அமெரிக்காவில் தாக்குதலுக்கு
உள்ளாக்கப் பட்ட மசூதிக்கு சிறுவன் ஒருவர், தனது சொந்த சேமிப்புப் பணத்தை நிவாரணத் தொகையாக வழங்கை அனைவரது
பாராட்டையும் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகானத்தைச்
சேர்ந்த ஏழு வயது சிறுவன் ஜேக் ஸ்வான்சன். பாரீஸ் தாக்குதலுக்கு எதிர்ப்பு
தெரிவித்து முஸ்லிம் எதிர்ப்பாளர்கள் சிலர் சிறுவன் ஜேக் ஸ்வான்சன் வசிக்கும்
பகுதியில் வசிக்கும் பகுதியில் உள்ள மசூதியை சூறையாடியுள்ளனர். மேலும் மசூதியில்
பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன் கிழித்து
வீசப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தை கண்ட இச்சிறுவன் தனக்கு
ஐபேட் ஒன்று வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த 20 டாலரை மசூதி நிவாரண செலவுக்காக நன்கொடையாக அளித்துள்ளார்.
இந்நிலையில் சிறுவனது செயலைப் பாராட்டி,
அமெரிக்க முஸ்லிம்கள் சங்கம் ஸ்வான்சனை
கௌரவப்படுத்தும் விதமாக நன்றிக் கடிதத்துடன் ஒரு ஆப்பிள் ஐ-பேட் சேர்த்து வழங்கி
உள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன