(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, August 12, 2011

கடந்த ஒரு மாதத்தில் பல பெண்களை காணவில்லை!


கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் பல தமிழக  முஸ்லிம் பெண்களை காணவில்லை என்று தமிழக காவல் துறை F.I.R   பதிவு  தெரிவிக்கிறது ...!!!


இதில் பெரும்பாலும் வீட்டை விட்டு ஓடிப்போனவர்கள் தான் அதிகம் ..!!
நிலைமை அபாயகரமாக போய் இருக்கிறது...


எதற்கு ஓடிப்போகிறார்கள் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை .


பெற்றோர்களே நீங்கள் தான் இதற்கு முதல் பொறுப்பாளிகள்...


உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பிற்கு நீங்கள் இறைவனிடம் பதில் சொல்லி ஆகவேண்டும்...


எச்சரிக்கையோடு இருங்கள்..












இது கணக்கில் வந்தவை மட்டுமே ...

நன்றி : sultantamim@gmail.com


குழந்தை வளர்ப்பு என்னும் கலை சகோ . அப்துல்லாஹ் அவர்களின் உரை 


8 comments:

  1. போய் என்ன பண்ண போற? அதைதான் வீட்டில் இருந்தே பண்ணலாமே குடும்ப சம்பத்துடன் முறைப்படி கல்யாணம் முடித்து

    ReplyDelete
  2. இதுல்லாம் 1000 இல் ஒன்று எனவை இதையெல்லாம் பெரிய விசையமாக பேச வண்டாம், கம்ப்யூட்டர் இன்டர்நெட்டில் உள்ள விஷயங்கள் பாதி பொய் fake , யனவை ஈமெயில் வரும் spam களை எல்லாம் இங்கை எழுதாதீர், ( காதில் கேட்பதை எல்லாம் பரபுவரை விட பெரிய பொய்யார் யாரும் இல்லை )

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரே... உண்மைதான் இதுவெல்லாம் 1000தில் ஒன்று .. அதற்காக இதுவெல்லாம் சரி என்கிறீரா ? அல்லது கண்டுகொள்ள கூடாது என்கிறீரா ? ... நடந்த நிகழ்வுகளின் படிப்ப்பினையை கொண்டுத்தான் நாம் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும்... இன்டர்நெட்ல் வருபவை பொய்யாக இருக்கலாம் ஆனால் இது பொய்யான தகவல் அல்ல. நீங்கள் தினம் செய்திதாள் படிக்கும் பழக்கம் உடையவராக இருந்தால் உங்களுக்கு இதன் உண்மைநிலை தெரியவரும். இது எங்களுக்கு ஈமெயில் வந்த தகவல் தான் ஆனால் SPAM அல்ல என்பது நன்றாக தெரியும். இது வெறும் செய்தியாக படித்தவை மட்டுமல்ல நேரிலும் ,ஊரிலும் பார்த்தவை தான். அப்படி ஏதும் நடக்கவில்லை என்று சொல்ல முடியவில்லை. .. இதில் பரப்புவதற்கு ஒன்றுமில்லை அப்படி பார்த்தால் செய்தித்தாள்களை தான் நாம் முதலில் குற்றம் சொல்லவேண்டும்... நடப்பவை நடந்து கொண்டு தான் இருக்கும் . எச்சரிக்கை செய்யபட்டால் அதில் விழித்துக்கொண்டு தற்காத்து கொள்ளவது தான் அறிவுடைமை. அதற்காக தான் இதை வெளியிட்டோம். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

    ReplyDelete
  4. சகோதரே நாங்கள் பொய்யை பரப்பவில்லை.. இதோ காவல் துறையின் WEBSITE ன் லிங்கை உங்களுக்கு தருகிறோம்.

    http://www.tnpolice.gov.in/listmissingdetail.asp?gcaseno=011320112960251_1

    http://www.tnpolice.gov.in/listmissingdetail.asp?gcaseno=149220112959023_1

    http://www.tnpolice.gov.in/listmissingdetail.asp?gcaseno=024720112959916_1

    முழுவதும் வேண்டுமானால் சொல்லுங்கள் தருகிறோம. இன்ஷாஅல்லாஹ்

    ReplyDelete
  5. அப்புறம் இரண்டு மாதத்தில் கவலை படவேண்டும், தெரியாமல் வந்துவிட்டேன் யன்று, இக்கரைக்கு அக்கறை பச்சை, எல்லாம் டிவி இன் தாக்கம், இதுக்கு என்னதான் திர்வு? கல்யாணம் முடிபெதற்கு யன்று ஒரு முறை இருக்கிறது, குடும்ப சம்பதத்துடன் முறைப்படி கல்யாணம் முடிங்க

    ReplyDelete
  6. அருட்கொடையாம் தொழுகை.

    தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே. தொழுகை உங்களுக்கே.

    ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

    கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தம்.

    ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.

    அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

    இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

    ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

    தொழுகை சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.

    ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

    உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

    இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

    உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

    தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

    நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

    உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.

    பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

    "இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.

    இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.

    தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

    இதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.

    தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

    நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.

    தொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.

    தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.


    CLICK AND READ.


    >>> முஸ்லீம்களே!! தொழுகைக்கு நேரம் வகுப்பது சரிதானா? <<<

    >>> முஸ்லீம்களே!! வெள்ளிக்கிழமை மட்டும் தொழுகைக்கு முக்கிய‌த்துவம் ஏன்? <<<


    >>>
    முஸ்லீம்களே அரபு மொழியில் மட்டும் வழிபாடு ஏன் ?
    <<<

    >>>
    க‌ட‌வுளின் உருவங்க‌ள‌ற்ற‌ பள்ளிவாச‌ல்க‌ள் எப்ப‌டி புனித‌மாக‌ இருக்க‌முடியும்?
    <<<


    வாஞ்சையுடன் வாஞ்சூர்.

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும்.
    நம் சமுதாயத்திற்கு இது போன்ற செய்திகள் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் எச்சரிக்கை ஏற்படுத்தவும் தற்போது மிக மிக அவசியம்.
    நம் சமுதாயத்தின் மேல் அக்கரையுள்ள எந்த உண்மையான முஸ்லிமும் இது போன்ற செய்திகளை அலச்சியம் செய்ய மாட்டர்கள்.
    நம் சமுதாய பொது நலன் கருதி இது போன்ற செய்திகளை தெரியப்படுத்துவது காலத்தின் கட்டாயம்.
    மார்க்க பற்று இல்லாமல் சுய நலத்தையும் பொருள் ஈட்டுவதையும் குறிக்கோளாக கொண்டு வளர்ந்தவர்கள் வளர்க்கப்பட்டவர்களுக்கு இதெல்லாம் வதந்தியாகவும் அவசியம் இல்லாததாகத்தான் தோன்றும்.
    இது போன்ற பணிகள் தொடரட்டும் والله ولي التوفيق
    சுல்தான் - துபை

    ReplyDelete
  8. அழைக்கும் ஸலாம்.. மாஷால்லாஹ் சகோதர் சுல்தான் அவர்களே சரியாக சொன்னீர்கள்.. அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக ! உங்களுக்கு மார்க்க அறிவை விசாலமாக்கி வைப்பானாக !

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...