(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)
Thursday, February 16, 2012
Subscribe to:
Post Comments (Atom)
"மார்க்"கினால் - காரைக்கால் பெற்றது வரம்...ஆனது தரம்.... ஆனால் .நாகூர் ??????
ReplyDeleteநாகூர் - காரைக்கால் மார்க் துறைமுகம் என்று நிலக்கரியை இறக்குமதி செய்ததோ.. அன்றிலுருந்து நாகூர் மக்கள் கருக்க தொடங்கினர். அதன் மூலம் எண்ணற்ற நோய்கள் காற்று மூலம் பரவி மக்களை வாட்டி வைதைத்தாலும் பல தரப்பட்ட போராட்டங்களை சில சங்கங்ககள் மக்களுக்காக செய்தாலும் கருக்க தொடங்கிய மக்களின் நிறத்திலும் தனது சுய நிறத்தை மெருகேற்றிய புன்னியாவான்களின் மறுபக்கம் இந்த கட்டுரை..
பணமே குறிக்கோள் என்று மார்க் நிறுவனம் போதுமான முன்னேற்பாடு / வசதியின்றி / பாதுகாத்தல் வசதி இல்லாத போதிலும் பணமே வெல்லும் என்றே ஒரே குறிக்கோளுடன் நிலக்கரியை இறக்குமதி செய்தனர். கருமலை போல நிலக்கரி எந்தவித பாதுகாப்பும் அன்றி அப்படியே கொட்டி வைக்கப்பட்டது. கடலோர மாவட்டம் / காற்று அடிக்கும் திசை நாகூர் என்பதாலே அனைத்து கரி துகள்களும் கரி காற்றாகி நமது வீட்டை மட்டுமல்லாமல் நிலத்தையும் சொல்ல போனால் நாம் அணியும் ஆடையும் கூட கரி துகள் படிந்த காரிருள் பொருளாய் மாற்ற தொடங்கியது.. துவக்க காலத்தில் என்னவென்று அறியா மக்கள் நிலக்கரி இறக்குமதி விபரம் அறிய சில மாதங்கள் ஆனது..
சில பல சங்கங்கள் அங்காங்கே ஒன்று கூடி "சில்லறை" போராட்டங்கள் நடத்தி நாளிதழில் தங்கள் பேர் வரும் வரை போராடினர். வெற்றி அவர்களுக்கே.. வந்தது.. நாகை மாவட்ட செய்திகளில் கடைசி கட்டம் இவர்கள் செய்திதான். வருங்கால பிரமதர்காளகிய நாகூர் வட்டங்களுக்கு மகா திருப்தி... நாகூர் மட்டுமல்லாமல் காரைக்கால் மக்களும், இன்னும் சில மக்களும் போராட்டங்கள் நடத்தினர்.
போராட்டங்களின் விளைவு.. மார்க் நிறுவனம் போராட்ட குழுவினை தரம் பிரித்து தவிர்க்க ஆரம்பித்தனர். முதலில் காரைக்கால் குழுவினர்.. போராட்டத்தில் நிறைய பேர் இந்து மத பிரிவினர், குறிப்பாக கோயில் பின்னநரி உள்ளவர்கள். இவர்கள் வாயடைக்க காரைக்கால் கோயில் குளப்பணி தொடங்கப்பட்டது..கோயில் குளம் நன்றாகவே சீரமைக்க பட்டது.. சுமார் மூணு கோடி ரூபாய் மதிப்பளவில் குளம் செம்மை படுத்த பட்டுள்ளது.
அடுத்து நமது நாகூர்... போராட்ட குழுவை பார்த்தால் அப்பப்பா ஏக்க சக்கம்.. நாலு பேருக்கு ஒரு சங்கம் , ஏழு பேருக்கு ஒரு கட்சி. என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழிக்கும் சமயத்தில் நுழைந்தார் நமது நாகூர் தர்கா மானேஜிங் டிரஸ்டி ஷேக் ஹசன் சாஹிப். நான் தான் தலைவன். என் சொல் படி நாகூர் நடுங்கும் என பல பில்டப் கொடுத்து மார்க்கின் ஆழம் தெரியாமல் சுறா புடிக்க வேண்டிய கடலில் செனகுன்னி மீன் பிடித்தார். தன மகனுக்கு ( சுல்தான் கபீர் ) மார்க் துறைமுகத்தில் மாதம் 25000௦ சம்பளத்தில் வேலையும் நாகூர் தர்கா கந்தூரிக்கு தர்கா மினராக்கு மார்க் துறைமுகம் செலவில் வெள்ளையும் அடித்தும் மற்றும் தனக்கு தனியாக கவர் தரவேண்டும், அப்படி தந்தால் நாங்கள் உங்களுக்கு சப்போட் செய்வோம் என்றும் பேசப்பட்டது.. மார்க் நிறுவனமோ என்ன கேட்கபோரார்களோ என்று அச்சத்தில் இருந்த போது இவர்கள் சுய நலத்தில் கேட்டது மிக சொற்பமாக தெரிந்து உடனே ஒப்பு கொண்டது மார்க் நிறுவனம்.