நாகூரில் போக்குவரத்து நெருக்கடி உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
நாகூரில் கடந்த சில நாட்களாக அதிரடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றது. கடைத்தெருவிற்கு சென்றால் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் வீதிகள் இருப்பதை பார்க்க முடிகிறது.
இது போன்ற ஆக்கிரமிப்பு அகற்றம் கடந்த காலங்களில் நடந்தாலும் இம்முறை படு தீவிரமாகவே நடக்கிறது.கட்சிக் கொடி கம்பங்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் அனைத்தையும் அகற்றிவருகிறது நகராட்சி நிர்வாகம் மேலும் பிறகு மீண்டும் அதே ஆக்கிரமிப்பு நிகழ்ந்து விடாத வண்ணம் முன் நடவடிக்கைகளும் எடுக்கப்பட இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.
(ஆனால் ஒரு தேரு ஒன்னு ரொம்ப வருஷமா மெயின் ரொட்ட ஆக்கிரமிச்சிகிட்டு இருக்கு அதே கண்டுக்கல இன்னும் !!!)
இந்நிகழ்வு நாகூரில் வியாபாரம் செய்பவர்களுக்கு பலவகையில் சிரமத்தை கொடுத்துள்ளது எனினும் இதில் யாருக்காகவும் இந்த கட்சி,அந்த கட்சி என்று பாரபட்சம் பார்க்காமலும் நகராட்சி நிர்வாகம் செயல்படுவதால்
யாரும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
எது எப்படியாயினும் கடை தெரு விசாலமாக நெருக்கடி இல்லாமல் இருப்பது சந்தோசம் தான். ஆனால் நகராட்சி நிர்வாகம் சொன்னது போல் இந்நிலை தொடரவேண்டும் என்பதே பொதுமக்களின் என்னோட்டம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன