(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, September 15, 2011

உலகில் யார் வேண்டுமானாலும் குண்டுவைக்கலாம்–பழியை ஏற்க முஸ்லீம்கள் இருக்கிறார்கள்


உலகில் எந்த மூலைமுடுக்கில் குண்டு வைத்தாலும் அதற்க்கு விசாரணை தேவையில்லை , ஆராய்ச்சிகள் தேவையில்லை .. அது கண்டிப்பாக முஸ்லீம்கள் தான் வைத்திருக்க வேண்டும் என்ற மனநிலையை 
உருவக்கிவிட்டார்கள் உண்மையான தீவிரவாதிகள்.

நியூயார்க் உலகவர்த்தக மையம் தகர்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில் “இது ஒசாமா பின் லேடன் தான் செய்தான்” என்று முன்பே முடிவு செய்து அறிவித்த ஜார்ஜ் புஷ்யின் அறிவு நுட்பத்தை அப்படியே பின்பற்றுகிறது இன்றை உலக நாடுகளின் அரசு ஊடகங்கள்.
அவர்களுக்கு முழு பக்கபலமாக நிற்கிறது இஸ்லாமிய வெறுப்பு உலக மீடியாக்கள்.

தொப்பி அணிந்தால் ,தாடி வைத்தால் அவன் ஏன் தீவிரவாதியாக இருக்க கூடாது..? என்ற கேள்வியோடு முஸ்லிம்களை விட்டு விலகுகிறது இன்றைய உலகம்.

தாடி – இது தீவிரவாதத்தின் அடையாளம் என்று சொல்லப்படாத சட்டமாகிவிட்டது...

தாடிவைக்காத ஒரு முஸ்லிம் தாடிவைத்திருக்கும் சக முஸ்லீமை பார்த்து கேட்கிறான்
“என்னடா தீவிரவாதி மாதிரி இருக்க என்று ” 
(இது நாம் நேரடியாக கண்ட காட்சி)

இஸ்லாமியி வெறுப்பு மீடியாக்கள் நம்மை எப்படி மாற்றிவிட்டார்கள் பார்த்தீர்களா ?

சமீபத்தில் டில்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பில், 13 பேர் உயிரிழந்தனர். இந்த நாசவேலைக்கு பொறுப்பேற்பதாக கூறி, ஹூஜி மற்றும் இந்தியன் முஜாஹிதின் போன்ற அமைப்புகளிடம் இருந்து, மீடியாக்களுக்கு மின்னஞ்சல்கள் வந்ததாக செய்திகள் வந்தன.

உடனே காவல்துறை மாதிரி தீவிரவாதிகளின் புகைப்படம் என்று இரண்டு நபர்களின் புகைப்படத்தை வெளியிட்டது.. எங்கே வேறு யாரும் இதில் மாட்டிக்கொள்ள போகிறார்கள் என்று தாடியுடன் (முஸ்லீம்கள் என்று தெரிய வேண்டுமல்லவா.?) வெளியிட்டு தங்கள் அரிப்பை தீர்த்துகொண்டனர்.


இந்நிலையில் கொல்கத்தா தொலை தொடர்பு வட்டத்தை சேர்ந்த பிளாக்பெர்ரி மொபைல் போன் எண்ணிலிருந்து, ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு, ஹூஜி அமைப்பு தான் காரணம் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சம்பந்தபட்ட மொபைல் போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 14 வயது மாணவன், இந்த மின்னஞ்சலை அனுப்பியது கண்டுபிடிக்கபட்டுள்ளது.

அவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. விசாரணை அமைப்புகளுக்கு தொல்லை தரும் நோக்கத்துடன், இந்த மின்னஞ்சல்களை மாணவன் அனுப்பியுள்ளான் என்று கூறப்படுகிறது ஆனால் இதிலும் சூழ்ச்சிகள் இருக்கிறது சகோதர்களே ஏனெனில் இந்த மின்னசலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவை தூக்கில் போடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இது 14 வயது மாணவனின் சிந்தனையாக இருக்க முடியாது.

மேலும் இது பற்றி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவிடம் 
கேட்கும்போது 

"டெல்லி உயர்நீதி மன்ற வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது. அது கோழைகளின் நடவடிக்கை. அப்பாவிகளைக் கொல்ல வேண்டும் என்று எந்த மதமும், யாருக்கும் அனுமதியளிக்கவில்லை.

இந்தச் சம்பவத்தில், எனது பெயர் தேவையில்லாமல் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மனதில் என்னைப் பற்றி தவறான எண்ணம் விதைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. என்று கூறி இருப்பது கவனிக்கதக்கது 

ஆக ஒரு பொடியன் அனுப்பிய ஈமெயிலை வைத்துக்கொண்டு இவர்கள் குண்டு வைப்புகளை யார் செய்து இருப்பார்கள் என்று கணிக்கிறார்கள் என்றால் .. சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது.. 

அடிக்கடி அங்காங்கே குண்டு வைப்பதும் நாங்கள் தான் செய்தோம் என்று ஈமெயில் வருவதும் எப்படி வாடிக்கையாக நடக்கிறது என்பதற்கு இது சிறந்த சான்று.

இந்தியாவில் சமீபத்தில் புனே,மும்பை மற்றும் டெல்லி ஆகிய 3 முக்கிய இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.இவை அனைத்துமே இந்திய முறையில் அல்லது இந்தியாவை சேர்ந்தவர்களால் ஹிந்து தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என்றே நிச்சயமாக சொல்ல முடியும்.
அப்படி இருக்கும் பொது இதையும் அவர்கள் ஏன் செய்திருக்க கூடாது ?...


இல்லை இல்லை இதையும் , இன்னும் வெடிக்க இருக்கும் குண்டு வெடிப்புக்களையும் முஸ்லீம்கள் தான் செய்வார்கள் ,செய்து இருப்பார்கள் என்றால் ..

பேசாம நேரடியாக இப்படி விளம்பரம் செய்து விடலாமே

“உலகில் யார் வேண்டுமானாலும் குண்டுவைக்கலாம் – 
பழியை ஏற்க முஸ்லீம்கள் இருகிறார்கள்....!!!”  என்று 


முஸ்லீம்களே...!

விழிப்படையவில்லை என்றால் – வருங்காலத்தில் நாம் விரட்டி அடிக்கப்படலாம்...!!

எச்சரிக்கை...

தீவிரமாக வாதம் செய்து நம்மை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்திவிட்டார்கள் உண்மையான தீவிரவாதிகள்.. அவர்களை நாம் உலகத்திற்கு இனம் காட்ட வேண்டும். 

தீவிரவாதத்திற்கு எதிராக களமிறங்க வேண்டும். யார் குற்றமிலைத்தாலும் முஸ்லிமோ , ஹிந்துவோ யாராக இருந்தாலும் தயவு தாட்சனையின்றி அவர்களை தண்டிக்க வலியுறுத்தி கலத்தில் இறங்கவேண்டும்.

சத்தியத்திற்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.
சத்திய மார்க்கத்திலேயே மரணிக்க வேண்டும், இன்ஷாஅல்லாஹ்.
  

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...