(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Tuesday, August 19, 2014

இஸ்ரேல் தயாரிப்புகள் புறக்கணிப்பு - ஒர் புரிதல்.

அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர்களே..,

பாலஸ்தீன மக்களின் மீதான யூதர்களின் தாக்குதலில் பச்சிளம் குழந்தைகள் , பெண்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வரும் கவலைக்குரிய இவ்வேளையில்... இதன் எதிர்வினையாக..

முன்எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது இஸ்ரேல் தயாரிப்பு பொருள்களை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்ற சிந்தனை முஸ்லிம்களிடம் அதிகம் ஏற்பட்டுள்ளது , மேலும் இஸ்ரேல் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்று  மாற்றுமத சகோதரர்கள் கூட பகிரங்கமாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து பாலஸ்தீன மக்களுக்கு தங்கள் ஆதரவுகளை கொடுத்து வருகிறார்கள்.

இவ்வாறு புறக்கணிப்பு என்பதும் ஒருவகையில் போராட்டம் தான் எனலாம், ஒரு அநீதி நமக்கு முன்னால் நடக்கிறது அதை தடுத்து நிறுத்த வேண்டியவர்கள் வேடிக்கை பார்கிறார்கள் , இன்னும் சிலர் அந்த அநீதிக்கு துணைபோகிறார்கள் ஆனால் நியாத்தின் பக்கம் நிற்கும் மக்களாகிய நாம் தங்களின் உணர்வுகளை வெளிபடுத்த வீதிக்கு வந்து போராடுகிறோம் , கண்டனங்களை பதிவு செய்கிறோம். இருப்பினும்  நாம் எதாவது செய்யவேண்டும் நம்மால் அவர்களுக்கு எதாவது நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று நினைக்கும்போது ...

நாம் கையில் எடுக்கும் ஆயுதம் இஸ்ரேல் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற மனபாவம்... இதை தவறு என்று சிலர் வாதிடுகிறார்கள்.
ஆனால் இது உணர்வுபூர்வானது, இந்த புறக்கணிப்பால் உடனே இஸ்ரேலின் இனப்படுகொலை நின்றுவிட போவதில்லை என்பது உண்மை தான் எனினும் நம்முடைய எதிர்ப்பை தெரிவிக்க, உணர்வுகளை பிரதிபலிக்க இதுவும் ஓர் ஆயுதம் தான்.

எனினும் நாம் முற்றாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலுக்கு அணைத்து உதவிகளையும் செய்யும் அமெரிக்க தயாரிப்பை புறகணிக்க முடியுமா ? என்றால் .. எதார்த்த சாத்தியம் மிக குறைவு தான்.

உணவு பொருள்கள் முதல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சோப்பு , ஷாம்பூ வரை அவர்களின் ஆதிக்கம் வேரூன்றி இருக்கிறது.
இதை ஏதோ உணர்ச்சி வசப்பட்டு ஓரிரு மாதங்களில் ஒன்றிணைந்து மாற்றியமைக்கலாம் என்பது எதார்த்தத்தில் முடியாத காரியம்.
இதை ஒவ்வொருவரும் வாழ்கையில் கொள்கையாக வகுத்து செயல்பட்டால் இன்ஷால்லாஹ் ஒருவேளை அது தாக்கத்தை , பாதிப்பை ஏற்படுத்தும்.

FACEBOOK – WHATSAPP பயன்பாடு :   
( ஏன் whatsapp பயன்படுத்துகிறீர்கள் telegram பயன்படுத்துங்கள் என்ற விளம்பரம் வேறு செய்கிறார்கள். அவர்களின் எண்ணங்களை குறைகூறவில்லை )
நாம் விரும்பியோ , விரும்பாமலோ ... தகவல் தொழில்நுட்பத்தில் முழுமையாக யூதனின் ஆளுமையின் கீழ் தான் இருக்கிறோம்... யூதனின் முகநூலை பயன்படுத்திகிறார்கள். அதே முகநூலில் யூதனின் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தாதீர்கள் என்கிறார்கள் . யூதனின் தயாரிப்புகளை பயன்படுத்தாதீர்கள் என்று சொல்வதற்கு கூட ஒரு யூதனின் தயாரிப்பு நமக்கு தேவைபடுகிறது ????

இப்படி விவாதிப்பது , வலியுறுத்துவது எந்த விதத்தில் சரி என்பதை பார்க்க வேண்டும். இன்னும் ஆழமாக நாம் சிந்தித்தால் google,youtube இவைகள் எல்லாம் யாருடையது என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் ... அமெரிக்காவுடையது என்பீர்கள் .. அப்படியானால் அமெரிக்கா தான் இஸ்ரேலுக்கு எல்லா விதமான உதவிகளையும் செய்து வருகிறது ... இப்ப நாம் இதை எப்படி பார்ப்பது..எல்லவற்றையும் புறக்கணித்து விடலாமா ?
எது சற்று சிந்திக்க வேண்டும்.

தற்போது முகநூல் தவிர்க்க முடியாத ஒர் ஊடகமாக இருக்கிறது. இது பல வகையில் கேடிற்கு வழிவகுத்தாலும் , இதனால் பெரிய நன்மைகளையும் நாம் அடைந்து வருகிறோம் .. எப்படி அணுகுகிறோம் என்பதை பொருத்து இது வேறுபடுகிறது.
பொது அறிவை வளர்த்துகொள்ளவும் முகநூலை அணுகலாம்.           அறிவை அடகு வைக்கவும் முகநூலை அணுகலாம்.

பாலஸ்தீன தாக்குதலின் உக்கிரத்தை முகநூல் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதில் மிக துரிதமாக செயலப்ட்டதை யாரும் மறுக்கமுடியாது.
அதை விடுங்கள் KFC, MC DONALD என்ன நாம் பயன்படுத்தும் பேஸ்ட் முதற்கொண்டு யூதன் , அமெரிக்க தயாரிப்புகளை தான் நாம் பல நேரங்களில் பயன்படுத்தி வருகிறோம் .. ஊர்களில் முஸ்லிம்கள் தான் விற்கிறார்கள் அவர்கள் விற்பதை விட விரும்பவில்லை , வாங்குபவர்கள் பழக்கத்தை விட முடியவில்லை ... இதில் விதி விலக்கானவர்கள் உண்டு .. ஆனால் அவர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது .. நம்முடைய மனசுக்கு ஒரு திருப்திக்கு வேண்டுமானால் செய்து கொள்ளலாம்.
இதை விளங்கிகொள்ள ஒன்று செய்யலாம்.

புறக்கணிக்க வேண்டிய அணைத்து பொருள்களின் பெயர்களையும் பட்டியலிடுங்கள் : அதில் நீங்கள் பயன்படுத்தி வரும் பொருட்கள் இருக்கிறதா என்று பாருங்கள்.

கண்டிப்பாக குறைந்தது 50%  முதல் 75% வரை யிலான பொருள்கள் நீங்கள் பயன்படுத்தி வருவது தெரியும். அனைத்திற்கும் மாற்று பொருள்கள் யோசித்துபாருங்கள்...

அதன் எதார்த்தசூழ்நிலை உங்களுக்கு புரியும்.
இதை விளக்குவதின் நோக்கம் இஸ்ரேல் தயாரிப்புக்களை புறக்கணிக்ககூடாது என்பது அல்ல.

முற்றிலுமாக புறக்கணிக்க முடியாது என்பதும் , அதை ஏதோ கோபத்தில் ,ஆத்திரத்தில் எடுக்கும் முடிவாக இல்லாமல். நிரந்தமாக அதை வாழ்கையில் செயல்படுத்த முடியுமா என்பதை நாம் யோசிக்க வேண்டும்.No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...