(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, September 1, 2014

இரு தரப்பு பேச்சுவார்த்தை எதிர்பார்த்தப்படி சுமூகமாக முடிந்தது.

ஒரு பிரச்சனை எப்படி முறைப்படி கையாளபட வேண்டுமோ அப்படி கையாளபட்டிருகிறது.. அல்ஹம்துலில்லாஹ்.

கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று நாகூர் மியா தெருவில் திடீர் என ஊர்வலமாக சிலர் வந்து பதட்டத்தை ஏற்படுத்தியது நாம் அறிந்ததே.

இதற்க்கு அந்த மீனவ கிராம பஞ்சாயத்து தலைவர்கள் ஏற்கனவே வருத்தம் தெரிவித்து இருந்தார்கள்.

இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் இல்லையென்றால் இது மேலும் பிரச்சனையை உருவாகும் என்று அனைவரும் விரும்பினார்கள்.

அதன்படி இன்று பட்டினச்சேரியில் இருதரப்பிற்கும் சுமூக பேச்சுவார்த்தை நடந்தது...

இந்த சுமூக பேச்சு வார்த்தையை முன்னெடுத்து சென்ற அதில் ஈடுபட்ட நம் சகோதரர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரியட்டும்...

இதுபோன்ற பிரச்சனைகளுக்கு இதுவே சரியான வழிமுறை.

இந்த சுமூக பேச்சு வார்த்தைமூலமாக இருதரப்பிற்கும் ஓர் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது ... இது ஓர் ஆரோகியமான நிலைப்பாடு.

வருங்காலத்தில் எந்த ஒரு விஷயத்திற்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பலாம். இன்ஷால்லாஹ்.




 ஜசாகல்லாஹ் புகைப்படம் :  mohamed hafil
https://www.facebook.com/mohamed.hafil.75?fref=photo



2 comments:

  1. Alhamdullilah.. Sagodarathuvathinal, Manidhaneyathal matumey Amaidhi Yerpadum. Nalinnakathirku Muyarchiseidha Nalulangaluku Allah Narkooli Vazhaguvaanaga..

    ReplyDelete
  2. மாஷாஅல்லாஹ்..... இருவேறு கடவுள் சித்தாந்த நம்பிக்கை கொண்டிருக்கும் அக்கம்பக்கத்து சமுதாயத்தினர் மத்தியில் ஏற்படுத்திக்கொள்ளும் இணக்கமான சமூக உறவே இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் பற்றியதொரு புரிதலை அவர்களுக்கு மத்தியில் ஏற்படுத்திட பெரிதும் உதவும்

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...