(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, May 17, 2014

பார்ப்பனர்கள் மாறவே மாட்டார்கள்! கூறுவதும் ஒரு பார்ப்பனரே!

பார்ப்பனர்கள் மாறவே மாட்டார்கள்! கூறுவதும் ஒரு பார்ப்பனரே!
கலாச்சாரத்தை என்றுமே விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள்!!

தி இந்து ஏடே அம்பலப்படுத்துகிறது

“The Big paradox” எனும் தலைப்பில் டி.எம்.கிருஷ்ணா என்பவர் தி இந்து ஆங்கில ஏட்டில் (10.5.2014) எழு தியுள்ள கட்டுரையில் பார்ப் பனர்கள் தங்கள் கலாச் சாரத்தில் பழக்க வழக்கங் களில் அதி தீவிரப்பற்றாளர் கள்; பார்ப்பனர் அல்லா தாரை வித்தியாசமாகவே பார்க்கக் கூடியவர்கள் என்றெல்லாம் விரிவாக எழுதியுள்ளார். நரேந்திர மோடியை பார்ப்பனராக அறிவிப்பதாக சு.சாமி கூறி யது சரியானதல்ல, ஆகக் கூடியதல்ல என்பது குறித் தும் கட்டுரை விவரிக்கிறது.

பார்ப்பனர்களுக்கு என்ற ஒரு அடையாளம் உள்ளது. எடுத்துக்காட்டாக அவர்களுக்குப் பெரும் பான்மை மக்கள் விரும்பும் இசையில் விருப்பமிருக் காது, ஒரு சிலர் மாத்திரமே விரும்பும் கர்னாடக இசை யில் அதீத ஈடுபாடு கொண் டிருப்பார்கள். ஒரு நிறு வனத்தை எடுத்துக் கொண் டால் அங்கு உச்ச அதிகாரங் களைக் கொண்டவர்களாக பார்ப்பனர்கள் இருப்பார் கள். அதே போல் முக்கிய மான அனைத்துத்துறை களிலும் பார்ப்பனர்கள் கட்டாயம் இருப்பார்கள். யாரை நியமிக்கவேண்டும் என்பதை பார்ப்பனர்கள் தான் தீர்மானிப்பார்கள்.

பார்ப்பனர்கள் உணவும் சமூகத்தில் உயர்ந்த வகை உணவாக கருதப்படுகிறது. பார்ப்பனர்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட கொள்கை உண்டு அதில் வேறு எந்த நபரும் சமூகத்தாரும் நுழைய முடியாது. தமிழகத்தை எடுத்துக் கொண்டால் பார்ப்பனர்கள் ஆண் பெண் இருவருமே பார்ப்பனீய கொள்கையில் அதிதீவிர பற்றுள்ளவர்கள். அது அவர்களின் பழக்க வழக்கங்களிலோ, விழாக் களிலோ, கலாச்சாரங் களிலோ எள்ளளவும் மாற மாட்டார்கள். வேத காலத் தில் இருந்து வந்த கலாச் சாரம் மிகவும் சிறந்த கலாச் சாரம் என்று அதைப் பாது காக்கும் நோக்கில் அவர் களின் ஒவ்வொரு செயலும் இருக்கும். பார்ப்பன கலாச் சாரத்தை அடுத்த தலை முறைக்கும் கொண்டு செல்வதையே தங்களின் தலையாய கடமையாக செய்வார்கள். அதே நேரத் தில் எவ்வளவு நெருக்க மான நண்பர்களாக இருந் தாலும் தங்களில் கலாச் சாரத்திற்குள் விடாமல் அவர்களை தனி ஆளாக நிற்கவைத்துவிடுவார்கள். உதாரணத்திற்குப் பார்ப் பன நன்பர்களின் வீட்டிற்கு நாம் செல்லலாம் ஆனால் வீட்டில் உள்ளவர்கள் நாம் பார்ப்பனர் அல்லாதவர் என்று அறிந்ததும் அவர் களின் செயல்களில் பெரி தும் மாற்றம் தெரியவரும்.

எடுத்துக்காட்டாக வீட்டில் உள்ளவர்களுக் கும் நம்முடன் வந்திருந்த பார்ப்பனர்களுக்கும்  தம்ள ரில் தண்ணீர் தருவார்கள், பார்ப்பனர்கள் அல்லாத நமக்குத் வேறு குவளை யிலோ அல்லது கண்ணாடி பாத்திரத்திலோ தருவார் கள். நாம் வெளியே போகும் வரை அந்த தம்ளரை எடுக்க மாட்டார்கள். முக்கியமாக பெண்களை தங்களது சமையலறைக்குள் அவ் வளவு சாமானியத்தில் அனுமதிப்பதில்லை.

இப்போது முரண்பாட் டிற்கு வருவோம்

சுப்பிரமணிய சாமி கூறி யது போல்  பிற பிற்படுத் தப்பட்ட நபரை பார்ப் பனராக எப்படி மாற் றுவது? வேதகாலத்தில் இருந்து தாங்கள் காப்பாற்றி வரும் மரபை உடைத்து பிறிதொருவரை பார்ப் பனர்கள் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அந்த மனநிலைக்கு எப்படி மாறுவார்கள்?  நரேந்திர மோடி தொடர்பில் இந்த பாகுபாடு மேலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். அரசியலில் ஊடகங்களின் மூலம் பிரபலப்படுத்தப் பட்ட ஒரு நபரை பல நூற்றாண்டுகளாக பாரம் பரியத்துடன் கட்டுக்கோப் பாக காத்துவரும் வருணா சிரமப்  படியின் முதல் இடத்தில் ஒருவரை அதி லும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த ஒரு வரை கொண்டுவருவதும் வெறும் விளம்பரத்தளவில் நின்றுவிடும்.

பார்ப்பனீயம்  என்பது எந்த விதத்திலும் தங்களு டைய பழக்க வழக்கங் களை விட்டுக்கொடுக்காத ஒன்று. பார்ப்பனர்கள்: தங்களின் பார்ப்பனீயக் கொள்கையில் சிறிதும் பிசகாமல் நடப்பவர்கள். அதே நேரத்தில் விழிப் புடன் இருந்து தங்களின் பார்ப்பனீயக் குடையில் எந்த ஒரு சிறு ஓட்டையும் விழாமல் பார்த்துக் கொள் பவர்கள். கொள்கை ரீதி யாகவே பார்ப்பனர்கள் எந்த ஒரு இடத்திலும் பிறரை தங்களுடன் அய்க்கியமா வதை கடுமையாக எதிர்ப் பார்கள், வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளுக்குள் அவர்களின் எதிர்ப்புத் தன்மை வீரியத்துடன் இருக்கும்

பார்ப்பனர்களுக்கு என்று ஒரு தனித்துவமிக்க சட்டதிட்டங்கள் அவர் களாகவே உருவாக்கிக் கொண்டு விட்டார்கள். இதில் எந்த இடத்திலும் மோடிக்கென்று வளைந்து கொடுக்க அவர்களின் சட்ட திட்டம் ஒப்புக்கொள்ளாது. பாரதீய ஜனதாவில் பல பார்ப்பனத் தலைவர்கள் மோடியின் அதிகாரம் கட் சியில் பரவுவதைத் தடுத்தே வந்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ் மோடியை முன்னிறுத்தக் காரணம் பார்ப்பனரல்லாத ஒரு முகத்தை முன்னிறுத் தும் போது அதிக எண் ணிக்கையில் மக்களின் வாக்கை கவரமுடியும் என்ற ஒரே நோக்கம் தான். மற்றபடி நரேந்திரமோடி என்னும் ஒரு பிற்படுத்தப் பட்ட வகுப்பைச்சேர்ந்த ஒருவரை முக்கியத்துவப் படுத்துவதில் வேறு எந்த காரணமும் இல்லை.

இந்தியாவில் நடுத்தர குடும்பத்துப் பார்ப்பனர் கள் எந்த விதத்திலும் அர சியல் தொடர்பானவை களில் தலையிடுவது கிடை யாது. மேலும் மிகவும் சொற்ப எண்ணிக்கையில் உள்ள இவர்களினால் அரசி யலில் பெரிதும் மாற்றத் தைக் கொண்டுவர இயலாது.  இவர்களின் ஆதரவு பார்ப்பன தலைமைக்குத் தான் கட்டாயம் செல்லும், இவர்கள் எந்த ஒரு வகை யிலும் நரேந்திர மோடியை பிற்படுத்தப்பட்ட ஒருவ ராகத்தான் வகைப்படுத்து வார்கள். எந்தக்காலத்திலும் பார்ப்பனர்களில் ஒருவராக இவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தென் இந்தியரான சுப்பி ரமணிய சாமி சொல்வதில் ஒரு உண்மை புலப்படும். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை நிறம் பெரிய இடம் வகிக்கிறது, தென்னிந்தியர்கள் வெண் மையாக உள்ளவர்களை பார்ப்பனர்களாக பார்க்கும் பழக்கம் உள்ளவர்கள், அதே நேரத்தில் குணநலத்தி லும் பார்ப்பன சாயல் இருக்கும் என்று நினைப்ப வர்கள்.  மோடி இந்திய அளவில் தனித்தன்மை கொண்ட அர சியல்வாதியாக திகழ்கிறார்.  மக்களை காவி நிறத்தில் பின்னால் நின்று ஏமாற்றும் தந்திரத்தை அவர் முந்தைய கால குஜராத் ஆட்சியின் போது கற்றுக்கொண்டார்.

முக்கியமாக பெரும் பான்மை இந்துக்களின் பாதுகாவலனாகவும் முக் கியமான எதிர்மதத்தவர் களின் (முஸ்லீம்) எதிரியாக வும் தன்னைக் காட்டிக் கொள்வதில் அவர் தயங்க வில்லை. அதே நேரத்தில்  நாட்டு வளர்ச்சிக்கு முக் கியத்துவம் தருவதுபோல வும் ஊடகங்கள் மூலம் தன்னை காட்டிக்கொண்டு இருக்கிறார்.  இந்துத்துவா அமைப்புகளின் பின்னால் இருக்கும் பார்ப்பனர்கள் சமூகத்தில் ஒத்துவராத முரண்படான இதுபோன்ற வெத்துவேட்டு அறிக்கை களை விட்டு பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு தான் இருப்பார்கள்.
-

யார் இந்த டி.எம்.கிருஷ்ணா?

டி.டி கிருஷ்ணாமாச்சாரி தொழில் குடும்பத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, 6 வயது முதல் கர்நாடக இசையில்  பயிற்சி பெற்றவர். ஜே கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளை பள்ளியில் படித்து பின்னர் விவேகானந்தா கல்லூரியில் பொருளாதாரப் பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்ற கிருஷ்ணா, கர்நாடக இசை குறித்து  எழுதிய  A Southern Music: The Karnatik Story   என்ற நூலில் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் கர்நாடக சங்கீதத்தில் ஏற்பட்ட பார்ப்பன ஆதிக்கம் மற்றவர்களை ஒதுக்கி வைத்து இப்போது நடைமுறையில் உள்ள உயிரற்ற கச்சேரி வடிவத்தை கொடுத்த வரலாற்றை விவரித்திருக்கிறார். இசை குறித்தும் சமூகம், அரசியல், கலாச்சாரம், மதம் குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகள் தி ஹிந்து உட்பட பல நாளிதழ்களில் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...