(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Tuesday, April 10, 2012

தாவா பணிக்காக வைக்கபட்ட பேனரை கிழித்த நல்லோர்கள்.!


கடந்த வாரம் வரை மிகஅழகாக அழைப்பு பணி செய்துகொண்டிருந்த பேனர் ஒன்று சமீபமாக கிழிக்கபட்டுள்ளது அதிர்ச்சி கலந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

JAQH-ன் கீழ் செயல்படும் அர்ரஹ்மான் பைத்துல்மால் சார்பாக நாகூர் சிங்கபூர் கடை தெரு முனையில் உள்ள அர்ரஹ்மான் பேன்ஸி ஸ்டோர் கடையின் மேலே மாற்று கருத்துடைய சகோதரர்களுக்கு அழைப்பு பணி செய்யும் நோக்கத்தில் பேனர் ஒன்று வைக்கப்பட்டு இருந்தது.

அந்த பேனரில் எந்த அருவருக்க தக்க செய்தியோ,ஆபாசமான செய்தியோ,தரக்குறைவான செய்தியோ,யாரையும் தாக்கியோ எழுதப்படவில்லை ...(அதனால் தான் கிளிக்கபட்டதோ என்னவோ)


அந்த பேனரில் எழுதப்பட்டிருந்தது இது தான்...

சகோதர சகோதரிகளே .,
படைப்புக்களை தவிர்த்து படைத்தவனை மட்டும் வணங்குங்கள்
“ மாற்று சிந்தனை கொண்ட அனைவருக்கும் “
திருக்குரான் மொழிபெயர்ப்பு – அல்லாஹ் என்றால் யார் ?
இறைதூதர் நபி(ஸல்) ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.
தொடர்புக்கு : அர்-ரஹ்மான் பைத்துல்மால், நாகூர்.

இதுல என்ன இருக்கிறது ...

தர்காவை பற்றி கூட இதில் விமர்சனமில்லையெ.. பிறகு எதற்கு கிழித்தார்கள்..
உங்களின் ஈனசெயல்களுக்கு அளவே இல்லையா ?!.
தாவா பணிக்காக வைக்கபட்ட பேனரை கிழிக்க வேண்டிய அவசியமென்ன ..?
இதற்கு எந்த காரணத்தை உங்களால் சொல்லமுடியும் ?...

தர்கா எல்லைக்கு உட்பட்ட கடைகளில் பேனர் வைக்ககூடாது என்று எதாவது சட்டம் இருக்கிறதா ? அப்படி சட்டம் இருந்தால் கூட கடை உரிமையாளரிடம் முறையிட வேண்டுமே தவிர இப்படி ஈனசெயலில் இறங்க கூடாது..

நாகூரில் எவ்வளோவோ பேனர்கள் வைக்கபட்டுள்ளது ..
அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பேனர்கள் எத்தனை ?? திருமணத்திற்காக வைக்கப்படும் பேனர்கள்–போஸ்டர்கள் எத்தனை ... இதை எல்லாத்தையும் விட இஸ்லாம் மார்க்கத்திற்கு அழைப்பு பணி செய்யும் பேனர் தான் உங்களுக்கு கேடுகேட்டதாகிவிட்டதா ?
இதை அனைவரின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.. .. 

அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு அல்லவா அழைப்பு பணி செய்யபட்டிருந்தது... அதை  உங்களால் பொருத்துக்கொள்ள முடியவில்லையா ?

அல்லாஹ் கிழித்தவர்களுக்கு நேர்வழி காட்டுவானாக...!  


இந்த தருணத்தில் ஒரு செய்தியை பதிவு செய்ய விரும்புகிறோம்...
தர்காவிற்கு சொந்தமான இடத்தில் அல்லது தர்காவிற்கு வரும் மக்களை எதிர்நோக்கி , தர்காவிற்கு செல்லகூடாது என்ற கருத்துடையோர் கடைவைப்பது தவறு என்றும் இல்லை கடை வைக்கலாம் என்றும் இருவேறு கருத்து நிலவுகிறது பலரிடம் இந்த சந்தேகமும் – வாதமும் அடிக்கடி எழுகிறது.
நாம் தனிபட்ட முறையில் ஏற்கிறோமோ இல்லையோ ஒரு இஸ்லாமியனாக எதையும் நாம் இஸ்லாத்தின் வழிகாட்டுதலில் அடிப்படையில் தான் அணுகவேண்டும் பின்பற்ற வேண்டும்.

அதன் படி பார்க்கும்போது பொதுமக்கள் கூடும் இடங்களில் ஹராமான பொருள்களை விடுத்து மற்ற பொருள்களை விற்பனைசெய்வதற்கு நமக்கு தெரிந்தவரை இஸ்லாத்தின் பார்வையில் எந்த தடையுமில்லை (தடை என்று வாதிடுவோர் அதற்கான ஆதாரத்தை தந்தால் ஏற்றுக்கொள்ளலாம்)
நாம் மாற்றுமத கடையில் பொருள் வாங்கலாம் , விற்கலாம் அதுபோல் மாற்றுமத சகோதரர்கள் நம் கடையில் பொருள் வாங்கலாம், விற்கலாம் என்னும்போது இது எப்படி தவறாகும்.நம்முடைய கடையில் மார்க்கத்திற்கு முரணான பொருள்களை விற்கக்கூடாதே தவிர கடையே வைக்ககூடாது என்பது தவறான வாதமாகும்.மேலும் தர்காவிற்கு சொந்தமான இடத்தில் தர்கா விசுவாசிகள் மட்டுமே கடைவைக்க வேண்டும் மாற்றுகொள்கை உடையோர் கடைவைக்க கூடாது என்று தர்கா நிர்வாகம் எந்த அறிவிப்பையும் செய்யவில்லை, அப்படி இருக்க கடைவைப்பது இந்திய சட்டப்படி பார்த்தாலும் குற்றமில்லை.

அதேசமயம் அங்கே தான் கடை வைத்தாகவேண்டும் என்றில்லை கொள்கைரீதியாக வேறுபாடு இருக்கும்போது தர்காவின் செயல்பாடுகளை எதிர்த்துகொண்டு தர்காவிலையே கடைவைப்பதை தவிர்ப்பதன் மூலம் இது போன்ற தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்கலாம் என்பதே நமது கருத்து.

-        அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்

ஜசாகல்லாஹ் : jahabersadiq

4 comments:

 1. உண்மை நேர்வழியாளன்11:15 AM, April 11, 2012

  //அதேசமயம் அங்கே தான் கடை வைத்தாகவேண்டும் என்றில்லை கொள்கைரீதியாக வேறுபாடு இருக்கும்போது தர்காவின் செயல்பாடுகளை எதிர்த்துகொண்டு தர்காவிலையே கடைவைப்பதை தவிர்ப்பதன் மூலம் இது போன்ற தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்கலாம் என்பதே நமது கருத்து.// சரியான கருத்து. இந்த கருத்தை நண்பர்கள் யோசிக்க வேண்டும்.

  ReplyDelete
 2. உண்மை நேர்வழியாளன்12:51 PM, April 11, 2012

  பேனர் கிழிக்கப்பட்டது தவறுதான்.

  ReplyDelete
 3. வ இய்யாக்கும்

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...