விஸ்வரூப பிரச்சனை பல நிலைகளை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இப்பிரச்சனையில் ஆரம்பத்திலிருந்தே தமிழக அரசின் முஸ்லீம் ஆதரவு நடவடிக்கைகள் நம்மை பிரமிக்க வைத்தது ,யோசிக்க வைத்தது உண்மை ..
இந்நிலையில் நேற்று முஸ்லீம்களை விட அவசர அவசரமாக தலைமை நீதிபதியை சந்தித்து அரசு தரப்பு மேல்முறையீடு செய்வதை பார்த்தமாத்திரத்தில் வலுவாக புரிந்தது .. இது முஸ்லிம்களுக்கு ஆதரவான நடவடிக்கை அல்ல , கமலுக்கு எதிரான நடவடிக்கை என்பது..
கமலுடன் வஞ்சம் தீர்த்து கொள்ள சமயம் பார்த்து இருந்த அரசு தரப்பிற்கு முஸ்லீம்களின் எதிர்க்குரல் வசமாக அமைய.. முஸ்லீம்களின் பெயரை சொல்லி நெருக்கடிக்கு உள்ளாகியது கமல்ஹாசனை...
இதன் மூலம் கமலுக்கும் வேட்டு வைத்தாகிவிட்டது - முஸ்லீம்களின் நற்பெயரும் கிடைக்கும் என்று கணக்கு போட்டு கலத்தில் இறங்கியது தமிழக அரசு...
ஆனால் இந்த நாடகம் முழுமையாக அம்பலப்பட்டு விட்டது தற்போது..
(முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஓவர் ஆக்டிங் கொடுத்தன் மூலம்)
எனினும் இப்பிரச்சனையில் முஸ்லீம்களின் உணர்வுகளை தன் சுய அரசியலுக்காக தமிழக அரசு பழிகடாவாக ஆக்கிவிட்டது என்ற கருத்தை மறுக்கிறோம்.
காரணம் யாரின் தூண்டுதலில் பெயரிலும் நாம் இந்த படத்தை எதிர்க்கவில்லை பல காலமாக முஸ்லிம்களை தீவிரவாதத்தொடு தொடர்பு படுத்தி வரும் சினிமா துறையின் மீது இருந்த கோபம் இறுதியாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது என்பதே உண்மை.
தமிழக அரசு நினைத்ததை முஸ்லிம்களை காரணமாக வைத்து சாதித்து கொண்டது ...
முஸ்லீம்களான நாங்கள் நினைத்ததை தமிழக அரசியலை வைத்து எங்களுடைய எதிர்ப்பை வலுவாக நிறுவி அதில் ஏற்கத்தக்க வகையில் வெற்றியும் பெற்று சாதித்து கொண்டோம்... என்பதே எதார்த்தம்...
அதற்கு தமிழக அரசுக்கு நன்றிகள் பலகோடி...
இதற்கிடையில் படத்தில் உள்ள சர்ச்சையான காட்சியை நீக்குவதாக கமல் கூறியுள்ளார்.. கொடுத்த குடைச்சல் தாங்காமல் இப்போது தான் கமல் இது சமந்தமாக வாய்திறந்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடும் செய்துள்ளார்.
இப்போது கமலுக்கும் - தமிழக அரசுக்கும் பிரச்சனை உருவெடுத்துள்ளது.
இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சில சர்ச்சை காட்சிகளை மட்டும் நீக்கி படத்தை வெளியிடுவதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதா ? என்பது அதிகாரபூர்வமாக தெரியவில்லை.ஜவாஹிருல்லாஹ் அது பற்றி பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இது ஒரு புறம்மிருக்க பல அமைப்புகள் ஒன்றிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பை உடைக்கும் உள்வேலை படு ஜோராக நடந்து வருகிறது..
தற்போது புதியதலைமுறை ஊடகத்தில் கூட தேசிய லீக் பஷீருக்கும் , ஜவாஹிருல்லாஹ்விற்கும் மூட்டி விட்டு வேடிக்கை பார்த்தார்கள்.
பார்ப்போம் அடுத்து என்ன நடக்கிறது என்பதை ...