(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Tuesday, February 28, 2012

மருந்து , மாத்திரையிலிருந்து விடுதலை

சகோதர ,சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் 


சில சகோதர்கள் "செவி வழி மருத்துவம்" என்ற பெயரில் வீடியோ அடங்கிய ஒரு மின்னஜ்சலை அனுப்பி இணையத்தளத்தில் வெளியிடும்படி கேட்டுகொண்டார்கள். பணம் சம்பாதிப்பதை மூலதனமாக கொண்டுதான் புதுபுது மருத்துவ முறைகள் அவ்வப்போது அறிமுகப்படுத்தபடுகின்றன அதில் இதுவும் ஒன்று என்ற ரீதியில் நாம்  இருந்தோம்.

பிறகு ஆய்வு செய்வதற்காக அந்த வீடியோக்களை முழுவதும் பார்த்தபோது வியந்து போனதை மறுக்க முடியவில்லை.அல்லாஹுஅக்பர் - மனித உடலை அல்லாஹ் ஒரு தானியங்கி இயந்திரமாக படைத்திருப்பதை ஒரு முஸ்லிமாக இவ்வளவு ஆழமாக நாம் இவ்வளவு காலம் யோசிக்கவில்லையே என்று சற்று வருத்தபட்டோம்.

அந்த வீடியோவில் பாஸ்கர் என்ற சகோதரர் உரையாற்றுகிறார் - 
மிக ஆழமான ஆய்வு - கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும் 
மிக அழகான முறையில் விளக்குகிறார்.
ஏன் நோய் வருகிறது - அதை உடல் எப்படி எதிர்கொள்கிறது - 
அதை நாம் எப்படி தவறாக கையாள்கிறோம் -அதை எப்படி சரி செய்வது -
மருந்து மாத்திரை இன்றி எப்படி ஆரோக்கியத்தை பெறுவது .. என்று மிக நேர்த்தியாக ,வெளிப்படையாக ,நல்ல எண்ணத்தில் அவர் ஆற்றும் உரை பிரம்மிப்பை தருகிறது.

இதில் அவர் ஆன்மீகத்தை பற்றி பேசவில்லை ஆனால் இஸ்லாத்தை பற்றி பேசுகிறார். அதாவது நாம் சொல்ல வருவது என்ன வென்றால் அவர் உடல் கூறு சம்மந்தமாக பேசும் விஷயங்களில் இஸ்லாத்தை , நபி (ஸல் ) அவர்களின் வழிமுறைகளை மெய்பிக்கும் விதமாக இருக்கிறது என்பதே. 
(இன்ஷால்லாஹ் அவருக்கு அல்லாஹ் ஹிதாயத்தை தரவேண்டும்)

அன்பிற்குரியவர்களே !  அனைவரும் கீழே உள்ள வீடியோக்களை பாருங்கள், நல்ல பழக்க வழக்கங்களுக்கு உரியவர்களாக மாறி, நமக்கிருக்கும் நோயை அல்லாஹ்வின் உதவிக் கொண்டு நாமே துடைத்தெரிய முயற்சிப்போம் இன்ஷா அல்லாஹ். 

(குறிப்பு - அவரின் விளக்க உரையில் இஸ்லாத்திற்கு ஒத்துவராத கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் இந்த இயற்க்கை நோய் எதிர்ப்பு பயிற்சியை பின்பற்றுவதால் கண்டிப்பாக மார்கத்திற்கு முரணாக ஏதும் வராது) 

ஜசாகல்லாஹ் : யாசர்,அஹ்மத்


































Sunday, February 12, 2012

சினிமாவே என்னை சீரழித்தது! - ஆசிரியையைக் கொன்ற மாணவன் வாக்குமூலம்


சென்னை: வருத்தமா இருக்கு... எங்க டீச்சர் செத்துடுவாங்கன்னு நினைக்கவே இல்ல.. போலீஸ் வந்து கைது பண்ணுவாங்கன்னும் தெரியாது, என அப்பாவியாக வாக்குமூலம் அளித்துள்ளான், சமீபத்தில் தனது வகுப்பு ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற மாணவன்.
மேலும் ஆசிரியையை கொல்ல கத்தி எடுக்கத் தூண்டியதே தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் வரும் வன்முறைக் காட்சிகள்தான் என அந்த மாணவன் கூறியுள்ளான்.

சென்னை நகரை மட்டுமல்ல, பள்ளி கல்வி முறையையே உலுக்கியுள்ளது, வகுப்பு ஆசிரியையை அவரது மாணவனே குத்திக் கொன்ற சம்பவம்.

கடந்த வியாழக்கிழமை பாரிமுனையில் உள்ள ஆர்மேனியன் தெருவில் இருக்கும் செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இந்த கொலை நிகழ்ந்தது. அந்த பள்ளியின் ஆசிரியை உமா மகேஸ்வரி வகுப்பறையில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரிடம் படிக்கும் 9-வது வகுப்பு மாணவனே இந்த கொடூரத்தை செய்துவிட்டான்.

அந்த பள்ளி மாணவன் தற்போது கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான். அவனது பிஞ்சு மனது நஞ்சாகி கொலை செய்யும் அளவுக்கு அவன் எவ்வாறு தூண்டப்பட்டான் என்பது அவனது வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளது.

சிறுவர் சீர்திருத்த இல்லத்தில்...

அந்த மாணவன் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டு தற்போது புரசைவாக்கம் கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான். அதே சீர்திருத்த இல்ல வளாகத்தில் செயல்படும் சீர்திருத்த நீதிமன்றம் அவன் மீதான வழக்கை விசாரிக்க உள்ளது.

அந்த சீர்திருத்த இல்லத்தில் பல்வேறு குற்றங்களில் மாட்டியுள்ள 60 சிறுவர்களும், 2 சிறுமிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். சிறுமிகள் இருவருக்கும் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் 60 பேரும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் ஒரு பிரிவாகவும், 10 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இன்னொரு பிரிவாகவும் தனித்தனியாக அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். 15 வயது நிரம்பியவன் என்பதால், 10 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் அந்த இல்லத்தின் முதல் மாடியில் தங்க வைக்கப்பட்டுள்ளான்.

பொதுவாக அறியாத வயதில் புரியாமல், தெரியாமல் சிறுவர்- சிறுமிகள் குற்றங்களில் ஈடுபட்டு இந்த இல்லத்தில் அடைக்கப்படுகிறார்கள். பெற்றோர்கள் விரும்பிய நேரத்தில் இவர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
பாரிமுனை பள்ளி மாணவனையும் முதல் நாளன்று அவனது பெற்றோரும், 3 அக்காள்களும் மற்றும் உறவினர்களும் பார்த்து பேச அனுமதிக்கப்பட்டனர்.

சிறுவர் இல்லத்தில் அடைக்கப்பட்டவுடன் அவன் மனதளவில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 3 பெண் அதிகாரிகள் அவனிடம் அன்பாக பேசினார்கள். அவனது மனம்கோணாத வகையில் நடந்த சம்பவம் பற்றி அவனிடம் அன்பாக பேசி கேட்டறிந்தார்கள். முதலில் இல்லத்துக்கு சென்றவுடன் மாணவன் வருத்தத்தோடும், மனஇறுக்கத்தோடும் காணப்பட்டான். பெண் அதிகாரிகளின் அரவணைப்பான பேச்சால், இயல்பான அவன் நடந்த சம்பவம் பற்றி விளக்கி கூறியுள்ளான்.

கொலை செய்தது ஏன்?

அவனது வாக்குமூலத்தின் ஒரு பகுதி:

ஆசிரியை உமா மகேஸ்வரி மிகவும் நல்லவர். அதே நேரத்தில் கண்டிப்பாக பேசுவார். முதலில் அவரை கொலை செய்யவேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. வீட்டில் நான் ஒரே பிள்ளை. அப்பா-அம்மா, என்னை செல்லமாக வளர்த்தார்கள்.

வீட்டில் எனக்கு தனி அறை ஒதுக்கப்பட்டிருக்கும். நான் அந்த அறையில் இருந்துதான் படிப்பேன், படுத்து தூங்குவேன்.

மனசைக் கெடுத்த சினிமா

கொலை, வெட்டுக்குத்து, வில்லனை கதாநாயகன் அடித்து நொறுக்கும் சண்டைக்காட்சிகள் உள்ள தமிழ் மற்றும் ஆங்கில படங்களையே நான் விரும்பி பார்த்தேன். கடைசியாக `அக்கினி பத்' என்ற இந்தி படத்தை நான் பார்த்தேன்.

அதில், கதாநாயகன், வில்லனை கத்தியால் நெற்றியில் குத்துவான். அந்த காட்சி எனது மனதில் ஆழமாக பதிவானது.

ரிப்போர்ட் கார்டில் தவறாக எழுதினார்

நான் இந்தி பாடத்தை சரியாக படிக்கவில்லை என்பதற்காக ஆசிரியை உமா மகேஸ்வரி அடிக்கடி என்னை கண்டிப்பார். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 3 முறை எனது `ரிப்போர்ட்' கார்டில் என்னைப்பற்றி தவறாக எழுதிவிட்டார். என்னிடம் பாசத்தை கொட்டும் எனது தந்தைகூட இதை பார்த்துவிட்டு என்மீது கோபப்பட ஆரம்பித்தார்.

எனக்கு தினமும் செலவுக்காக நான் கேட்கும் பணத்தை என் அப்பா கொடுப்பார். ரிப்போர்ட் கார்டில் ஆசிரியை எழுதியதை பார்த்தவுடன் எனக்கு செலவுக்கு பணம் கொடுப்பதை இனிமேல் தரமாட்டேன் என்று எனது தந்தை கண்டிப்பாக கூறினார்.

இது, மனதுக்கு ஒரு கஷ்டத்தை ஏற்படுத்தியது. ஆசிரியை மீது கோபத்தை ஏற்படுத்தியது. கடந்த புதன்கிழமை அன்று இந்தி பாடம் சரியாக படிக்காத என்னைப் போன்ற 7 மாணவர்களை வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சிறப்பு வகுப்புக்காக ஆசிரியை உமா மகேஸ்வரி வரச்சொன்னார். அப்போது அவர் என்னை திட்டினார். இனி ஒழுங்காக படிக்காவிட்டால், பெயிலாகி விடுவாய் என்று சொன்னார். இது, எனது மனதில் ஏற்கனவே இருந்த கோபத்தோடு பயத்தையும் உண்டாக்கியது.

மாணவர்கள் கிண்டல்

ஆசிரியை இவ்வாறு சொன்னதை பார்த்து, எனது சகமாணவர்கள் என்னை கிண்டல் செய்தனர். இது, எனக்கு அவமானத்தையும், மேலும் கோபத்தையும் தூண்டியது.

அப்போதுதான் இந்தி படத்தில் வரும் காட்சியைப்போல, ஆசிரியையை கத்தியால் குத்தவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால், ஆசிரியை செத்துப்போவார். போலீசார் பிடிப்பார்கள். நம்மை இப்படி இல்லத்தில் அடைப்பார்கள் என்று எதுவும் எனக்கு தெரியாது. இப்போது வருத்தமாக உள்ளது," என்று கூறியுள்ளான்.

அந்த மாணவனுக்கு கவுன்சலிங் கொடுத்து இயல்பாக இருக்க வைத்துள்ளனர் போலீசார்.

நேற்று காலையிலும், நேற்று முன்தினம் காலையிலும் அவனுக்கு ஒரு மணி நேரம் யோகா சொல்லிக்கொடுக்கப்பட்டது. மற்ற மாணவர்களோடு விளையாடவும் அனுமதிக்கப்பட்டான்.

டிவி பார்க்கவும், விளையாடவும் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவன் தொடர்ந்து படிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் தெரிந்த 2 ஆசிரியைகள் அவனுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பார்கள். அந்த மாணவனுக்கு புதிய சீருடை தைத்து வழங்கப்பட்டது. 

ஒரு குற்றவாளி என அந்த மாணவனுக்கு நினைப்பு வராத அளவுக்கு பார்த்துக் கொள்கின்றனர் அந்த இல்லத்தில். அவனுக்கு என்ன தண்டனை என்பதை சீர்திருத்த நீதிமன்றம்தான் முடிவு செய்யும்.


Saturday, January 21, 2012

வருங்காலத்தில் முஸ்லீம் சமூகத்தின் கல்வியறிவு -CMN சலீம்

அதிராம்பட்டினத்தில் கடந்த ஆண்டு நடந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் சகோதரர் CMN சலீம் அவர்கள் ஆற்றிய எழுச்சிமிகு உரை உங்கள் பார்வைக்கு...

எழுச்சி மிகு உரையின் அம்சங்கள் :

உடல் நலம் -சுகாதாரம் முஸ்லீம்களை இன்று பாடாய்படுத்துவது ஏன் ?

முஸ்லீம்கள் கல்வியில் பிந்தங்கியதற்கு காரணம் என்ன ?

கல்வியில் முஸ்லீம்கள் முன்னேறுவதற்கான வழிவகைகள் என்ன ?

இன்றைய முஸ்லிம்களுக்கான கல்வியில் பாடத்திட்டம் எப்படி இருக்க வேண்டும் ?

பொருளாதாரத்தில் ஏன் பின்னடைவு ? மீண்டெழுக்க என்ன வழி?

மரைக்காயர் என்ற தொழிலதிபர்கள் எங்கு போனார்கள் இன்று ?

தொழிலதிபர்களை உருவாக்குவது எப்படி ?

போன்ற பல விஷயங்களை இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறார்.

சகோதரர் CMN சலீம் அவர்கள் ஒரு சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல. அவர் சிறந்த ஆராய்ச்சியாளரும்,பொது நல ஆர்வலரும் கூட.
மறக்கடிக்க பட்ட உலக - இந்திய முஸ்லீம்களின் புரட்சிகரமான வரலாறுகளை மீட்டெடுத்து முஸ்லீம்களிடம் ஆவணப்படுத்துவதில் குறிப்பிடதக்க ஒருவர். கல்வியில் முஸ்லிம்களின் முன்னேற்றமே அணைத்து பிரச்சனைகளுக்குமான தீர்வு என்று கூறி ..


2030ல் இஸ்லாமிய தமிழ் சமூகம் என்ற இலக்கோடு திட்டத்தை வகுத்து இதற்க்காக உலகம் முழுவதும் பயணித்து சமூக நீதி அறக்கட்டளை சார்பாக கல்வி ,பொருளாதாரம் பற்றிய கருத்தரங்கங்களை நடத்தி வருகிறார்.


மேலும் பொருளாதாரம் இருந்தும் தொழில்தொடங்க வழியில்லாமல் தவிக்கும் சகோதரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிவருகிறார்கள். இஸ்லாமிய உலககல்விகூடங்கள் பள்ளிகள் -கல்லூரிகள். இவரின் முயற்சியால் பல ஊர்களின் தொடங்கப்பட இருக்கிறது இன்ஷாஅல்லாஹ். 


அல்லாஹ் அவரின் முயற்சியை வெற்றிபெற செய்வானாக !   


சமுதாய நலனில் அக்கறை உள்ளவரா நீங்கள் ?

சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்று ஆதங்கபடுகிறீர்களா ?

நீங்கள் கேட்க வேண்டிய எழுச்சி மிகு உரை - கேளுங்கள் செயல்படுங்கள்.























ஜசாகல்லாஹ் :  adirainirubar.blogspot.com

Friday, January 20, 2012

அறிமுகம்-தையல் பயிற்சி மையம் (பெண்களுக்கு மட்டும்)



பயிற்சி காலம் : மூன்று மாதம்.


பயிற்சி நேரம் : மதியம் 3 மணி முதல்–5 மணி வரை (தினமும் இரண்டு மணி நேரம்).

பயிற்சி பெண்களுக்கு மட்டும் - பெண் தையல் ஆசிரியைகளை கொண்டு நடத்தப்படுகிறது

மேலும் விபரங்களுக்கு தொடர்புக்கு  : 
உரிமையாளர் : Ashraf Noorul Ameen
போன் : 82204-27744
ஈமெயில் : ashraf_designer@live.com

(குறிப்பு : இந்த தையல் பயிற்சி மையத்தினர் கேட்டுகொண்டதன் அடிப்படையில் இது பெண்களுக்கு பயனளிக்ககூடும் என்ற எண்ணத்தில் வெளியிடுகிறோம் மற்றபடி பயிற்சி மையத்தை பற்றிய விசயங்களை நேரடியாக விசாரித்துகொள்ளுங்கள்)

Wednesday, January 18, 2012

நாகூர் விடுதலைச் சிறுத்தை கட்சியின் நகர செயலாளர் வெட்டி கொலை..!



காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பகல் 2:30 மணிக்கு, நாகூர் விடுதலைச் சிறுத்தை கட்சியின் நகர செயலரை, மர்ம கும்பல் விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்தது. இருவர் படுகாயத்துடன் காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கொலை நடந்த இடத்தில் பதட்டம் நீடிப்பதால் போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாகூர் அமிர்தாநந்தமயி சுனாமி குடியிருப்பில் வசித்து வந்தவர் பக்கிரிசாமி மகன் ரங்கையன்(33). இவர் நாகூர் விடுதலைச் சிறுத்தை கட்சியின் நகர செயலாளராக இருந்துவந்தார்.

ரங்கையன் தனது நண்பர்கள் ஜெய்பிரகாஷ், விஜய், குருமூர்த்தி, சந்துரு ஆகிய நான்கு பேருடன், இன்று பகல் 2.30 மணிக்கு, காரைக்கால் அம்பாள் சத்திரம் மேல ஓடுதுறை சாலையில் உள்ள தனியார் பார் மாடி பகுதியில் மது அருந்திகொண்டிருந்தனர்.

அப்போது இவர்களை நாகூரிலிருந்து பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஒன்று, திடீரென புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். மர்ம கும்பலிடம் இருந்து தப்பிக்க, ரங்கையன் மாடியிலிருந்து குதித்து காரை நோக்கி ஓடியுள்ளார். ரங்கையனை விரட்டி சென்ற மர்மகும்பல் விடாமல் விரட்டி, அரிவாள் மற்றும் இரும்பு கம்பிகளால் ரங்கையன் தலையில் பலமாக தாக்கி கொலை செய்தனர். தொடர்ந்து மற்றவர்களை விரட்டி காயப்படுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இந்த திடீர் தாக்குதலில் ரங்கையன் அதே இடத்தில் பலியானார். ஜெய்பிரகாஷ், விஜய் ஆகிய இருவர் படுகாயத்துடன் காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்கப்பட்டுள்ளனர். கொலை நடந்து ஒரு மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால், காரைக்கால் மற்றும் நாகூர் விடுதலைச் சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் சென்ற பேருந்து மற்றும் வாகனங்களை தாக்கத்துவங்கினர்.





இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் நேற்று மதியம் நாகூர் பெரிய கடை தெருவில் வந்து கடையை மூடும்படி பிரச்சனை செய்திருக்கிறார். அம்மு சில்க் போன்ற சில கடைகளையும் தாக்கியுள்ளனர். 
தாக்கப்பட்ட அம்மு சில்க் கடை 


கொலை செய்யப்பட்டது காரைக்காலில் - கொலை செய்தவர்கள் கட்சி விரோதத்தில் செய்திருக்கிறார்கள். அதுக்கு நாகூர் கடைத்தெருவில் வந்து ரவுடி வேலையை பார்த்தால் நியாயமா ?


விளைவு : நாகூர் சகோதரர்கள் ஒன்றுகூடி தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு அந்த ரவுடிகளை அடித்து துரத்தி இருக்கிறார்கள்.
காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சியை சார்ந்த ரவுடிகளை கைது செய்துள்ளது. 


இந்த சம்பவத்தால்  நாகூரிலிருந்து நாகை – காரைக்கால் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். பதட்டமான சூழ்நிலை தொடர்ந்ததால் மெயின் ரோட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விபரம் அறிந்த மாவட்ட போலிஸ் எஸ்.பி வெங்கசாமி இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, மர்த்தினி, ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விடுதலைச் சிறுத்தை கட்சி பிரமுகர்களுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மதுபார் இழுத்து மூடப்பட்டது. தொடர்ந்து மர்ம நபர்கள் மற்றும் அவர்கள் வந்த வாகனம் குறித்து போலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் தற்போது நிலைமை இயல்பு நிலைக்கு வந்துள்ளது.






Related Posts Plugin for WordPress, Blogger...