மாவட்டங்கள் குறித்த விவரங்கள், சென்னை மாநகராட்சி உள்ளிட்டவை குறித்த பழைய விவரங்களும் இடம் பெற்றுள்ளன.

Thanks to oneindia

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...