(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, July 9, 2016

ஆதாரம் கொண்டு வர முடியுமா – மீடியாக்களுக்கு பகிரங்க சாவல் விடுத்துள்ள ஜாகிர் நாயக்


பிஜேபி மீது தற்போது எழுந்துள்ள 45 ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்புவதற்காக மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் விதம் ஜாகிர் நாயக் குறி்த்த சர்ச்சையை எழுப்பியுள்ளது பிஜேபி அரசு.
பிஜேபி அரசு மீது எழுந்த 45 ஆயிரம் கோடி ஊழல் குற்றசாட்டை குறித்து வாய் திறக்காத நேஷனல் மீடியாக்கள் ஜாகிர் நாயக் சர்ச்சையை தூக்கி பிடிக்கின்றது.
இஸ்லாம் மதத்தை சாராத சமூக ஆர்வலர்கள் இது குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மீடியாவில் ஜாகிர் நாயகிற்கு எதிராக பேசும்  டைம்ஸ் நவ் அர்னாப் பிஜேபியின் பின்னனியை சோ்ர்ந்தவர் என சோசியல் மீடியாவில் பல முறை விமர்சிக்கப்பட்டவர் என்பதும் இதை உறுதிப்படுத்துகின்றது.

தனது மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜாகிர் நாயக் அவர்கள் ஒட்மொத்த இந்திய மீடியாவிற்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
அதில் , ”பங்களாதேஷ் ல் நடந்த தாக்குதலுக்கு நான் தான் காரணம் எனது பேச்சால் தான் அவ்வாறு நடந்தது என பங்களாதேஷ் அரசு தெரிவித்திருப்பதாக ஆதாரப்புர்வமான ஒரு செய்தியை கொண்டு வாருங்கள் பார்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் தான் மலேசியாவிற்கு சென்று அங்குள்ள அனைத்து அமைச்சர்களையும் சந்தித்து வந்தேன் எனக்கு அங்கு தடை விதித்துள்ளதாக மீடியாக்கள் அப்பட்டமாக அவதூறு பரப்புகின்றது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷ் அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தானே பேசியதாகவும் அவர்கள், நாங்கள் எதுவும் அப்படி சொல்ல வில்லை அந்த செய்தியை நாங்கள் நம்புவும் இல்லை எனக் பங்களாதேஷ் அரசு அதிகாரிகள் தெரிவித்ததாகவும் ஜாகிர் நாயக் அவா்கள் இதில் கூறியுள்ளார்கள்.
ஜாகிர் நாயக்கின் இந்த பேச்சை உறுதிப்படுத்தும் விதமாக பங்களாதேஷ் அரசு இன்று ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. இதில் பங்களாதேஷ் ன் உள்துறை அமைச்சர் அசாத்துஸ்ஸமான் அவர்கள் இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு தொடர்பு உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். Source : http://www.bbc.com/news/world-asia-36462026
சம்பந்தபட்ட அரசே ஒன்றும் சொல்லதா நிலையில் வரிந்து கட்டிக் கொண்டு பிஜேபி அரசு வருவது ஏன் மீடியாக்கள் முனைப்பு காட்டுவது ஏன் ? முஸ்லிம்களுக்கு இந்தியாவில் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இதற்கு காரணம் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.
ஜாகிர் நாயகம் வெளியிட்டுள்ள வீடியோ அவரது இந்த சாவை ஏற்க மீடியாக்கள் தயாரா ?

Related Posts Plugin for WordPress, Blogger...