(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, June 3, 2015

ஓடும் விமானத்தில் அவமதிக்கப்பட்ட இஸ்லாமிய சகோதரி

முஸ்லிம்களுக்கு எங்கள் நிறுவனத்தில் வேலையில்லை, வாடகைக்கு வீடு இல்லை, ஹிஜாப் அணிந்து வரக்கூடாது, தாடி வைத்து இருக்க கூடாது என்று உலகில்  முஸ்லிம்களுக்கு எதிரான கெடுபிடிகள் ,அடக்குமுறைகளை நாம் எதிர்கொண்டு வரும் இவ்வேளையில்...

அதன் உச்சமாக சமீபத்தில் ஓர் சம்பவம் நடந்துள்ளது..

நடந்த நிகழ்வு இதுதான் :

கடந்த மே 29 தேதி தாஹிரா அஹமது என்ற சகோதரி united airlines என்ற விமானத்தில்  பயணித்து கொண்டிருக்கிறார்..  விமானம் 30,000அடி உயரத்தில் சென்று கொண்டிருக்கிறது.., விமான பணிப்பெண் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று தாஹிராவிடம் கேட்க , எனக்கு diet coke வேண்டும் என்று கேட்டுள்ளார்.. கேட்டதை போல் diet coke வந்தது ஆனால் அது முன்னரே சீல் உடைக்கபட்டிருப்பதை பார்த்த தாஹிரா .. என்ன இது எனக்கு சீல் உடைக்காத diet coke வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.  அதற்க்கு அந்த பணிபெண் .. மன்னிக்கவும் சீல் உடைக்காத diet coke உங்களுக்கு தரமுடியாது என்று சொல்லிவிட்டார் .. பிறகு அதே பணிப்பெண் தாஹிரா இருக்கைக்கு முன்னே உள்ள ஒருவருக்கு  சீல் உடைக்காத (cane beer) பீர் வந்து கொடுத்துள்ளார் அதை பார்த்த தாஹிரா , இவருக்கு கொடுக்கும்போது எனக்கு மட்டும் கொடுக்க ஏன் மறுத்தீர்கள் என்று பணிப்பெண்னிடம் கேள்வி எழுப்ப ..

அதற்க்கு அவர் கூறிய பதில் ... இதை (சீல் உடைக்கப்படாத diet coke) உங்களுக்கு(முஸ்லிம்களுக்கு) கொடுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை , ஏனெனில் இதை நீங்கள் ஆயுதமாக பயன்படுத்த கூடும் என்று கூறியுள்ளார்.. இதை கேட்டவுடன் தாஹிரா தான் அவமதிக்கப்பட்டதை உணர்ந்து மனவேதனை அடைந்துள்ளார்..  நீங்கள் என்னை அவமதிக்கும் விதமாக நடந்து கொள்கிறீர்கள் என்று தனது ஆதங்கத்தை தாஹிரா முறையிட்டுகொண்டிருக்க ...

எதிரே  அமர்ந்து இருந்த பயணி ஒருவன் எழுந்து .. ஏ முஸ்லிமே .. நீ வாயை மூடு என்று அசிங்கமான சொற்களில் பேசியுள்ளான் .. அதர்ச்சியான தாஹிரா , என்ன சொன்னீர்கள் என்று கோபமாக கேட்ட ..

ஆமாம் உனக்கே தெரியும் நீ அதை ஆயுதமாக பயன்படுத்தகூடியவள் தான் என்று கோபமாக கத்தியுள்ளான்... இதை எதிர்பார்க்காத தாஹிரா... சுற்றி இருக்கும் மற்றவர்கள் தனக்காக குரல் கொடுப்பார்கள் என்று பார்த்தால்...  எல்லோரும் நிகழ்வை  ஆமோதிக்கும் விதமாக நடந்தது கொண்டதை பார்த்து செய்வதைரியாது . மனவேதனையில் அழுதுள்ளார் ...,

மேற்கண்ட நிகழ்வு கடந்த மே 29 அன்று நடந்துள்ளது ... அடுத்த நாள் அவர் முகநூலில் தனக்கு நேர்ந்த விஷயத்தை  post செய்யவும் .. விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ...


விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி


இதற்க்கு விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்தாலும் அது ஏற்புடையாதாக இல்லை என்று தாஹிரா கூறியுள்ளார்.. இது ஒன்றும் diet coke கேட்டதனால் நடந்த சிறிய வாக்குவாதம் அல்ல .. இது முற்றியும் முஸ்லிம்களை தீவிரவாதியாக பார்க்கும் , அவமதிக்கும் செயல் .. அதிலும் நான் பலரால் அறியப்பட்ட ஓர் நபர் .. என் மதத்தை குத்திகாட்டி என்னை தீவிரவாதி என்ற அளவிற்கு பேசி தனது இனவெறியை வெளிபடுத்திய இச்சம்பவம்   மிகவும் கண்டிக்க தக்கசெயல் என்று கூறியுள்ளார்.. 

(அமெரிக்க அதிபர் ஒபாமாவால் பாராட்டப்பட்டவர் தஹரா என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமிய சமுதாயத்திற்காக இவர் ஆற்றிய பணிகளுக்காக வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஒபாமாவால் பாராட்டிக் கெளரவிக்கப்பட்டவர் தஹரா. மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை சார்பில் ஆப்கானிஸ்தானுக்ும் சென்று வந்தவர் இவர். அமெரிக்காவின் இரட்டை முகத்தையே தஹராவுக்கு நேர்ந்த அவமரியாதை வெளிப்படுத்துவதாக உள்ளது.)

30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த ஓர் விமானத்தில் Tahera ahmad என்ற சகோதரிக்கு  நடந்த இச்சம்பவம் பல விஷயங்களை நமக்கு விளங்கபடுத்துகிறது...

முஸ்லிம்கள் என்ன உயர்பதவிகளில் இருந்தாலும் , எப்படி பட்ட துறையில் பணிபுரிந்தாலும் , எந்த நாட்டில் வசித்தாலும் .. முஸ்லிம்கள் என்றால் அவர்கள் தீவிரவாதியாக தான் இருப்பார்கள் என்ற பொதுபுத்தி உலகம் முழுவதும் உள்ள மக்கள் மனதில் மீடியாவினால் விதைக்கப்பட்டுள்ளதை தெளிவாக இச்சம்பவம் உணர முடிகிறது..

ஆனால் இதற்காக முஸ்லிமான நாம் உணர்ச்சிவசபடாமல் .. நிதானமாக இத்தகைய போக்கை எதிர்கொள்ள வேண்டும் ..  என்ன தான் உலகமே ஒன்று திரண்டு முஸ்லிம்கள் தீவிரவாதிகள் தான் என்றாலும் .. நாம் கலங்கதேவையில்லை .. நாமே மறுமையில்  வெற்றியாளர்கள் இன்ஷாஅல்லாஹ்...


அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால்காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.                (அல் குர்ஆன்61:8)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...