(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, May 30, 2013

வீடு கட்ட செங்கல் வேண்டாம் இனி பிளாஸ்டிக் பாட்டில் போதும்!

சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிற பிளாஸ்டிக் கழிவுகளை, கட்டிடங்கள் கட்டப் பயன்படுத்த முடியும் என நிரூபித்துள்ளது, ‘சமர்ப்பண்’ என்கிற தொண்டு அமைப்பு. தில்லியைச் சேர்ந்த இந்தத் தொண்டு நிறுவனம், செங்கலுக்கு மாற்றாக பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு பசுமை வீடுகளை உருவாக்கி வருகின்றது.
                            
பிளாஸ்டிக் பாட்டில்களில் உருவாக்கப்படும் வீடுகள் மிகவும் பாதுகாப்பானவை. அதனைக் கொண்டு கட்டப்படும் கட்டிடங்கள் பல்லாண்டுகள்வரை எந்தச் சேதாரமில்லாமல் உறுதியாக இருக்கும் தன்மை கொண்டவை. பொதுவிழாக்கள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் போன்ற இடங்களிலிருந்து காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கிறோம்.
                                                  

    
சேகரித்த பாட்டில்களை அளவு வாரியாகப் பிரித்து, சாலையோரங்களில் கிடக்கும் வீணான மண்ணைக் கொண்டு நிரப்பி, பாட்டிலை உறுதியாக்குகிறோம். அதன் பின்னர் அதனை கட்டிடப் பணிக்கு பயன்படுத்துகிறோம். பாட்டிலில் மண்ணை நிரப்ப பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் எனப் பலதரப்பினர் எங்கள் அமைப்புக்கு உதவி செய்துவருகின்றனர்.
                                                  
பாட்டிலின் தட்டையான அடிப்பகுதியை வெளிப்புறம் மற்றும் தரைத்தளத்தில் இருப்பது போன்று பயன்படுத்தினால், சமநிலையில் இருக்கும். இந்த முறையில் பாட்டில்களை அடுக்கி, சுவரை சிமெண்ட் மூலம் எளிதாகப் பூச முடியும். இதனால், செங்கல் வாங்கும் செலவை முற்றிலுமாகக் குறைக்கலாம்.
                                                
ஒரு சதுர அடிக்கு 16 ஒரு லிட்டர் பாட்டில்கள் தேவைப்படும். மேலும் 15 அடி நீளம், 12 அடி அகலம் கொண்ட ஒரு பசுமை வீடு கட்ட, சுமார் 30 ஆயிரம் ரூபாய் செலவாகும்.

இதை பற்றி மேலும் அறிய....அவசியம் இந்த வீடியோவை பார்க்கவும்

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=QaFO95Ord_I


http://www.samarpanfoundation.org/website/index.php?option=com_content&view=article&id=95:house-construction-with-plastic-bottles&catid=52:delhi-projects&Itemid=66

                                            
செங்கல் பயன்படுத்துவதற்கு மாற்றாக பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் பள்ளிகள், மருத்துவமனை சுற்றுச்சுவர், நடைமேடைகள், பேருந்து நிறுத்தம் மற்றும் பொதுக்கழிப்பிடங்கள் கட்டலாம்" என்று கூறுகிறார், ‘சமர்ப்பண்’ சென்னை திட்ட ஒருங்கிணைப்பாளர் ரோமினி.
                                            

 பிளாஸ்டிக் பாட்டில் மூலம் கட்டப்பட்டும் வீடுகள் மழை மற்றும் குளிர்காலத்தில் கதகதப்பாகவும், கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும்" என்கிறார் ரோமினி. இதுபோன்ற பசுமை வீட்டை, ‘சமர்ப்பண்’ தொண்டு அமைப்பு, தில்லியில் பள்ளிக் கட்டிடமாக கட்டிக்கொடுத்துள்ளனர்.


தற்போது செங்குன்றம் அருகே, பசுமை வீடு திட்டத்தினைச் செயல்படுத்த இந்த அமைப்பு சார்பாக பாட்டில்களை சேகரித்து வருகின்றனர். முதற்கட்டமாக அங்கு ஜெனரேட்டர் மேடை ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்டு, தளம் அமைப்பதற்கான ஆராய்ச்சிகளையும் ‘சமர்ப்பண்’ அமைப்பு தற்போது செய்து வருகின்றது.

Thank you : என்.ஹரிபிரசாத்

Wednesday, May 15, 2013

வழிகெட்ட கொள்கைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்.!!

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....

ஏக இறைவன் அல்லாஹ்வினால் ஒப்புக்கொள்ளபட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமே, இதை அல்லாஹ்வே தனது திருமறையில் கூறுகிறான்.

ஆனால் இன்று முஸ்லீம்கள் என்று தங்களை அடையாளபடுத்தி கொள்ளும் பல குழுக்கள்  தாங்களே நேர்வழியில்  செல்வதாக கூறிக்கொண்டு..,

இஸ்லாம் இஸ்லாம் என்று சொல்லிகொண்டு மனம்  விரும்புவதை  எல்லாம் செய்துகொண்டு இஸ்லாத்தின் பெயரை சொல்லி தங்களது வழிகெட்ட கொள்கைகளை நியாயபடுத்துகிறார்கள்..

இந்நிலையில் நாம் இஸ்லாத்தின் அடிப்படையான திருக்குரான் -சுன்னாவை முன்வைத்தால் நம்மை பார்த்து குழப்பவாதிகள் என்கிறது உண்மையான குழப்பவாதிகள் கூட்டம்..

இவர்களின் வழிகெட்ட , குழப்பமான , நபிவழிக்கு மாற்றமான கொள்கைகளை அறிந்துகொள்ள.. நாம் மார்க்க சட்டங்களை கரைத்து குடிக்க தேவையில்லை.

இஸ்லாமிய மார்க்க அடிப்படை அறிவு இருந்தால் போதுமானது.

கீழ்காணும் வீடியோக்களை பாருங்கள்..

இதற்க்கு இஸ்லாத்திற்கும் ஏதாவது சமந்தம் இருக்கிறதா என்று சொல்லுங்கள்

இந்த வீடியோவில் வரும் அனைத்தும் இஸ்லாம் காட்டிய வழி என்று தெரிந்தோ , தெரியாமலோ அல்லது திட்டமிட்டோ பரப்பபடுகிறது....

இதை சொல்லத்தான் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் 23 வருட காலம் பாடுபட்டார்களா  ?.. 

40:21இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள், பலத்தாலும், பூமியில் (விட்டுச் சென்ற பூர்வ)சின்னங்களாலும் இவர்களைவிட வலிமையுடையவர்களாகவே இருந்தார்கள் - ஆனால் அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக் கொண்டான்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்ற எவரும் இல்லை.

Tuesday, May 7, 2013

தெளிவடைந்த ஃபித்னா - உள்ளத்தை புரட்டிய இறைவன்


நெதர்லாந்தில் Geert Wilders என்பவர் தோற்றுவித்த Party for Freedom எனும் வலதுசாரி கட்சியின் உறுப்பினர் அர்னோட் வேன் டோர்ன் (Arnoud van Doorn). சமீபத்தில் இவர் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்.  கடந்த சனிக்கிழமையன்று (20-04-2013) மதீனாவிற்கும், ஞாயிறு அன்று (21-04-2013) மக்காவிற்கும் வருகை தந்த டோர்ன் தனது உம்ராவை நிறைவு செய்துள்ளார். அத்துடன் ஷேக் அப்துர் ரஹ்மான் அல் ஸுதைஸி உட்பட பல மார்க்க அறிஞர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார். சரி இதில் என்ன பெரிய பிரமாதம் இருக்கிறது?

இவரது பின்னணியைப் பற்றி சற்று தெரிந்து கொள்வது நல்லது. இறைத்தூதரை இழிவு படுத்தும் நோக்கில் ஃபித்னா எனும் திரைப்படத்தைத் தயாரித்த Geert Wilders-ன் Party for Freedom தலைவர்களில் ஒருவராவார் டோர்ன். விஷமத்தனமான இத் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் எழுந்த மக்கள் எழுச்சியைக் கண்டு வியந்து போனார். "இந்த மனிதர் முஹம்மதுக்கு முஸ்லிம்களிடத்தில் அப்படி என்ன சிறப்பு?" என்று பெரும் ஆச்சரியம் அடைந்து அக் கேள்விக்கு விடை காணும் ஆய்வில் இறங்கி விட்டார்.



"அந்த ஒரு கேள்விக்கான தேடலே இன்று என்னை முஸ்லிம் ஆக்கியது" என்கிறார் டோர்ன். டட்ச் (Dutch) பாராளுமன்ற உறுப்பினரான இவர், தமது மன மாற்றத்தை தனது ட்விட்டர் பக்கம் மூலம் வெளியுலகத்திற்கு பகிரங்கமாக அறிவித்தார். "லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்!" எனும் அவரது டிவிட்டர் ஷஹாதா அரபி மொழியில் அமைந்திருந்தது. 46 வயதான டோர்னின் இந்த மனமாற்றம் நெதர்லாந்தில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.



விஷயம் மெல்ல வெளியே கசிந்து பல நாட்களாகியும் இவரின் கட்சி உறுப்பினர்கள் பலருக்கு இது ஒரு வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ஒரு நகைச்சுவையாகவே இருந்தது. பின்னே? "I hate Islam" என்பது இவரது Party of Freedom கட்சியின் பகிரங்க அடிநாதம். அக்கட்சியைச் சேர்ந்த இவரே இப்போது "I follow Islam" என்றால்? சிரித்தார்கள்.

"இஸ்லாத்தைக் கடுமையாக வெறுக்கக் கூடிய நான் முஸ்லிம் ஆகி விட்டேன் என்பதை நம்ப மறுப்பர் என்பது எனக்கும் தெரியும். ஆனால், நான் கடந்த ஒரு வருடமாக பல முஸ்லிம் அறிஞர்களுடன் பல்வேறு சந்திப்புகளை நடத்தி, மனத்திலுள்ள சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக குர்ஆன், ஹதீஸ்களை முழுமையாக ஆராய்ந்து கொண்டிருந்தேன். அதை எனக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே அறிவர்!" என்கிறார் அல் ஜஸீராவிற்குபேட்டியளித்த டோர்ன்.
மதீனா நகரின் மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் தொழும் டோர்ன்
மனம் மாறிய கையோடு, தனது மாநகர மேயருக்கு அதிகாரப்பூர்வமாகக் கடிதம் எழுதிக் கோரிக்கை விடுத்திருந்தார் டோர்ன். 'தமது பணி நேரத்தினூடாக தொழுது கொள்ள அனுமதி வேண்டும்' என்ற கோரிக்கை.

"இஸ்லாத்தைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களை அதிகமதிகம் கேட்டவன் நான். இன்னமும் இஸ்லாத்தைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கும் என் கட்சியினர், என்னைத் துரோகி என்றே அழைக்கின்றனர். நல்லது. மனதை விசாலமாக்கி, முன் முடிவுகளை கைவிட்டு, ஆராய்ந்து இம்முடிவை நான் தேர்ந்தெடுத்ததை அறிந்த பலரோ எனக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். மற்றவர்களைப் போலவே நானும் வாழ்க்கையில் இதுவரை மாபெரும் தவறுகளை இழைத்திருக்கிறேன். ஆனால், நான் செய்து வந்த தவறுகளிலிருந்து இப்போது நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் என் பாதை தெளிவாகி விட்டதையும் இதில் நான் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பதையும் உணர்கிறேன்!" என்று தமது பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.
நாங்கள் எவ்வளவு மோசமாக இறைத்தூதர் மீது இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி ஒரு திரைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறோம்? என் மனம் இன்று புண்படுவது மாதிரி தானே அன்று உலக முஸ்லிம்களும் வேதனை அடைந்திருப்பர்?"
அவதூறு மற்றும் பொய்களை மட்டுமே முதலீடாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபித்னா திரைப்படம் பற்றி நினைத்தால் வெட்கித் தலைகுனிவதாகக் கூறும் டோர்ன், நபியவர்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற மேற்கத்தியப் பொய்ப் பிரச்சாரங்கள் பற்றி உலகமெங்கும் சென்று எடுத்துரைக்கத் திட்டமிட்டுள்ளேன். இப்போது நினைத்தால் என்னால் வேதனையைத் தாங்க முடியவில்லை. நாங்கள் எவ்வளவு மோசமாக இறைத்தூதர் மீது இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி ஒரு திரைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறோம்? என் மனம் இன்று புண்படுவது மாதிரி தானே அன்று உலக முஸ்லிம்களும் வேதனை அடைந்திருப்பர்?" என்கிறார்.


இட்டுக் கட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபித்னா திரைப்படம் ஏற்படுத்திய அவநம்பிக்கையை போக்க, டொராண்ட்டோ (Toronto) நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு மையமான Canadian Dawah Association – CDA வுடன் இணைந்து சர்வதேசத் திரைப்படம் ஒன்றினைத் தயாரிக்கப் போவதாகக் கூறுகிறார்.



"இம்முறை என் திரைப்படம் அப்பட்டமான உண்மையைப் பேசும். இஸ்லாத்தைப் பற்றியும் நபிகளாரின் சிறப்புப் பண்புகளையும் இது எடுத்துரைத்து, மேற்கத்திய நாடுகளிடையே பரப்பப் படும் இஸ்லாமோஃபோபியாவை அகற்றும்!" என்கிறார் உறுதியாக.



"உங்களது புனிதப் பயணம் எவ்வாறு இருந்தது?" என்ற கேள்விக்கு, "இதே இடத்திற்கு உம்ரா மற்றும் ஹஜ் செய்யச் செல்பவர்களை கிறுக்குப் பிடித்தவர்கள் (Lunatic) என்றெல்லாம் ஏளனம் செய்துள்ளேன். இப்படி கீழ்த்தரமாக பிறர் மனம் புண்படும்படி நடந்து கொண்ட நான், நபி (ஸல்) அவர்களின் கல்லறைக்கு அருகிலும் ரவ்தா ஷரீஃப்க்கு முன்பு நிற்கும் போதும் என்னுள் பொங்கிய உணர்வுகளை கட்டுப் படுத்த முடியவில்லை. இவ்விடங்களில் நான் தொழும் போது, சுவர்க்கத்தின் அருகே நெருங்கி விட்டது போன்ற தூய்மையானதொரு உணர்வு ஏற்பட்டிருந்தது. என் கண்கள் குளமாயின" 



"இறைத்தூதர் மீது இத்தனை அன்பை வைத்திருக்கும் உலக முஸ்லிம்களைப் போன்றே நானும் என்னை உணர ஆரம்பித்திருக்கிறேன். அதே நேரத்தில், இறைத்தூதர் பற்றி திட்டமிட்டு பரப்பப்படும் தவறான தகவல்களை நம்பி இஸ்லாத்தைக் கடுமையாக வெறுக்கும் சில மேற்கத்தியவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன். எங்களிடையே தான் எவ்வளவு அறியாமை? எத்தனை பாரபட்சம்? இவற்றை எல்லாம் நான் எப்படி களையப் போகிறேன்?" என்று கவலைப்படுகிறார் டோர்ன்.



"உலக அளவில் முஸ்லிம்களுக்கும் பிற மதத்தினருக்குமுள்ள இடைவெளியைக் குறைத்து அவர்களிடையே அமைதியும் நல்லிணக்கமும் ஏற்படச் செய்வேன். இஸ்லாம் பற்றிய தெளிவை எனக்கு உணர்த்திய இஸ்லாமிய அழைப்பு மையமான CDA வுடன் இணைந்து, அழைப்புப் பணியினை முழு மூச்சுடன் மேற்கொள்வேன்.  இஸ்லாத்தைப் பற்றியும், முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் உண்மைச் செய்திகளை உலகிற்கு எடுத்துச் சொல்ல, என்னுடைய வாழ்க்கையை இனி அர்ப்பணிப்பேன்!" என்று Okaz/Saudi Gazette க்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

- அபூ ஸாலிஹா http://www.satyamargam.com/
Related Posts Plugin for WordPress, Blogger...