(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, February 26, 2011

முஸ்லிம் இயக்கங்கள் முஸ்லிம்களுக்கு என்ன செய்தன...? -எம்.என்.யூசுப்

சட்டமன்ற தேர்தல் கூப்பிடும் தூரத்தில் இருக்கும் நிலையில்
ஆளுங்கட்சி முதல் உதிரிக்கட்சிகள் வரை தேர்தல் காய்ச்சல்
தொற்றிகொண்டிருக்கிறது.
 
வழக்கம் போல இந்த தேர்தலிலும் முஸ்லிம் இயக்கங்கள்
அதிமுக திமுக என இரு அணிகளை நோக்கியும் நகர்ந்துகொண்டிருக்கிறது.
 
இந்நிலையில் திமுக கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் பெரும் முயற்சிகளில் இறங்கியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அம்முயற்சியில் சிறிதளவும் பின்வாங்காத முடிவில் இருக்கிறார்.

சிறுத்தைகள் பெரும் இரட்டை இலக்க தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் கணிசமாக இருக்கவேண்டும் என்கிற உல் முயற்சியில் இறங்கியுள்ள விசிகவின் மாநில பொருலாளர் சகோதரர் எம்.என் முகமது யூசுப் அவர்கள் பிப்ரவரி 24 தேதியிட்ட "தமிழக அரசியல்" வார இதழுக்கு அளித்திருந்த பேட்டியின் தொகுப்பு இங்கே...

தமிழகத்தில் காயிதே மில்லத், பழனிபாபா ஆகியோருக்கு பிறகு முஸ்லிம்களுக்கான கருத்தியல் மற்றும் களத்தியல் ரீதியிலான சிறந்த தலைமை இதுவரை கிடைக்காதது துரதிஷ்டமான விசயம்.

இந்திய அளவில் முஸ்லிம்கள் இன்று சிறுபான்மைகள் என்கிற நிலையை
தாண்டி அரசியல் அதிகாரத்தால் புறக்கணிக்கப்பட்ட நிலையில்தான் வாழ்ந்து வருகிறார்கள்.முஸ்லிம்சமூகத்தில் பல வணிகர்கள் பெரும் செல்வதோடு வாழ்ந்துவரும் நிலையை வைத்து அந்த சமூகத்தின் ஒட்டுமொத்த நிலையையும் கணித்துவிடகூடாது.
 
இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்துவரும் அணைத்து அடக்குமுறைகளையும் முஸ்லிம் சமுதாய மக்களும் அனுபவித்து வருகிறார்கள்.ஆனால் அவர்களின் வாக்கு வங்கியை மட்டும் பயன்படுதிகொள்ளும் பலர் அவர்களின் வாழ்வியலை முன்னேற்றவில்லை என்பதே மறுக்கமுடியாத உண்மை...
 
கேள்வி: தமிழகத்தில் முஸ்லிம்லீக், தமுமுக,தவ்ஹீத் ஜமாஅத் போன்ற அமைப்புகள் செயல்படுகின்றதே...
 
பதில்:இந்த அமைப்புகள் அனைத்துமே தாங்களே முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் என்று தங்களை முன்னிலைபடுதிகொண்டு ஆரம்பிக்கப்பட்டன.ஆனால் அவைகள் காலபோக்கில் திராவிட கட்சிகளின் அடிவருடிகளாக மாறிவிட்டன.
 
மேலும் அவவமைப்புகள் முஸ்லிம் மக்களை வாழ்வியல் ரீதியாக முன்னெடுத்து செல்லாமல் மார்கவியலே அரசியல் என சொல்லி குழப்பமும் குதர்க்கமும் செய்து வருகின்றன.மார்க்கம் என்பது இஸ்லாமிய மக்களின் தத்துவ ரீதியான கொள்கை. அரசியல் என்பது அவர்க்களின் அடிபடை தேவைகளை பூர்த்தி செய்ய அதிகாரத்தை கையிலெடுக்கும் வழிமுறை.

ஆனால் முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என தங்களை அறிவித்துகொண்டு புறப்பட்ட இயக்கங்கள் வெறும் மார்க்க அரசியலை செய்து முஸ்லிம் சமூக மக்களுக்கு தேவையான இட ஒதுக்கீடு போன்ற விசயங்களில் கோட்டை விட்டுவிட்டன.
 
இதுபோன்ற முஸ்லிம்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு தீர்க்கமான பார்வை இல்லாமல்... தேர்தலுக்கு தேர்தல் அவர்களை திராவிட கட்சிகளிடம் அடகு வைக்கின்றன.
 
அதேபோல திராவிட கட்சிகளில் உள்ள முஸ்லிம் பிரதிநிதிகளும் கட்சி எல்லைகளை தாண்டி முஸ்லிம் சமூகத்திற்கு அதுவும் செய்ய முன்வருவதில்லை...

பற்றாக்குறைக்கு இப்போது ஆர் எஸ் எஸின் அடுத்தவார்ப்பான விஜயகாந்த் வந்திருக்கிறார்.தனது திரைப்படங்கள் மூலமாக முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்கிற கருத்தை வெகுஜன மக்களிடம் விதைக்க முற்படுபவர். இவர்களை போன்றவர்களின் பின்னால் முஸ்லிம் இளையர்கள் செல்வது மிகப்பெரிய பின்னடைவையே ஏற்படுத்தும்.

கேள்வி:அப்படி பார்த்தால் விசிக தற்போது திமுக கூட்டணியில்தானே இருக்கிறது?

பதில்:இது தேர்தலுக்கான கூட்டணி முழு அளவில் கொள்கை ரீதியான கூட்டணி அல்ல.2011 ஆண்டை விடுதலை சிறுத்தைகளின் அங்கீகாரம் பெரும் ஆண்டாக அறிவித்துள்ள எங்கள் தலைவர் திருமாவளன்... 2016 ம் ஆண்டை தாழ்த்தப்பட்டோர் முஸ்லிம்கள் ஆண்டாக அறிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் சந்தேக வழக்குகளில் சிறைகளை அடைக்கப்பட்டார்கள் தாழ்த்தபட்டோருடனான ஒருங்கிணைப்பிற்கு பிறகு சமீப ஆண்டுகாலமாக இந்த பாதிப்பு குறைந்து வருகிறது.எனவே தாழ்த்தப்பட்டோர் முஸ்லிம்கள் ஒருங்கிணைப்பு முழுமையானால் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் முஸ்லிம்கள் ஆகிய இரு புறக்கணிக்கப்பட்ட இனங்களும் புது பலம்பெரும்...

அதற்க்கான களப்பணிகளை தற்போது விசிக செய்து வருகிறது. இதை உணர்ந்து முஸ்லிம் மக்கள் வரும் தேர்தலில் கடமையாற்ற வேண்டும் என்று முடித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருலாளர் எம்.என்.யூசுப்.

Friday, February 25, 2011

நாகூரில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம்லீகின் மாநில பொதுக்குழு கூட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில பொதுக்குழு கூட்டம்  நாகூர் மாடர்ன் மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் 24.2.2011 காலை 10.30 மணி யளவில் தொடங்கியது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 1,176 பொதுக்குழு உறுப் பினர்கள் பங்கேற்றுள்ள இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழுவில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு-

தமிழக சட்டமன்ற தேர்தலில்

வெற்றி வாகை சூடுவோம்
நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெற்றுள்ளது.

மக்கள் நலப் பணிகளில் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக செயல்படும் டாக்டர் கலைஞர் தலைமையிலான அரசு மீண்டும் தொடர தி.மு.க தலைமையிலான கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்யும் வகையில் திட்டமிட்டு செயலாற்றுவது என இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இந்த மாநில பொதுக்கூட்டம் உறுதி மேற்கொள்கிறது.

மதம் மாறிய முஸ்லிம்களுக்கு

பிற்பட்ட வகுப்பு சான்று

தமிழகத்தில் மதம் மாறிய முஸ்லிம்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வருவாய் துறையினர் மறுப்பதோடு வற்புறுத்தி கேட்பவர்களுக்கு """"இஸ்லாம் மதம் மாறியவர்�� என்றே சான்றளிக் கின்றனர்.

தமிழக சாதி பட்டியலில் ``இஸ்லாம் மதம் மாறியவர்�� என்று ஒரு சாதி இல்லாததால், முஸ்லிம்களாக மதம் மாறியோர் கல்வி கற்கவோ, அரசு நிதியுதவி பெறவோ, வேலை வாய்ப்பு பெறவோ முடியாத நிலையில் உள்ளனர்.

மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு பிற்பட்ட வகுப்பு சான்று வழங்கப்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களுக்கு தாழ்த்தப்பட்ட வர்களுக்கான சலுகைகள் வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. இது தவிர வன்னிய கிறிஸ்தவர்களை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அண்மையில் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே மதம் மாறிய முஸ்லிம்களுக்கும் பிற்பட்ட வகுப்பினருக்கான சான்று வழங்க அரசாணை பிறப்பிப்பதோடு, வரும் கல்வியாண்டில் பயன்பெறும் வகையில் சாதி சான்று கேட்டு விண்ணப்பித்த இஸ்லாத்தில் சேர்ந்தவர்களுக்கு """"பிற்பட்ட வகுப்பு�� என சான்று வழங்க தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

முஸ்லிம்கள் அனைவரையும் பிற்பட்ட வகுப்பினர் என அறிவிக்க வேண்டுதல்
முஸ்லிம்களை லெப்பை, தக்னி, மாப்பிள்ளா, தூதேகுளா அன்சர், ஷேக், செய்யது என சாதி வாரியாக மத்திய மாநில அரசுகள் பிரித்துள்ளன. மாநில அரசு அங்கீகரித்துள்ள சில பிரிவுகள் மத்திய அரசில் அங்கீகரிக்கப்படவில்லை.

கணக் கெடுப்புக்களின் போதும், சாதி சான்றிதழ் பெறும் போதும் என்ன பிரிவு போடுவது என்பதில் தமிழக முஸ்லிம்கள் தடுமாறுகின்றனர். ஏழு பிரிவுகளை தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்ய நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் குழு அமைத்து 27.01.2011 -ல் அரசு ஆணை வெளியிட்டது போல் அரசு பிரித்து வைத்துள்ள முஸ்லிம்களின் அனைத்துபிரிவுகளையும் ஒன் றிணைத்து, புதிதாக இஸ்லாத்தில் இணைந்த வர்களையும் சேர்த்து முஸ்லிம்கள் அனைவரும் ``பிற்பட்ட வகுப்பினர்�� என அறிவித்து அரசு ஆணை வெளியிட தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

சமச்சீர் கல்வியில் சிறுபான்மை மொழிகள்
தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டதை அனைவரும் வரவேற்கின்றனர். அதே சமயம் சிறுபான்மை மக்களின் தாய் மொழியை கற்கவும் வாய்ப்பு ஏற்படுத்த கோரிக்கை வைத்தனர்.

2010 டிசம்பர் 11 அன்று சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் அறிவித்த தற்கிணங்க, சமச்சீர் கல்வி திட்டத்தில் உருது, அரபி உள்ளிட்ட சிறுபான்மையின மொழிகளை கற்கவும் தேர்வு எழுதவும் வாய்ப்பளித்து 15.12.2010-ல் அரசாணை பிறப்பிக் கப்பட்டது.

விரும்பும் பள்ளிக் கூடங்கள் அனைத்திலும் உருது, அரபி உள்ளிட்ட சிறுபான்மை மொழிகளை கற்க இந்த அரசாணை வாய்ப்பு ஏற்படுத்தி தந்ததற்காக மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப் பட்டுள்ளோம். அதே நேரம் சிறுபான்மை மொழிகளின் தேர்வு மதிப்பெண்கள் தேர்ச்சிக்கு கணக்கிடப்பட்டால்தான் அம்மொழிகளை கற்கும் ஆர்வம் வரும் என்பதால் அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், தகுந்த உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

திருமண கட்டாய பதிவு சட்டத்தில் திருத்தம்உச்ச நீதி மன்றத்தின் ஆலோசனையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் திருமணங்கள் அனைத்தையும் கட்டாயமாகப் பதிவு செய்ய 30.06.2009-ல் சட்ட முன் வடிவு அறிமுகப்படுத்தப்பட்டு 24.11.2009 முதல் அமலுக்கு வந்தது.

இச்சட்டம் முஸ்லிம்களின் தனியார் சட்டத்திற்கு பாதகம் ஏற்படுத்திவிடுமோ என முஸ்லிம்கள் தரப்பில் தெரி விக்கப்பட்ட அச்சங்களைத் தொடர்ந்து தமிழக அரசு அச்சட்டத்திற்கு திருத்தம் செய்து 26.08.2010 அன்று அரசாணை வெளியிட்டது.

ஆயினும் திருமணங்களை பதிவு செய்வதில் சிரமங்களும் நடைமுறைச் சிக்கல்களும் இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டன.

இஸ்லாமியத் திருமணங்களைப் பொறுத்தவரை அவை உரிய முறையில் பதிவு செய்யப்பட்டு பள்ளிவாசல்களில் பராமரிக்கப்படுகின்றன.

இந்து மத முறைப்படி கோவில்களில் செய்யப்படும் திருமணங்களை பதிவு செய்யும் கோவில் நிர்வாக அதிகாரிகளையே திருமண பதிவாளர்களாகவும் அறிவித்து தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எனவே காஜி சட்டம் நடைமுறையில் உள்ள தமிழ்நாட்டில் காஜிகள், நாயிப் காஜிகள் என்ற இமாம்கள் பள்ளிவாசல் திருமண பதிவேடுகளில் பதிவு செய்யும் இஸ்லாமிய திருமணங்களை, பதிவிற்கு அப்படியே ஏற்க தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை

5 சதவிகிதமாக உயர்த்தி தர வேண்டுதல்


கல்வி வேலைவாய்ப்பில் மிகவும் பின் தங்கியுள்ள சிறுபான்மை முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியதோடு, அந்த இட ஒதுக்கீட்டின் பலன் முஸ்லிம்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கோடு தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைத்து உத்தரவிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

11.12.2010 அன்று சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் முன் மொழியப்பட்டு மாண்புமிகு தமிழக முதல்வர் பரிசீலனை செய்வதாக அறிவித்த முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கையை விரைவாக நிறைவேற்றித் தருமாறு மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்தல்

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கவும், மீனவர்கள் உயிர் உடமைகள் பாதுகாக்கப்படவும், நிம்மதியாக மீன்பிடி தொழில் செய்யவும் உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

நிலக்கரிதுகள்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டுதல் காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த நிலக்கரி திறந்த வெளியில் கொட்டப்பட்டு தடுப்புகள் இல்லாததால் நிலக்கரி துகள்கள் காற்றின் மூலம் பரவி நாகூர் உள்ளிட்ட சுற்று வட்டார ஊர்கள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் ஆஸ்த்மா உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே இத்துறைமுகத்திலிருந்து நிலக்கரி துகள்கள் காற்றில் பரவாமல் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய துறைமுக நிர்வாகத்தையும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் விழிப்புணர்வு

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த பிப்ரவரி 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இப்பணி வரும் 28ம் தேதி நிறைவடைகிறது.

அதே போன்று வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வர்களின் பெயர்கள் சேர்க்கப்படு வதற்கான காலக்கெடுவும் நீட்டித்துத் தரப்பட் டுள்ளது. எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு போன்ற அத்தியாவசிய கடமைகளில் விழிப்புடன் பணியாற்றுமாறும், எவரது பெயரும் விடுபடாமல் சேர்ப்பதற்கு உடனடியாக முயற்சிக்குமாறும் பள்ளிவாசல்களில் உரிய அறிவிப்பு செய்ய மஹல்லா ஜமாஅத்துக்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.


தமிழக தர்கா பேரவை தலைவர் பிரச்சனையில் சமரசம் செய்துகொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன் நாகூர் இ.த.ஜ. நகரத் தலைவரை , தமிழக தர்கா பேரவை தலைவரும் தி.மு.க. பிரமுகருமான சச்சா முபாரக் ஆட்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்திவிட்டு தாக்கப்பட்டவர்கள் மீதே தங்களின் அரசியல் பலத்தால் காவல்துறையை கொண்டு வழக்கு போட்டதும் நாம் அறிந்ததே !


இந்த நிலையில் நாகூரில் மீலாது எதிர்ப்பு பொது கூட்டத்திற்காக சென்றிருந்த மாநில பேச்சாளர் முஹம்மத் மைதீன் பொதுக்கூட்டத்திலும் காவல் துறைக்கு எச்சரிக்கை விடுத்தார்! நாளைக்குள் இந்த பிரச்சனைக்கு தீர்வில்லை என்றால் இன்ஷா அலலாஹ் தாக்கப் பட்டவன் மீதே வழக்கு பதிந்த காவல் துறை அலுவலகத்தை முற்றுகை என அறிவித்தனர்.இயக்க பேதமின்றி 200 கும் மேற்பட்ட ஏகத்துவ சகோதரர்கள் ஒன்று திரண்டனர்.






நிலைமை மோசமடைவதை அடுத்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர காவல்துறை முடிவு செய்து சச்சா முபாரக்கிடம் வேறு வழியில்லை ! நீங்கள் சமரசம் பேசி முடித்துக் கொள்ளுங்கள்! இல்லையெனில் நாங்கள் உங்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்' என எச்சரித்ததை அடுத்து சச்சா முபாரக் நேரில் வந்து மன்னிப்பு கேட்டதோடு இனி எந்த வகையிலும் ஏகத்துவ பிரசாரத்துக்கு இடையூறு செய்ய மாட்டோம் என இருபது ருபாய் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிக் கை எழுத்திட்டார்!


இணைவைப்பின் கோட்டையான நாகூரில் இனி ஏகத்துவப் பிரசாரத்துக்கு இடையூறு செய்யமாட்டோம்! என தமிழக தர்கா பேரவை தலைவர் எழுதிக் கையெழுத்திட்ட சம்பவம் இஸ்லாமிய வரலாறுகளை நினைவு படுத்தியது!ஏகத்துவ வாதிகள் ஒன்றிணைந்தால் எந்நாளும் வெற்றி என்பதை எடுத்து சொல்லியதோடு , எல்லோரோடும் இணக்கமாக இருப்போம் ! ஏகத்துவத்தில் உறுதியாக இருப்போம்! இன்ஷாஅல்லாஹ்.

ஜசக்கல்லாஹ் :altaf hussain.

துறைமுக பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண தொடர் போராட்டங்கள் அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு.... 

உங்கள் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..!
 




Wednesday, February 23, 2011

வி.ஏ.ஒ தேர்வும் எதிர்பாராத கேள்வியும்...

தமிழகம் முழுவதும் கடந்த பிப்.20  அன்று வி.ஏ.ஒ தேர்வு நடைபெற்றது. ஒன்பதுலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினார்கள்.




அதில் இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது..

யாருக்கு எதிராக கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்டது ?
1.ஆங்கில அரசு
2. இந்துக்கள்
3.முஸ்லிம்கள்
4.கிருஸ்துவர்கள்.


இதற்கு ஆங்கில அரசு என்பதே சரியான விடை.

முஸ்லிம்களுக்கு இந்திய விடுதலை போரில் சம்மந்தமில்லை என்பது போல் வரலாற்றில் திரிபு செய்யும் இக்காலகட்டத்தில் முஸ்லீம்கள் இந்திய விடுதலைக்காக ஒரு மார்க்கரீதியான இயக்கத்தை தோற்றுவித்தார்கள் என்பதை வெட்டவெளிச்சம் போட்டு காட்டும் செயலாக இதை பார்க்கலாம்.

லட்சக்கனக்கானோர் எழுதிய தேர்வு என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.இருப்பினும் எத்தனை அறிவுஜீவிகள் 2.இந்துக்கள் என்று  விடை அளிதார்களோ என்னவோ..

என்னென்றால் சில மாற்றுமத சகோதர்களை பொருத்தவரை கிலாபத் என்றாலே ஏதோ ஹிந்துக்களுக்கு எதிராக முஸ்லீம்கள் செய்யும் வினை என்றே எண்ணுகிறார்கள்.

Tuesday, February 22, 2011

ஸ்ரீஸ்ரீரவிசங்கரா... ஆர்.எஸ்.எஸ். ரவிசங்கரா...?

ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குள் போனால் “வன்முறை இல்லாத, மனஇறுக்கம் இல்லாத உலகே எனது லட்சியம்” எனும் வார்த்தைகள் பளிச்சிடுகின்றன. மகாத்மா காந்தி ஆசிரமத்திற்குப் போய் ரவிசங்கர் ராட்டை நூற்கிற படம் இருக்கிறது.

பெங்களூரிலிருந்து 36 கி.மீ தூரத்தில் இவரது ஆசிரமம் இருக்கிறது. தமிழகத்தின் பாபநாசத்தில் பிறந்தவராம். அங்கு போய் செட்டில் ஆகியிருக் கிறார். அப்பா பெயர் வெங்கட்ரத்தினம், அம்மா பெயர் விசாலாட்சி. தனது பெயரான ரவிசங்க ரோடு ஸ்ரீஸ்ரீயைச் சேர்த்திருக்கிறார். அந்தப் பெயரைக் கொண்ட பிரபல சிதார் கலைஞர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனாலும் என்ன அதைத் தக்க வைத்துக் கொண்டார்.

“வாழுங்கலை சர்வதேச மையம்” என்பது நடக்கிறது. “வேதவிஞ்ஞான மகாவித்யா பீடம்” இருக்கிறது. வேதப் பாடல்கள் எல்லாம் இவருக்கு விஞ்ஞானம்தான்! இந்த அமைப்புகளின் செயல் பாடுகள் இந்தியாவில் மட்டுமல்லாது, பல நாடுகளிலும் விரவிக் கிடப்பதை இணையதளம் விவரித்துக் கொண்டே போகிறது.

ஈராக்கிற்குக்கூடப் போய் “ஆன்மிகச் சேவை” செய்திருக்கிறார் ரவிசங்கர். அந்த நாட்டின் மீதான அமெரிக்கத் தாக்குதல் பற்றி, சதாம் உசேன் படு கொலை செய்யப்பட்டது பற்றி இந்த “ஆன்மிக குரு”வின் கருத்து என்னவென்று அறிய முடிய வில்லை.

இணையதளத்தைப் பார்க்க பார்க்க, படிக்க படிக்க பிரமிப்பாக இருக்கிறது. தென்னிந்தியா விலிருந்து ஒரு “ மகாகுரு” கிளம்பி சர்வதேசப் புகழ் பெற்றிருக்கிறார். இது அதிகாரப்பூர்வ பிம்பம். நெருங்கிப் பார்த்தால் தெரியும் உண்மை முகம் என்ன?

“ஃபைனான்சியல் டைம்ஸ்” எனும் உலக அளவில் பிரபலமான பத்திரிகையின் தெற்காசியப் பிரிவின் தலைவராக 2001-2005ல் தில்லியிலிருந்து பணியாற்றியவர் எட்வர்ட் லூசே. இந்தியாவில் தனக்கேற்பட்ட அனுபவத்தை “கடவுளர்கள் இருந் தாலும்” என்று ஒரு நூலாக எழுதியிருக்கிறார். இது 2006 ல் லண்டனில் வெளியானது. இதன் மலிவுப் பதிப்பு 2007ல் வெளியானது. இதில், தான் ரவிசங் கரை சந்தித்தது பற்றியும், அதன் பிறகு நடந்த சில விஷயங்கள் பற்றியும் சொல்லியிருக்கிறார் லூசே. அவை சுவாரசியமானவை மட்டுமல்ல, இந்த நாட்டின் முற்போக்காளர்களால் கவலையோடு கவனத்தில் கொள்ளத் தக்கவை.

ரவிசங்கரின் ஆசிரமம் எப்படி இருக்கிறது தெரியுமா? ஆசிரமம் என்றால் நம் மனதில் ராமாயண காலத்து குடில், அல்லது காந்தி காலத்து எளிய ஓட்டு வீடு எழும். இது அப்படி அல்ல. லூசே கூறுகிறார்- “இந்த ஐந்து மாடிக் கட்டடம் முழுக்க முழுக்க மார்பிள் கல்லால் கட்டப்பட்டது, ஒரு தாமரை வடிவில் உள்ளது.” பி.ஜே.பி.யின் தேர்தல் சின்னத்தை இவர் எடுத்துக் கொண்டது யதேச்சையானதாக இருக்க முடியாது என்பதைப் பிந்தைய நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

இப்போது நம்மை ஈர்க்கும் செய்தி இது - “இந்த ஆடம்பரமான கட்டடம் கட்டுவதற்கான பணம் பெரும் கம்பெனிகளால் தரப்பட்டது. அதிலும் பெரும்பாலான பணம் பக்கத்தில் உள்ள பெங்களூரு மென் பொருள் கம்பெனிகளால் தரப்பட்டது.” மதத்திற்கும் ஆளும்வர்க்கத்திற்கும் இடையிலான உறவு ஆதிகாலந்தொட்டு மிக வலுவானது. மதத்தின் கிளைப் பிரிவுகளாக அவ்வப்போது எழும் மடாதிபதிகள் அல்லது ஆன்மிகக் குருக்களுக்கும் இந்த ஆளும் வர்க்கத்திற்கும் இடையிலான உறவும் பாரம்பரியமானதே.

தகவல் தொடர்புத்துறைக் கம்பெனிகள் எனப் பட்டவை படு நவீனமானவை. ஆனால்அவற்றின் சமூகச் சிந்தனைகள் பத்தாம் பசலித்தனமாக இருக்க முடியும் என்பதற்கு இதுவோர் உதாரணம். ஆர்.எஸ்.எஸ் பற்றிய ஒரு வலைத்தளச் செய்தியில் பெங்களூரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் அதிகாரிகள் மத்தியில் இது தீவிரமாக இயங்குவதாகவும், வாரம் ஒரு முறை கூடி இந்த அமைப் பின் சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி உற்சாகமாக விவாதித்துக் கொள்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தகையவர்களின் நிதி உதவி ரவிசங்கருக்கு கிடைத்துள்ளது. அந்த நவீன கம்பெனிகளின் சுவைக்கு ஏற்ப நவீன கட்டடத்தையும் எழுப்பியிருக்கிறார்.

பக்தர்களை ரவிசங்கர் சந்திக்கும் மண்டபத்தை நூலசிரியர் சித்தரித்திருக்கிறார். அங்கே இஸ்லா மியப் பிறை, டேவிட்டின் நட்சத்திரம், இயேசுவின் சிலுவை இருந்தன. ஆனால் செல்வத்துக்கு அதிபதி யான லட்சுமி தேவியின் உருவம் பெரிதாக இருந்தது. இந்து மதமே பெரியது, அதிலும் பணத் துக்கான கடவுளே முக்கியம் என்பதாக இருந்தது. தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற ஆன்மிகக் கூடமே!

வந்தவர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ரவிசங்கர் அளித்த பதில்களும் இன்னும் வினோத மானவை. லூசே ஆச்சரியத்தோடு எழுதுகிறார்- “உயர் ஞானம் பற்றிய, புறவுலகு கடந்த விஷயம் பற்றிய கேள்விகளைக் கேட்பார்கள் என்று நான் எதிர் பார்த்தேன். ஆனால் அவையோ சண்டித்தனம் செய்யும் இளவயசுப் பிள்ளைகளை எப்படிச் சமாளிப்பது, அலுவலகத்திலேயே வெகுநேரம் தங்கலாமா, திருமணத்திற்கு ஜோடியை எப்படித் தேர்ந்தெடுப்பது எனும் இகவுலகு சார்ந்தவை யாகவே இருந்தன.

நான் நல்ல பெண்தானா என்று எப்படி மெய் யாலும் அறிவது என்று ஒரு பெண்மணி கேட்டார். “எப்போதுமே நீங்கள் இனிமையானவராக, நல்லவராக இருக்க வேண்டியதில்லை” என்று பதில் சொன்னார் குருஜி. பக்தர்கள் உற்சாகமாகச் சிரித்தார்கள். திகைத்துப் போனவனாக சுற்று முற்றும் பார்த்தேன். நூற்றுக்கணக்கான ஒளிரும் கண்களும் பரபரப்பான முகங்களும் தெரிந்தன.
 
மின்னஞ்சலில் வந்த ஒரு கேள்வியை சீடர் ஒருவர் வாசித்தார். அது இப்படி முடிந்தது- ‘நான் உங்களைப் பெரிதும் நேசிக்கிறேன்.’லஞ்சம் கொடுப்பது எப்போதுமே தவறுதானா? என்று கேட்டிருந்தார். ‘எப்போதுமே நீங்கள் பெரிய லட்சியவாதியாக இருக்கக் கூடாது. சின்னச் சின்ன சமரசங்களை அவ்வப்போது செய்து கொள்ள வேண்டும்’ என்றார் குருஜி. கூட்டத்தினர் மீண்டும் சிரித்தார்கள். வாழுங்கலையின் மூச்சுப் பயிற்சி உத்திகள் பற்றி நான் யோசிக்க ஆரம்பித்தேன்”.

நவீன உயர் மத்தியதர வர்க்கத்திற்கு நீக்குப் போக்காக வாழ்ந்து உலகை அனுபவிப்பது பற்றிய ஆன்மிக போதனையாக அது இருந்தது. உலக மேன்மைக்கான, சக உயிர்களின் நிம்மதிக்கான ஆன்மிக விசாரணை அல்ல அது. குறுக்கு வழியில் போவதுகூடச் சரிதான் என்று உயர் அதிகாரிகளை மனத்தளவில் தட்டிக் கொடுக்கிற காரியம் அது.

இப்படிப்பட்ட கேள்வி-பதில் அமர்வு முடிந்ததும் இந்த நூலாசிரியர் லூசேவுடனான பேட்டி துவங்கியது. அப்போது காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் கைதாகியிருந் தார். இது பற்றிய ரவிசங்கரின் கருத்தைக் கேட்டார். அதற்கு அவரின் பதில் - “ எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதுபோல மடத்தின் நிதி ஒழுங்கின்மை பற்றிக் கேள்விப்பட்டபோதும் அப்படியாகவே இருந்தது. ஆனால் வெகுமக்களி டமிருந்து எதிர்வினை இல்லாதது எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. இந்துக்கள் பெரிதும் அசமந்தமானவர்கள். நாங்கள் அஹிம்சாவாதிகள். ஆனால் அந்த நிறுவனம் மக்களைச் சென்றடைந் ததில்லை என்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். சமுதாயத்தின் இதர பகுதியினருக்கு அந்த மடத்தின் மீது ஈடுபாடு இல்லை.”

ஓர் இந்து மடாதிபதி கைதானால் இந்து வெகுமக்கள் பொங்கி எழ வேண்டும், கலவரத்தில் ஈடுபட வேண்டும் எனும் உள்ளார்ந்த எதிர்பார்ப்பு இந்த “ஆன்மிகக்” குருவுக்கு இருப்பதைத் தெளி வாக உணரலாம். இந்துக்கள் அஹிம்சாவாதிகளாக இருக்கிறார்களே என்று ஏகமாயக் கவலை!

ஆனாலும் இங்குள்ள சாதிப்பிரச்சனையும் இதற்குக் காரணமோ என்று இவர்களுக்குள் குடைகிறது. காஞ்சி மடம் நடைமுறையில் ஓர் உயர்சாதியினரின் மடமாக இருக்க, பிற பகுதி மக்கள் அதன்பால் அக்கறை காட்டாததில் ஆச்சரியம் இல்லை என்றும் படுகிறது. இதை மனதில் கொண்டுதான் ரவிசங்கர் போன்றவர்கள் தியானம், யோகா என்று பல தரப்பாரையும் ஈர்க்கிற புதுவித மடத்தை உருவாக்குகிறார்கள் என்பதும் இதில் நிச்சயமாகிறது. உத்தியை மாற்றிப் பார்க்கிறார்கள்.

இதெல்லாம்கூட பிரச்சனை இல்லை. இந்த நவீன சாமியாரின் சமூக-அரசியல் சிந்தனை மற்றும் புறவுலகத் தொடர்புதான் சிக்கலானது. பாபர் மசூதி-ராமர்கோவில் பற்றி இவர் கேள்வி கேட்க ரவிசங்கர் சொன்ன பதிலை நோக்குங்கள்- “இயேசு அல்லது முகம்மது பிறந்த இடம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? அந்த இடத்தின் மீது இன்னொரு கட்டுமானம் இருப்பதை நீங்கள் பொறுத்துக் கொள்வீர்களா? ராமருக்கு ஒரு கோவில் கட்டுவோம். ஒரு நல்லெண்ணச் செய்கையாக முஸ்லிம்கள் விட்டுக் கொடுக்கட்டும். அப்போது அந்தக் கோவில் அல்லாவுக்கும், அனைத்து முஸ்லிம்களுக்கும்கூடச் சொந்தமாக இருக்கும்.”

இந்தப் பதிலைக் கேட்டு அசந்து போனார் லூசே. அவர் மட்டுமா நாமும்தான். விஷயத்தையே தலைகீழாக்கி விட்டார். ஆன்மிகக் குரு அல்லவா சித்துவேலை காட்டிவிட்டார். அயோத்தியில் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்கிறார்கள் சரித்திரஞானிகள். 450 ஆண்டுகளாக இருந்த மசூதிக்குள் 1949 ல் கள்ளத்தனமாக ராமர் சிலையை வைத்துவிட்டு, அது ராமருக்கே சொந்தம் எனச் சொன்னார்கள் இந்துத்துவாவாதிகள். இந்த அடாவடித்தனத்தைக் கண்டிக்காமல் முஸ்லிம்களை விட்டுத்தரச் சொல் கிறார். விட்டுத் தந்தால் ராமர் கோவில் முஸ்லிம் களுக்கும் சொந்தமாக இருக்குமாம்! விக்கிரக ஆராதனை செய்யாத முஸ்லிம்களை இது கேலி செய்கிற வேலை.

லூசே கேட்டார் - “அல்லாவுக்கும் சொந்தமாக இருக்குமா?” ரவிசங்கர் பதில் சொன்னார்- “ஆமாம், நீங்கள் பார்த்தீர்கள். நாங்கள் கடவுளின் அனைத்து மார்க்கங்களையும் ஒப்புக் கொண்டுள்ளோம். மற்றவர்களும் இப்படிச் செய்ய வேண்டும் என்று சில சமயம் நாங்கள் விரும்புகிறோம்” இவர்களது “சர்வசமய சமரசம்” என்பது கூட சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்கிற கதையாக உள்ளது!

இதனால் இந்த நூலாசிரியர் எழுதுகிறார்- “இது நிறைய ‘இந்து முஸ்லிம்களும் இந்து கிறிஸ்தவர்களும்’ உருவாக வேண்டும் என்கிற அத்வானியின் ஆசையை குருஜியின் வார்த்தைகள் நினைவு படுத்தின. குஜராத்தின் நரேந்திர மோடியோடு நான்கண்ட பேட்டியையும் அவை நினைவுபடுத்தின.” அஹா! ஆன்மிகக் குருவின் வார்த்தைகள் இந்துத்துவா அரசியல் தலைவர்களை நினைவு படுத்தின என்றால் என்ன பொருத்தம் இப் பொருத்தம்!.

எனினும் இது உச்சம் அல்ல. அது அடுத்து வருகிறது. நூலாசிரியர் லூசே முத்தாய்ப்பாக நடந்த அந்த நிகழ்வைக் கூறுகிறார். அது- “சில வாரங்களுக்குப் பிறகு எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது. அது ஆர்.எஸ்.எஸ் சின்தேசியச் செய்தித் தொடர்பாளர் ராம்மாதவிடமிருந்து வந்தது. மாதவ் கூறினார் - ‘ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பற்றிப் பேசவே கூப்பிட்டேன். அவரோடு பேசிக் கொண்டிருந்தபோது ஃபைனான்சியல் டைம்சில் நீங்கள் எழுதியிருந்த கட்டுரை திருப்தியாக இல்லை என்று அவர் என்னிடம் கூறினார். அரசியல் மற்றும் சங்கராச்சாரியார் பற்றி அவர் கூறிய கருத்துக்களை மட்டுமே நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். சகிப்புத் தன்மை மற்றும் ஆன்மிகம் பற்றிய அவரது கருத்துக்களை நீங்கள் குறிப்பிடு வீர்கள் என்று அவர் நம்பியிருந்ததாக அவர் கூறினார்’. உண்மைதான், இந்த விஷயங்கள் பற்றிய குருஜியின் கருத்துக்களைக் குறிப்பிட எனது கட்டுரையில் இடம் இல்லாமல் போயிருந்தது. ஆனால் என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம், இந்தப் புகாரைச் சொல்ல அவர் இதர அமைப்புகளை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ்.சைத் தேர்ந்தெடுத்தது!”

தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி சொல்லித் தருகிற ஓர் ஆன்மிகக் குரு என்று ரவி சங்கரை நம்பிக் கொண்டிருக்கிறோம். அவரோ ஆர்.எஸ்.எஸ்.சின் கோட்பாடுகளை எதிரொலிக்கிறார். அயோத்தி விவகாரத்தில் என்பது மட்டு மல்லாது, அந்த அமைப்பின் தலைவர்களோடு நெருங்கிய உறவு கொண்டிருக்கிறார். எந்த அளவுக்கு என்றால் இவருக்காக அவர்கள் பத்திரிகையாளர்களோடு பேசுகிற அளவுக்கு அல்லது மறைமுகமாக மிரட்டுகிற அளவுக்கு!

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்பார்கள். புற்று என்றால் பாம்பு இருக்கும் என்று சந்தேகிக்கலாம். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருக்குமா? இருக்கலாம். தோற்றத்திற்கும் உள்ளுறைக்கும் இடையே சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம். லூசே எழுதுகிறார்- “ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு யோகி-தாராள சித்தம் கொண்டவர் எனும் பிம்பம் இருக்கிறது. ஆனால் அதிகம் அறியப்படாத விஷயம் என்னவென்றால் ஆர்.எஸ்.எஸ்.சோடு குருஜிக்கு உள்ள நெருங்கிய தொடர்பு மற்றும் பொது மேடைகளில் வி.எச்.பி தலைவர்களோடு அவர் இடம் பெறுவது.”

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரா? ஆர்.எஸ்.எஸ் ரவிசங்கரா?- என்பதுதான் இவற்றிலிருந்து எழுப்பப்பட வேண்டிய கேள்வி. யோகா-மூச்சுப் பயிற்சி என்பது இந்தியர்கள் வளர்த்த ஒரு நல்ல உடல்கலை. ஆனால், அதைச் சொல்லிக் கொண்டு சில குருமார் களை ஆர்.எஸ்..எஸ் உருவாக்கி உலாவவிடக் கூடும். அவர்களை அடையாளங்கண்டு மக்களுக்குச் சொல்லுகிற வேலையும் முற்போக்காளர்களுக்கு உண்டு.
 

Thursday, February 17, 2011

21ஆம் நூற்றாண்டில் மக்கள் புரட்சியால் ஆட்சியை இழந்த தலைவர்கள்!

வேலையில்லாத் திண்டாட்டம், ஆட்சியாளர்களின் ஊழல், மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக ஆட்சியாளர்கள் செயல்படுதல் போன்றவற்றின் காரணமாக ஆட்சியாளர்கள் மீது வெறுப்புறும் மக்கள் வீதிக்கு வந்து போராடுவதன் மூலம் சர்வாதிகாரிகள் பலரை ஆட்சியைவிட்டு மட்டுமல்ல நாட்டை விட்டே துரத்தி அடித்துள்ளனர். சர்வாதிகாரம், மன்னாராட்சிகள் போன்றவை பெரும்பாலான நாடுகளில் 20ஆம் நூற்றாண்டுடன் முடிவுக்கு வந்துவிட்டது. என்றாலும் சில நாடுகளில் அவை தொடரத்தான் செய்கின்றன.

ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி, ஆட்சியாளர்களை விரட்டி வரலாற்று நிகழ்வுகளாகப் பதிவு செய்யப்பட்டுவிட்ட 21ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளர்கள் சிலரைப் பற்றிய குறிப்புகள் இந்நேரம் வாசகர்களுக்காகத் தருகிறோம்.

2000  ஜனவரி - ஈக்குவடார்: அதிபர் ஜமில் மஹோத், தனது பொருளாதார கொள்கைக்கு எதிராக மக்கள் போராட்டத்தால் பதவியிழந்தார்


2000 அக்டோபர் - முன்னாள் யுகோஸ்லாவியா: செர்பிய இரும்பு மனிதர் ஸ்லோபோடன் மிலோசெவிக், தேர்தல் முறைகேடுகளுக்கெதிராக பெக்ராடில் நடந்த மாபெரும் மக்கள் போராட்டத்தால்  தனது பதவியிலிருந்து விலகினார். பின்னர் ஹாகுவிலுள்ள  ஐ.நா வின் போர் குற்றங்களுக்கான நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பே அவர் மரணமடைந்தார்.


2001 ஜனவரி - பிலிப்பைன்ஸ்: அதிபர் ஜோசப் எஸ்ட்ராடா, 6 ஆண்டுகள் நடந்த இவரது ஆட்சியில் நாடுமுழுவதும் பரவிய லஞ்ச லாவண்யத்தால், ராணுவ உதவியோடு 30 மாதங்கள்  நடந்த மக்கள் புரட்சியால் தனது பதவியை இழந்தார்.

2001 டிசம்பர் - அர்ஜென்டினா: அதிபர் பெர்னாண்டோ  டி  லரா, மக்கள் புரட்சிக்கெதிரான காவல்துறையின் கடும் அடக்குமுறை நடந்து ஒரே வாரத்தில்   பதவி விலகி ஹெலிகாப்டரில் தப்பிச்சென்றார். காவல்துறையின் கடும் அடக்குமுறையால் மக்கள் 27  பேர் உயிரிழந்தனர்.


2003 அக்டோபர் - பொலிவியா: அதிபர் கோன்சலோ சன்செஸ் டி லோசட சர்வதேச எண்ணெய் கம்பெனிகளிடம் நடத்திய பேரத்தின் விளைவாக ஏற்பட்ட மக்கள் புரட்சியால் பதவிலிருந்து விலகி அமெரிக்க ஹெலிகாப்டரில் தப்பிச்சென்றார். இந்தப் போராட்டத்தில் மக்கள் 65 பேர் உயிரிழந்தனர்.

2003 நவம்பர் - ஜார்ஜியா: அதிபர் எடோர்ட் ஷேவர்ட்னட்சே, 30  ஆண்டுகளாக ஜார்ஜியா அரசியலைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இவர், மைகேல் சாகஷ்விலி என்பவரது தலைமையில் நடந்த ரோஸ் புரட்சி என்றழைக்கப்பட்ட புரட்சியால் ஆட்சியை இழந்தார். தேர்தலில் அதிபர் எடோர்ட் ஷேவர்ட்னட்சேயின் கூட்டணி வெற்றி பெற்றது செல்லாது என்று எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மைகேல் சாகஷ்விலி தலைமையில் நாடாளுமன்றத்தில் நுழைந்தனர்.


2004  பெப்ரவரி  - ஹெய்தி: அதிபர் ஜீன் பெர்ட்ராந்து அரிஸ்டைடு  மக்கள் போராட்டத்தாலும் சர்வதேச நாடுகளின் நிர்பந்தத்தாலும் தனது ஆட்சியை இழந்து தென்ஆப்பிரிக்காவில் தஞ்சமடைந்தார். நான்கு வாரங்கள் நடந்த போராட்டத்தில் கிட்டத்தட்ட  100 பேர் உயிரிழந்தனர்.

2004 நவம்பர் - டிசம்பர் - உக்ரைன்: அதிபர் விக்டர்  யானுகோவிச் முறைகேடாக நடந்த தேர்தலில் ஆட்சியை பிடித்த ரஷிய ஆதரவாளர்  விக்டர்  யானுகோவிச்சுக்கு எதிராக ஆரஞ்சு புரட்சி என்றழைக்கப்பட்ட மக்கள் புரட்சியால் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் மேற்கத்திய ஆதரவாளர் விக்டர் யுஸ்செங்கோ அதிபரானார்.

2005 மார்ச் - கிர்கிஸ்தான்: அதிபர் அஸ்கர் அகயேவ் - அதிகரித்த லஞ்ச லாவண்யம் மற்றும் தேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக பலமணிநேரம் நடந்த மக்களின் போராட்டத்தால் ஆட்சியை இழந்து ரஷ்யாவிற்கு நாடுகடத்தப்பட்டார்


2005 ஜூன் - பொலிவியா: அதிபர் கார்லோஸ்  மேசா, தனக்கு முன் பதவியிழந்த  முன்னாள்  அதிபர் கோன்சலோ சன்செஸ் டி லோசடசாவைத் தொடர்ந்து அதிபர் பதவியேற்ற துணை அதிபர் கார்லோஸ்  மேசாவும் மக்கள் எதிர்ப்பால்  தனது பதவியை ராஜினாமா செய்தார்


2010  ஏப்ரல் - கிர்கிஸ்தான்: அதிபர் குர்மன்பேக் பகியேவ், தனக்கு முன் பதவியிழந்த  முன்னாள்  அதிபர்  அகயேவைத் தொடர்ந்து பதவியேற்ற, குர்மன்பேக் பகியேவ்,  மக்கள் புரட்சியால் தனது ஆட்சியைத் துறந்து பெலாரசில் தஞ்சமடைந்தார். இந்தப் புரட்சியில்  மக்கள்  87   பேர் உயிரிழந்தனர்.

2011 ஜனவரி - துனீசியா: அதிபர் ஜைனுலாபீதீன் பென் அலி, 1987  முதல் ஆட்சியில் இருந்த அதிபர்.  மல்லிகை புரட்சி என்று அழைக்க்கப்பட்ட மக்கள் புரட்சியால் தனது ஆட்சியைத் துறந்து சவூதி அரேபியாவில் தஞ்சமடைந்தார். இந்தப் புரட்சியில் 200 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.


2011 பிப்ரவரி - எகிப்து: அரபு நாடான துனீசியாவில் நடைபெற்ற புரட்சியைத் தொடர்ந்து 2011 ஜனவரி 25ஆம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை 18 நாள்கள் தொடர்ந்து நடைபெற்ற மாபெரும் மக்கள் புரட்சியைத் தொடர்ந்து எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகினார்.
 
நன்றி : இந்நேரம்.காம்

கசிந்தது கோகோ கோலா ரகசியம் - ஆல்கஹால் சேர்க்கப்படுகிறது

நீங்கள் கோகோ கோலா பிரியரா ? கொஞ்சம் கவனமா படிங்க...

மென்பானமான கோகோ கோலா தயாரிக்கச் சேர்க்கப்படும் பொருட்களில் ஆல்கஹாலும் ஒன்று என்ற அதன் ரகசியம் அமெரிக்காவிலிருந்து ஒலிபரப்பாகும் வானொலியொன்று வெளியிட்டுள்ளது.

125 வருடங்களாக மென்பானத் துறையில் கோலோச்சி வருபவைகளாக அமெரிக்கத் தயாரிப்புகளான கோகோ கோலாவும், பெப்சி கோலாவும் உள்ளன.

வல்லரசின் இராணுவ இரகசியம் போல் பொத்தி வைக்கப்பட்டிருந்த இவற்றின் தயாரிப்பு இரகசியம் (என்னென்ன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன என்ற விபரம்) தற்போது ஊடகங்களில்  வழிந்தோடுகிறது.

முதன் முதலில் கடந்த 1886-ம் ஆண்டு   தயாரிக்கப்பட்டு  அட்லாண்டாவில் மட்டும் விற்கப்பட்ட இந்த கோகோ கோலா குளிர்பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகளில்  நாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில் என்ற அளவில் விநியோகம்  செய்யப்படுகிறது. இதற்கான பார்முலா ஜான் பெம்பர்டன் என்ற மருந்தாளுனர் கண்டுபிடித்தார்.

125 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இதன் தயாரிப்பு இரகசியம்  வெளியாகியுள்ளது. இந்த இரகசியத்தை அமெரிக்காவில் இருந்து ஒலிபரப்பாகும் ஒரு வானொலி  தெரிவித்துள்ளது. பின்னர்  ஒரு இணைய தளத்திலும் இவ்விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி கோகோ கோலாவில் ஆல்கஹால் சேர்க்கப்படுவது  ஊர்ஜிதமாகிவுள்ளது.

என்னத்த சொன்னாலும் குடிக்கிரவங்க குடிச்சிக்கிட்டு தான் இருக்காங்க..

நகல் வாக்காளர் அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்- 19,20 தேதியில்

Wednesday, February 16, 2011

நாகை தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு வழங்க வேண்டும்.!!

source : dailythandhi.

நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா என்பது யூத, நசாராக்களின் கலாச்சாரம்

 ரபீயுல் அவ்வல் என்ற உடனேயே அது நபி (ஸல்) அவர்கள் பிறந்த மாதமல்லவா! என்ற நிறைவு வருகிறது. முஸ்லிம்களுக்கு மத்தியில் இவ்வளவு பிரபலமாகியிருக்கும் இம்மாதத்தில் நடைபெரும் செயல்கள் அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் வழிகாட்டியதின் அடிப்படையில் அமைய வேண்டுமல்லவா? எனவே இம்மாத்த்தில் நாம் செய்யும் செயல்களை அல்குர்ஆன் மற்றும் நபிமொழியின் ஒளியில் ஆராய்வோமே!

 மீலாது விழா ஆரம்பமானது எப்போது?

 நபி (ஸல்) அவர்களோ. நாற்பெரும் கலீஃபாக்களோ, மற்ற நபித்தோழர்களோ, அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களோ, அல்லது நபி (ஸல்) அவர்களால் போற்றப்பட்ட முந்தய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களோ மீலாதுவிழா கொண்டாடவில்லை. அப்படியானால் மீலாது விழா ஆரம்பமானது எப்போது? திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் ஒருவரான இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஹிஜ்ரீ 357 முதல் 567 வரை மிஸ்ரை ஆண்டு வந்த ஃபாத்திமியீன்களின் ஆட்சியில் அப்துல்லாஹ் பின் மைமூன் அல் கதாஹ் என்ற யூதனால் இஸ்லாத்தின் பெயரால் பல விழாக்கள் அரங்கேற்றப்பட்டன. அதில் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவும் ஒன்று.
(நூல் : பிதாயா வன் நிஹ்யா பாகம் 11 மக்கம் 172)

 ஆக இவ்விழா ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் யூதர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதை நாம் அறிந்து கொண்டோம்.

 மீலாதுவிழாவும் சஹாபாக்களும்

 நாற்பெரும் கலீஃபாக்களும் மற்ற நபித்தோழர்களும் அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களும் மார்க்கத்தை நன்கறிந்தவர்கள். நபி (ஸல்) அவர்களை மிக அதிகமாக நேசித்து மார்க்க அடிப்படையிலேயே தம் முழுவாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள முழுமையாக பாடுபட்டவர்கள் என்பதை நாம் அனைவரும் ஏற்றுள்ளோம், மீலாதுவிழாக் கொண்டாடுவது நன்மையான செயல் என்றோ, அது நபி (ஸல்) அவர்களுக்கு புகழ் சேர்க்குமென்றோ எண்ணியிருந்தால் அவர்கள் பலவிழாக்களை கொண்டாடியிருப்பார்கள். ஆனால் அவர்கள் நபி (ஸல்) அவர்கள் பிறந்த நாளுக்கென எந்த விழாவும் கொண்டாடவில்லை.

மீலாது விழாவும் கிரிஸ்மஸும்

ஈஸா (அலை) அவர்களுக்கு கிருத்துவர்கள் பிறந்தநான் விழாக் கொண்டாடுவது போன்று முஸ்லிம்களான நாம் நபி (ஸல்) அவர்களுக்கு விழாக் கொண்டாடுகிறோம். ஆனால் இந்த ஒப்பீடு சரிதானா?

பிறசமயக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் அந்த சமயத்தையே சார்ந்தவன் என நபி (ஸல்) அவர்கள்  கூறியுள்ளார்கள்.
(நூல் : அபூதாவூத்)

 கிருத்துவர்கள் பிறந்த நாளை விழாநாளாக கருதுவது போன்று நாமும் கருதினால் இவ்விஷயத்தில் நாம் கிருத்துவ மதத்தை சார்ந்துள்ளோம் என்றே இந்த நபிமொழி கூறுகிறது. எனவே நபிகளாரின் எச்சரிக்கைக்குப் பயந்து கலாச்சாரங்களை விட்டும் முற்றிலும் விலகி, முழுமையான இஸ்லாமியராக வாழ முயற்சிக்க வேண்டும்.

அரபுக் கவிதைகள்

பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பல விசேஷ வழிபாடுகள் நம் சமுதயாத்தில் அரங்கைற்றப்பட்டுள்ளன. அதில் இன்றியமையாததாகக் கருதப்படுவது மௌலிது என்ற பெயரால் பாடப்படும் அரபுக் கவிதைகள்தான். இக்கவிதைகளுக்கு நம் சமுதாயத்தில் மகத்தான மதிப்பிருக்கிறது. எனவே அவை பள்ளிவாயிலிலும் கூட கூட்டம் கூடி, புனித வழிபாடாகக் கருதிப்பாடப்படுகிறது. நபி (ஸல்) அவர்களைப் புகழ்ச்சியில் இயற்றப்பட்ட இப்படால்களின் பல வரிகள் புகழ்ச்சியில் வரம்புமீறி நபி (ஸல்) அவர்களுக்கு இறைத்தன்மைகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. நபி (ஸல்) அவர்களிடம் உதவிதேடுவது, அவர்களிடம் பாதுகாப்புத் தேடுவது, அவர்களுக்கு மறைவானஞானம் உண்டு என்று நம்புவது போன்ற ஷிர்க்கான –இறைவனுக்கு இணைவைக்கும்- கருத்துக்களை இப்பாடல்கள் தன்னுள் கொண்டுள்ளன.

எந்தக் கொள்கையை விட்டும் மக்களைத் தடுப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டார்களோ அதே கொள்கையைக் கொண்ட பாடல்களை அவர்களை புகழ்வதற்கே பாடப்படுகிறது! இது மிகப்பெரிய அநீதி இல்லையா? அதைவிடக் கொடுமை என்னவெனில் அல்லாஹ்வை மட்டுமே அழைக்கப்பட வேண்டிய பள்ளிவாயிலேயே அவனுக்கு இணைவைக்கும் இக்கவிதைகள் மிகவும் பக்திப்பரவசத்தோடு பாடப்படுவதுதான். அல்லாஹ்வின் தண்டனைக்கு பயப்படுவதுதான். அல்லாஹ்வின் தண்டனைக்கு படப்படக்கூடிய மக்களாக இருந்தால் தவ்பாச் செயது உடனே இச்செயலை விட்டும் விலகிவிட வேண்டும்.

பிறந்த நாள் விழாவாஇறந்த நாள் விழாவா?

இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவெனில் எந்த நாளில் நபி (ஸல்) அவர்கள் பிறந்தார்கள் என்று கூறிகின்றார்களோ அதே நாளில்தான் நபி (ஸல்) அவர்கள் இறந்தும் உள்ளார்கள். இவ்வாறிருக்க இவர்களின் விழாக்களும் வழிபாடுகளும் நபி (ஸல்) அவர்களின் பிறப்பிற்காகவா? அல்லது இறப்பிற்காகவா?

இது காரணம்தானா

மீலாது விழாவிற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் நபிகளாரை கண்ணியப்படுத்தும் விதமாக நாமாகக் கொண்டாட வேண்டும் என்று சிலர் காரணம் கூறுவர்.

வெளிப்படையாகப் பார்த்தால் இக்கருத்து நபி (ஸல்) அவர்களை போற்றுவது போன்று தோன்றினாலும் உண்மையில் இது நபி (ஸல்) அவர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தும் வார்த்தையாகும். இதனடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் சில நல்லறங்களை இச்சமுதாயத்திற்கு சொல்லவில்லை. நபித்தோழர்களும் இந்நல்லறங்களை செய்யவில்லை என்று அவர்கள் மீதும் குறை கூறவேண்டிவரும். –நவூது பில்லாஹ்- இந்நிலையை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

நல்லறங்கள் அனைத்தையும் தத்தமது சமுதாயத்திற்கு அறிவித்துவிடுமாறு அல்லாஹ் அனைத்து நபிமார்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்.                         
(ஹதீஸின் சுருக்கம் - முஸ்லிம்)

நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் நபிமார்களில் சிறந்தவரும் இறுதி நபியுமாவார்கள். அவர்கள் இச்சமுதாயத்திற்கு தேவையான எந்தச் சட்டத்தையும் உபதேசத்தையும் கூறாமல் விட்டுவிடவில்லை. மீலாது விழாக் கொண்டாடுவது மார்க்கதில் ஒரு அங்கமாக இருக்குமேயானால் நிச்சயம் அதனையும் சொல்லியிருப்பார்கள், செய்திருப்பர்கள். அதனை நபித்தோழர்களும் பின்பற்றியிருப்பார்கள்.

நபி (ஸல்அவர்களை நேசிப்பது எப்படி?

நபி (ஸல்) அவர்களை மதிப்பது என்பது, அவர்கள் கட்டளையிட்டவற்றை ஏற்று அதன்படி நடப்பதும், அவர்கள் தடுத்தவற்றிலிருந்தும் விலகி இருப்பதும் மற்றும் அவர்கள் மீது அன்பு செலுத்துவதும் ஆகும்.

ஆனால் ஒருவர் நபி (ஸல்) அவர்கள் ஏவிய கட்டளைகளைப் பின்பற்றாதது மட்டுமல்லாமல் அவர்கள் தடுத்தவற்றைச் செய்து கொண்டே நான் நபி (ஸல்) அவர்களை மதிக்கிறேன் என்று கூறுவது எந்த வகையில் அறிவீனமானது என்று நாம் சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

வருடத்தில் இது போன்ற ஓரிரு விழாக்களை கொண்டாடிவிட்டு, அதன் பிறகு நாம் நினைத்தது போன்று வாழ்ந்து கொள்வது நபி (ஸல்) அவர்களை நேசிப்பதாகாது. நம் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் அனைத்துச் செயல்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைத்துக் கொள்ள வேண்டும். அவர்களை முழுமையாக பின்பற்றவேண்டும். இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:

قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ

நீங்கள் அல்லாஹ்வை நேசிக்கக் கூடியவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்! அப்போது தான் அல்லாஹ் உங்களை நேசிப்பான் என்று நபியே நீர் கூறுவீராக!     
(அல்குர்ஆன் 3:31)

உங்களில் ஒவ்வொருவரும் சொர்க்கத்தில் நூழைந்து விடுவீர்கள் மறுப்பவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! மறுப்பவர் என்றால் யார்? என்று தோழர்கள் கேட்டனர். என்னைப் பின்பற்றுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவார் . எனக்கு மாறுசெயபவர் நிச்சயமாக என்னை மறுத்தவராவர்- அவர்க்க சொர்க்கத்தில் நூழையமாட்டார்- என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (நூல் : முஸ்லிம்) எனவே நபி (ஸல்) அவர்களைபின்பற்றி நடப்பதே அவர்களை மதிப்பதின் அடையாளமாகும்.

மார்க்கம் முழுமையாக்கப்பட்டுவிட்டது

 ۚ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ

 دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ۚ

இன்றய தினம் உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்காக நாம் முழுமையாக்கி விட்டேன். நம்முடைய அருட்கொடையை உங்கள் மீது பரிபூரணப்படுத்தி விட்டேன். உங்களுடைய மார்க்கமாக நான் இஸ்லாத்தைப் பொருந்திக் கொண்டேன்.
(அல் குர் ஆன் -5:3)

இந்த வசனம் ஹஜ்ஜத்துல் விதாவில் அரஃபா தினத்தன்று இறங்குகிறது. நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போதே மார்க்கம் முழுமை பெற்றவிட்டது எனும் போது. நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் கற்றுத்தராத ஒன்றை மார்க்கத்தில் இணைக்கவோ, அவர்கள் கட்டளையிட்டவற்றை மாற்றவோ யருக்கும் உரிமை கிடையாது. இதனடிப்படையில் மீலாது விழா என்பது நபி (ஸல்) அவர்கள் மரணித்து நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டது எனும்போது அதற்கு மார்க்க சாயம் பூசுவது இறைவனுடைய அதிகாரத்தில் நமது கரங்களை நூழைப்பதாகும். இதுபோன்று மார்க்க விஷயத்தில் விளையாடிய யூத, கிருத்துவர்களுக்கு கிடைத்த தண்டனைகளையும் கிடைக்கவிருக்கும் மறுமை வேதனைகளையும் திருக்குர்ஆனில் அல்லஹ் பல இடங்களில் கூறுகிறான். எனவே நாம் இதுபோன்று மார்க்கத்தில் புதிய  செயல்களை உருவாக்குவதை விட்டும் முற்றிலும் தூரமாகி விடவேண்டும்.

மார்க்கத்தில் நூதனச் செயல்

மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படுபவை அனைத்தும் பித்அத் –மார்க்கத்தின் தூதனச்- செயலாகும். அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் கற்று தராதவற்றை மார்க்கத்தின் அங்கமாக நினைத்து செயல்படுத்தப்பட்டால் நிச்சயமாக அது வழிகேடாகும். அது மறுமையில் நிராகரிக்கப்பட்டுவிடும். அதற்குரிய தண்டனையும் கிடைக்கும்.

 நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
 மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்படும் அனைதும் வழிகேடாகும்.                            
(நூல்: புகாரி)

யார் நம்முடைய இந்த –மார்க்க- விஷயத்தில் அதில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்றாரோ அது மறுக்கப்பட்டுவிடும்.                                            
(நூல்: முஸ்லிம்)

மஹ்ஷரில் கவ்ஸர் எனும் தடாகத்திலிருந்து நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பார்கள். அதில் நீர் அருந்துவதற்காக மார்க்கத்தில் நூதனச் செயல்களை உண்டாக்கியவர்களும் வருவார்கள். அவர்களை தண்ணிர் அருந்த விடாமல் மலக்குமார்கள் இழுத்துச் சென்று விடுவார்கள்.                                              
(ஹதீஸின் சுருக்கம் : புகாரி)

எனவே மீலாது விழாவும் மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டவையே! இதற்காக செலவிடப்படும் பணத்திற்கோ, உழைப்பிற்கோ அல்லாஹ்விடத்தில் எந்த நன்மையும் கிடைக்காது. மாறாக மஹ்ஷரில் நபி (ஸல்) அவர்கள் புகட்டும் தண்ணீரை அருந்தும் வாய்ப்பை இழந்து கொடியவெப்பத்தில் தாகத்தில் பரிதவிக்க நேரிடும். சகோதரர்களே! மீலாது விழா உட்பட மார்க்கத்திற்கு முரணான எந்தச் செயலுக்கும் பொருளாலோ, உழைப்பாலோ, ஆலோசனையாலோ வேறு எந்த விதத்திலும் உதவவேண்டாம் என அன்புடன் வேண்டுகிறோம்.

நாம் செய்யும் நல்லறங்களுக்கு அல்லாஹ்விடத்தில் நன்மைகள் கிடைக்க வேண்டுமானால் கீழ்கானும் நிபந்தனைகள் அவசியம் என்பதை அல்குர்ஆனும் நபிமொழிகளும் கூறுகின்றன.           அவை:

  • அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் கொள்கை மற்றும் செயல்களிலிருந்து முற்றிலும் விலகியிருக்க வேண்டும்.
  • அல்லாஹ்வுக்காகவே செயகின்றேன் என்ற இக்லாஸ்- மனத்தூய்மை இருக்கவேண்டும்.
  • நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் செயல்கள் அமைந்திருக்கவேண்டும்.
-------------------------------
சாய் பாபா ஆஸ்ரமத்தில் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா
ஜசகல்லாஹ் : Ashkar Fuard

Monday, February 14, 2011

துனிசியாவிற்கு திரும்புகின்றது ஹிஜாப்...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன் 

சகோதரி யுவான் ரிட்லி, பெயரை கேட்டாலே புத்துணர்ச்சி வருமளவு இன்றைய இஸ்லாமிய தலைமுறையினருக்கு பெரும் ஊக்கமாய் இருப்பவர்.

 
சமீபத்தில், துனிசிய புரட்சி குறித்து இவர் எழுதிய "துனிசியாவிற்கு திரும்புகின்றது ஹிஜாப்(1)" என்ற கட்டுரை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.     

"மக்கள் புரட்சிக்கு ஆதரவாக லண்டனில் உள்ள துனிசிய தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். அப்போது மிக அற்புதமான விஷயம் ஒன்று நடந்தது.

கண்களில் கண்ணீர் மல்க ஒரு பெண் எனக்கு பக்கத்தில் நின்றிருந்தார். தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் துனிசியா திரும்ப பாஸ்போர்ட் எடுக்க அன்று காலையிலிருந்து தூதரகத்தினுள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். அவரது முகம் எனக்கு ஏற்கனவே அறிமுகமான ஒன்றாக தெரிந்தது, ஆனால் எங்கு பார்த்தேனென்று நினைவுக்கு வரவில்லை.

சில வாரங்களுக்கு முன்பு வரை இவரை உள்ளே கூட அனுமதித்திருக்க மாட்டார்கள் தூதரக அதிகாரிகள். ஆனால் இன்றோ, தொலைந்து போன மகளை கண்டது போல சிகப்பு கம்பள மரியாதை கொடுக்கின்றனர். ஒரு அதிகாரி "தூதரை சந்திக்க விருப்பமா?" என்று கூட கேட்டிருக்கின்றார். 

நாங்கள் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்க, இவரை நான் ஏற்கனவே சந்திருக்கின்றேன் என்ற எண்ணமும் அதிகரித்து கொண்டிருந்தது. ஆனால் எங்கே?

முன்னாள் துனிசிய சர்வாதிகாரி ஜைனுல் ஆபிதீன் பென் அலி மற்றும் அவரது மனைவி லீலா குறித்து பேச்சு திரும்பியது. தன்னுடைய கணவருக்கு பிறகு அதிபர் பதவியை அடைய லீலா திட்டமிட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் மூலமாக ஏற்கனவே அறிந்திருந்தோம்.

இவர்களது தற்போதைய இருப்பிடம், இரண்டு புனித பள்ளிவாசல்களின் இருப்பிடமான சவூதி அரேபியா. இதனை எண்ணி நாங்கள் இருவரும் சிரித்தோம். ஐந்து வேலையும் பாங்கு(2) சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும் நாட்டில், அதனை தாங்கி கொண்டு பென் அலியும் லீலாவும் எப்படி இருக்கப்போகின்றார்கள்?

இவர்கள் இருவரும் தேசிய தொலைக்காட்சியில் பாங்கு சொல்லப்படுவதை தடை செய்தவர்கள், ரமலான் நோன்பை புறக்கணித்தவர்கள், அந்நிய நாட்டு கலாச்சாரம் என்று ஹிஜாபை தடை செய்தவர்கள். சுருக்கமாக சொல்லுவதென்றால், தாங்கள் விரும்பியது போல நடந்து கொண்டவர்கள். தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பத்வா(3) கொடுக்க தங்களுக்கு அடிபணிந்த அறிஞர்களையும் வைத்து கொண்டவர்கள்.

நாகரிகமற்ற தன்மைகளை தன்னிடத்தே கொண்டிருந்தவர் பென் அலி. சித்திரவதை, விசாரணை இல்லாமல் சிறையில் தள்ளுவது, அரசியல் மற்றும் மத ரீதியான அடக்குமுறை என இவை அனைத்தும் துனிசியாவில் சர்வ சாதாரணமாய் நடந்தவை. அதுமட்டுமல்லாமல், முஸ்லிம் பெண்களின் ஹிஜாப்கள் கிழித்தெறியப்பட்டதற்கும் காரணமாக இருந்தவர் பென் அலி. பள்ளிகள், மருத்துவமனைகள், பல்கலைகழகங்கள் என அனைத்து பொது இடங்களிலும் ஹிஜாப் அணிய தடை விதித்தவர் அவர்.

சிறைகளில் குரான் தடை செய்யப்பட்டிருந்தது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து வேறு நேரங்களில் தொழுதால் சிறைக்கைதிகள் துன்புறுத்தப்படுவார்கள்.

அவரையும், அவரது ஊழல் மிகுந்த அரசாங்கத்தையும் புகழ்த்து பேசும் இமாம்களை அவரது ஆட்சிமுறை கொண்டு வந்தது. இதன் மூலமாக அவர்கள் என்ன எதிர்ப்பார்த்தார்களோ அது நடந்தது. இறையச்சம் கொண்டோரை பள்ளிவாசல்களில் இருந்து அது தள்ளியிருக்கச் செய்தது.

வெள்ளிக்கிழமைகளில், முஸ்லிம் இளைஞர்கள் விரைவாக பள்ளிவாசலுக்கு செல்லாததில் ஆச்சர்யமொன்றுமில்லை. (ஏனென்றால்) குத்பாவின்(4) பாதி நேரத்தை, பென் அலி மற்றும் அவரது ஆதரவாளர்களின் புகழ் பாடி செலவழித்து கொண்டிருந்தவர்கள் அந்த இமாம்கள்.

முன்னாள் சிகை அலங்காரரான லீலாவை நினைத்து நானும் அந்த சகோதரியும் ஆச்சர்யப்பட்டோம். ஜித்தாவில் இருக்கும் தன்னுடைய புதிய வீட்டிலிருந்து ஒவ்வொருமுறை வெளியேறும் போதும் அவர் கருப்பு நிற அபாயா அணிய வேண்டுமே? இது குறித்த அவரது பார்வை எப்படியிருக்கும்? மார்க்க பற்றுள்ள சவூதி காவல்துறையினர் அவருக்கு உதவுவார்கள் என்று நிச்சயம் நம்புகின்றேன்.

துனிசியாவில் இருந்து அவர்கள் புறப்படும் பொழுது, அவர்கள் சென்றடைய விருப்பப்பட்ட இடங்களின் பட்டியலில் நிச்சயம் சவூதி இருந்திருக்காது.

"சாரி, லண்டன், பாரிஸ், நியூயார்க், மொனாகோ அல்லது ஜெனிவாவில் தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை, ஜித்தா எப்படி?" என்று அந்த கெட்ட செய்தியை விமானி அவர்களிடம் தெரிவித்த போது அவர்களது உணர்வுகள் எப்படி இருத்திருக்கும் என்பதை நான் பார்க்காமல் போய் விட்டேன்.

பென் அலியின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளும், மனித உரிமை மீறல்களுமே என்னை முதன் முதலாக, 2006ல், லண்டனில் உள்ள துனிசிய தூதரகத்தின் முன் நிற்க வைத்தது. இஸ்லாமை பின்பற்ற என்னுடைய சகோதரிகளுக்கு இருக்கக்கூடிய உரிமைகளுக்காக போராட வைத்தது.

அந்த மனிதரும், அவரது மனைவியும் தாங்கள் பிறந்த மார்க்கத்தையும், அதன் கோட்பாடுகளையும் மிகவும் அவமதித்தனர். துனிசியாவை செக்யூலர் நாடாக மாற்ற பெரிதும் முயன்றனர்.

எதற்காக இப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள்?, தங்களை திருப்திபடுத்தவா?, அல்லது தங்களுக்கு பாதுகாவலாய் விளங்கி வந்த, உற்ற நண்பர்கள் போல் நடித்து வந்த மேற்கத்திய சக்திகளை திருப்திபடுத்தவா?

பிப்ரவரி 2009ல், துனிசியாவில் நான் மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்கின்றேன். அப்போது நூற்றுக்கணக்கான பென் அலியின் ஆதரவாளர்கள் நாங்கள் தொழுவதையும், வெள்ளிக்கிழமை தொழுகைகளில் நாங்கள் கலந்து கொள்வதையும் தடுக்க தங்களால் முடிந்த வரை முயன்று பார்த்தார்கள்.

நாங்கள் எங்கள் வாகனங்களை நடுரோட்டிலேயே நிறுத்தி அந்த தெருவிலேயே தொழுதோம். அப்போது அவர்கள் முகத்தில் ஏற்பட்ட மிரட்சி இருக்கின்றதே, அதனை என்னால் என்றென்றும் மறக்க முடியாது. இந்த சம்பவத்தை நினைவுபடுத்தி அந்த சகோதரியிடம் கூறிக்கொண்டிருந்தேன். பென் அலி மற்றும் லீலாவின் தற்போதைய நிலையை எண்ணி மீண்டும் சிரித்தோம்.

என்னவொரு உணர்ச்சிகர நிலை, மேற்குலகின் நிலையில்லாத நண்பர்களால் கைவிடப்பட்ட பிறகு இவர்களது உதவிக்கு வந்தவர்கள் முஸ்லிம்கள் தான். மன்னிப்பதென்பது இஸ்லாத்தில் ஒரு முக்கிய பண்பு. ஆனால், அந்த பண்பை இவர்களை நோக்கி காட்ட நினைக்ககூடிய நிலையில் கூட தற்போது துனிசியர்கள் இல்லை.

தங்கள் மக்களிடம் இவர்கள் காட்டாத கருணையை இன்று சில முஸ்லிம்கள் இவர்களிடம் காட்டியிருக்கின்றார்கள். இதற்கு நன்றியுள்ளவர்களாக இவர்கள் இருக்க வேண்டும்.

தன்னால் கொடுமைப்படுத்தப்பட்ட ஹிஜாப் அணிந்த பெண்கள், இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றிய சகோதரர்கள், மனித உரிமை இயக்கத்தினர் என இவர்கள் அனைவர் குறித்தும் பென் அலி தனக்குள்ளாக பிரதிபளித்து கொள்ள வேண்டிய தருணம் இது.

தன்னுடைய மக்களுக்கு இவர் கொண்டு சென்ற திரித்த, நீர்த்து போன இஸ்லாத்தை போலல்லாமல், இனியாவது இவர் தூய இஸ்லாத்தை கண்டெடுப்பாரா என்றெண்ணி அதிசயக்கின்றேன்.

அந்த சகோதரியை நோக்கி திரும்பி, இனியாவது ஹிஜாபின் மகிமையை லீலா புரிந்து கொள்வாரா என்று இன்னும் அதிகமாக ஆச்சர்யப்படுகின்றேன்.

இதனை கூறிக்கொண்டிருக்கும் போதே, என்னருகில் இன்று கொண்டிருக்கும் இந்த பெண் யாரென்று நினைவுக்கு வந்தது. நாங்கள் 2006ல், துனிசிய தூதரகத்துக்கு வெளியே ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது சந்தித்திருக்கின்றோம்.

சிறைக்காவலில் வைக்கப்பட்டு, பென் அலியின் குண்டர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட செய்திகளை என்னிடத்தில் அப்போது விவரித்தார் இவர். குரலில் நடுக்கத்துடன் அன்று இவர் சொன்ன வார்த்தைகள் இன்றளவும் எனக்கு நினைவிருக்கின்றது.

"லண்டனுக்கு வந்த பிறகும் என்னுடைய ஹிஜாப் இன்னும் என் சட்டைப்பையில் இருக்கின்றது" 
இவருடைய கதையை கேட்டு அன்று நான் கண்கலங்கியது எனக்கு நன்கு நினைவிருக்கின்றது.

தற்போது இவர் துனிசியாவிற்கு திரும்ப திட்டமிட்டுள்ளார், ஆனால் இந்த முறை நிமிர்ந்த தலையோடும், ஹிஜாப் அணிந்த பெருமிதத்தோடும்..."


அல்ஹம்துலில்லாஹ்....

யுவான் ரிட்லி போன்ற சகோதரிகளை நம் உம்மத்துக்கு(5) இறைவன் தொடர்ந்து தந்தருள்வானாக...ஆமீன்.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக..ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 

வார்த்தைகளுக்கான விளக்கங்கள்: 
1. ஹிஜாப் - பல்வேறு அர்த்தங்களை கொண்டது. இங்கே, முகம் மற்றும் கை மணிகட்டுகளை தவிர்த்து உடல் முழுவதும் மறைக்கும் விதமாக உடையணியும் முறையை குறிக்கின்றது.
2. பாங்கு - தொழுகைக்காக பள்ளிவாசல்களிலிருந்து எழுப்பப்படும் அழைப்பு.
3. பத்வா - ஆழ்ந்த மார்க்க அறிவோடு கூறப்படும் கருத்து/அபிப்பிராயம்.
4. குத்பா - பிரசங்கம்/சொற்பொழிவு.  
5. உம்மத் - நம்பிக்கையாளர்களின் சமூகம் (Community of Believers).

Sister Yvonne Ridley's official website:
i. http://yvonneridley.org

References:
i. Hijab Makes a Return in Tunisia - Yvonne Ridley, 25th January 2011.
link.
ii. துனிசியா : மல்லிகை புரட்சியின் மறுபக்கம் - சகோதரர் முஹம்மது ஆஷிக். link.

ஜசகல்லாஹ் : ஆஷிக் அஹ்மத் அ

Friday, February 11, 2011

சிந்தனைக்கு சில சிந்திக்கவைக்கும் அறியுரைகள்...

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு.... 

உங்கள் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
 
 
"க‌ச‌ப்பாக‌ இருப்பினும்,பிறர் அதிருப்தியிற்றாலும் உண்மையே பேசுங்க‌ள்"

ஆனாலும்.....


மனிதர்கள் பெரும்பாலும்
சுயநலவாதிகளாக இருப்பர், நியாயமின்றி நடப்பர்
ஆனாலும் அவர்களை மன்னியுங்கள்

நீங்கள் வெற்றியடையும்போது, சில பொய்யான நண்பர்களையும்
உண்மையான எதிரிகளையும் சம்பாதிப்பீர்கள்
ஆனாலும் வெற்றிக்காகப் போராடுங்கள்

நீங்கள் நேர்மையாகவும்
வெளிப்படையாகவும் இருந்தால்,
மனிதர்கள் உங்களை ஏமாற்றலாம்
ஆனாலும் நேர்மையாகவும்
வெளிப்படையாகவும் இருங்கள்

நீங்கள் பல வருடங்கள்
சிரமப்பட்டுக் கட்டியதை,
ஒருவர் ஒரே நொடியில் அழித்து விடலாம்
ஆனாலும் முயற்சியைக் கைவிடாதீர்கள்

நீங்கள் மகிழ்ச்சியுடனும்
நிம்மதியுடனும் இருந்தால்,
மனிதர்கள் உங்கள்மீது பொறாமை கொள்ளலாம்
ஆனாலும் மகிழ்ச்சியாய் இருங்கள்

நீங்கள் பிறர் முன்னேற ஏணியாய்
இருங்கள்,
ஏறியபின் அவர்கள் உங்களை எட்டி உதைக்கலாம்
ஆனாலும் பிறருக்கு ஏணியாய் இருந்து உதவுங்கள்

நீங்கள் ஒருவருக்குக் கடன்
கொடுத்து உதவும்போது,
அதை அவர் திரும்பக் கொடுக்காமலே போகலாம்
ஆனாலும் சிரமத்திலிருப்பவர்களுக்கு
கடன் கொடுத்து உதவுங்கள்

நீங்கள் இன்று செய்த உதவியை,
மனிதர்கள் நாளை மறந்துவிடலாம்
ஆனாலும் மற்றவர்களுக்கு உதவி
செய்யுங்கள்

உங்களிடம் இருப்பதில் சிறந்ததை
மற்றவர்களுக்கு அளியுங்கள்,
அது எப்போதும் போதாமலே போகலாம்
ஆனாலும் மற்றவர்களுக்கு சிறந்ததையே அளியுங்கள்

கடைசியில் பாருங்கள்,
எல்லாமே உங்களுக்கும் இறைவனுக்கும் இடையில்தான்
உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அல்ல..!

நன்மைக்கு
நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?
(புனித குர்ஆன் 55:60)

அணு முதல் அண்டசாராசரம் வரை அனைத்தும் வல்ல நாயன் அல்லாஹ்வைத் துதிக்கின்றன. பிரபஞ்சம் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றன. எனவே அவற்றிடத்தில் எந்தக் குலப்பத்தையும் காண முடியாது. ஆனால் மனிதன் இறைவனுக்கு மாறுசெய்பவனாகவே உள்ளான். எனவேதான் அவன் வாழும் இடமெல்லாம் குழப்பம் விளைகின்றது. இயற்கை மனிதனை இஸ்லாத்தின் பால் அழைக்கின்றது. இஸ்லாம் அவனை இறைவனிடத்தில் கொண்டு செல்கின்றது.


ஜசகல்லாஹ் : A.ABDUL RASHEED SAIT (ABU DHABI)

Tuesday, February 8, 2011

துறைமுகத்தினால் ஏற்படும் பாதிப்பிற்கு தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி - போராட்டம் வாபஸ்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு.... 

உங்கள் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
 
சமீபகாலமாக வாஞ்சூரில் உள்ள துறைமுகதினால் ஏற்பட்டுவந்த சுற்றுசூழல் மாசு காரணமாக அமைப்புகள்,ஊர் முக்கியஸ்தர்கள் மூலமாக அறிவிக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் ,உண்ணாவிரத அறிவிப்பின் விளைவாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் உடனடி தக்க நடவடிக்கை எடுப்பதாக அரசுத்தரப்பு தெவித்துள்ளதை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் நம் ஊருக்கு பயன்தர கூடிய விஷயத்தில் முனைப்புடன் செயல்பட்ட அணைத்து நல் உள்ளங்கள் மீதும் 
 ஏக இறைவனின் சாந்தியும் ,சமாதானமும் என்றேண்டும் உண்டாவதாக ! 

இதுபோன்று எப்போதும்  பொதுவிஷயங்களில் அனைவரும் ஓற்றுமைகாத்து ஓர் அணியில் செயல்படவேண்டும் என்பதே ஊர் மக்களின் வேண்டுகோள்.
ஜசகல்லாஹ்.    






ஜசகல்லாஹ் :nagoretntj.

திருபட்டினம் பாலம் சீரமைப்பு முடிந்தது-பாலத்தில் டூ வீலர்களுக்கு அனுமதி

மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நமது பகுதியில் நாளை தொடக்கம்.

இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு சிறுபன்மையரான நமக்கு முக்கியமான ஒன்று ஆதலால் ஊர் மக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் மதங்கள் என்ற அட்டவணையின் கீழ் இஸ்லாம் என்று குறிப்பிடப்படாமல் முஸ்லிம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இது மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் செய்த தவறாகும். இது குறித்து முஸ்லிம் சமுதாய அமைப்புகள் புகார் தெரிவித்தும் இது சரி செய்யப்படவில்லை. தற்போது நீதிமன்றம் சென்று முறையிடுவதற்கும் கால அவகாசம் இல்லை. எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இஸ்லாம் என்று குறிப்பிட்டால் அது முஸ்லிம் என்ற கணக்கில் சேர்க்கப்படாமல் இதர மதத்தினர் பட்டியலில் சேர்க்கும் அபாயம் உள்ளது. எனவே கவனமாக மதம் என்ற கேள்விக்கு முஸ்லிம் என்ற பதிலை மட்டும் அளிக்குமாறு முஸ்லிம் சமுதாயத்தினரை கேட்டுக் கொள்கிறேம்


Sunday, February 6, 2011

பழனிபாபா: விதையாய் விழுந்தவர்...! - ஆளூர் ஷாநவாஸ்

1988 ஆம் ஆண்டு...
அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா பெல்லோஷிப் பல்கலைக்கழகத்தின் டெல்டா அரங்கு நிரம்பி வழிந்தது.

கறுப்பர், வெள்ளையர், ஆண்கள், பெண்கள், மாணவ-மாணவியர் என ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த பெருங்கூட்டத்திற்கு நடுவே
கம்பீரமாக எழுந்து நின்று உரையாற்றினார், அந்த இளம் தமிழர்.

சுமார் 13 மணி நேரம் அவர் ஆற்றிய தொடர் சொற்பொழிவில் அமெரிக்கர்கள் சொக்கிப்போனார்கள்.

ஆங்கில இலக்கியங்களைப் பற்றிய அவரது ஆழமான அறிவும்; பைபிளைப் பற்றிய அவரது தெளிவான புரிதலும்; திருக்குர்ஆன் ஒளியில் அமைந்த அவரது பேச்சின் சாரமும் கண்டு அனைவரும் வியந்தனர்.

தனது அறிவாலும், மேடை ஆளுமையாலும் அமெரிக்க மக்களின் அபிமானத்தைப் பெற்ற அவர், 'தவறுகளைக் கண்டு திமிறி எழும்' தனது இயல்பு குணத்தை அங்கேயும் வெளிப்படுத்தினார்.

அமெரிக்கர்களிடையே நிலவும் ஒழுக்கச்சீர்கேட்டையும்,கலாச்சார சீரழிவுகளையும் சுட்டிக்காட்டிய அவர், ஒழுக்கவியல் நிறைந்த வாழ்க்கைத் தத்துவத்தை எடுத்துரைத்தார். எளிதில் உணர்ச்சிவயப் படக்கூடியவராகவும், முன் கோபக்காரராகவும் இருந்த அவர், தனக்கேயுரிய வேகத்தில் அமெரிக்கர்களைச் சாடியபோதும், அம்மக்கள் அவர் மீது வெறுப்படையாமல், அவரது கருத்தில் இருக்கும் உண்மைகளையும், நியாயத்தையும் உணர்ந்து தங்களைச் சுயபரிசோதனை செய்துகொண்டனர்.

பல்கலைக்கழக நிகழ்ச்சியோடு அவரைத் திருப்பி அனுப்பாமல், பிலடெல்பியா மாகாணம் முழுவதும் அடுத்தடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தனர். எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று எழுச்சியுரையாற்றினார்,அந்தத் தமிழர்.

அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அமெரிக்கர்கள் பலர் குடிப்பதை மறந்தார்கள்;தீய பழக்கங்களை விட்டு விலகினார்கள்; ஒழுக்கவியலை நோக்கி நகர்ந்தார்கள்; இறுதியில் இஸ்லாத்தை தங்களின் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்கள். தமது ஒரு சுற்றுப்பயணத்திலேயே இப்படியொரு அழுத்தமான தாக்கத்தையும், ஆக்கப்பூர்வமான மாற்றத்தையும் ஏற்படுத்திக்காட்டிய அந்த இளம் தமிழர் வேறு யாருமல்ல; அவர்தான் புரட்சியாளர் பழனிபாபா.

1997, ஜனவரி 28 ஆம் நாள் பழனிபாபா படுகொலை செய்யப்பட்டார்.
'நான் வாழ வந்தவனல்ல; மாள வந்தவன்' என்று செல்லுமிடமெல்லாம் முழங்கிய அவர் சொன்னது போலவே மாண்டுபோனார்.

அவர் மறைந்து இன்றோடு 14 ஆண்டுகள் கடந்து விட்டன. அவரது பெயரை உச்சரிக்கவோ; அவரது பங்களிப்புகளை நினைவு கூரவோ; அவரது தியாகங்களைப் போற்றவோ இன்றைய இயக்கங்களுக்கு விருப்பம் இல்லை.

இரத்த தான விழாக்களில் மூழ்கிப் போயிருக்கும் இயக்கங்கள், 'முஸ்லிம்களின் இரத்தம் குடித்த இந்துத்துவ மதவெறிக்கு எதிராக காலமெல்லாம் களமாடிய அந்தப் போராளித் தலைவருக்கு' ஒரு நினைவேந்தல் கூட்டத்தைக் கூட எடுக்கவில்லை.

பழனிபாபா என்றால் கலவரத்தை விதைத்தவர்; இளைஞர்களை வழி கெடுத்தவர்; தவறான முன்னுதாரனங்களுக்கு உரியவர் என்றெல்லாம் அவர் குறித்து மோசமான சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. அவரது பன்முக ஆற்றலை மறைத்து, அவரை வன்முறையாளராகக் காட்டும் புனைவுகள் செய்யப்பட்டுள்ளன. அத்தகையச் சித்தரிப்புகளை உடைக்கவோ, புனைவுகளை முறியடிக்கவோ இங்கே எந்த இயக்கமும் தயாராக இல்லை.

பாபாவின் பாசறையில் வளர்ந்த 'மக்கள் ஜனநாயகக் கட்சி'யினர் மட்டும் தங்களின் வலிமைக்கேற்றவாறு ஆண்டுதோறும் புதுஆயக்குடியில் அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். ஆனால், பாபாவின் பேச்சையும், எழுத்தையும்,சிந்தனையையுமே இன்றைய தமது செயல் திட்டமாகக் கொண்டு இயங்கும் பெரிய அமைப்புகள் அனைத்தும், அவரை நினைவு கூராமல் தவிர்த்து வருகின்றன.

இன்றைய இயக்கங்களின் பேச்சும், செயல்பாடும், இலக்கும் இன்றைய இயக்கங்களை வழிநடத்தும் தலைவர்களின் சிந்தனையில் உதித்தவை அல்ல.

இன்றைய தலைவர்கள் எதையெல்லாம் பேசுகின்றார்களோ; எந்த செயல் திட்டத்தின் அடிப்படையில் இயங்குகின்றார்களோ; எந்த இலக்கை நோக்கிப் பயனிக்கின்றார்களோ அவற்றையெல்லாம் 25 ஆண்டுகளுக்கு முன்பே பேசியவர்; இயங்கியவர்; பயணித்தவர், பழனிபாபா.

முஸ்லிம்கள் என்றாலே அவர்கள் தங்களின் பிரச்சனைகளுக்காக மட்டுமே போராடுபவர்கள் என்ற கருத்து நிலவிய காலத்தில்,
1980 களிலேயே வெகுமக்களுக்காகக் குரல்கொடுக்கும் மனித உரிமைப் போராளியாக விளங்கினார், பாபா. பேராசிரியர். கல்யாணி போன்ற மனித உரிமை ஆர்வலர்களுடனும், PUCL போன்ற மனித உரிமை அமைப்புகளுடனும் இணைந்து, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார்.

நுண்ணிய தளங்களில் இந்துத்துவத்திற்கு எதிராக அழுத்தமானப் பதிவுகளைச் செய்து வரும் பேராசிரியர்.அ.மார்க்ஸை இன்றைய தமிழ் முஸ்லிம் சமூகம் நன்றி உணர்வோடு பார்க்கிறது. ஆனால் தமிழக முஸ்லிம்களுக்கு பேராசிரியர் அ.மார்க்ஸ் என்றால் யாரென்றே தெரியாத ஒரு காலத்தில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே அவரைச் சரியாக இனம் கண்டு அடையாளப்படுத்தியவர், பாபா. 'இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்' எனும் தலைப்பில் அ.மார்க்ஸ் எழுதிய நூலை வெளியிடுவதற்கு பெரும் துணை புரிந்தார், பாபா.

முஸ்லிம்களோடு உறவாடும் பிற சமய-சார்பற்ற தோழமை சக்திகள் பலர் இருந்தாலும், ஆபத்தான வேளைகளில் முஸ்லிம்களின் குரலாக ஒலிக்கும் அ.மார்க்ஸ் போன்றவர்கள் அதில் தனிச்சிறப்பு உடையவர்கள் என்பதை பாபா மிகச்சரியாகவே கணித்துள்ளார். பாபாவின் கணிப்பு எவ்வளவு தொலைநோக்குடையது என்பதை, அ.மார்க்ஸின் இடையறாத களப்பணிகளில் இருந்து நாம் உணர்கின்றோம்.

ஜெயலலிதா ஆட்சியில், காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட போது, நீதிமன்றம் நடந்து கொண்ட முறை மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. சங்கராச்சாரியாருக்கு ஆதரவான நீதிபதிகளின் ஒருபக்கச் சார்பு கடும்கண்டனத்திற்குள்ளானது. சில ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற இந்த நிகழ்வை, பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே கணித்து முன்னறிவித்தவர் பாபா.

சங்கராச்சாரியாரைக் கொலை செய்ய சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, பாபா ஒரு முறை சிறையிலடைக்கப் பட்டார். கைதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரும் படி பாபாவிடம் பலரும் வலியுறுத்தினர். அப்போது பாபா, 'உயர்நீதிமன்ற நீதிபதி சங்கராச்சாரியாரைச் சந்தித்து ஆசி வாங்கியிருக்கிறார். அப்படிப்பட்டவர் எப்படி எனக்கு நீதி வழங்குவார்' என்று கேள்வி எழுப்பினார். அந்த வகையிலும் பாபாவின் கணிப்பு உண்மையாகிவிட்டதை நாம் நடைமுறையில் கண்டு வருகின்றோம்.
அரசியல் - சமூகப் பணிகளோடு இஸ்லாமிய மார்க்கக் கொள்கைகளிலும் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தார், பாபா. பல இஸ்லாமிய கொள்கை விளக்கக் கூட்டங்களில் பங்கேற்று சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். சுன்னத்வல் ஜமாஅத் கொள்கைத் தளத்தில் நின்று தமது இஸ்லாமியக் கருத்துக்களை எடுத்துரைத்தார். அதே சமயம் முஸ்லிம்களிடையே நிலவும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் தீவிரமாக முழங்கினார்.

அவரும் வட்டி, வரதட்சணை, அனாசாரம் போன்ற சமூகக் கொடுமைகளை கடுமையாகச் சாடினார். எனினும், அவர் ஒருபோதும் மார்க்கத்தையும், அரசியலையும் போட்டுக் குழப்பிக் கொண்டதில்லை; முஸ்லிம் ஜமாத்துகளைக் கூறு போட்டதில்லை; ஒரே தெருவில் போட்டியாக இன்னொரு பள்ளிவாசலை உருவாக்கி சமூகத்தில் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்தியதில்லை. அவர் தன் வாழ்நாள் முழுவதும் ஜமாத்துகளின் ஒருங்கிணைப்பையும், முஸ்லிம்களின் ஒற்றுமையையுமே வலியுறுத்தினார்.

பாபாவின் இதழியல் மற்றும் எழுத்துப் பணிகளும் அவரது தொலைநோக்குக்கு சான்றாக விளங்குகின்றன. கிறிஸ்தவம் தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்ட பாபா, 'பைபிள் ஒரு ஆய்வு' என்னும் நூலை வெளியிட்டார். கிறிஸ்தவ பாதிரியார்களுடன் விவாதங்களிலும் ஈடுபட்டார். அது கிறிஸ்தவத்திலும், பைபிளிலும் அவருக்கு இருந்த ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்தியது. 'ராமகோபாலைய்யருக்கு மறுப்பு' எனும் தலைப்பில் பாபா எழுதிய நூல் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாபர் மஸ்ஜித் தொடர்பாக ஆங்கிலத்தில் ஒரு நூலை எழுதினார், பாபா.

'புனிதப் போராளி', 'அல்-முஜாஹித்', 'முக்குல முரசு' போன்ற பத்திரிகைகளை நடத்திய பாபா, அவற்றில் அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதினார். நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளையும், அரச அடக்குமுறைகளையும் 'புனிதப் போராளி' மூலம் அம்பலப்படுத்தினார்.
இவ்வாறு, மனித உரிமை அமைப்புகளுடன் தொடர்பு; பேராசிரியர்.அ.மார்க்ஸ் போன்றவர்களுடன் நட்பு; மூட நம்பிக்கை எதிர்ப்பு; சமூகத் தீமைகள் ஒழிப்பு; நூல்கள் மற்றும் இதழ்கள் மூலம் முஸ்லிம்களின் உரிமைகளைப் பேசும் ஊடகப் பங்களிப்பு ; பிற சமய அறிஞர்களுடனான உரையாடல் மூலம் இஸ்லாமிய அழைப்புப் பணி என எந்த செயல் திட்டங்களின் அடிப்படையில் பாபா இயங்கினாரோ, அவை அனைத்தையும் ஒன்று விடாமல் காப்பியடித்து, இன்றைய முஸ்லிம் இயக்கங்கள் இயங்கி வருவதையும், செயல் திட்டங்களைக் கற்றுத்தந்த பாபாவை மட்டும் மறந்து விட்டதையும் இன்று காண்கின்றோம்.

பாபாவின் சமூகப் பங்களிப்புகளை நினைவுகூரும் கடமையிலிருந்து இயக்கங்கள் தவறி விட்டாலும், இளைஞர்கள் தவறமாட்டோம் என்பதை எடுத்துரைக்கவே பாபாவை மறுவாசிப்பு செய்கின்றோம். ஏனெனில், பாபா இளைஞர்களைத்தான் அதிகம் நம்பினார். இளைஞர்களையே மிகவும் விரும்பினார். 'வரலாறு என்னை விடுதலை செய்யும், வரும்காலம் என் சார்பில் வஞ்சமெடுக்கும்' என்று மேடைகள் தோறும் முழங்கினார். நமக்காக முழங்கியவரை, நமது விடியலுக்காக ஏங்கியவரை நினைவு கூராமல் விட்டால் அது நன்றி கொன்றதாக ஆகிவிடும். ஆகவே, பாபாவை அறிந்து கொள்வோம். அடுத்த தலைமுறைக்கும் அவரை எடுத்துச் செல்வோம்.

1950 நவம்பர் 14 ஆம் நாள், என்.வி.முஹம்மது அலி - கதீஜா பீவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் பழனிபாபா. அஹமது அலி என்பது இயற்பெயர். ஆனால், 'பழனிபாபா' என்ற அடைமொழியே பின்னாளில் அவரது பெயராக மாறிப்போனது. பழனியிலிருந்து 4 கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் அமைந்துள்ள புதுஆயக்குடி என்னும் கிராமம் தான் பாபாவின் தாய் வழிப் பூர்வீகமாகும். பாபாவின் தந்தை நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சார்ந்தவர். ஊட்டியில் உள்ள ஆங்கிலப்பள்ளி ஒன்றில் கல்வி பயின்று வந்த பாபாவும், அவரது சகோதர சகோதரிகளும், பெற்றோரின் மறைவுக்குப் பின் புது ஆயக்குடியில் உள்ள தாய்மாமா அப்துல் ரஹ்மான் அவர்களின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர்.

பழனி ஆண்டவர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பாபா, கல்லூரி நாட்களிலேயே பொது வாழ்வில் ஈடுபடத் தொடங்கினார். புது ஆயக்குடியில் நைனா முகம்மது என்பவர் தலைமையில் நடைபெற்ற முஸ்லிம்லீக் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியதுதான் பாபாவின் முதல் மேடை அனுபவமாகும்.

கிறிஸ்தவப் பள்ளிக் கூடத்தில் ஆங்கில வழிக்கல்வி பயின்றதனால் ஆங்கிலப் புலமை மிகுந்தவராகப் பரிணமித்தார் பாபா. எதையும் எளிதில் உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றலுடையவராகவும்; நுனிப்புல் மேயாமல் ஆழ்ந்து பார்க்கும் அறிவுடையவராகவும்; துணிவையும், மனோ தைரியத்தையும் இயல்பாகக் கொண்ட தன்னம்பிக்கை மனிதராகவும் சிறந்து விளங்கிய அவர், அத்தகைய பிறவி குணத்தால் மிக வேகமான வளர்ச்சியை அடைந்தார்.

இந்துத்துவ எதிர்ப்பு; சிறுபான்மையினர் பாதுகாப்பு; உழைக்கும் வர்க்கச் சார்பு; முஸ்லிம் சமுதாய விழிப்புணர்வு; ஒடுக்கப்பட்டோர் அரசியல் விடுதலை; இஸ்லாமிய கருத்தியல் குறித்த பரப்புரை என தனது கொள்கைகளை வரையறுத்துக் கொண்ட அவர், அக்கொள்கைகளின் அடிப்படையில் மிகத் தீவிரமாக களமாடினார். தமிழகத்தில் அவர் பயணிக்காத கிராமங்களே இல்லை. தமிழகத்தின் எல்லைகளைத் தாண்டி இந்தியா முழுவதும் வலம் வந்தார். இந்தியாவைக் கடந்து அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என நாடு நாடாகச் சுற்றினார். அவ்வாறு அவர் சென்ற இடமெல்லாம் அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

பாபாவின் தனித் திறமைகளினாலும், நாவண்மையினாலும் ஈர்க்கப்பட்ட அரசியல் தலைவர்களும், சமூக சிந்தனையாளர்களும் அவருக்கு நெருக்கமானார்கள். இந்திராகாந்தி முதல் எம்ஜிஆர் வரை எல்லா அரசியல்வாதிகளுடனும் பாபாவுக்குத் தொடர்பு இருந்தது. டாக்டர் ராமதாஸ் முதல் டாக்டர் சேப்பன் வரை எல்லா சமூகத் தலைவர்களுடனும் அவருக்கு உறவு இருந்தது. அ.மார்க்ஸ் முதல் அனீஸ் பாத்திமா [நர்கிஸ்] வரை எல்லா சிந்தனையாளர்களுடனும் அவருக்கு நட்பு இருந்தது.

பாபா, ஒரு பன்முக ஆளுமை. அநீதியைக் கண்டு ஆர்த்தெழும் இயல்பைக் கொண்டவர்.தவறுகள் எங்கே நடந்தாலும் தன் சட்ட ஞானத்தால் தட்டிக்கேட்டவர். இந்திய குடியரசுத் தலைவராக இருந்த பிராமணரான ஆர்.வெங்கட்ராமன் தனது பதவிக் காலத்தில் அரசுப் பணத்தில் திருப்பதி கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்தார். தமது தனிப்பட்ட மத நம்பிக்கைகளுக்காக மக்கள் பணத்தை விரயமாக்கிய ஆர்.வியின் செயலை கடுமையாகக் கண்டித்த பழனிபாபா, 'வெங்கட்ராமன் திருப்பதிக்கு அடிக்கடி சென்று வந்த மொத்த செலவினத்தையும் அரசுக்குத் திருப்பி செலுத்த வேண்டும்' என்று கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இப்படி அதிகாரத்தை நோக்கிய உண்மையின் குரலாக ஒலித்த பாபாவை நாடே திரும்பிப் பார்த்தது.

1980 களில் நிகழ்ந்த மீனாட்சிபுரம் மதமாற்றத்தை தொடர்ந்து குமரிமாவட்டம் மண்டைக்காட்டில் நடைபெற்ற கலவரம் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் வரவை அறிவிப்புச் செய்தது. 'இந்து முன்னணி' என்ற மாற்றுப் பெயரில் களமிறங்கிய இந்துத்துவ சக்திகள், அமைதிப்பூங்காவான தமிழகத்தை அமளிக்காடாக்கினர். விநாயகர் ஊர்வலத்தை அறிமுகப்படுத்தி முஸ்லிம்களை வம்புக்கு இழுத்தனர். 'காமவெறியில் விஞ்சி நிற்பவள் கதீஜாவா? அன்னை மேரியா? மணியம்மையா?' என்ற தலைப்பில் பட்டிமன்றங்களை நடத்தினர். முஸ்லிம்களின் உயிருக்கு உயிரான நபிகளாரைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்து வெறிக்கூச்சலிட்டனர்.

ஆர்.எஸ்.எஸ் கும்பலின் இத்தகைய அராஜகச் செயல்களால் தமிழகம் முழுவதும் பற்றி எரிந்தது. கோவை, விழுப்புரம், ஆம்பூர், தேவிப்பட்டினம், ஆத்தூர், சேலம், வாணியம்பாடி, தேங்காப்பட்டினம், திண்டுக்கல், குளச்சல், காயல்பட்டினம், கடையநல்லூர், திருவல்லிக்கேணி, மேட்டுப்பாளையம், பழனி, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, அத்திக்கடை, மேலப்பாளையம், நாகூர் என்று... எங்கு பார்த்தாலும் கலவரம். இந்துத்துவ வெறியர்களின் கோரத் தாக்குதலுக்கு இலக்காகிய முஸ்லிம்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். அத்தகைய இருண்ட சூழலில் ஒளிக்கீற்றாய் உதித்தவர்தான் பழனிபாபா.

ஆர்.எஸ்.எஸ்ஸின் அராஜகங்களைக் கண்டு அஞ்சி நடுங்கிய சமூகத்திற்கு தைரியமூட்டினார், அவர்.
பேசவே பயந்து வாய் பொத்தி ஊமையாய்க் கிடந்த சமூகத்திற்கு கேள்வி கேட்க கற்றுத் தந்தார். இந்து முன்னணியின் மதவெறிக் கூட்டங்களுக்கு எதிர் கூட்டம் போட்டு தமது அபாரமான பேச்சுத் திறனால் தக்க பதிலடி கொடுத்தார். அவர் கலவரத்தை விதைத்தவர் இல்லை; கலவரத்தை விதைத்தவர்களுக்கு எதிரான கருத்தை விதைத்தவர்.

இந்துத்துவ மதவெறிக்கு எதிராக களமாடிய அதே வேளையில், முஸ்லிம்களை ஒடுக்கிய அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் வீச்சோடு இயங்கினார், பாபா. முஸ்லிம்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் நடவடிக்கைகளை துணிந்து அம்பலப்படுத்தி வந்த அவர், இடையறாத சட்டப் போராட்டத்தின் மூலம் ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் மிரள வைத்தார். அச்சத்தின் பிடியிலிருந்த முஸ்லிம்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார்.

பாபா மீது நான்கு முறை தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டது. 80 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நூற்றுக்கு மேற்பட்ட முறை சிறை சென்று வந்த அவர், எல்லா ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறிந்தார். தடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகும், இந்தியாவிலேயே கைது செய்யப்பட முடியாத ஒரே மனிதராகவும் அவர் இருந்தார்.

இந்துத்துவ கும்பலின் பயங்கரவாத நடவடிக்கைகளை ஜனநாயகத் தளத்தில் நின்று எதிர்கொள்ளும் வகையில், பாபா உருவாக்கிய மக்கள் திரளைக் கண்டு புறமுதுகிட்டு ஓடினார்கள் இந்து முன்னணியினர். பாபாவின் படையை நேருக்கு நேராகச் சந்திக்கும் துணிவற்ற அவர்கள், அதிகாரத்தின் துணையை நாடினார்கள். பாபாவின் பின்னால் அணிவகுத்த இளைஞர்கள் மீது அடக்குமுறைச் சட்டம் பாய்ந்தது. பாபாவின் ஆதரவாளர்கள் குறிவைக்கப்பட்டனர்; கண்காணிக்கப்பட்டனர்; கைது செய்யப்பட்டனர். சிறையிலடைக்கப்பட்ட அனைவருக்கும் சட்ட ரீதியான உதவிகளைச் செய்தார், பாபா. சிறையிலிருந்த முஸ்லிம் இளைஞர்களின் குடும்பங்களைப் பற்றிய விபரங்களைச் சேகரித்து அந்த குடும்பங்களின் செலவினங்களுக்கு மாதந்தோறும் மணியார்டர் செய்து வந்தார். பாபாவின் இத்தகைய குணச்சிறப்பின் காரணமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவர் மீது அபிமானம் கொண்டனர். பாபாவின் படை மேலும் வலிமை பெற்றது.

இந்துத்துவத்தை தனியொரு சமூகமாக நின்று எதிர்க்க முடியாது என்ற நடைமுறை உண்மையைப் புரிந்து கொண்ட பாபா தொடர்ச்சியாக பல வியூகங்களை வகுத்தார். இந்துத்துவத்தால் பாதிக்கப்படும் ஏனைய சமூகங்களையும் இணைத்துக் கொண்டு போராட்டத்தை முன்னெடுத்தார். பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மண்டல் கமிஷனை ஒழித்தது இந்துத்துவம். ஆகவே, இந்துத்துவத்தை எதிர்க்க பிற்படுத்தப்பட்டவர்களே வாருங்கள் என 'டச்சிங்காக' அழைப்பு விடுத்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் ஊருக்கு வெளியே சேரியில் ஒதுக்கி வைத்து வதை செய்கின்றது இந்துத்துவம். ஆகவே, இந்துத்துவத்தை வேரறுக்க தலித் மக்களே அணிதிரள்வீர் என உணர்வுப் பூர்வமாக அறைகூவல் விடுத்தார்.

அத்தகைய அறைகூவலுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்களுடனும், தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்களுடனும் உறவை வளர்த்துக் கொண்டார். வன்னியர் சமூகத் தலைவரான டாக்டர் ராமதாசுடனும், தலித் சமூகத் தலைவரான டாக்டர் சேப்பனுடனும் இணைந்து களம் கண்டார்.

வன்னியர் சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியாக ராமதாஸ் மாற்றிய போது, பா.ம.கவுக்கு ஒரு வெகுஜன அடையாளத்தைப் பெற்றுத் தந்தவர் பழனிபாபா. தனது ஜிகாத் கமிட்டித் தொண்டர்களை பாமகவில் இணைந்து செயலாற்றும் படி ஊக்கப்படுத்தினார். அவரது அறிவுரையை ஏற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் பாமகவில் இணைந்தார்கள்.

அவ்வாறு இணைந்தவர்கள் பட்டி தொட்டியெங்கும் பா.ம.க பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தனர். அந்த கூட்டங்களில் பங்கேற்று பழனிபாபா முழங்கினார். ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நம்பிக்கை நாயகனாக ராமதாசை முன்னிறுத்தினார். வன்னியர் சாதிக்கட்சி என்ற முத்திரையிலிருந்து விலகி, ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சியாக பா.ம.கவை அடையாளப்படுத்துவதற்கு கடுமையாக உழைத்தார்.

பா.ம.க படிப்படியாக வளர்ந்து அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்தது. ராமதாசின் அரசியல் நடவடிக்கைகளில் மெல்லிய மாற்றங்களும் நிகழ்ந்தன. அறிவுக் கூர்மையுள்ள பாபா அதை உணர ஆரம்பித்தார். ராமதாசிடம் ஏற்பட்ட மெல்லிய மாற்றம் ஒரு கட்டத்தில் வலிமையாக வெளிப்பட்டது. பா.ம.க கூட்டங்களில் பாபா பேசிய பிறகு இறுதியாக ராமதாஸ் பேசுவார். பாபாவின் அனல் பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கில் திரண்டு நிற்பவர்கள், அவர் பேசி முடித்ததும் கலைந்து சென்று விடுவார்கள். ராமதாஸ் பேசத் தொடங்கும் போது கூட்டம் சில நூறு பேர்களாகச் சுருங்கி விடும். இதுவும் ஒரு வகையில் ராமதாசுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. விளைவு; பாபாவை கூட்டங்களுக்கு அழைக்காதீர்கள் என பா.ம.கவினருக்கு ராமதாஸ் வாய்மொழி உத்தரவு போட்டார். பாபாவுக்கும் ராமதாசுக்கும் இடையே முரண்பாடு மேலும் அதிகரித்தது.

அதே காலகட்டத்தில் பால்தாக்கரேயை ஆதரித்து அறிக்கை விட்டார் ராமதாஸ். மேலும் பாஜக தலைவர்களுடன் நெருங்கத் தொடங்கினார். ராமதாசின் கொள்கைத் தடுமாற்றத்தைக் கண்டு கடும் அதிருப்தி அடைந்த பாபா தனது தொண்டர்களிடம், 'முஸ்லிம்கள் பா.ம.கவில் இருக்க முடியாத சூழல் உருவாகிவிட்டது' என வெளிப்படையாகக் கூறினார். பின்னர் அதையே மேடைகளிலும் எதிரொலித்தார்.

1996, சட்டமன்றத் தேர்தலின்போது, புதுக்கோட்டைத் தொகுதியில் பா.ம.க வேட்பாளராகப் போட்டியிட்ட கே.எம்.ஷெரீபை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த பாபா, 'இதுதான் பிற அரசியல் கட்சிக்காக, தாம் பேசுகிற கடைசி பேச்சு என்றும், இனி எந்த அரசியல் கட்சிக்கும் ஓட்டு கேட்க மாட்டேன் என்றும், எதிர்காலத்தில் சமுதாயத்திற்காகவே ஓட்டு கேட்பேன்' என்றும் அறிவிப்பு செய்தார். பா.ம.கவினால் பாபாவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம், தனியொரு அரசியல் கட்சியைக் கட்டமைக்கும் சிந்தனைக்கு அவரைத் தள்ளியது.

எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் அரசியலை எப்படி வென்றெடுப்பது என்ற ஆய்வில் இறங்கினார். இறுதியில், கேரளாவுக்குச் சென்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் [பிடிபி] தலைவர் அப்துல் நாசர் மதானியை சந்தித்தார். அங்கு முஸ்லிம்களையும், தலித்துகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களையும் இணைத்த அரசியல் வியூகத்தின் மூலம் வலுவான ஜனநாயக சக்தியாக எழுச்சி பெற்றிருந்த மதானியுடனான பாபாவின் சந்திப்பு, அவருக்குப் புதிய நம்பிக்கையையும் தெம்பையும் ஊட்டியது.

முஸ்லிம்களையும், தலித்துகளையும், அரசியல் மைய நீரோட்டத்தில் தவிர்க்க முடியாத தனிப்பெரும் சக்தியாக மாற்றும் வகையில் தமிழகத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சியைத் தொடங்கும் முடிவுக்கு வந்தார் பாபா. தமிழகத்தில் பி.டி.பியை தொடங்கும் முன்னர் கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்களுடன் கலந்தாலோசிக்குமாறு பாபாவிடம் கேட்டுக் கொண்டார், மதானி.

பாபா கொடிக்காலை சந்தித்தார். அடுத்தக் கட்ட அரசியல் நகர்வு பற்றி விவாதித்தார். பாபாவின் முடிவுகளை மகிழ்ச்சியோடு வரவேற்றார் கொடிக்கால். பின்னர் ஜிகாத் கமிட்டியினருடன் நடைபெற்ற கலந்துரையாடலில், கேரளாவின் பி.டி.பி கட்சியை தமிழ்நாட்டில் தொடங்குவதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் விவாதிக்கப்பட்டன. முடிவில் மதானியின் அரசியல் அஜெண்டாவை ஏற்றுக்கொள்வது என்றும், ஜிகாத் கமிட்டியையே அரசியல் கட்சியாக மாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கட்சியைப் பதிவு செய்வதற்கும், கட்டமைப்பை உறுதிப்படுத்துவதற்கும், கிளைகளை விரிப்பதற்கும் பணிகளை முடுக்கி விட்டார், பாபா. தனது பேச்சில் இருந்த வேகத்தைக் குறைத்து, வியூகத்தை கூர்தீட்டினார். தமிழகம் முழுவதுமுள்ள முஸ்லிம் ஜமாத்துகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டார். பாபாவின் அத்தகைய முயற்சிகளுக்கு உடனடி பலன் கிடைத்தது. பல மாவட்டங்களில் ஜமாத்துகள் ஒருங்கிணையத் தொடங்கின.

முஸ்லிம்களை ஒருங்கிணைப்பது; தலித்துகளுடன் உரையாடுவது; இரண்டு சமூகங்களும் இணைந்து அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பது என்ற வியூகம்தான் பாபா கையிலெடுத்த கடைசி ஆயுதம். எதிர்காலத்தில் கட்சிகளின் கூட்டமைப்பு வலுவிழந்து விடும் என்றும், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கூட்டமைப்புதான் வலுப்பெறும் என்றும் பாபா கூறி வந்தார். அத்தகைய கூட்டமைப்பை உருவாக்குவது சாதாரண வேலையல்ல என்றும், அது மிகப்பெரும் அர்பணிப்புக்குப் பின்னரே சாத்தியமாகும் என்றும் அவர் முன்னுணர்ந்தார்.

இத்தகைய அரசியல் நிலைப்பாட்டுடன் களப்பணியை நோக்கி பாபா நகரும் போதுதான் திடீரென படுகொலை செய்யப் பட்டார்.

1997, ஜனவரி 28 ஆம் நாள் இரவு பொள்ளாச்சியில் உள்ள பாபாவின் நண்பர் பசுவராஜ் என்கிற தனபால் வீட்டிற்கு பாபா சென்றார். 30 ஆண்டுகால நண்பரான தனபாலோடு சுமார் ஒரு மணி நேரம் தனிப்பட்ட, குடும்ப விசயங்களைப் பற்றி உரையாடிவிட்டு இரவு 9.30 மணியளவில் அங்கிருந்து விடைபெற்றார். புறப்படுவதற்கு பாபா தனது ஜீப்பில் ஏறி அமர முயன்ற போது, கையில் சிறிய கோடாலி போன்ற ஆயுதத்துடன் பாபாவை நெருங்கிய அந்த மர்ம மனிதன், திடீரென பாபாவின் தலை,நெஞ்சு,உடல் என சரமாரியாக வெட்டினான். பாபா நிலைகுலைந்து சாய்ந்தார்.

அதிர்ச்சியடைந்த பாபாவின் நண்பர் தனபால், 'டேய் டேய்' என சத்தமிட்டுக் கொண்டே அந்தக் கொலைகாரனை விரட்டினார். அப்போது அவன் 'நீ எனக்கு குறி இல்லை, போடா ஒதுங்கி' என அவரைத் தள்ளிவிட்டு ஓடிவிட்டான். சற்று தூரத்தில் நின்றிருந்த அம்பாசிடர் கார் ஒன்றில் தொற்றிக் கொண்ட அவன் தப்பித்து விட்டான்.பாபா படுகொலை செய்யப்பட்ட செய்தி தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ஆங்காங்கே கலவரம், கல்வீச்சு, கறுப்புக் கொடி போராட்டம் என எதிர்ப்பு வலுவாக இருந்தது. கனத்த இதயத்தோடும், கண்ணீர் பெருக்கோடும் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் திரளுக்கு மத்தியில், பழனி அருகேயுள்ள புது ஆயக்குடியில் பாபாவின் உடல் நல்லடக்கம் செய்யப் பட்டது.
பாபாவின் படுகொலையில் தொடர்புடைய கொலையாளிகள் அனைவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விட்டனர். பாபா கொலை வழக்கை முன்னெடுப்பதற்கும், கொலையாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தருவதற்கும் உருப்படியான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை.

பாபாவின் ஆதரவாளர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது 'கைது செய்யப் பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல' என்றும், அவர்களுக்கு எதிராக வழக்கு நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை என்றும், பாபா படுகொலைக்குப் பின்னணியில் பல மர்ம முடிச்சுகள் இருக்கின்றன என்றும் கூறி அதிர்ச்சியளிக்கின்றனர். அது என்ன மர்ம முடிச்சு என்பதை நம்மால் விளங்க முடியவில்லை.

ஆனால், அவரது படுகொலைக்குப் பின்னால் இருக்கும் அரசியலை நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

பாபா, இந்துத்துவ மதவெறிக்கு எதிராக மிகத் தீவிரமாக சொற்போர் நிகழ்த்திய காலங்களில் கொல்லப்படவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான அரச அடக்குமுறைகளை அம்பலப்படுத்தி மக்களை அணி திரட்டிய காலத்திலும் கொல்லப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்களோடு இணைந்து அவர்களின் அரசியல் அமைப்பை வலுப்படுத்த உழைத்த காலங்களிலும் படுகொலை செய்யப்படவில்லை.

மாறாக, எப்போது அவர் பேச்சைக் குறைத்து, செயல் வீச்சை அதிகரித்து, ஜமாத்துகளை ஒருங்கிணைத்து, முஸ்லிம்களும் தலித்துகளும் இணைந்த அரசியல் பயணத்தை முன்னெடுக்க முயன்றாரோ அப்போதுதான் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

அப்படியென்றால், எந்த முயற்சி வெற்றி பெறுமோ; எந்த முயற்சி ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு விடிவைத் தருமோ; எந்த முயற்சி முஸ்லிம்களுக்கு உரிய பயனளிக்குமோ...அந்த முயற்சியில் அவர் ஈடுபட முயன்றபோதே கொல்லப்பட்டு விட்டார் என்றால், அதன் பின்னணியில் இருக்கின்ற 'அரசியல்' எது என்பதை ஆய்வு செய்தாக வேண்டும்.

இந்துத்துவத்தின் நேரடித் தாக்குதல்களுக்கு இலக்காகின்ற இரட்டைச் சமூகமான முஸ்லிம்களும், தலித்துகளும் இணைவது இயல்பாகவே சாத்தியமானது. இரு சமூகங்களுக்குமான உறவு இரண்டறக் கலந்தது. இரண்டு சமூகங்களும் பல்வேறு அரசியல் கட்சிகளால் வஞ்சிக்கப்பட்ட வரலாற்றுக்கு உரியது. சரியான தலைமைகள் இன்றித் தடுமாறும் நிலைமையை உடையது. நாடு முழுவதும் வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்திகளாகவும், மக்கள் தொகை அடிப்படையில் ஒருங்கிணைந்த மிகப்பெரிய சமூகங்களாகவும் இருப்பதால், இரண்டு சமூகங்களையும் இணைத்த அரசியல் நடவடிக்கை என்பது இரண்டு சமூகங்களையும் தவிர மற்ற எல்லோருக்கும் சிக்கலானது. இரண்டு சமூகங்களையும் வஞ்சித்து அரசியல் பிழைப்பு நடத்தும் அனைவருக்கும் ஆபத்தானதும் கூட.

எனவே, அந்த இணைப்பு அஜெண்டாவை கையிலெடுப்பவர்கள் பல்வேறு இன்னல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாவார்கள். அரசியல் மைய நீரோட்டத்திலிருந்து அவர்கள் அகற்றப்படுவார்கள்; அல்லது அழிக்கப்படுவார்கள்.

கேரள மாநிலத்தில், முஸ்லிம்களும் தலித்துகளும் இணைந்த அரசியல் அஜெண்டாவை கையிலெடுத்த மதானி, பொய் வழக்குகள் சுமத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு அரசியல் மைய நீரோட்டத்திலிருந்து அகற்றப்பட்டார். அதே வழிமுறையை தமிழகத்தில் கையிலெடுக்க முயன்ற பழனிபாபா அழிக்கப்பட்டார்.

பாபாவின் மறைவுக்குப் பிந்தைய தமிழக முஸ்லிம்களின் அரசியல் போக்கு, இலக்கற்றுத் தடுமாறிக் கொண்டிருப்பதை மீளாய்வு செய்தால் அந்த உண்மை நமக்கு விளங்கும்.

பழனிபாபா, தனது பொதுவாழ்க்கைப் பயணத்தில் முதலில் எம்ஜிஆருடன் நெருக்கமாக இருந்தார். பின்னர் அதே எம்ஜிஆர்தான் தமது ஆட்சிக்காலத்தில் பாபாவின் கூட்டங்களுக்குத் தடை போட்டார். ஒவ்வொரு தடையையும் நீதிமன்றத்தில் சென்று அனாயாசமாகமுறியடித்து, வெற்றிகரமாக கூட்டம் நடத்துவார், துணிச்சல்கார பாபா. இதனால் எரிச்சலடைந்த எம்ஜிஆர் சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்குள் பழனிபாபா நுழையத் தடை என அரசாணை கொண்டு வந்தார்.

பாபாவுக்கும், எம்ஜிஆருக்கும் இடையிலான முரண்பாட்டைக் கவனித்த கலைஞர், எம்ஜிஆரை எதிர்க்க பாபாவை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். ஒரு கட்டத்தில் கலைஞருடனும் முரண்பட்டார் பாபா. எம்ஜிஆராவது பாபாவின் கூட்டங்களுக்குத் தான் தடை போட்டார். ஆனால் கலைஞரோ, பாபாவைக் கைது செய்து சிறையிலடைக்கும் அளவுக்கு கடுமை காட்டினார்.
இறுதியில், டாக்டர் ராமதாசோடு நெருங்கிய பாபா, அவரோடும் முரண்பட்டு விலகினார்.

பழனிபாபா, எம்ஜிஆரையும் கலைஞரையும் ராமதாசையும் சமுதாயத்திற்காகவே ஆதரித்தார்; சமுதாயத்திற்காகவே எதிர்த்தார். சுயநல அரசியலையோ, அல்லது பிழைப்புவாத அரசியலையோ அவர் முன்னெடுத்திருந்தால் எந்தத் தலைவரோடும் அவருக்கு முரண்பாடுகள் ஏற்பட்டிருக்காது. யாரோடும் சமரசமாகி விடாமல் அவர் காத்த கொள்கை உறுதிதான் அவரை தனித்து இயங்க வைத்தது; ஷஹீது அந்தஸ்துக்கு உயர்த்தி வைத்தது.

பாபா மிக இயல்பானவர்; உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர். மனதில் பட்டதை பட்டெனச் சொல்லிவிடும் பழக்கமுடையவர். இன்றைய அரசியல் சமூகத் தலைவர்களுக்கு உரிய, இன்றைய அரசியல் சூழலுக்கு மிகவும் அவசியமான 'நடிக்கும் திறன்' பாபாவிடம் இருந்ததில்லை. அவர் வெள்ளந்தியான மனிதராக இருந்தார்.

பாபாவின் உழைப்பை அவரோ அல்லது அவரது இயக்கமோ அறுவடை செய்யவில்லை. உழைப்பைத்தான் அறுவடை செய்யவில்லை; அவரது இறப்பையாவது அவரது இயக்கம் அறுவடை செய்ததா எனில் அதுவும் இல்லை. அவரது இறப்புக்குப் பிறகு அவரது இயக்கமே இல்லை என்ற நிலையாகி விட்டது.

பாபாவின் இறப்பை அறுவடை செய்தவர்கள் யாரென்றால், பாபா வாழும் காலம் வரை அவரைக் கடுமையாக விமர்சித்தவர்கள் என்பதுதான் மிகப்பெரும் கொடுமை.

பாபாவை, பெண்பித்தர் என்றும், பாபா, முஸ்லிம் இளைஞர்களைத் தவறாக வழிநடத்துகிறார் என்றும் குற்றம் சாட்டி அவருக்கு எதிரான பரப்புரைகளில் ஈடுபட்டவர்கள்தான் அவரது இறப்பை பக்கம் பக்கமாக செய்தியாக்கி, முஸ்லிம் இளைஞர்களை உசுப்பேற்றி இயக்கம் வளர்த்தார்கள். பாபாவின் உண்மையான சமூகப் பங்களிப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லாமல் மறைத்தார்கள்.

ஆனால், பாபாவுக்கு 'ஷஹீது' என்னும் மிகப்பெரிய கண்ணியத்தை வழங்கிய இறைவன், அவர் மீது அவதூறு பரப்பிய தறுதலைகளையோ அசிங்கப்படுத்தினான்.

பாபா, இளைஞர்களை வழிகெடுக்கிறார் என்று எந்த மனிதர் பாபா மீது அவதூறு வீசினாரோ, அந்த மனிதரைப் பற்றித்தான் 'எங்களை வழிகெடுத்தார் ; எங்களை குண்டுவைக்கத் தூண்டினார்' என்று சிறை மீண்ட இளைஞர்களைப் பேட்டி கொடுக்கச் செய்தான் இறைவன்.

பாபாவை, பெண்பித்தர் என்று யார் விமர்சித்தார்களோ, அவர்களே ஒருவர் மீது ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி, அசிங்கப்பட்டு, தனித்தனி இயக்கம் காணும் அளவுக்கு அம்பலப்படுத்தினான், இறைவன்.

'அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்பதெல்லாம் வழக்கொழிந்து போன பழமொழியாகிவிட்டது. 'தெய்வமும் அன்றே கொல்லும்' என்பதுதான், பாபாவை எதிர்த்தவர்களுக்கு ஏற்பட்ட இழி நிலையிலிருந்து நமக்குத் தெரியவருகிறது.

பாபா, தாம் பேசும் கூட்டங்களில் எல்லாம் தவறாமல் ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தை அளிப்பார். ''I Plead Guilty - நான் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்''.


அப்பாவி மக்கள் மீது அரசியல்வாதிகளின் அராஜகம் பாயும் போது அதை தட்டிக் கேட்பது அயோக்கியத்தனம் என்றால், நான் மிகப்பெரும் அயோக்கியனே!


முஸ்லிம்கள் மீது திராவகம் வீசப்படுவதை தடுக்கப் போனது தீவிரவாதம் என்றால் நான் மாபெரும் தீவிரவாதியே!


ஜனநாயக உரிமைகளைக் கேட்பது சாதிவெறி என்றால் நான் மாபெரும் சாதி வெறியனே!


சகோதரத்துவம் போற்றுவது, சட்டவிரோதம் என்றால் நான் சட்ட விரோதியே!


இஸ்லாத்தின் மாண்புகளை கூறுவது மதவெறி என்றால் நான் மாபெரும் மதவெறியனே!


என் மக்கள் மீது ஏவப்படும் அடக்கு முறைகளுக்கு எதிராகப் போராடுவது குற்றம் என்றால் நான் மிகபெரும் குற்றவாளியே!'' என்றார் பாபா.


அவர் எந்தக் குற்றத்தை இழைத்தாரோ...
அந்தக் குற்றத்தை நாமும் இழைப்பதுதான்
அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக இருக்க முடியும்!

[சமநிலைச் சமுதாயம் பிப்ரவரி - 2011 இதழில், ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை.]
Related Posts Plugin for WordPress, Blogger...