(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, November 16, 2012

கூத்தாடி விஜய்யின் துப்பாக்கி படத்திற்கு நல்ல விளம்பரம்.


 முஸ்லீம்களை தீவிரவாதியாக சித்தரிப்பதில் ஹாலிவுட்டை மிஞ்சிவிடும் நமது தமிழக கூத்தாடிகளின் திரைப்படம் என்றால் அது மிகையாகாது.

தமிழ் சினிமாவில் முஸ்லிம்கள் என்றால் கறிக்கடை நடத்தும் பாய், சாம்பிராணி போடும் பாய் என்று தான் பழைய படங்களில் காட்டி வந்தனர். கதாநாயகர்களை சிறைக் கைதியாகக் காட்டினால் அவர்களது சிறை எண் 786 என்று நிறைய படங்களில் காட்டி முஸ்லீம் ரசிகர்களை குஷிப்படுத்துவார்கள் பழைய கூத்தாடிகள்..

பின்பு நாளடைவில் இயக்குனர் மணிரத்னம், கூத்தாடி விஜயகாந்த்,அர்ஜுன் போன்றவர்களின் படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க துவங்கினர்.

தமிழ் சினிமாவில் முஸ்லிம்களை இழிவு படுத்துவதென்பது புதிய விசயமல்ல; அது ஒரு தொடர் நிகழ்வு. பலர் திட்டமிட்டு இழிவு படுத்துகிறார்கள்; சிலர் பத்திரிக்கை செய்திகளை அடிப்படையாகக் கொண்டு படம் இயக்குகிறார்கள்.

எது எப்படியாயினும் அவர்கள் படம் எடுக்கும் இடத்திலும், நாம் அதை பார்க்கும் இடத்திலும் இருக்கின்றவரை தீர்வு பிறக்காது.சினிமா என்பது ஊடகம்; ஊடகம் என்பது ஆயுதம்; அந்த ஆயுதம் நம் எதிரிகளின் கைகளில் இருக்கும்வரை நாம் தாக்கப்பட்டுக் கொண்டே இருப்போம்!

இந்நிலையில் வேலாயுதம் படத்தை தொடர்ந்து.. கடந்த தீபாவளிக்கு வெளிவந்தது கூத்தாடி விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படம். படம் முழுக்க முஸ்லிம்கள் என்றாலே வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள் என்பதை படம் பார்க்கும் ஒவ்வொருவர் மனதிலும் பதியவைக்கும் விதமாக துப்பாக்கி திரைப்படம் அமைந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இத்திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி கூத்தாடி விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இதில் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள், அவர்களுக்கு மூளையாக செயல்படுபவர், ராணுவ பாதுகாப்பு அதிகாரி என அனைவரும் முஸ்லிம்களாக சித்தரித்துள்ளனர்.


இந்தப் படத்திலிருந்து இவர்கள் தரும் செய்தி, நாடெங்கும் ஸ்லீப்பிங் செல்களாக முஸ்லிம்கள் செயல்பட்டு வருகின்றனர். அண்டை நாட்டு (பாகிஸ்தான்) தீவிரவாத கும்பலின் உத்தரவுப்படி செயல்படக் கூடியவர்களாக நாடெங்கும் இவர்கள் உள்ளனர். ராணுவ பாதுகாப்புத் துறையிலிருக்கும் முஸ்லிம்களும் தீவிரவாத கும்பலுக்கு உதவி செய்கின்றனர். இதுதான் இப்படித்தின் மெசேஜ்.

இப்படத்தின் இயக்குனர் ஒரு பேட்டியில் “ நான் எடுக்கும் படங்களில் சமூக கருத்தை வைத்து தான் படம் எடுப்பேன் என்று பேசி இருந்தார் “ இப்போது தான் தெரிகிறது அவரின் சமூக கருத்து என்ன வென்று..
இது போன்று முஸ்லிம்களை தீவிரவாதியாக திட்டமிட்டு சித்தரிக்கும் படங்கள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது ... 

அதை பார்த்து ரசிப்பதும் அதை பற்றி பேசி நேரத்தை வீனடிப்பதும் , ரசிகர்மன்றம் வைத்து கூத்தடிப்பதும் நம் மக்கள் தான் என்பது வேதனையான உண்மை.
முதலில் மாற்றம் வர வேண்டியது நம்மிடம் தான். நாம் செய்ய வேண்டியது சினிமாவை, சீரியலை நாம் ஒவ்வொருவரும் முழுமையாக புறக்கணிக்க வேண்டும்..

காதல் ,காமம் இதை தாண்டி உலகில் எவ்வளவோ உலக மக்கள் பார்க்க வேண்டிய , சிந்திக்க வேண்டிய விசயங்கள் இருக்கிறது அதை இஸ்லாமிய வரம்பிற்குள் நின்று காட்சிபடுத்தி மாற்றத்தை முஸ்லீம்கள் கொண்டு வர வேண்டும் ...

அடுத்து அநீதிக்கு எதிராக வீதியில் போராடுவதோடு நில்லாமல் ..சட்டரீதியாக எதையும் சந்திக்க நம் சமுதாயம் எப்போதும் தயாராக இருக்க முன்வர வேண்டும் ....

இப்போது விஜய் வீடு முற்றுகை செய்தோம் .. என்ன ஆனது ?!! .. முன்பே காவல்துறை கூத்தாடி வீட்டிற்கு காவலுக்கு நின்று, முற்றுகைக்கு போனவர்களை கைதுசெய்து விடுவித்தது. பொதுவாக இது உப்பு சப்பு இல்லாமல் போயிருக்க வேண்டிய விஷயம் ஆனால் நபிகள் நாயகத்தை அவமதித்த ஹாலிவுட் பட விவகாரத்தில் நம் இஸ்லாமிய அமைப்புகள் சில மாதங்களுக்கு முன் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை நகரையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. 

இதே நிலை துப்பாக்கி படத்துக்கு நேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்துபோன துப்பாக்கி தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ விஜய் ஆகியோர், அதிரடியாக சரண்டர் ஆகி மன்னிப்பு கேட்டுக்கொண்டு சில காட்சியை நீக்குவதாக உறுதிஅளித்துள்ளனர்.

(ஒற்றுமையுடன் ஒருமுறை ஒன்றினைந்தோம் எப்படி அலறுகிறார்கள் பார்த்தீர்களா !!!)

உடனே நம் மக்கள் ஏதோ படத்தை தடை செய்தது போல் மகிழ்ச்சியில் திளைகிறார்கள். ஆனால் உண்மையில் நாம் இப்பொழுதும் ஏமாற்றபட்டிருக்கிறோம். படம் முழுக்க தீவிரவாதிகளை பிடிக்கும் சமாசாரம் தான். முஸ்லீம்கள் இல்லாமல் எப்படி விஜய் தீவிரவாதிகளை பிடிப்பார்.?? சும்மா பேருக்கு இரண்டு சீன்களை கட்செய்வார்கள்,படம் ஓடிக்கொண்டு தான் இருக்கும் ...

ஒருவேளை நாம் இந்த படத்தை சட்டரீதியாக எதிர்த்தால் ,நீதி மன்ற தடை உத்தரவை கூட வாங்க முடியும் ...
உண்மையை சொல்லணும் என்றால் தற்போது இந்த படத்திற்கு விளம்பரமே முஸ்லீம்களான நாம் தான்.

அந்த அளவிற்கு என்ன முஸ்லிம்களை பற்றி தவறாக எடுத்திருக்காங்க என்று முஸ்லிம்களே படத்தை பார்க்க ஆவலாக இருப்பது பரவலாக தெரிகிறது – வேலகிங்டும் போங்க...

(துப்பாக்கி இதுவரை உலக அளவில் ரூ.10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம்.)

இதில் நன்மை என்றால் ஒன்றை மட்டும் சொல்லலாம் இனி வரும் படங்களில் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்க இயக்குனர்கள் கண்டிப்பாக யோசிப்பார்கள்.

அடுத்து விஸ்வரூபம் வர காத்திருக்கிறது ... என்ன செய்ய போகிறோம் ...
யோசித்து வச்சுங்க பா...

துணுக்கு  : துப்பாக்கி படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் இயக்குனர் முருகதாஸை செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். உங்கள் துப்பாக்கி படத்தை 2 தடவை பாத்தேன். அருமையாக உள்ளது. நல்ல படம் என்றாராம்.. ??!! நம்மாளுங்க.. இவன போய் தலைவன் சொல்லிகிட்டு அலையுதுங்க 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...