நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு
கமாண்டோ படை பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உதவி போலீஸ் சூப்பிரண்டு
சிபிசக்கரவர்த்தி கூறினார்.
ஆய்வு கூட்டம்
நாகையை அடுத்த நாகூர் தர்காவில் வருகிற
11–ந் தேதி முதல் 24–ந் தேதி வரை கந்தூரி விழா நடைபெற உள்ளது. விழாவையொட்டி பாதுகாப்பு
ஏற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் தர்கா அலுவலகத்தில் நடைபெற்றது. நாகை உதவி
போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு பிறகு உதவி
போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:– நாகூர் கந்தூரி விழாவின்போது பதற்றத்திற்கு உரிய பகுதிகளாக 6 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கொடி ஊர்வலம், சந்தனக்கூடு ஊர்வலங்களில் பங்கேற்பவர்களுக்கு அடையாள அட்டை
வழங்கப்படும். அணிவகுப்பு வாகனங்களுக்கு பல்வேறு அரசு துறைகள் மூலம் வழங்க வேண்டிய
சான்றிதழ்கள் ஒற்றைச் சாளர முறையில் நாகூர் தர்கா அலுவலகம் மூலம் வழங்கப்படும்.
கமாண்டோ படை பாதுகாப்பு
விழா நாட்களில் நாகூர் பகுதியில்
ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் போன்றவைகளுக்கு தடை
விதிக்கப்படும். ஊர்வலங்களில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மத்தியில் அமைதியை குலைக்கும்
வகையில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை
எடுக்கப்படும்.
தஞ்சை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து பயிற்சி பெற்ற கமாண்டோ படைகள்
பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். கால்மாட்டுத்தெரு பெண்கள் கடைத்தெரு
பகுதியில் ஆண்கள் காரணம் இன்றி செல்வதற்கு தடை விதிக்கப்படும்.இவ்வாறு அவர்
கூறினார்.
முன்னதாக நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில்
தர்கா மேனேஜிங் டிரஸ்டி எஸ்.ஏ.சேக்ஹசன்சாகிபு, பரம்பரை கலிபா மஸ்தான்சாகிபு, டிரஸ்டிகள் சுல்தான்கபீர்சாகிபு, பாக்கர்சாகிபு, தர்கா மேலாளர் திருநாவுக்கரசு, நாகை முஸ்லிம் ஜமாத் தலைவர் ஜெய்னுல்ஆபிதீன், நகர சபை துணைத்தலைவர் சுல்தான்அப்துல்காதர், காங்கிரஸ் சிறுபாண்மை பிரிவு மாநில பொறுப்பாளர் நவுசாத், தர்கா ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கலீபாசாகிபு, அபுல்காசிம்சாகிபு, இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், ராதாகிருஷ்ணன், சப்–இன்ஸ்பெக்டர்கள் பாரதிதாசன், ஜார்ஜ் உள்பட
பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன