(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, September 11, 2011

அரசு கேபிள் டிவி செய்த நல்ல காரியம்..!


தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கேபிள் டிவி தமிழக மக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது..


DTH சேவைகளுக்கு ஆப்பு வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தொடங்கப்பட்டது அரசு கேபிள் டிவி..

"தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பின் மூலம் கட்டணச் சேனல்கள் உள்பட 90 சேனல்களை ஒளிபரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலில் இலவச சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படும். விரைவில் கட்டண சேனல்களும் வழங்கப்படும்.  ஒளிபரப்பு சேவைகள் 2.9.2011 முதல் தொடங்கப்பட்டு, குறைந்த செலவில் வழங்கப்படும். அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர்ந்துள்ள கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் தொலைக்காட்சி சேவையை பெறும் சந்தாதாரர்களிடமிருந்து மாதச் சந்தாவாக ரூ.70 மட்டுமே ஆபரேட்டர்களால் வசூலிக்கப்படும். இந்த ஒளிபரப்பை வழங்கும் ஆபரேட்டர்களிடமிருந்து கட்டணமாக ஒரு இணைப்பிற்கு ரூ.20 வசூலிக்கப்படும்." என்று அரசு அறிவிக்க வரிந்து கட்டிக்கொண்டு..
உடனே தமிழகத்தில் உள்ள 34,344 கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர்ந்தனர்.

அரசு கேபிள் மூலம் ஒளிபரப்பாகும் இலவச சேனல்கள் : பொதிகை, ஜெயா, ஜெயா பிளஸ், ஜெயா மேக்ஸ், ஜெயா மூவிஸ், கேப்டன், கலைஞர், மக்கள், வின், வசந்த், இமயம், ராஜ் நியூஸ், தமிழன் ஆகியவை மட்டுமே.

சன் டிவி, கே.டிவி, சன் மியூசிக், சுட்டி டிவி, சன் நியூஸ், விஜய் டிவி, ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல், ஆதித்யா, சோனி பிக்ஸ், கார்ட்டூன் நெட்வொர்க், நிக்கலோடியன், போகோ, டிஸ்னி, இஎஸ்பிஎன்ஸ்டார் ஸ்போர்ட்ஸ், 10 ஸ்போர்ட்ஸ், டைம்ஸ் நவ், என்டிடிவி 24*7, பிபிசி, சிஎன்என்டிஸ்கவரி, நேஷனல் ஜியக்ராபிக், அனிமல் பிளானட், ஹிஸ்டரி போன்ற கட்டண சேனல்கள் அரசு கேபிள் ஒளிபரப்பில் தெரியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீரியலில் வாழ்நாளை வீணடிக்கும் நம் பெண்களுக்கு பொறுக்குமா ? என்ன .. 
அரசு கேபிள் ஒளிபரப்பு ஆரம்பித்த அடுத்த நாளே – அந்த அந்த ஊர் மக்கள் கேபிள் டிவி ஆபரேட்டர்ககளை துளைத்தேடுதனர்..
நாங்கள் சன் டிவி ,விஜய் டிவி பார்க்க முடியவில்லை ... சீரியல் தொடர்ந்து பார்த்து வருகிறோம் .. என்ன ஆச்சோ எதாசோ .. எப்ப வரும் சன் டிவி ,விஜய் டிவி என்று இம்சை கொடுக்க ..

மக்கள் தொல்லை தாங்க முடியாமல் ஆபரேட்டர்கள் தமிழக அரசிடம் விபரம் கேட்க  “இன்னும் அதற்க்கான எந்த முயற்சியையும் அரசு எடுக்க வில்லை என்று தெரியவர அதிர்ச்சி அடைதனர் ஆபரேட்டர்கள்...
விளைவு : வீதிக்கு வந்து விட்டார்கள்  ஆபரேட்டர்கள்... மக்களும் தான்..








 நம்மை பொருத்தவரை ..
இது அரசு கேபிள் டிவி செய்த ஒரு சின்ன நல்ல காரியம் தான்... 
கொஞ்ச நாளைக்காவது நைட் பசியாற சீக்கரம் வரும் 
என்ன சொல்றிங்க :-)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...