(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, November 18, 2012

சொல்வதெல்லாம் உண்மை-அம்பலமாகும் அசிங்கங்கள்.!



கணவனை சந்தேகப்படும் மனைவி. மனைவி இருக்கும்போதே அடுத்த பெண்ணோடு தொடர்பு உள்ள கணவன். மாமியார் மருமகள் பிரச்சனை என குடும்ப சண்டையை ஊர் அறியச் செய்வதில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு பெரும் பங்குண்டு. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிர்மலா பெரியசாமி  இதற்காக கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார்.
இந்நிலையில்   இந்த நிகழ்ச்சிகள் குறித்து பதிலளிக்குமாறு, வழக்கொன்றில் மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட ஒருவர் தொடர்ந்த வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்த நபர் குறித்த பகுதியை ஒளிபரப்ப உடனடித் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.


மதுரை அய்யர்பங்களாவைச் சேர்ந்தவரும், மத்திய அரசின் முன்னாள் அலுவலருமான பெர்னாட்ஷான் (61 வயது) என்பவருக்கு ஜீ டிவி என்னும்  தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து அழைப்பொன்று வந்துள்ளது. 

அந்த அழைப்பில் அவருடைய மனைவி செல்வராணியிடம் பேசிய தொகா நிறுவனத்தார் 'சமையல் கலை' நிகழ்ச்சிக்கு வரும் படி அழைப்பு விடுத்துள்ளனர். அதன்பேரில் பெர்னாட்ஷான் தனது மனைவி செல்வராணியுடன் தொலைக்காட்சி அலுவலகம் சென்றுள்ளார்.  


படப்பிடிப்பு அரங்கில் கணவனை வெளியே அமரவைத்துவிட்டு, மனைவியிடம் பேட்டி கண்ட நிகழ்ச்சித் தொகுப்பாளர் நிர்மலா பெரியசாமி திடுமென்று பெர்னாட்ஷாவிடமும் குடும்ப வாழ்க்கை குறித்து தாறுமாறாகக் கேள்விகளைத் தொடுத்துள்ளார். இதனால் திகைப்படைந்த பெர்னாட்ஷாவுக்கு அப்போதுதான் இது சமையல்கலை நிகழ்ச்சி அல்ல வென்றும், 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி என்றும் தெரிய வந்துள்ளது.

ஊர் திரும்பியதும் உடனடியாக இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று  பெர்னாட்ஷான் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துவிட்டார்.

தனது மனுவில், "என்னை பற்றிய அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டாம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் கண்ணீர் விட்டு அழுதேன்.

அதற்கு ஒருங்கிணைப்பாளர்கள் மறுத்து விட்டனர். பிரச்சினைக்குரிய காட்சியை நீக்கி விட்டுதான் ஒளிபரப்புவோம் என்றும் கூறினர். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு சமரச தீர்வு ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் பொது இடத்தில் அடுத்தவரின் குடும்ப வாழ்க்கையை கேவலப்படுத்துகின்றனர். 


எனவே ஜீ டி.வியில் `சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை விதிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். மேலும் ஏற்கனவே படம் பிடிக்கப்பட்டுள்ள எனது குடும்ப வாழ்க்கை குறித்த நிகழ்ச்சியை ஒளிபரப்பவும் தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.



இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

மனுதாரர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விஷயத்தை ஒளிபரப்பினால் தனது மரியாதை பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். எனவே மனுதாரரின் குடும்ப வாழ்க்கை குறித்த விஷயத்தை ஜீ டி.வியில் ஒளிபரப்ப தடை விதிக்கப்படுகிறது," என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பிரச்சனை பெரும்பாலும் முடிவதில்லை மாறாக உசுப்பி விட்டு மேலும் கொழுந்து விட்டு எறிய வழிவகுகிறார்கள்.

அப்படி என்ன பெருசா இந்த நிகழ்ச்சியில் நடக்குது என்று யோசிப்பவர்களுக்கு ஒரு  சூடான SAMPLE EPISODE ... 


நம் சமுதாய மக்கள் குறிப்பாக பெண்கள் அதிலும் குறிப்பாக பள்ளியில் ,கல்லூரியில் படிக்கும் பெண்கள்  மார்க்க அறிவுமின்றி , உலக நடைமுறை அறிவுமின்றி எப்படி சீரழிகிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு ஒரு சான்று தேவையில்லை...


இது எங்கோ நடந்துவிட்ட நிகழ்வல்ல நம்மை சுற்றி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு... 


வயது வந்த பிள்ளைகளை எப்படி கையாள்வது என்பதை பெற்றோர்கள் தெரிந்திருக்க வேண்டும் .


வயதாகிவிட்ட பெற்றோர்கள் என்ன சொல்கிறார் ,எதுக்கு சொல்கிறார்கள் என்று பிள்ளைகளும் காது கொடுத்து கேட்க்க  வேண்டும்.


அப்பத்தான் நம் குடும்பம் உருப்படும்..... 




எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இந்த காதல்(?) ஜோடிகள்  வெகு சீக்கிரம் சீரழிவை சந்திக்கும் அதையும் சொல்வதெல்லாம் உண்மையில் பார்க்கலாம்.. பொறுத்திருங்கள்.


4 comments:

  1. எழுதி வைத்துக்கொள்ளுங்கள்... இந்த காதல்(?) ஜோடிகள் வெகு சீக்கிரம் சீரழிவை சந்திக்கும் அதையும் சொல்வதெல்லாம் உண்மையில் பார்க்கலாம்.. பொறுத்திருங்கள்!
    No comments needed more than this!
    If the children don not know how to respect their parents and the elders, then there is no regret when they suffer and struggle in their life.
    So let these two also struggle and suffer and will come to know the value of their parents when they become parents but by then it will be too late to realize.
    May God curse them!!!

    ReplyDelete
  2. எழுதி வைத்துக்கொள்ளுங்கள்... இந்த காதல்(?) ஜோடிகள் வெகு சீக்கிரம் சீரழிவை சந்திக்கும் அதையும் சொல்வதெல்லாம் உண்மையில் பார்க்கலாம்.. பொறுத்திருங்கள்.
    No comments needed more than this!
    If the children do not know how to respect their parents and the elders, let them struggle and suffer in their life. They will know the value of their parents and realize only when they become parents and by then it will be too late.
    May God Curse these two who have forsaken their parents and eloped!!

    ReplyDelete
  3. Thangaloda suya inbathukkaga petrorgalaye thavikkavidugira suyanalavathigal. After all this is temporary world? this life is not permanant

    ReplyDelete
  4. இவள் வாழ்க்கையை இவளே சிரலித்து கொண்டால்
    இவலுக்கும் இம்மையிலும் மருமையிலும் கஸ்டம்

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...