(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, June 2, 2011

குஜராத் முதன்மை மாநிலமா ? - அன்னா ஹசாரே

ஊழலுக்கு எதிராக போர் முரசம் கொட்டி வரும் சமூக நல ஆர்வலர் அன்னா ஹசாரே   நரேந்திர மோடி ஆட்சி செய்யும் குஜராத் குறித்து தனது மனக்குமுறல்களை கொட்டியுள்ளார்.

மோடி யின் அரசு ஓர் ஊழல் நிறைந்த அரசு என்றும் அது ஏழை விவசாயிகளிடம் இருந்து நிலங் களை கையகப்படுத்தும் செயலில் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து வருகிறது என்றும் சமூக நல ஆர்வலர் அன்னாஹசாரே கடுமை யாக சாடியுள்ளார். 


மக்கள் உயிர் வாழ அடிப்படை தேவையான தண்ணீர் வசதியை ஒழுங்கு செய்து கொடுக்க முடியாதவன்தான் இனப்படுகொலை  புகழ்  மோடி. இவர்தான் இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராம்,  இந்த மாநிலம்தான் நம்பர் ஒன் மாநிலமாம்,

மேலும் குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் பல கிலோமீட்டர் நடந்து சென்று குடிநீர் சுமந்து வரும் கொடுமையை இந்த படத்தை பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.

ஹசாரேயின் கருத்துக்கள் மோடி அரசின்  கொடூரத்தை வெளிப்படுத்தி காட்டுவதாக இருந்தது.  இருப்பினும் இனப்படு கொலை தவிர்த்து மோடியின் நிர்வாகம் நல்ல முறையில் நடை பெறுவதாக ஒரு குருட்டு கருத்தோட்டம் திட்டமிட்டு பரப்பப்பட்டு வந்தது.

2002ஆம் ஆண்டில் நடைபெற்ற இனப்படுகொலை நிகழ்வுகளுக்கும் மோடிக்கும் எவ்விதத் தொடர்பும்  இருக்க முடியாது என பல ஊடகங்களும் மோடியை வளர்ச்சிக்கான  அரசியல் வாதியாக  வர்ணித்தன. காந்தியடிகள் பிறந்த மாநிலம் ஆதலால் அங்கு பூரண  மது விலக்கு என்றுமே நடைமுறையில் இருப்பது வழக்கமான ஒன்று.

ஆனால் அதைக்கூட மோடியின் சாதனையாக டமாரம் அடிக்க ஒரு கூட்டம் காத்திருந்தது,  மோடிக்கு முன்பாக ஆட்சி செய்தவர்கள் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால் அதைக்கூட மோடியால் செயல்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் அன்னாஹசாரே வெளியிட்ட கருத்துக்கள் மாயை களை உடைத்து உண்மைகளை வெளிப்படுத்தியது. குஜராத்தில் மதுவிலக்கு நடைமுறையில் இருப்பதாக கூறப்படுவது ஒரு மாயை என்றும் மாநிலத்தில் பாலைவிட அதிகமாக மதுபானங் கள் தான் ஆறாக ஓடுகின்றன என்றும் கூறி பரபரப்பு தீயை பற்றவைத்திருக்கிறார்.

லஞ்ச ஊழலுக்கு எதிராக பாடுபட்டுவரும் அன்னாஹசாரே   கடந்த மாதம்  மோடி அரசை நல்லாட்சி என்று பாராட்டினார். பின்னர் அது தவறு என்று உணர்ந்து கொண்டதாக கூறி தனது மோடி ஆதரவு கருத்துக் களை திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : சிந்திக்கவும்.

1 comment:

  1. நல் மாநிலமாக இருந்தால் குறைகூறுவர்
    அதுவே,
    கலைஞர் ஆட்சி ஊழல் தமிழக மாநிலமாயிருந்தால் சிறந்த ஆட்சியென்பர்.
    தீவிரவாதி பராக் ஒபாமாவை வாழவிட்டு போராளி ஒசாமா பின் லாடனை அழித்த உலகமில்லையா இது.
    www.masteralamohaemd.blogspot.com
    sirajmohaemd21@gmail.com

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...