(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, July 15, 2012

பள்ளிவாசலில் புகுந்து தாக்க முயன்றது நியாயமா SJAP..?

கடந்த வார (வெள்ளிகிழமை, 06 July 2012 )ஜும்மா மேடையில் முஸ்லிம் யார்? என்ற தலைப்பில் மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் சம்சுதீன் காசிமி உரை நிகழ்த்தியுள்ளார் அதில் அனாசாரங்ககள் ,பித் அத் பற்றியும், உண்மை சுன்னத் ஜமாஅத் என்றால் யார் என்று காரண காரியங்களோடு எடுத்துக்கூறியுள்ளார். (காண்க வீடியோ)

இதனால் ஆத்திரம் அடைந்த சுன்னத் ஜாமஅத் ஐக்கிய பேரவையை சார்ந்த அக்ரம்கான் மற்றும் மேலை நாசர் ஆகியோர் தலைமையில் ஒரு குழுவினர், சென்ற வாரம் ஜும்மா தொழுகை முடிந்தவுடன் பள்ளிவாசலில் புகுந்து சம்சுதீன் காசிமியை தாக்க முயன்றனர். சம்பவம் கேள்விபட்டு பலர் மக்கா மஸ்ஜிதை நோக்கி படையெடுக்க இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவத்தை கேள்விப்பட்ட darul huda -முப்தி உமர் ஷரிப், intj-SM பாக்கர் ,tmmk-S .ஹைதர் அலி, jih-சிக்கந்தர் உள்ளிட்டவர்கள் மக்கா மஸ்ஜித்திற்கு நேரடியாக சென்று விசாரித்தனர்.

அப்பொழுது பேசிய அனைவரும் தனி தனியாக தங்களின் கண்டனத்தை பதிவு செய்தார்கள் மேலும் தாக்க முயன்ற அமைப்பினரின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.பள்ளிவாசல் முழுவதும் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .

நாங்கள் தான் சுன்னத் ஜமாஅத் என்று தம்பட்டம் அடிக்கும் இவர்களுக்கு இப்படி பள்ளிவாசல் புகுந்து ரகளை செய்வதும் சுன்னத் தான் போலிருக்கிறது.

ஒரு மாற்று மதத்தை சார்ந்தவன் கூட பள்ளிவாசலில் அநாகரிகமாக நடந்துகொள்ள மாட்டான் ஆனால் இந்த பரோலிய கொள்கை குன்றுகள் இதையும் செய்ய தயங்குவதில்லை...

அறியாமையால் மூழ்கிகிடக்கும் இந்த சகோதரர்களுக்கு நேர்வழிக் கேட்டு அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...