(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, January 30, 2011

கொமரு காரியத்திற்காக வந்து இருக்கிறாரு உங்களால் ஏன்ற உதவி செய்யுங்கள்...!!!!!

  
தலைப்பை படித்ததுமே சிலருக்கு புரிந்து இருக்கும் இதன் அர்த்தம்..  பலர் சந்தேகத்துடன்  படிக்க துவங்கி  இருப்பீர்கள்.   அது வேற ஒன்னுமில்ல.. 
வார வாரம் வெள்ளிகிழமை பள்ளிவாசல்ல ஹஜரத் ஜும்மா உரையை முடித்துவிட்டோ  அல்லது ஜும்மா தொழுகை முடிந்ததுமே மைக்ல சொல்லுவரே ..

" இவர் திருச்சிக்கு பக்கத்துல உள்ள ஒரு கிராமத்துல இருந்து வந்துருக்காரு ரொம்ப வறுமைல உள்ள குடும்பம் இவருக்கு கல்யாண வயசுல ரெண்டு கொமரு இருக்காங்க ,நம்மட்ட உதவி கேட்டு வந்து இருக்காரு உங்களால் ஏன்ற உதவியை செய்யுங்கள்"  என்பர் கட்டாயம் நாம் எல்லோரும் கேட்டு இருப்போம்.

அது மட்டுமில்ல உதவி கேட்டு வந்தவர் பள்ளிவாசல் வாயிலில் ஒரு கைல அவங்க ஊரு ஜமாஅத் கடிதத்தை வைத்துகொண்டு  இன்னொரு கை தாங்களாக துண்டை விரித்துகொண்டு கல்யாண பிச்சை எடுப்பாரே..

உடனே நாம என்ன செய்வோம் ஏதோ பெரிய நல்ல காரியம் பண்றோம் என்ற நினைப்பில் ஒரு பத்து ருபாய் நோட்ட அப்டி ஸ்டைல போட்டுட்டு போவோம். ஆனால் ஒரு பாவத்தை ஊக்குவிக்கத்தான் இந்த பத்து ரூபாய் பயன்படுகிறது என்பதை நாம் யோசிப்பதில்லை..இதில் மறைமுகமாக நாம சொல்லவருவது என்ன
பொண்ண பெத்தவன் பிச்ச எடுத்தாவது  கல்யாணம் பண்ணனும்

என்ன கொடும தெரியுமா ? இது சொல்வதற்கு லேசான விஷயமாக இருக்கலாம். ஆனால் இது ரொம்ப தப்புங்க.. ரணகொடுமங்க இது..

இது என்னமோ,யாரோ ஒரு வெளிஊர்காரங்க மட்டும்தான்னு நினைக்காதிங்க தமிழகத்தில் பல ஊர்களில் இது தான் எதார்த்த நிலைமை. நம்ம ஊரும் இதுக்கு விதிவிலக்கு அல்ல.

திருச்சி , மேல்விஷாரம் , சிதம்பரம் என்று நம்ம ஊருக்கு உதவி கேட்டு எப்படி வருகிறார்களோ அதுபோல தான் நாகூர் ,நாகபட்டினத்திலிருந்து வேலூர்,லால்பேட்டை என்று அங்கு சென்று உதவி கேட்கிறார்கள்.

நம்ம பாஷையில் சொல்லனும்ன உதவி கேட்கல பிச்ச எடுக்கிறாங்க என்று தான் சொல்லணும். வேற எப்படி சொல்றது நம்ம ஊர்ல அப்டி துண்ட தூக்கிட்டு நிக்க முடியுமா ? கேவலப்பட்டு போகணும்ல.. வெளியூர் என்றால் யாருக்கு தெரியும் யாரோ என்று நினச்சு காசு போடுவாங்க இல்லையா ? கவ்ருவம் பார்பவர்களாக இருந்தால் குறைந்தபட்சம் கடனாவது வாங்குவார்கள்.

மவளுக்கு கல்யாணம் முடிக்கணும் ,
தங்கச்சிக்கு கல்யாணம் முடிக்கணும்,
அக்காக்கு கல்யாணம் முடிக்கணும் என்று எத்துன பேர் தங்களின் வாழ்கையை வெளிநாட்டில் வீனடிகிறார்கள் தெரியுமா ?

இதெல்லாம் எதற்கு  வரதட்சனை கைக்கூலி டவ்ரி இதுக்கு தான்.

கல்யாணம் வயசு வந்தும் கல்யாணம் முடிக்க முடியாம கண்டவனையும் இழுத்துகிட்டு ஓடும் செய்திகள் அடிக்கடி வருகிறதே இதுக்கெல்லாம் யார் காரணம் எல்லாம் வரதட்சனையை கண்டுகொள்ளாத நம் சமூகம் தான்.

யாரு இந்த பழக்கத்த ஆரம்பிச்சது என்று வரலாற்றை முன்னோக்கி பார்த்தால்,..மாற்று மதத்திலிருந்து ஒட்டிகொண்ட ஒரு கேடுகெட்ட பழக்கம் என்பது தெரிகிறது ஆனால் தற்போது நிலைமை என்ன வென்றால் சதவீதத்தை வைத்து பார்த்தால் மாற்று மதத்தைவிட நம்மாளுதான் அதிகம் வரதட்சனை வாங்குறான்.அப்டியே உல்டாவா போச்சு..               

இதுக்கு மிகமுக்கிய காரணம் என்ன தெரியுமா ?
இதை மார்க்கரீதியாக அங்கிகரிப்பது தான். நம்ம பள்ளிவாச ஹஜரத் இருகாஹள்ள, அவங்க ஒரு துவாவ செஞ்சி கைக்கூலிய அதிகாரபூர்வமா மார்க்கரீதியாக ,வாங்கிகுடுப்பாஹா .. அதுக்கு ஒரு function(கைக்கூலி கக்கிலி )  வேற வேப்பாஹா, பொண்ண பெத்தவன் எந்த ஊர்ல பிச்ச எடுத்தானோ, யாருட்ட எத அடகுவச்சு கடனுக்கு காசு வாங்குநானோ நமக்கென்ன..அதுக்கு ஊர் சாட்சி வேறு.. எல்லாம் இதுக்கு ஆமீன் வேற சொல்லுவாங்க என்னத்த சொல்றது.


ஏதாவது ஏன்? இப்டி என்று கேட்டா.. இதுல என்னங்க இருக்கு மாப்பிள துபாய்ல வேல செய்ரான்ல அப்டி தான் என்று வாங்குறத பெருமையா சொல்றது.

சேரி பொண்ணு வீட்ல ஏங்க வரதட்சனை குடுகுரிங்கனு கேட்டா    ஆமாங்க வரதட்சனை இல்லாம யாருங்க மாப்ள கொடுக்குறா என்று பதில் வரும்..இவங்க மேல நாம பரிதாபப்பட்டா... இவங்களுக்கு ஒருபையன் இருந்தான்னு வைங்க இவங்க அதுக்குமேல வாங்குவாங்க மகளுக்கு நாம குடுக்க எவ்ளோ கச்டபட்டோம் என்று யோசிக்க மாட்டாங்க..

இன்னும் சில பெரிய எடத்து பொண்ணு வீடுன்னு வைங்க அள்ளி கொடுப்பாங்க வீடு ,பைக்குனு ஏங்க இப்டினும் அவங்கல்ட கேட்டா என்ட இருக்கு ஏன் மவளுக்கு கொடுக்குறேன் என்று சொல்லுவாங்க.. அவர்களின் வாதம் நியாயமாக இருக்கலாம் ஆனால் இது இல்லதவங்களையும் மறைமுகமாக பாதிக்கிறது என்பதை உணர்வதில்லை.அவங்க ஊட்ல கொடுதாஹலே நீங்களும் தாங்க என்று நிர்பந்திப்பதற்கு இது காரணமாக அமைகிறது.

ஆக சமதாயம் இதிலிருந்து மீலாதவரை இதுபோன்று கல்யாண பிச்சைகாரர்கள் வலம்வந்து கொடுத்தான் இருப்பார்கள்.யாருக்கு தெரியும் நம்மில் யார்யார் வீட்டில் நமது அக்காவிற்கோ ,தங்கைக்கோ கல்யாணத்திற்கு நம்ம வாப்பா யாருட்ட கை ஏந்தினாரோ !!! அல்லாஹ்வே அறிந்தவன்.

இன்றை தௌஹீத் கொள்கையின் வளர்ச்சியில் வரதட்சனை வாங்குவது குறைந்து வந்தாலும்,சுன்னத்தை பேணும் ஜமாஅத்தார்களின் காதில் விலமறுப்பது ஏனோ என்று புரியவில்லை..
  
இளம்தலைமுறை சிந்திக்க வேண்டும்,மார்க்கத்தை பார்த்து மணமகளை தேர்ந்தெடுங்கள் வசதியை ,பணத்தை பார்த்து வேண்டாம்..

''நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளது செல்வத்திற்காக 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக 3. அவளது அழகிற்காக 4. அவளது மார்க்கத்திற்காக. ஆகவே மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

நாளை உங்களுக்கும் இதே நிலைமை வரலாம் .. நீங்களும் உங்கள் சுய மரியாதையை இழந்து உங்கள் மகளின் திருமணத்திற்கு கையேந்தும் நிலை ஏற்படலாம் அல்லாஹ் காப்பாற்றவேண்டும்.

நாம் மற்றவர்களை திருத்தும் முன் முதலில் நாம் நம்மை திருத்தி கொள்ளவேண்டும். நன்மையான விஷயங்களை யார் சொன்னாலும் கேட்டு நடக்கலாம் ஆனால் தவறான விஷயங்களை பெற்ற தாய் தந்தை சொன்னாலும்  சரி எதிர்க்கலாம் ,மறுக்கலாம். ஆனால் அது ஏன் தவறு என்று அவர்களுக்கு புரியவைக்க வேண்டும் ,பழங்காலத்தில் இருந்து ஊறிவிட்ட அவர்களின் மனநிலையை உடனே மாற்றிவிடமுடியாது.
வரதட்சனையை எதிர்பார்த்து திருமணம் முடிப்பவன் ஒரு ஆண் மகனாக இருக்கமுடியாது.அது தன்னை தானே விற்பதற்கு சமம்.

முன்னெல்லாம் இந்த கல்யாண பிச்சை எடுப்பவர்கள் பள்ளிவாசலுக்கு தான் வருவார்கள் இப்போதெல்லாம் ஓவ்வொரு வீட்டுக்கும் வரஆரபித்து விட்டார்கள்.கொமாரு காரியம் என்று அழுது நம் மனசை கரைப்பார்கள் (இதை சிலர் தொழிலாக செய்கிறார்கள் கையில் ஒரு பத்திரிகையை வைத்துக்கொண்டு) இதன் எதிரொலி தான் என்னவோ நம் ஊரில் ஏழைகளுக்கு நிக்காஹ் செய்து கொடுக்க போவதாக ஒரு அறிவிப்பு.

 குழந்தையை கிள்ளிவிட்டு விட்டு தொட்டி ஆட்டுவது எப்படி சரியாகாதோ அதுபோல் தான் ஏழுலெப்பையில் நிக்காஹ் நிகழ்ச்சிகளின் ஏற்பாடு...

ஒரு புறம் வரதட்சனையை ஊக்குவித்துவிட்டு மறுபுறம் ஏழை எளிய மணமகளுக்கு திருமணம் செய்து வைப்போம் எனபது வேடிக்கையாக இருக்கிறது ( வரதட்சனை வாங்கி திருமண செய்யகூடாது என்று சுன்னத்தை கடைபிடிக்கும் ஜமாஅத் சொல்லி இருந்தால் இந்த கொமருகள் எப்போதே கரை சேர்ந்து இருப்பார்களே) இருப்பினும் நல்லது நடந்தா சரி அதாவது குழந்தையை கிள்ளிவிட்டு விட்டு சும்மா இருப்பதை விட தொட்டியை ஆட்டிவிடுவது சிறந்தது என்ற அடிப்படையில் இதை சரி காணலாம்.
ஆனாலும் சில சந்தேகங்கள்....

1 . உங்கட்ட கல்யாணம் முடிச்சு வைங்கன்னு வந்தா மாப்ள வீட்டுக்கு வரதட்சனையை கொடுத்து முடிச்சு வைப்பீர்களா ? அல்லது இதுக்கு மட்டும் வரதட்சனை கிடையாதா ?

2. நபி (ஸல்) வழிமுறையை பேணி என்று போட்டுள்ளீர்கள் அதனால் மணமகள் கேட்கும் ,முன்வைக்கும் மஹர் தொகையை பெற்று கொடுப்பீர்களா ?

நீங்கள் (மணம் புரியும்) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை) மகிழ்வோடு கொடுத்துவிடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதை தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள். (அல்குர்ஆன் 4:4)”

உங்களிடம் நாகூர் வாசியான நாங்கள் எதிர்பார்ப்பது :

இதை நீங்கள் நல்லநோக்கத்தில் செய்கிறீர்கள் ஆதலால் இந்த நிக்காஹ் நிகழ்ச்சிகளை நல்ல மாற்றங்களுக்கு பயன்படுத்தலாம். நம் ஊருக்கு நல்ல முன் உதாரணமாக இருக்கும்.

இந்த நிக்காஹ் நிகழ்ச்சிகளின் பொது..
      1.இனி யாரும் வரதட்சனை வாங்கி திருமணம் முடிக்க கூடாது என்று உங்களின்    சுன்னத்ஜமாஅத்  சார்பாக அறிவிக்க வேண்டும்

2.        மாப்பிள்ளை என்ன உத்தியோகம் செய்தாலும் அதற்கு ஏற்ப பெண்வீட்டாரின் விருப்பத்திற்கு மஹரை மாப்பிள்ளை வீட்டார் தரவேண்டும் என்று அறிவிக்க வேண்டும்.

3.        வலீமா விருந்து மாப்பிள்ளை வீட்டை சார்ந்தது என்று அறிவிக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கொடுத்த வலீமா விருந்துகளில் ஜைனப் (ரலி) அவர்களை மணமுடித்த பின் கொடுத்தது போன்ற சிறப்பானதை நான் பார்க்கவில்லை. அதற்கென நபி(ஸல்) அவர்கள் ஒரு ஆடு அறுத்து விருந்தளித்தார்கள். அந்த விருந்தில் ரொட்டியும், இறைச்சியும் வழங்கப்பட்டது. அனஸ்பின் மாலிக் (ரலி) புகாரி, முஸ்லிம்

4.        நபி (ஸல் ) அவர்களின் வழிமுறையை பேணி முடிந்தவரை எளிமையாக திருமணத்தை முடிக்க வேண்டும். நாலாம் நீர் ,பத்தாம் நீர் என்று நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என்று அறிவிக்க வேண்டும்.

5.        பள்ளிவாசலில் கொமருக்கு உதவி கேட்டு வருபர்களின் விபரங்களை சேகரித்து,சரிபார்த்து உண்மை என்றால் அவர்களுக்கு வரதட்சனை இல்லாமல் ஊரிலே திருமண ஏற்பாடு செய்ய முயற்சி செய்யப்படும் என்று அறிவிப்பு செய்யவேண்டும்.

6.        இந்த கட்டளைக்கு சுன்னத் ஜமாஅத் உள்ள அனைவரும் உட்படவேண்டும் என்று அறிவிக்க வேண்டும்.

இதெல்லாம் நடக்குற காரியமா ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது..
இதை அறிவிப்பதில் என்ன கேடு இருக்கிறது என்பதே இங்கே கேள்வி ?

இது நடக்குதா ? இல்லையா ? என்பது இருக்கட்டும் முதலில் இதை பள்ளி வாசலில் சுன்னத் ஜமாஅத் சார்பாக உங்களால் அறிவிப்பாவது செய்ய முடியுமா...???????????????????

 

2 comments:

  1. சகோதரர் அப்துல்லாஹ் அஸ்ஸலாமு அழைக்கும்
    சரியாக சொன்னீர்கள் ...இதேபோல் நான் சுன்னத் ஜமாத சேர்ந்த பணம் படைத்த ஒருவரிடம் வீண்விரயம் திருமணத்தின் போது பண்ணாதீர்கள் என்றேன்...அவர் கூறியது என்ன தெரியுமா? நாங்க பண்ணுறத பார்த்து ஏன் அவங்க பண்ணனும் என்கிறார்?..என்னத்த பண்ணுறது...நோடிசில் உள்ளது போல் சுன்னத் ஜமாஅத் கொள்கை உடையோர்கள் மட்டும் என்றால் மாப்பிளைக்கு எளிதாக வரதக்கஹ்னை கிடைப்பது உறுதி ...முதலில் தவ்ஹீத் பேசும் நம் சகோதர்கள் திருமணத்தின் போது உசாராக இருக்க வேண்டும் ஏன் என்றால் குற்றம் காண காத்து கிடக்கிறார்கள் ....
    வஸ்ஸலாம்

    ReplyDelete
  2. அழைக்கும்ஸலாம் சகோதரரே தங்களின் கமெண்டுக்கு நன்றி..

    நீங்கள் குறிப்பிட்டது சரிதான் நாம் அவர்களை நன்மையை நாடி விமர்சித்தால் உடனே நம்மிடம் என்ன குத்த குறைகளை காணலாம் என்று பார்கிறார்கள் நம் வாயை அடைக்க.. உண்மையில் நாம் சொல்வது என்ன என்று பார்பதில்லை ,சிந்திப்பதில்லை நம்மை எதிர்ப்பதில் தான் குறியாக இருகிறார்கள்.

    சுன்னத் ஜமாஅத் என்று பிரித்து சொல்வது அவர்களுக்கு வெறுப்பை தருகிறது ஆனால் என்ன சொல்லப்படுகிறது என்று அவர்கள் பார்பதில்லை..

    வீண் விரையம் திருமணம் செய்தால் மற்றவர்களை பாதிக்கும் என்பதை விட , அந்த திருமணத்தில் அல்லாஹ்வின் பரகத் நிறுத்தப்படுகிறது என்பதை அவர்கள் அறிவதில்லை.

    அவர்களிடம் நாம் முதலில் கேட்டுகொள்வது என்னவென்றால் , நாங்கள் சொல்வதில் என்ன தவறு என்று சொல்லுங்கள் பிறகுஎங்களை விமர்சியிங்கள்..

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...