(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, May 29, 2014

முஸ்லிம் கட்சிகள் இதுபற்றி சிந்திக்க வேண்டும் - அசாதுதீன் உவைஸி

பா.ஜ.க. பெரும்பான்மையான கட்சி என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். பலரும் பங்கேற்பதை விட பெரும்பான்மையான ஆட்சி அமைவதற்கு இது ஒரு முயற்சி என்பதில் சந்தேகமில்லை.
இலங்கையில் சிங்களர்கள் பெரும்பான்மை கொண்டு அரசு அமைத்ததற்கு பின்னர் என்ன நடந்தது என்பதை நாம் கண்கூடாக பார்ப்பதால் இப்போது நமக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலைக்கு மோடி செல்வாரா..? அவர் இளமைக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.சின் பிரச்சாரகராக இருந்து வந்துள்ளார். மோடி நாடாளுமன்ற மையக்கூடத்தில் ஆற்றிய முதல் உரையில் தீனதயாள் உபாத்யாயாவை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், முஸ்லிம்களை நம்பக்கூடாது என்று மோடி கூறிய பிறகு அவருடைய ஒருங்கிணைந்த மனிதாபிமானக்கொள்கை என்ன ஆகிறது..? ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கை பிரிவினைவாதம் என்பது தெளிவு.
ஒரு நபரை அவருடைய கடந்த காலத்தை கொண்டு தீர்மானிக்க முடியும். நரேந்திர மோடி தன்னுடைய தேர்தல்பிரசாரத்தின் போது குஜராத் அரசை முன்மாதிரி என்று கூறிவந்தார்.
குஜராத்தில் மேம்பாடு என்பதை ஏற்றுக் கொள்ள முடியும் என்று யாராகிலும் கூறமுடியுமா..? உண்மை அவ்வாறானால்,
அஹமதாபாதுக்கும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஜகபூராவுக்கும் இடையிலான மெட்ரோ திட்டத்தை ஏன் நிறுத்தவேண்டும்..?
அஹமதாபாதில் ஜகபூரா வழியாக செல்லாத எரிவாயு தடம் அமைந்துள்ளது. குஜராத்தில் உள்ள சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மோடி ஏன் எதிர்க்க வேண்டும்?
மத மாறுதல் விரும்பும் நபர் அரசின்அனுமதி பெற வேண்டும் என குஜராத் சட்டசபையில் ஏன் சட்டம் இயற்ற வேண்டும்?
ஆளுநர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் தரவில்லை என்பதற்கு நன்றி.
தேர்தல் முடிவுகள் வெளியான அன்று அக்சர்தாம் கோவில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் 11 வருட தண்டனையிலிருந்து மீண்டார்கள்.குஜராத் உள்துறை அமைச்சகம் மாநில அரசு ஆகியவை இந்த வழக்கில் இதயப்பூர்வமாக நடந்து கொள்ளவில்லை என்று உச்சநீதிமன்றம் விமர்சித்தது.
தேர்தல் பிரசாரத்தின் போது நரேந்திரமோடி துர்க்கா பூஜை நடக்கும் நேரத்தில் வங்காளிகள் மட்டும் மேற்கு வங்கத்தில் இருக்க வேண்டும். மற்றவர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறவேண்டும் என்று கூறினார்.
அடல் பிஹாரி வாஜ்பாயும், எல்.கே. அத்வானியும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். கிரஹாம் ஸ்டெயின்சுக்கு என்ன நடந்தது என்பதை மறக்க முடியுமா?
2002 கலவரத்தின் போது வாஜ்பாயி பிரதமராகவும், எல்.கே.அத்வானி உள்துறை அமைச்சகம் மற்றும் குஜராத் எம்.பி.பொறுப்பில் இருந்தார்கள். கலவரத்தை தூண்டும் பேச்சுக்காக இம்ரான் மசூத் தேர்தலை இழந்ததையும், ஆனால், அதேரீதியாக பேசிய கிரிராஜ்சிங் தேர்தலில் வென்றதையும் நாடு பார்த்துக் கொண்டிருந்தது. 18 சதவீதம் முஸ்லிம்களைகொண்டுள்ள உத்தரப்பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட தேர்ந்தெடுக்கப் படவில்லை.
10 சதவீத முஸ்லிம்களை கொண்டுள்ள தமிழ்நாட்டிலும், ஒரிஸ்ஸாவிலும் பா.ஜ.க.வால் ஏன் கணிசமாக வெற்றி பெறமுடியவில்லை. ஆனால், 17 சதவீதம் முஸ்லிம்களை கொண்டுள்ள அஸ்ஸாமில் பா.ஜ.க. மிகப் பெரிய வெற்றிபெற்றுள்ளது.
பீகார், உ.பி., மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமில் வகுப்புவாதம் வேரூன்றியுள்ளதே இதற்கு காரணம் என்பதுதெளிவாகிறது. முஸ்லிம்கள் 15 மற்றும் 16 சதவீதம் உள்ள மாநிலங்களில் பா.ஜ.க. நல்ல பலன் அடைந்துள்ளது. பா.ஜ.க.வின் 448 வேட்பாளர்களில் முஸ்லிம் எம்.பி. ஒருவர் கூடதேர்ந்தெடுக்கப்படவில்லை.
பா.ஜ.க.வின் விளம்பரதாரரான ஷாநவாஸ் உசைன் முஸ்லிம்கள் 18 சதவீதம் உள்ள பகல்பூர் தொகுதியில் தோல்வியடைந்தார். இந்த முறை 21 முஸ்லிம் எம்.பி.க்கள்தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் கட்சி அடிப்படையில் வெற்றிபெறவில்லை. அந்த தொகுதிகளில் போதுமான அளவிற்குமுஸ்லிம் வாக்காளர்கள் இருந்தனர் என்பதே அதற்கு காரணம். 2004-ல் 36 முஸ்லிம் எம்.பி.க்கள் இருந்தனர். 2009-ல் அது 28 ஆக குறைந்தது. தற்போது 2014-ல் 21 முஸ்லிம் எம்.பி.க்களே உள்ளனர்.
பிராமணர்கள், ஷத்திரியர்கள் மற்றும் இதர பிற்பட்டவகுப்பினரை பாருங்கள். அவர்கள் தங்கள் மக்கள் தொகையைவிட அதிகப் பிரதிநிதியை பெற்றுள்ளனர்.
கர்நாடகா, தெலுங்கானா உள்பட ஆந்திரப்பிரதேசம்,மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 118 நாடாளுமன்றதொகுதிகள் உள்ளன. இவற்றில் நான் மட்டுமே முஸ்லிம் எம்.பி.மதச்சார்பற்ற கட்சிகள் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு தங்கள் வாக்குகளை அளிக்கவில்லை. அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒரே கட்சியை அமைத்து ஒரே குடையின் கீழ் இணைய வேண்டும். அப்போதுதான், சிறுபான்மையினர் உரிமைகளை காக்க முடியும்.
மதச்சார்பற்ற கட்சிகள் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவில்லை.
முஸ்லிம் லீக், எம்.ஐ.எம். அல்லது ஏ.ஐ.யு.டி.எஃப். கட்சிகள் இதுபற்றி சிந்திக்க வேண்டும். நம்முடைய நாட்டில் ஆர்.எஸ்.எஸ்.கொள்கை நிலைபெறாமல் செய்வதே நமது கடமை.
பா.ஜ.க.வை தோற்கடிக்கும் இயக்கத்திற்கு வழிகாட்டிகளாக நாம் இருக்கவில்லை. இந்த முழு பொறுப்பையும் என் மீது நீங்கள் சுமத்தக்கூடாது. நான் மதச்சார்பின்மையின் கூலி ஆள் அல்ல.
ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர்களை பிரதமராக்குவதற்கு அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றுபட்டுள்ள நிலையில் நாம் நம்முடைய தலைவிதியை நிர்ணயித்துக் கொள்ளும் எஜமானர்களாக ஆக வேண்டும்.
-அசாதுதீன் உவைஸி (நாடாளுமன்ற உறுப்பினர்)
நாடாளுமன்றத்தில் உவைசியின் பேச்சு (மன்மோகன் சிங் ஆட்சியில் உரையற்றியது)


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...