(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, June 11, 2012

சமச்சீர் கல்வியும் - சீரான தேர்வு முடிவுகளும்

சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் நடந்த, முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு எப்படி இருக்க போகிறது என்ற  எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 86.20 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்று அசத்தினர். கடந்த ஆண்டை விட, 0.9 சதவீதம் மாணவ, மாணவியர் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றனர்.


10 லட்சத்து 50 ஆயிரத்து 922 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். கணிதத் தேர்வைத் தவிர, மற்ற பாடத் தேர்வுகளில் குளறுபடி இல்லாமல் தேர்வு நடந்து முடிந்தது. போராட்டங்களுக்குப் பின், புதிய பாடத்திட்டத்தின் கீழ் நடந்த பொதுத் தேர்வு என்பதால், தேர்ச்சி சதவீதம் ஓரளவு சரியும் என்றே, கல்வித்துறை உட்பட அனைவரும் எதிர்பார்த்தனர். 


ஆனால் வெளியான தேர்வு முடிவு, எதிர்பார்ப்பை தவிடுபொடியாக்கியது. 86.2 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்று அசத்தினர். கடந்த ஆண்டு, 85.30 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 0.9 சதவீதம் பேர் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டைவிட, தேர்ச்சி சதவீதம் சரியாமல் தேர்வு முடிவு வந்திருப்பது, கல்வித்துறையை மகிழ்ச்சி அடையச்செய்துள்ளது.

மாணவர்கள் தேர்ச்சி: 83.40% (4,39,391)
மாணவியர் தேர்ச்சி: 88.90% (4,66,147)

ஓவ்வொரு வருடமும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கூடி கொண்டே செல்கிறது. மாணவிகள் தேர்ச்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக அதே விகிதம் தான்.

வெற்றி பெற்ற அணைத்து மாணவ செல்வங்களுக்கும் பாராட்டுக்கள். இந்த ஆண்டு  1 லட்சத்து 45 ஆயிரத்து 384 பேர் தோல்வி அடைந்தனர். இவர்களுக்கு, ஜூன், ஜூலையில் உடனடித் தேர்வு நடக்கிறது. ஆதலால் தோல்வியால் துவண்டுவிடாமல் உத்வேகத்துடன் மறு தேர்விற்கு தயாராகும் மாணவ-மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள். 



பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நாகப்பட்டினம் வட்டார அளவில் முதல் மதிப்பெண் 478 / 500 பெற்ற நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல் நிலை பள்ளி மாணவர் லாபிர் மாலிமை நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல் நிலை பள்ளி முதல்வர் ஐனுல் மர்லியா பேகம் பாராட்டியபோது எடுத்த புகைப்படம்.






நன்றி : NAUSHAD BABU

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...