“இந்தியாவை ஊழல்வாதிகளின் பிடியிலிருந்து மீட்கும் வரை நாம் அயராமல் பாடுபடுவோம், போராடுவோம் -- அன்னா.
அன்னா நீங்கள் என்னா பண்ணாலும் ஊழலை இந்தியாவில் ஒழிக்க முடியாது ஏன்னா ..நீங்கள் எடுக்கும் முடிவு எல்லாம் மண்ணா தான் போகும்..
ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றினால் ஊழல் அழிந்துவிடுமா ? .. இந்த மசோதாவை விடுங்கள் ஏற்கனவே நாட்டில் பல விசயங்களுக்கு தனி சட்டங்கள்,மசோதாக்கள் இயற்றபட்டுள்ளன.இதற்க்கு நாம் என்ன பலனை கண்டோம்,காணமுடிந்தது...
தவறுகள் குறையலாம் என்கிறீர்களா ? அப்படி பார்த்தால் இந்திய மக்களுக்கு முதல் அடிப்படை பிரச்சனை ஊழல் தானா ? ...
உண்மையில் குறிப்பிட்ட நபர்களை நாம் ஊழல்வாதிகள் என்று கூறமுடியாது இந்தியாவை பொருத்தவரை அடித்தட்டு மக்கள் வரை லஞ்சம்,ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.. எவ்வளவு ஊழல் செய்கிறார்கள் என்பதில் தான் வித்தியாசம் இருக்கிறது. ஆனால் எல்லோரும் தெரிந்தோ தெரியாமலோ லஞ்சம் ,ஊழலுக்கு துணைபோகிறார்கள்.
இந்தியாவில் இவர் லஞ்சம் கொடுக்காதவர் ,வாங்காதவர் என்று பட்டியிலிட்டால் விரல் விட்டு எண்ணி விடலாம் என்று கூட சொல்ல முடியவில்லை.. இந்நிலையில்
இந்தியாவில் ஊழலை ஒழிக்க வேண்டுமா போராட்டமா..? கனவில் வேண்டுமானால் முயற்சிக்கலாம்...
அண்ணாவின் பின்னால் நிற்கும் பெரும்பான்மையானவர்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் அல்ல ஆளும் காங்கிரசுக்கு எதிரானவர்கள்... ஒருவேளை நாளை ஆட்சி மாற்றம் நடந்தால் பிஜேபிக்கு எதிரனாவர்கள் அண்ணாவிற்கு பின்னால் நிற்பார்கள்.. இதுவும் அரசியல் விளையாட்டுக்கள் தான்.
அன்னா நீங்க இந்த வயசுல ரொம்ப கஷ்டபடாதிங்க..ரொம்ப ஈசியான ஒரு வழி இருக்கு நீங்கள் வேண்டுமானால் ஒன்று செய்யலாம்...
" ஊழலை ஒழிக்க ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஒரு 100C லஞ்சம் குடுத்து பாருங்களேன்" உடனே நடக்கும்....ம்ம உண்மையா தான்...
நாம இருக்குறது இந்தியாவில் என்பதை என்னானாலும் மறந்து விடாதீர்கள் அன்னா...
.
அருமையான யோசனை சொன்ன நாகூர் பிளாஷ் கு வாழ்த்துக்கள்:அண்ணாவின் பின்னால் நிற்கும் பெரும்பான்மையானவர்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் அல்ல ஆளும் காங்கிரசுக்கு எதிரானவர்கள்... ஒருவேளை நாளை ஆட்சி மாற்றம் நடந்தால் பிஜேபிக்கு எதிரனாவர்கள் அண்ணாவிற்கு பின்னால் நிற்பார்கள்.. இதுவும் அரசியல் விளையாட்டுக்கள் தான்.
ReplyDeleteஅன்னா நீங்க இந்த வயசுல ரொம்ப கஷ்டபடாதிங்க..ரொம்ப ஈசியான ஒரு வழி இருக்கு நீங்கள் வேண்டுமானால் ஒன்று செய்யலாம்...
" ஊழலை ஒழிக்க ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற ஒரு 100C லஞ்சம் குடுத்து பாருங்களேன்" உடனே நடக்கும்....ம்ம உண்மையா தான்...