(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, October 19, 2011

கவுன்சிலர் தேர்தலை புறக்கணித்த முஸ்லீம்கள்..!


தங்களுக்கு பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டதாகக் கூறி கோவை 
மாநகராட்சியின் 87 மற்றும் 95-வது வார்டு கவுன்சிலர் தேர்தலை முஸ்லிம்கள் புறக்கணித்தனர். 


கோவை மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தில் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் 3-ம் நிலை நகராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. 
குறிச்சி நகராட்சியில் 1,2,6-வது வார்டுகள் மாநகராட்சியின் 95-வது வார்டாகவும், குனியமுத்தூர் நகராட்சியின் 1,2 மற்றும் 21 வார்டுகள் மாநகராட்சியின் 87-வது வார்டாகவும் மாற்றப்பட்டுள்ளன. 

இவ்விரு வார்டுகளும் தாழ்த்தப்பட்ட மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த இரு வார்டுகளையும் பொது வார்டாக மாற்ற வேண்டும் எனக் கோரி தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கோரி வந்தன.

கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவுன்சிலர் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டது. 




95-வது வார்டில் அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களும்,4 சுயேச்சைகளும் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து இப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. 95-வது வார்டுக்கு உள்பட்ட குறிச்சிப்பிரிவு நொய்யல்பாலம் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். 


காலை 9 மணி நிலவரப்படி இப் பள்ளியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் (1035) மேயர் பதவிக்கு 140 பேர் வாக்களித்தனர். ஆனால் கவுன்சிலர்களுக்கு 7 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 


133 பேர் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று
பதிவேட்டில் கையெழுத்திட்டிருந்தனர். 



இதே பள்ளியில் மற்றொரு வாக்குச் சாவடியில் 130 பேர் மேயருக்கு வாக்களித்தனர். கவுன்சிலர்களுக்கு 20 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். எஞ்சிய 110 பேர் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்தனர். 


87-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் மற்றும் இரு சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். இந்த வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிகளில் காலை 9 மணி நிலவரப்படி சராசரியாக 8 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 


கவுன்சிலர் தேர்தல் புறக்கணிப்பு குறித்து மனிதநேய மக்கள் கட்சி மாநிலச் செயலர் ஜி.உமர்,தமுமுக மாவட்ட செயலர் எச்.ஹமீது  ஆகியோர் கூறியது: 


தாழ்த்தப்பட்டோர் வார்டுகள் உருவாக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை.ஆனால்,குறிச்சி நகராட்சியில் இருந்து சேர்க்கப்பட்டுள்ள 2 வார்டுகளில் ஏற்கெனவே முஸ்லிம் சமூகத்தினர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். 


மூன்றாவதாக ஒரு வார்டை சேர்த்து தனி வார்டாக மாற்றியுள்ளனர். முஸ்லிம் சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் வரக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த மாற்றம் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்றனர்.(நன்றி-தினமணி 18 Oct 2011)
இது ஒரு வகையில் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இது போன்ற விஷயங்கள் தான் மாற்றத்திற்கான முதல் படி.


இது ஒரு புறம் இருக்க .. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாகூர் போன்ற ஊர்களில் ஏகோபித்த குரலில் ஒருவரை முன்னிறுத்தி ஆதரவளித்து போட்டியின்றி தேர்வுசெய்யும் திறமையும் ,பக்குவத்தையும் நம் சமூகம் இன்னும் பெறவில்லை என்பது வருத்தப்படவேண்டிய ஒன்று தான்.


நான்கு ,ஐந்து தெருவிற்குள் ஒரு வார்டு -கவுன்சிலர் தேர்தலுக்கு  போட்டியின்றி ஒருவரை நம்மால் தேர்வு செய்ய முடியவில்லை. தெருவிற்கு பத்துப்பேரு நான் நீன்னு போட்டியிட்டு  நம்மிடையே ஆயிரம் குரோதம் ,சுயநலம் ,விளம்பரம்,பொறாமை இது தான் மிச்சம். இதுல ஓட்டுக்கு லஞ்சம் வேற.. 


தயவு செய்து இனி யாரும் போலியாக ஒற்றுமை கோஷம் போட வேண்டாம்.


முதலில் நாம் சகோதரத்துவத்தையும் ,சகிப்புதமையையும் நம்மிலிருந்து நம் வீட்டிலிருந்து ,நம் தெருவிலிருந்து தொடங்குவோம்.பிறகு வாய்கிழிய நம் ஒற்றுமையை பற்றி பேசுவோம்.

2 comments:

  1. pudumanai therivilum aathiga peru- 48 (a) formai than full up seithargal - nenga mela kurupita karanathugkagathan by fareezal

    ReplyDelete
  2. சகோதரர் fareezal நீங்கள் குறிப்பிட்ட விஷயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று ஆனால் இது போன்ற சிந்தனைகள் சில இளைஞர்களிடம் இருக்கிறதே தவிர - மற்றவர்களிடம் குறிப்பாக பெண்களிடம் இல்லை. இன்ஷால்லாஹ் இது போன்ற விஷயங்களை நாம் ஒவ்வொரும் பரவலாக்கவேண்டும்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...