(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, July 28, 2010

காவல் துறையில் ஃபாசிசம் தோலுரிக்கும் புதிய நூல்!

இராணுவம், உளவுத்துறை, போலீஸ், உள்துறை, பாதுகாப்புத் துறைகள் என்று அத்தனை துறைகளின் கிடுக்கிப் பிடியும் ஹிந்துத்துவ ஃபாசிகக் கும்பல்களிடம் உள்ளது என்று அதிர்ச்சிகரமான ஆதாரங்களுடன் புதிய தகவல்களைப் புதுப்பித்து ஒரு புதிய நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவந்துள்ளது.


நூலின் பெயர்:(Khaki and Ethnic Violence in India)- இந்தியாவில் காக்கியும் இன வன்முறையும்
ஆசிரியர்: உமர் காலிதி

S.M.முஷ்ரிஃப் எழுதிய (Who Killed Karkare?) "கார்கரேயை கொன்றது யார்?" நூலின் வரிசையில் இந்த நூல் இப்பொழுது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஐ.பி யை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவ ஃபாசிஸ்டுகள், என்று ஆதாரப்பூர்வமாக, தெள்ளத் தெளிவாகக் கூறினார் S.M.முஷ்ரிஃப் அந்த நூலில்.
அதே வரிசையில் ஐ.பி. யில் மட்டுமல்ல, அரசு பாதுகாப்பு இயந்திரங்கள் அனைத்தையும் ஆக்கிரமித்துள்ளார்கள் ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவ ஃபாசிஸக் கும்பல்கள் என்று கூறுகிறது இந்த ஆங்கில நூல்.


இராணுவத்தின் பிரிவுகள், மத்திய ரிசர்வ் படை, RAF என்னும் துரித நடவடிக்கைப் படை (Rapid Action Force) போன்ற துறைகளிலெல்லாம் இப்பொழுது நிலவிலுள்ள முஸ்லிம் விரோதப் போக்குகளை வெவ்வேறு துறைகளில் பதவி வகிக்கும் உயர்ந்த அதிகாரிகளின் வாக்குமூலங்கள் மூலமே விவரிக்கிறார் நூலாசிரியர் உமர் காலிதி.


இன்னொரு அதிர்ச்சிகரமான தவல். 1969 முதல் இன்று வரை ஒரு முஸ்லிமைக் கூட சேர்க்காமல் கவனமாக இருக்கிறது "ரா" (RAW) உளவு அமைப்பு. இதெல்லாம் எதேச்சையாக நடந்ததல்ல. திட்டமிட்டு, கவனமாகச் செயல்படுத்தப்படுவது என்று கூறுகிறார் ஆசிரியர்.


இரகசிய விசாரணை துறைகளில் முஸ்லிம்களை எடுப்பதற்கு எழுதப்படாத விலக்கு முன்பிருந்தே இருப்பதாக முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் விஜய் கரணின் வாக்குமூலங்களை இந்நூலில் படிக்கும் எவரும் அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது.


நாடு முழுவதும் நடந்த அனைத்து கலவரங்களிலும் முஸ்லிம்களுக்கெதிராக போலீஸ் நடந்துக் கொண்டுள்ள வரலாற்றை வரிவரியாய் விளக்குகிறார் ஆசிரியர்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...