சென்னை: ரேஷன் கார்டுகளை ஒரு வருடத்திற்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது. இதையடுத்து 2013ம் ஆண்டுக்கான உள்தாள் இணைக்கும் பணி தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது.
இந்தப் பணி பிப்ரவரி மாதம் வரை நடைபெறவுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு கடைசி முறையாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. இந்தக் கார்டுகளின் ஆயுள் காலம் 2009ம் ஆண்டுடன் முடிவடைந்தது. அதன் பிறகு புதிய கார்டுகள் இன்னும் தரப்படவில்லை மாறாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.
தற்போது பயோ மெட்ரிக் கார்டுகளை வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. ஆனால் இதை வழங்கும் பணி தாமதமடைந்துள்ளதால் 2013ம் ஆண்டு வரை தற்போதைய பழைய கார்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இதற்கான உள்தாளை இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் இன்று தொடங்கியுள்ளன. பிப்ரவரி வரை இது நடைபெறும். ரேஷன் கார்டை குடும்ப தலைவர் அல்லது கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சென்று புதுப்பிக்கலாம். அவர்களிடம் பதிவேட்டில் கட்டாயம் கையெழுத்து பெறப்பட வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன