(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, June 9, 2011

ஆயுத தாக்குதலுக்கு தயார் - ராம்தேவ் (போலி அகிம்சை அம்பலமானது)

மத்திய அரசுக்கு எதிராக அடுத்த முறை போராட்டம் நடத்தும்போது, ஆயுதங்களுடன் எதிர்தாக்குதலுக்கு தயாராக இருப்போம் என யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார்.
’அடுத்த முறை போராட்டத்தில் பங்கேற்பவர்கள் ஆயுதங்களுடன் எதிர்தாக்குதலுக்கு தயாராக இருப்பார்கள்.
ராம்லீலா, ராவண்லீலாவாக மாறும்.

அப்போது யாருக்கு அடி விழுகிறது என்பதை பார்ப்போம். இதற்காக ஒவ்வொரு பிராந்தியத்தி லிருந்தும் 20 இளைஞர்கள் முன்வர வேண்டும்.

அவர்கள் 30 லிருந்து 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பெண்களும் முன்வரலாம்.

அவர்கள் தங்கள் உயிரையும் அர்ப்பணிக்க தயாராக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்படும்.

10 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய படையை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்’’
என்று கூறினார்.

ஆயுதம் தாங்கிபோராடப்போவதாக அறிவித்துள்ள யோகாகுரு பாபா ராம்தேவின் கருத்துக்கு அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இது ஒரு பயங்கரவாத சிந்தனையை தோற்றுவிப்பதாகும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக போலி சாமியார் யோகா குரு பாபா ராம்தேவ் கடந்த 4ம் தேதி டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார்.

நள்ளிரவில் போராட்டம் நடந்த ராம்லீலா மைதானத்துக்குள் நுழைந்த போலீஸ், ராம்தேவ், அவரது ஆதரவாளர்களை வெளியேற்றியது. போலீசார் நடத்திய தடியடியில் சிலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஹரித்வாரில் நேற்று பேட்டி அளித்த ராம்தேவ், மத்திய அரசை மன்னித்து விட்டதாக தெரிவித்தார். ஆனால், ‘’அடுத்த முறை போராட்டத்தில் பங்கேற்பவர்கள் ஆயுதங்களுடன் எதிர்தாக்குதலுக்கு தயாராக இருப்பார்கள்.

ராம்லீலா, ராவண்லீலாவாக மாறும். அப்போது யாருக்கு அடி விழுகிறது என்பதை பார்ப்போம்.  இதற்காக ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும் 20 இளைஞர்கள் முன்வர வேண்டும்.

அவர்கள் 30 லிருந்து 40 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பெண்களும் முன்வரலாம். அவர்கள் தங்கள் உயிரையும் அர்ப்பணிக்க தயாராக இருக்க வேண்டும்.

அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்படும். 10 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய படையை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்று கூறினார்.

சிந்திக்கவும்: இது ஒரு திட்டமிட்ட பயங்கரவாதம், இவர் நடத்தும் உண்ணாவிரத போராட்டம் என்பதே ஒரு கண்துடைப்பு.  இவரிடம் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன.

இவருக்கு சொந்தமாக வெளிநாட்டில் ஒரு சொகுசு தீவே இருக்கிறது. இது ஒன்றும் இவர் உழைத்து சம்பாதித்தது இல்லை. இந்த சொத்துக்கள் எல்லாம் மக்கள் பணம்.

இந்த மக்கள் பணத்தை வைத்துதான் இவர் தனி விமானத்திலும், ஹெலிஹாப்டர்களிலும் சுத்துகிறார். மேலும் விலை உயர்ந்த வெளிநாட்டு கார்களில் வளம் வருகிறார்.

இந்தியாவில் நடந்த எத்தனையோ போராட்டங்களில் போலீஸ் தடியடி நடத்தியது. அப்போது எல்லாம் யாரும் ஆயுதத்தோடு வரவேண்டும் என்று சொல்லவில்லை. அப்படி ஆயுதம் எடுக்கவேண்டிய சூழல்கள் இந்தியாவில் பல சந்தர்ப்பங்களில் இருந்ததும், யாரும் அப்படி செய்யவில்லை.

ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு தமிழக மக்கள் ஆயுதம் தூக்கி இருக்கவேண்டும். ஏன் என்றால் தங்கள் தொப்புள் கொடி உறவுகள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட இந்திய அரசு ஆயுதம் கொடுத்து உதவியது.

காஷ்மீரிலே மக்கள் அமைதி போராட்டம் நடத்தினார்கள் இவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இதுவரை பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர்.  ஆனால் அந்த மக்களும் ஆயுதம் எடுக்கவில்லை.

ஆனால் போலீஸ் தடியடி கூட முறையாக நடத்தவில்லை இவர்களே ஒருவர்மீது ஒருவர் விழுந்தது காயம் பாட்டதுதான் அதிகம் என்று நேரடி செய்திகள் சொல்கின்றன.

இவர்கள் தங்கள் ஹிந்த்துதுவாவை நிலை நிறுத்த ஒரு ஆயுத போராட்டத்திற்கு தயாராவார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். பயங்கரவாதி பால்தாக்ரேயை கைது செய்யச்சொல்லி கோர்ட் ஆர்டர் இருந்தும் கைது செய்ய முடியவில்லை. பயங்கரவாதி பால்தாக்ரே சொன்னான் என்னை தொட்டால் மும்பையே பற்றி எறியும் என்று.

அதுபோல் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் பகிரங்கமாக சாக பயிற்சி மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கிறார்கள், இவர்களை இதுவரை எந்த சட்டமும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அதுபோல் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் பகிரங்கமாக சாக பயிற்சி மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கிறார்கள், இவர்களை இதுவரை எந்த சட்டமும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அதுபோல் பாபர் மசூதியை உடைத்து கலவரம் செய்து அப்பாவி மக்களை கொன்று குவித்த மோடி, அத்வானி, முரளிமனோகர் ஜோசி ஆகியோர் மீது கடுமையான வழக்குகள் இருந்தும் அவர்களை கைது செய்ய முடியவில்லை.

அதுபோல் இப்போது  ஒரு சாதாரண தடியடிக்கு எதிராக ஆயுதம் தூக்கி அரசுக்கு எதிராக போராட்டமாம். ரவுடித்தனம், பயங்கரவாதம் இதன் மூலம் இந்தியாவை ஹிந்துத்துவா தன் பிடிக்குள் வைத்துள்ளது.

பாபா ராம்தேவ், "ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் யோகா ஆசிரியர்"  என்பது குறிப்பிடத்தக்கது. "சமூக போராளி சப்னம் ஆஸ்மி கூறினார்," இவர்கள் குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் போல் "தங்கள் உண்ணாவிரதம் இருந்த பந்தலை தாங்களே தீயிட்டு கொளுத்த திட்டமிட்டிருந்தனர்.

அதை காரணமாக வைத்து ஹிந்து,. முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தலாம் என்றும், அதனைக்கொண்டு இந்தியாவில் ஹிந்துத்துவா ஆட்சியை ஏற்ப்படுத்தலாம் என்றும் திட்டம் வகுத்திருந்தனர். அதற்க்கு தன்னிடம் ஆதாரம் இருக்கிறது என்றும் கூறியது இங்கு நினைவு கூறத்தக்கது. இவர் போலீஸ்ஸில் முறையிட்டதாலேயே அவர்களது உண்ணாவிரதத்தை போலீஸ் கலைத்தது.

இந்நிலையில் பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா.  இவர் கடந்த 2005ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் போலி ஆவணங்கள் கொடுத்து பாஸ்போர்ட் வாங்கி உள்ளார்.

மேலும் ஆயுத சட்டத்தை மீறி 2 கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து உத்தரகண்ட் புலனாய்வு துறையினர் விசாரிக்கின்றனர்.

இப்போது பாலகிருஷ்ணாவிடம் தீவிர விசாரணை நடத்த பிரதமர் மன்மோகன் சிங்க்கும் உத்தரவிட்டுள்ளார். தவிர உத்தரகண்டில் நிலமோசடியில் ஈடுபட்டதாகவும் பாலகிருஷ்ணா மீது புகார் எழுந்துள்ளது.

இந்த ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆர்,எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் மறைமுக தலைவர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்திற்கு இரண்டுவிதமான முகங்கள் உண்டு. ஒன்று மக்களுக்கு தெரியும் படி வெளிப்படியாக சாகா போன்ற பயிற்ச்சிகளை செய்வார்கள்.

அதே நேரம் மறைமுகமாக 'துப்பாக்கி சுடும் பயிற்சி', மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை கொண்டு, 'குண்டு தாயாரிக்கும் பயிற்சி' ஆகியவைகளும் உண்டு. மேலும், பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டது. எனவேதான் இந்த இயக்கம் நேரிடையாக தீவிரவாத செயல்களில் ஈடுபடாமல் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறது.

ஆர்.எஸ். எஸ். இயக்கம் திரைமறைவாக சில தீவிரவாத இயக்கங்களை நடத்தி வருகிறது. அந்த திரைமறைவு இயக்கத்தினர் நடத்தியதுதான், இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள்'. இந்த தொடர் குண்டுவெடிப்புகளை நடத்திய 'ஹிந்துத்துவா தலைவர் சுவாமி அசிமானந்தா', 'மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.நன்றி : சிந்திக்கவும் தளம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...