(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, April 12, 2012

ஷம்சுத்தீன் காஸிமி உரையும் - சர்ச்சையும் ..!

கடந்த மாதம் மார்ச் 28ம் தேதி நாகூர் குஞ்சாலி மரைக்காயர் தெருவில் நாகூர் இஸ்லாமிய பிரச்சார குழு சார்பாக மார்க்க விளக்க பொதுகூட்டம் நடத்தப்பட்டது.

அதில் சென்னை – மக்கா மஸ்ஜித் இமாம் சகோ.ஷம்சுதீன் காஸிமி ஷிர்க் ,பித்அத் ஓர் எச்சரிக்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்திவிட்டு சென்றுள்ளார். அவர் தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.




இதில் சர்ச்சைக்குள்ளான விஷயம் என்ன வென்றால் - ஷிர்க் ,பித்அத் ஓர் எச்சரிக்கை என்ற தலைப்பில் ஷம்சுதீன் காஸிமி பேசிகொண்டிருக்கும் போது தர்கா சாஹிப்மார்களை பொத்தம் பொதுவாக மிகதரக்குறைவாக பேசியதாக ஒரு குற்றசாட்டு எழுந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினாரா ? இல்லையா என்பதை விசாரித்த வகையில் அப்படி தான், அந்த பொருள் படத்தான் பேசினார் என்கிறார்கள் பலர்.
சரி வீடியோ பதிவை பார்த்தால் உண்மை நிலை தெரிந்துவிடும் என்று வீடியோ பதிவை பெற முயற்சி செய்தும் கிடைக்கவில்லை.

அந்த பொதுக்கூட்டத்தை சகோ. ஒலிம்பிக் கவுஸ் வீடியோ பதிவு செய்திருக்கிறார் அவரிடம் விசாரித்தால் – நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எடுத்த வீடியோவை மாஸ்டர் காப்பியுடன் வாங்கி கொண்டு சென்று விட்டார்கள் என்று சொல்கிறார்.வாங்கி சென்றவர்களும் இதுநாள் வரை எந்த பிரதியும் வெளியிடவில்லை என்று தெரிகிறது.

பொதுமேடையில் நடந்த ஒரு சொற்பொழிவின் வீடியோவை வெளியிட என்ன தயக்கம் – அவர் எங்களை பற்றி தரக்குறைவாக பேசியதால் தான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட அஞ்சுகிறார்கள் என்று நியாயமான கேள்வியை கோபத்துடன் எழுப்புகிறார்கள் சாஹிப்மார்கள்.


அவர் தரக்குறைவாக பேசியது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அனைவரின் சார்பாக அவரை வன்மையாக கண்டிக்கிறோம்.  

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் இதற்க்கு முழுபொறுப்பு ஷம்சுதீன் காஸிமிக்கு உள்ளூர் மக்களை பற்றி தெரிய வாய்ப்பில்லை – அவர் இவ்வாறு பேசினார் என்றால் அவருக்கு இதுபற்றி தவறாக தெரிவிக்கபட்டிக்க வேண்டும்.

தனிபட்ட முறையில் தவறு செய்பவர்களை நேரடியாக விமர்சிக்கலாம் கண்டிக்கலாம் அது வேறு விஷயம் ஆனால் ஒரு பொது மேடையில் பொத்தம் பொதுவாக இவர்கள் எல்லோரும் இப்படி தான் என்பது போல்  பாரதூரமான குற்றசாட்டை வைத்து விமர்சிப்பது எந்த கோணத்தில் பார்த்தாலும் தவறு தான். 


சரி இப்படி பேசுவதால் என்ன ஆதாயம் நம்மால் பெறமுடிந்தது ? 
மார்க்க விஷயத்தில் உள்ள கருத்துவேறுபாடுகளை களைவதற்கு நீங்கள் பொதுகூட்டம் நடத்துகிறீர்களா ? அல்லது இது போல் தரக்குறைவாக பேசவைத்து ஊர் மக்களிடம் மேலும் குரோதத்தை விளைவிக்க பார்க்கிறீர்களா? இப்படி செய்தால் யாரின் உள்ளத்திலும் நல்லெண்ணத்தை ஏற்படுத்த முடியாது.மாறாக வெறுப்பும்,குரோதமும் தான் வளரும்.


அழகான முறையில் நாம் எதையும் எத்தி வைக்க வேண்டுமே ஒழிய இப்படி அநாகரீகமாக நடக்ககூடாது.மார்க்க விஷயங்களின் உள்ள கருத்துவேறுபட்டால் குரோதத்தை வளர்த்துக்கொள்ள கூடாது இல்லையென்றால் மீண்டும் மீண்டும் அவர்களுக்கு சத்தியத்தை எடுத்துசொல்ல முடியாத இடைவெளி ஏற்பட்டுவிடும்.


நம்முடைய வேலை சத்தியத்தை எத்திவைப்பது மட்டுமே அவர்கள் அதை ஏற்கிறார்களா இல்லையா என்பதை அல்லாஹ்வின் நாட்டத்தை பொறுத்தது.அல்லாஹ்வின் தூதருக்கே அல்லாஹ் அப்படித்தானே சொல்கிறான்.



28:56. (நபியே!) நீர் நேசிப்பவர்களை(யெல்லாம்) நிச்சயமாக நேர்வழியில் செலுத்திவிட உம்மால் முடியாது; ஆனால், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான் - மேலும் நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கறிகிறான்.

(மேற்கண்ட செய்தி தவறு என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வாதிட்டால் தயவு செய்து ஷம்சுதீன் காஸிமி பேசிய வீடியோவை வெளியிட்டு உண்மைபடுத்த வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்)

3 comments:

  1. எதை எழுதிய நபர் தர்காஹ், தரீக்காஹ், அவுலியாஹ், கபர் வழிபாடு சரி என்று வாதிடுகிறாரா ?

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரே... ///எதை எழுதிய நபர் தர்காஹ், தரீக்காஹ், அவுலியாஹ், கபர் வழிபாடு சரி என்று வாதிடுகிறாரா ?/// தர்காஹ், தரீக்காஹ், அவுலியாஹ், கபர் வழிபாடு இவைகை இஸ்லாத்தில் இல்லாதவை என்பதே நமது நிலைப்பாடு

    ReplyDelete
  3. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் (வஹாபிகள்) தான் இதற்கு முழுபொறுப்பு என்பது ஊர் மக்கள் அனைவரும் அறிந்ததே... இதற்காக அவர்கள் வருத்தமும் தெரிவிக்கமாட்டார்கள், விஷமி காசிமீ பேசிய வீடியோவையும் வெளியிட மாட்டார்கள். மார்க்க விளக்க கூட்டம் என்ற பெயரில் அவர்களின் காழ்ப்புணர்ச்சியை கட்டவிழ்த்துவிட்டு இருக்கிறார்கள் ஏகத்துவத்தை ஏப்பம் விட்ட எட்டப்பர்கள். உண்மையான முஸ்லிமாக (வேண்டாம், மனிதாபிமானம் உள்ள சராசரி மனிதனாக) இருந்தால் இந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள் வீடியோவை இந்த நாகூர் பிளாஷ் வெப் தளத்தில் வெளியிட முன்வருவார்களா?

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...