(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, October 8, 2011

வினவு தளத்தின் இஸ்லாமிய வெறுப்புக்கு நமது மறுப்பு



என்ற பெயரில் எழுதி வினவு இணையதளம் தனது இஸ்லாமிய வெறுப்பை .. வெளிப்படுத்தியிருந்தது.

இதற்கு Tntj - "உணர்வு" இதழ் மறுப்பு வெளியிட்டு இருந்தது.. இதற்கு வினவு இணையதளம் 

இசுலாமிய “உணர்வு” பத்திரிகைக்கு ஒரு மறுப்பு! என்று மீண்டும் பதிலளித்துள்ளது...

அதில் ரொம்ப ரோசபட்டு உணர்வு பத்திரிக்கையையும் , நம் சமூகத்தையும் , இஸ்லாமிய சட்டங்களையும் கடுமையாக விமர்சித்து இருந்தது..

மேலும் முஸ்லிம்களின் ஒற்றுமையை பற்றி பேசி இருந்தது..
வினவின் இத்தகைய இரட்டை வேடம் ஒன்றும் புதிதல்ல என்றாலும் ...
இவ்விசயத்தில் உண்மையை உறிக்கும் முயற்சியில் இன்ஷாஅல்லாஹ் இறங்கிஇருக்கிறோம்.

அவர்கள் TNTJ வை சார்ந்தவர்களை,அவர்கள் பத்திரிகையை தான் விமர்சிக்கிறார்கள் என்று குறுகிய மனப்பான்மையில் தயவு செய்து தமுமுக , ஜாக் ,SDPI சகோதர்களும் ,மற்றசகோதர்களும் என்னாதீர்கள் .. 

இஸ்லாத்தை நோக்கி வீசப்படும் எதையும் முதலில் உரியமுறையில் எதிர்கொண்டு விட்டு பிறகு நம் பங்காளி சண்டையை வைத்துகொள்வோம். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நாம் இஸ்லாத்திற்காக போராடுகிறோம்.

அணைத்து சகோதர்களும் வினவு தளத்தில் தங்களின் கருத்துக்களை நாகரிகமாக அதே சமயம் , மண்டையில் உரைக்கும் விதமாக  பதிலடியாக பதிய வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.

நமது இணையத்தின் சார்பாக ஒரு சாட்டையடியாக ... நமது மறுப்பை தெரிவித்து இருக்கிறோம்.


முதலில் வினவு தளத்திற்கு சென்று மேற்கூறிய கட்டுரையை பார்வையிட்டுவிட்டு  இதை படியுங்கள் அல்லது வினவு தளத்திலேயே நமது மறுப்பையும் (மறுமொழி பக்கத்தில் ) பார்க்கலாம் 

இதோ உங்கள் பார்வைக்கு ...



வினவின் மறுப்பிற்கு மறுப்பு ...


இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது உண்டாவதாக !

வினவு மீண்டும் ஒரு முறை தன்அரிப்பை நன்றாக தீரத்துகொண்டுள்ளது நலம்.. சரிங்க நிஜாம் ரோசபட்டுவிட்டார் பாவம்.. அதுக்கு மறுப்பு என்ற பெயரில் வினவு ஏன் இப்படி ரோசப்படுகிறது.. வினவுக்கு மட்டும் விதிவிலக்கா...? ஹி ஹி ... அப்போ நானும் கொஞ்சம் ரோசப்டுகிறேன் கேளுங்க..

சரி உங்க பிரச்சனை தான் என்ன ? பொதுவா நீங்க எத சொன்னாலும் ,செய்தாலும் அதை விமர்சிப்பதில் வல்லவர்கள், தங்களுக்கு தாங்களே நியாயம் கற்பிப்பதில் திறமைசாலிகள் எல்லாம் ஓகே அதனால் நீங்கள் சொல்லும் அனைத்தையும் தலை அசைத்து ஏற்றுகொள்ள வேண்டுமா என்ன ? 

//இந்து மதத்தையும், பார்பனீயத்தையும் எதிர்த்து எழுதும்போதெல்லாம் புதிய கலாச்சாரம் பிடித்தமான ஒன்றாக இருந்துவிட்டு இப்பொழுது புத்தியை இழந்துவிட்டதாக பொங்கி எழ என்ன காரணம்? //
யாரு சொன்னது புதிய கலாச்சாரம் எங்களுக்கு பிடித்தமானது என்று– எக்ஸ்ட்ரா பிட் லாம் போடுறிங்க... எங்கள் சமுதாயத்தில் பலருக்கு அப்படி ஒரு பத்திரிக்கை இருப்பதே தெரியாதுங்கோ...

நீங்கள் யாரை எதிர்த்து எழுதினாலும் ,யாரை புகழ்ந்து எழுதினாலும் எங்களுக்கு எப்பவுமே “பதிய கலாச்சாரம்“ பிடிப்பதில்லை. எங்களுக்கு பிடித்தமானது இஸ்லாமிய கலாச்சாரம் மட்டுமே. அதை எங்களால் முடிந்த அளவிற்கு நாங்கள் கடைபிடிக்கிறோம்  ஆனால் நீங்கள் விமர்சிப்பதை நிறுத்தக்கூடாது ஆமா.. இன்னும் உங்களிடம் எதிர்பாக்கிறோம்... 

அடுத்து
// முதலமைச்சர் ஜெயலிதா முழுக்க போர்த்திக்கொண்டு வலம் வந்த போதும் அவரது முன்னேற்றத்தை தடுக்கவில்லையாம். சினாமாவில், இதற்கு முன் அரசியலில் கவர்ச்சியாக வந்தபோதும் அவரது முன்னேற்றத்தை எதுவும் தடுக்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்தக் கவர்ச்சியே அவரை இன்றுவரை அரசியலில் அசைக்க முடியாத(!) முன்னேற்றத்தை தந்துள்ளது //  
வினவின் உடைகழற்றும் வெறித்தனம் பளிச்சிடுகிறது வாழ்த்துக்கள்.  

ஆமா தெரியாமல் தான் கேட்கிறேன் .. உலகிலேயே உயர்ந்த(?) கொள்கையை கொண்ட நீங்கள் பெண்களுக்கு சிபாரிசு செய்யும் உடைகள் தான் என்ன ?

சரி புர்கா வேணாம் .. ம்ம நம்ம தமிழ் கலாச்சாரம் இருக்கே (சைடு விவ்) சாரி கட்ட சொல்லலாமா(?)  சரியா தெரியாதே .. அப்போ TWO PIECE ல அலைய விடலாமா(?)  இல்ல  இன்னும் பேட்டரா ?  பேசாம
“நிர்வாணமா அலைய விட்டுடலாம்  என்ன சொல்கிறீர்கள்  - இது முழு பெண் சுதந்திரம் தானே. துணி மணி காசு வேற மிச்சம்.

உங்கள் கூற்றுப்படி ஜெயலலித்தா அரைகுறை கவர்ச்சியில் மயங்கி நீங்களும்,அனைவரும் ஓட்டு போட்டனர்  அவர் முதல்வரா ஆகிவிட்டார்.. நிர்வாணமா நின்றால் பிரதமராக கூட ஆகிவிடலாம் , ஏன் அமெரிக்க ஜனாதிபதி கூட ஆகலாம்.. என்ன சொல்றிங்க பாஸ்..

இதற்கும் ஓகே சொன்னாலும் சொல்வீர்கள்..
ஏனென்றால் நீங்கள் “புதிய கலாச்சாரம்” ஆச்சே...
எது சரி – எது தவறு என்று யார் முடிவு செய்வது?
உங்கள் புதிய கலாச்சாரத்தின்  கொள்கைகளை வினவில் கொஞ்சம் விளக்கினால் எங்களுக்கு ஏதுவாக இருக்கும்.

நீங்கள் முஸ்லிம்களின் நடவடிக்கைகளை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்  - சில விமர்சனங்களை நாங்கள் ஏற்கிறோம் நாங்களும் கூட விமர்சிக்கிறோம்.. அதைப்போல தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று உங்களின் சில விமர்சனங்களை எதிர்க்கிறோம். ஆனால் இஸ்லாத்தை உங்களால் விமர்சிக்கவே முடியாது அப்படி நீங்கள் இஸ்லாத்தை விமர்சித்தால் சுவரில் அடிக்கப்பட்ட பந்துபோல் திரும்பி உங்கள் விமர்சனம் உங்களை நோக்கியே வரும்.

நாங்கள் விமர்சனங்களுக்கு ஓடுபவர்கள் அல்ல,எங்களுக்கு புதிதும் அல்ல அதை நேருக்கு நேராக எதிர்கொள்பவர்கள். உலக அளவில் எங்களின் நிலை இது தான். காரணம் உலகம் முழுவதும் முஸ்லிம்கள் பலவகையில் வஞ்சிக்கபடுகிறார்கள், தீவிரவாதி முத்திரை குத்தப்பட்டுவிட்டார்கள் அதனால் ஒரு முனையில் இஸ்லாத்தை திட்டி தீர்க்க ஒரு கூட்டமும் , மறு முனையில் இஸ்லாம் அப்படி என்ன தான் சொல்கிறது என்று இஸ்லாத்தை அறியும் கூட்டமும் முனைப்பு காட்ட... இன்று உலகம் முழுவதும் நாங்கள் மாற்று மத சகோதர்களுடன் , நாத்திகர்களுடனும் நேருக்கு நேராகவும்,இணைய தளத்தின் வாயிலாகவும் உரையாடி வருகிறோம். எங்களை எங்கள் மார்க்கத்தை இழிவுபடுத்த நினைபவர்களுக்கு நாங்கள் உண்மையில் நன்றி தான் சொல்ல வேண்டும்.

இல்லையென்றால் நாகரிகத்தின் தாய்(?) அமெரிக்கா, இங்கிலாந்து,ஜெர்மனி , பிரான்ஸ், என்று உலகம் பூராகவும் இன்று இஸ்லாத்தின் கொள்கைகள் சென்றடைந்து கவரப்பட்டு இஸ்லாத்தை நோக்கி அணி ,அணியாக வருவார்களா ?..  

உங்களுக்கு பொய்யான கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் ஆனால் எங்களுக்கு உண்மையான இறைவன் மேல் நம்பிக்கை இருக்கிறது நாங்கள் பகுத்து அறிபவர்களாக இருக்க வேண்டும் என்று எங்களுக்கு திருக்குரான் கட்டளையிடுகிறது.    
அநியாயமாக எந்த உயிர்களையும் கொள்ளக்கூடாது , அனைவரிடமும் அன்பு கட்ட வேண்டும், நீதி போற்றப்படவேண்டும் என்று இஸ்லாத்தின் உலக சமத்துவத்தை சொல்லிகொண்டே போகலாம் ஆனால் இதற்கு நீங்கள் ஒரே வார்த்தையாக நீ இஸ்லாமியன் அதனால் உன் மதத்தை நீ உயர்வாக தான் பேசுவாய் என்பீர்கள்.
இஸ்லாத்தின் எந்த போதனைகளுக்கு மனிதகுலத்திற்கு எதிரானது கிடையாது என்று அடித்து சொல்லலாம்.

பெண்கள் (மனைவி) வரம்பு மீறும்போது ஆண்கள் லேசாக அடிப்பதற்கு இஸ்லாம் அனுமதி வழங்கியிருப்பது உண்மைதான். (TWO PIECEல் பெண்கள் ஆடுவதை கேலிகூத்தாக ஆணாதிக்கத்தின் உச்சகட்டமாக இருக்க.)  இதில் என்ன தவறை கண்டீர்கள் ?

ஆண்கள் பெண்களை நிருவகிப்பவர்கள் தான் என்பது இஸ்லாத்தின் கருத்து.  இதை நீங்கள் ஒத்துகொண்டாலும் ,இல்லாவிட்டாலும் தற்போது உலகில் நடக்கும் எதார்த்தமும் இது.

உலகில் ஆணின் அரவணைப்பில் வாழும் பெண்கள் தான் பாதுகாப்பாகவும் , ஒழுக்கமாகவும் , மனஅழுத்தமில்லாமல் வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
சரி அதற்காக அடிப்பதா என்றால் ? நீங்கள் நினைப்பது போல் தவறு செய்தால் இலுத்துபோட்டு சாத்து,தண்டனை கொடு என்று சொல்கிறதா இஸ்லாம் ? ...

இருவர் கணவன்,மனைவியாக வாழ்கிறார்கள் ,இவர்களில் கணவருக்கோ ,மனைவிக்கோ அல்லது இருவருக்குமா சேர்ந்து வாழவிருப்பமில்லை என்றால் அவர்கள் பிரிவதற்கு இஸ்லாம் அனுமதி அளிக்கிறது. அதை போல் அவர்களுக்கு இடையில் கருத்து மோதல்கள் வந்து மனைவி வரம்புமீறி தவறாக நடந்து கொண்டால் அவளை திருத்தும் விதமாக லேசாக அடிக்க மார்க்கம் எங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது உண்மை.

இது எந்த விதத்திலும் கொடுமை கிடையாது மனைவி கணவனின் பொறுப்பில் இருப்பதால் இது அனுமதியே தவிர கடமையல்ல... ஒரு வாதத்திற்கு இந்த சட்டத்தை வைத்துகொண்டு ஒருவன் தன் மனைவியை நீங்கள் நினைப்பது போல் பின்னி எடுக்கிறான் என்று வைத்துகொள்வோம் அப்போது அவளுக்கு தெரிந்து விடும் இவன் நமக்கு ஏற்ற கணவன் கிடையாது கொடுமை படுத்துகிறான் என்று உடனே அவள் தன் கணவனை விவாகரத்து செய்ய முடியும் இஸ்லாத்தின் சட்டத்திற்கு உட்பட்டு மேலும் மனித உரிமை மீறல் என்று வழக்கும் போடலாம்..

அப்படி இந்த சட்டத்தை வைத்து தற்போது எத்தனை பேர் மனைவியை கொடுமை
படுத்துகிறார்கள்  கொஞ்சம் லிஸ்டை சொல்லுங்கள்... ?

ஆணுக்கும் ,பெண்ணுக்கும் மூளையிலையே வித்தியாசம் இருக்கிறது என்று நீங்கள் வணங்கும் அறிவியல் சொல்கிறது... (http://www.livescience.com/health/050120_brain_sex.html)
ஆனால் நீங்கள் உடல் ரீதியான வித்தியாசத்தையே ஏற்க மறுகிரீர்கள்.
ஒன்று மட்டும் புரியவில்லை சகோதரா ? உலக முழுவதும் பெண்களை இஸ்லாம் அடிமைபடுத்துகிறது என்று உங்களை போன்று ஆணாதிக்க சக்திகள் ஒய்யார ஒலமிடுகின்றன..

ஆனால் உலகம் முழுவதும் இஸ்லாத்தை தழுவுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே இருக்கிறது அதில் 100க்கு 70% பெண்கள்.

அதுவும் அமெரிக்க பெண்கள் தான் அதிகம்.. என்ன ஆச்சு ஏன் இவர்கள் இஸ்லாதிற்க்கு  வர வேண்டும் ? கணவனிடம் அடிவாங்கவா ? புர்கா அணிந்து உங்கள் அறிவுகூற்றுப்படி தங்களை சிறுமை படுத்திகொள்ளவா ? வீட்டில் அடைபட்டு கிடக்கவா ?.. என்ன தான் உங்க பிரச்சனை... உங்களுக்கு இஸ்லாத்தை பிடிக்கவில்லை ஓகே உங்களுக்கு பிடித்தே ஆகவேண்டும் என்றும்  அவசியமுமில்லை..

இஸ்லாத்தை படியிங்கள் என்று யாரும் உங்களை கட்டாயபடுத்தியும் இருக்கமாட்டார்கள். எங்களுகே இஸ்லாத்தை பின்பற்றுவது சுயவிருப்பத்தின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது. நாங்கள் எங்கள் வீட்டு பெண்களை கட்டாயபடுத்துகிறோமா ? என்ன பூச்சாண்டி இது..

இது என்ன காமெடி ... ////பிரான்ஸ் போன்ற நாடுகள், பொதுவிடங்களில் புர்கா அணிய தடைச் சட்டம் இயற்றி இசுலாமியப் பெண்களுக்கு உதவிட முயற்சிக்கையில், ஆசிட் வீச்சின் அலங்கோலமாகிப்போன பெண்கள் தமது அலங்கோலத்தை மறைக்க புர்காவை விரும்பி அணிய வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுகின்றனர்///
நல்ல ஜோக் .. இதற்க்கு பதிலளிக்க வெக்கபடுகிறோம் – இப்படி ஒரு சுத்த முட்டாள் தனமான வாதத்தை இதுவரை நாம் கேட்டதில்லை.. இஸ்லாத்தை நோக்கி வரும் பெண்களே இதற்கு பதில்..

இஸ்லாம் அவர்களுக்கு கண்ணியத்தை கொடுத்திருக்கிறது அதனால் முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவதை என்றைக்கும் சுமையாக நினைக்கவில்லை, நினைக்கவும் மாட்டார்கள்.

உடலை காட்டி விபச்சாரத்திற்கு வித்திடும் சினிமா நடிகைகளை பார்த்து கெட்டு சீரழிவதற்காக சில முஸ்லீம் பெயர் தாங்கிகள் புர்காவை தூக்கி எரிந்தால்..அவர்கள் எரிவது இஸ்லாத்தை அல்ல - அவர்களின் புனிதமான மானத்தை.

நாங்கள் அவர்களுக்காக அவர்களின் அறியாமைக்காக வருத்தப்படுகிறோம் ஆனால் அவர்கள் இஸ்லாத்தை விட்டு போனால் வேதனை படமாட்டோம்..
நாங்கள் அதிக பிரசங்கிகள் கிடையாது எங்களுக்கு எங்கள் இறைவன் வழங்கிய அறிவு வாழ்வதற்கு போதுமானது. நாங்கள் எங்கள் மார்க்கத்தை நேசிக்கிறோம் ,உங்களையும் நேசிக்கிறோம்..

 எங்கள் மார்க்கம் எங்களுக்கு வழிகாட்டி – நீங்கள் எங்களுக்கு திசைகாட்டி

(அதாவது முஸ்லீம்கள் உலகின் எந்த திசையிலெல்லாம் தவறு செய்கிறார்கள் என்று எங்களுக்கு update செய்து எங்களை இன்னும் வீரியமாக இஸ்லாத்தை பின்பற்றுவதறக்கும்,எங்களின் தவறுகளை திருத்திகொள்வதற்கும் உதவுவதற்காக )

இறுதியாக சொல்கிறோம் உள்ளத்திலிருந்து சொல்கிறோம் இஸ்லாத்தை விமர்சிப்பதை தயவு செய்து நிறுத்தி விடாதீர்கள்– உங்கள் விமர்சனங்கள் எங்களை மேலும் மேலும் உற்சாகபடுத்துகிறது..


ஆனால் உங்கள் விமர்சனங்களுக்கு யார் பதிலளிகிறார்களோ இல்லையோ .. முஸ்லீம்கள் நாங்கள் எதிர்கொள்ள எப்போதும் தயாராகவே இருகிறோம் ஆதலால் இஸ்லாத்தை விமர்சிக்கும் முன்பு எந்த விசயத்திற்காக  விமர்சிகிறீர்களோ அதைவிட நீங்கள் சிறந்ததாக நினைக்கும் ஒரு தீர்வை சொல்லி விமர்சியுங்கள். அதாவது இதில் இஸ்லாத்தில் தவறு அதைவிட இது தான்,இந்த சித்தாந்தம் தான் எங்கள் புதிய கலாச்சாரத்தில் சிறந்தது என்பது போன்று.

இல்லையேல் வாய் சும்மா இருக்கு பேசுகிறேன் என்பதுபோல் தான் உங்கள் வாதத்தை எங்களால் பார்க்க முடியும்.

///நாங்கள் எத்தனை குழுக்களாக வேண்டுமானாலும் பிரிந்துகொண்டு அடிச்சிக்குவோம்; காறி துப்பிக் கொள்வோம்; ஆனால் கம்யூனிஸ்கள் ஏதாவது சொன்னா ஒண்ணா கட்டிப் புடிச்சிக்கிட்டு ஒப்பாரி வைப்போம் என்று கூறுகிறாரோ நிஜாம்?///

ஆமா நீங்கள் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கீங்க பாருங்க(?) அப்படி எங்களால் இருக்க முடியல ...சரி அப்பிடியே வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் நாங்கள் உங்களை அடிக்கவில்லை , உங்கள் மேல் கரி துப்பவில்லை நாங்கள் எங்கள் குடும்பதிற்குள் செய்து கொள்கிறோம். அதைக்கேட்பது உங்களுக்கு அவசியமில்லையே நாங்கள் உங்களிடம் நியாயம் கேட்கவில்லையே... சரிங்க இத்தோடு முடிச்சிக்கிறேன் –

அடுத்த இன்னொருத்தரு ஏதோ கேட்குராறு.. “அட இருங்கப்பா வருசையா வரேன் “...

(பர்தா அணியவில்லை என்று ஆசிட் அடித்தால் அது அவன் செய்த தவறு இதற்கு அவனை தண்டிக்க வேண்டும் இஸ்லாத்தின் கொள்கைபடி)

                           ---------------


(இன்ஷாஅல்லாஹ் கருத்துமோதல்கள் தொடரும்.. 

1 comment:

  1. நான்றாக இருந்தது உங்கள் பதில்.

    தீன்

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...