(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Showing posts with label பாபரி மஸ்ஜித். Show all posts
Showing posts with label பாபரி மஸ்ஜித். Show all posts

Tuesday, December 6, 2011

ஷஹீதாக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதுக்காக உங்களின் பங்களிப்பு என்ன?


அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனைவிடப் பெரிய கொடுமைக்காரன் யார்? (திருக் குர்ஆன் 2:114)
அன்புச் சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.
நீங்கள் ஒரு தனி நபராகவோ ஒரு மக்கள் குழுவினராகவோ இருக்கலாம். மனித சமுதாயத்திற்கு சிந்தனைச் சுதந்திரத்தையும் சிறப்பு அந்தஸ்தையும் கொடுப்பதற்காக, அதனைப் பலதெய்வக்கொள்கையிலிருந்து விடுவிக்கும் நோக்கத்துடன், மஸ்ஜிதுகள் நிறுவப்படுகின்றன. இவ்வாறு நிறுவப்பட்டு ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்குப்பின் பாபரி மஸ்ஜித் 1992ம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் திகதி ஹிந்துத்துவ வெறியர்களால் இடிக்கப்பட்டது. ஷஹீதாக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை புனர் நிர்மாணம் செய்வதற்கு நீங்களும் பல்வேறு வழிகளில் பணியாற்றலாம்!
உங்களின் சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் இதோ சில ஆலோசனைகள்:
1. துஆ
பாபரி மஸ்ஜிதை அதேஇடத்தில் திரும்பவும் கட்டியெழுப்புவதற்கான தேவைகளை நிறைவேற்ற முஸ்லிம் உம்மத்திற்கு உதவி அருளுமாறு எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலாவிடம் துஆ (பிரார்த்தனை) செய்யுங்கள். இதற்கு எதுவும் செலவாகாது, இதற்காகப் பொதுஅறிக்கைகள் எதுவும் தேவையில்லை. தினந்தோறும் உங்கள் துஆக்களில் பாபரி மஸ்ஜிதை நினைவுபடுத்திக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
2. உண்மைத் தகவல்களை படியுங்கள்; அதனைப் பற்றி எழுதுங்கள்.
பாபரி மஸ்ஜித் சோக நிகழ்ச்சி பற்றி உங்களுக்குத் தெரியாமலிருந்தால், அதைப் பற்றி வாசித்தறியுங்கள். ஷரீஅத்தில் மஸ்ஜித்களின் அந்தஸ்து பற்றியும், பாபரி மஸ்ஜிதின் நிர்மாணம் முதல் நிர்மூலம் வரையிலான வரலாறு பற்றியும் அறியலாம்; இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் (இந்திய முஸ்லிம்களின் சம்மேளனம்) என்ன நிலை எடுத்துள்ளது என்பது பற்றி தெளிவடையலாம். இந்துத்துவ சக்திகள் முதலில் அதனை அடையாளப்படுத்தி, அதன்பின்னர் முழு உலகிற்கும் முன்னிலையிலும் அதனை சுக்கு நூறாக தரைமட்டப்படுத்தியது ஏன் என்பது பற்றி அறிய முயலுங்கள். அது, பாபரி மஸ்ஜித் அதே இடத்தில் மீண்டும் நிர்மாணம் செய்யப்படுவதே மிக முக்கியமாகும் என்பதைப் பற்றிய தெளிவான விளக்கத்தை உங்களுக்கு தரும்.
இந்திய அரசின் பாதுகாப்பின்கீழ், பாபரி மஸ்ஜிதின் மையப் பகுதியில் ராமர் சிலைகளுக்கு வழிபாடு நடத்தப்பட்டு வந்தாலும், பாபரி மஸ்ஜித் இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கு சட்டரீதியாகவும், சரித்திரரீதியாகவும் எந்த ஓர் ஆதாரமுமில்லை. மஸ்ஜிதை ஷஹீதாக்கிய கரசேவகர்கள் விசேஷ ரயில்களில் தத்தம் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்பதும் முக்கியக் குற்றவாளிகள் அரசியலில் இன்றும் அதிகாரம் செலுத்தி வருகிறார்கள் என்பதும், அதே நேரத்தில் இந்த மனிதாபிமானமில்லாத அக்கிரமத்திற்கெதிராக அமைதி வழியில், சட்டத்திற்குட்பட்டு வீதிகளில் குழுமி கண்டனம் தெரிவித்த முஸ்லிம்களுள் ஏறத்தாழ 2000 பேரை காவல்துறை சுட்டுக் கொன்றதும் அப்பட்டமான உண்மைகளாகும்.
3. நீங்கள் வாழும் பகுதிகளிலுள்ள மஸ்ஜித்களில் நிகழ்ச்சிகள் நடத்தலாம்.
முஸ்லிம்களில் பலதரப்பட்டவர்கள் ஒரேசமயத்தில் மஸ்ஜிதில் ஒன்று கூடுவது வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்குத்தான் என்பதால், குத்பா பிரசங்கத்தைப் பயன்படுத்தி, பாபரி மஸ்ஜித் பற்றி விளக்கிக் கூறலாம்; இயன்ற வழிகளில் பாபரி மஸ்ஜித்துகாக மக்களின் ஆதரவைக் கோரலாம்.
4. ஊடகங்கள் மூலம் உண்மைச் செய்தியை உலகறியச் செய்யுங்கள்:
பாமர மக்களுக்கு வரும் செய்திகள் எல்லாம் பக்கச் சார்புள்ள முஸ்லிமல்லாத செய்தி ஊடகங்கள் மூலமாக வரும் உண்மைக்கு மாறான திரிக்கப்பட்ட செய்திகள்தான். இந்த நிலையில், பாபரி மஸ்ஜிதின் உண்மை நிலையை மக்கள்முன் எடுத்து வைக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். இதற்கு எலக்டிரானிக்/அச்சு ஊடகங்களில் பணியாற்றும் உணர்வுள்ள முஸ்லிம்கள் முன்வர வேண்டும். இணையத்தின் மூலம் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதாருக்கும் பாபரி மஸ்ஜித் பற்றிய உண்மை நிலையை எடுத்துச் சொல்லி அவர்களின் ஆதரவைக் கோரலாம்.
5. உங்கள் ஊர்களில்/நகரங்களில் "பாபரி மஸ்ஜித் புனர் நிர்மாணக் குழுக்களை" நிறுவுங்கள்:
பாபரி மஸ்ஜிதைப்பற்றி மக்களுக்கு அறியத்தருவதற்கும் ஹிந்துத்துவ சக்திகளின் அக்கிரமங்களால் பாதிக்கப்பட்ட உங்கள் பகுதியிலுள்ள முஸ்லிம்கள் சட்ட, தார்மீக ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் இக்குழுக்கள் பயன்படும். கருத்தரங்குகள், பொது நிகழ்ச்சிகள், நிதி சேகரிப்பு, கல்வி நிறுவனங்களில் இது தொடர்பான கூட்டு நிகழ்ச்சிகள், செய்தி மடல்கள் வாயிலாகச் சமுதாயத்தினருக்கு விழிப்பூட்டுங்கள்.
6. பொது மக்கள் அபிப்ராயத்தை உருவாக்குங்கள்:
மனித உரிமை குழுக்கள், அரசியல் கட்சிகள், திறந்த மனதுள்ள முஸ்லிமல்லாத குழுக்கள் போன்றவர்களுடன் தொடர்பு கொண்டு பாபரி மஸ்ஜித் விவகாரத்தைப் பற்றிய கருத்தோட்டத்தை அவர்கள் மத்தியில் உண்டாக்குவது முஸ்லிம்களின் பொறுப்பாகும். கருத்தொற்றுமை கொண்டவர்களுடன் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிகள் நீதி வேண்டிப் போராடும் முஸ்லிம்களுக்கு வலுவைக் கொடுக்கும்.
7. ஹிந்துத்வ சக்திகள் மத்தியில் அழைப்புப்பணியும்:
தேசிய அளவில் மிகப்பெரும் சோக நிகழ்ச்சியான பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு நீங்கள்தான் பொறுப்பாகும். உங்களின் சதித்திட்டத்தின் காரணமாக நீதிக்குப் புறம்பான செயலை நீங்கள் செய்ததாக இந்திய முஸ்லிம்கள் உறுதியாக நம்புகிறார்கள். மரணத்திற்குபின் வரும் மறுமை நாளில் இறைவனின், கேள்வியான "எந்த உரிமையையும் அனுமதியையும் கொண்டு இஸ்லாத்தின் அடையாளமாகிய மஸ்ஜிதை இடித்தீர்கள்? எனது அடியார்களைக் கொன்று குவித்தீர்கள்?" என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்பதையும் அவர்களுக்கு எச்சரிக்க வேண்டும். குருட்டுக் குறிக்கோள்களுக்குப் பாடுபடுவதை விடுத்து, எங்களையும் உங்களையும் படைத்த எல்லாம் வல்ல இறைவன் பக்கம் திரும்புங்கள் என்ற செய்தியை அவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் நூல்களை அவர்களுக்கு அளிக்க வேண்டும். அவர்களின் நேர்வழிக்காக தினமும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்.
8. முஸ்லிம் சமுதாயத்தினருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்:
முஸ்லிம்கள் உறுதியாக நின்று அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் மென்மையான குறிக்கோளற்ற அணுகுமுறையைக் கையாண்டால், அது இந்தியாவில் அமைதியை நிலவச் செய்யும் எனப் பலர் நம்புகின்றனர். அவர்களுக்கு நாங்கள் தெரியப்படுத்துவது என்னவென்றால் அல்லாஹ்வின் அருளால் எங்களின் ஜிஹாத் உணர்வுதான் அவர்கள் ராமர் கோவில் கட்டுவதையும், மேலும் ஏனைய மஸ்ஜித்களைத் தாக்கி அழிப்பதையும் முஸ்லிம்களைத் தாக்குவதையும் விட்டு நிறுத்தி வைத்திருக்கிறது. இத்தருணத்தில் இவ்விவகாரத்தில் நாம் தளர்வு காட்டினோமென்றால், ஹிந்துத்துவ சக்திகள் தங்கள் அநீதிகளையும் அக்கிரமங்களையும் மறுபடியும் கட்டவிழ்த்து விடுவதற்கு உற்சாகமளிப்பதாய் அமைந்து விடும். எனவே எந்நேரமும் விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.
அல்லாஹ்வின்மீது மட்டும் முழு நம்பிக்கை வைத்து, அல்குர்ஆன், அல்ஸுன்னாவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நாம் உறுதிப்பாட்டுடனும் உத்வேகத்துடனும் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு நமது கருத்தை நிறுவதற்காக மனப்பூர்வமாகவும், மன உறுதி தளராமலும் உழைப்பது கொண்டு மட்டுமே பாபரி மஸ்ஜிதை மீண்டும் புனர் நிர்மாணம் செய்யலாம்! இம்மை மறுமை வெற்றியை அடையலாம்!
முஸ்லிம்களே நாம் விடாமல் நீதிக்காகப் போராடுவோம்.!
அல்லாஹ்வின் ஆணையை ஏற்றுச் செயல்படுவோம்.!
இஸ்லாத்தையும் இஸ்லாத்தின் அடையாளங்களையும் பாதுகாக்கவிடப்படும் அழைப்பிற்குத் தயாராக இருப்போம்.
“அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன.எனவே அவற்றில் அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்" (அல்குர்ஆன் 72:18)

நன்றி: இக்ரஹ்

Friday, October 1, 2010

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு : குரங்குக்கு பங்குவைத்த கதை..!!

ஒருவரின் வம்சாவளியாக வந்த இடத்தை இன்னொருவர் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதில் வேறொருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர்தான் வீட்டுவரி உள்பட அந்த இடத்துக்கான எல்லா பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று பிரச்னை எழுகிறது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. மூன்று தரப்பினரிடமும் பட்டாவோ, பத்திரமோ இல்லாத நிலையில், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளக் கட்டைப் பஞ்சாயத்தில் முடிவாகிறது.

 
கட்டைப் பஞ்சாயத்துக்கு இது சரி. ஆனால், நீதிமன்றத்திலும் இப்படியெல்லாம் ஒரு தீர்ப்பு எழுதப்பட முடியுமா? முடியும் என்பதை அயோத்திப் பிரச்னையில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளை கோர்ட்டு இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கியது. 3 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். தீர்ப்புகளின் முக்கிய அம்சம்.

1. சர்ச்சைக்குரிய 2.5 ஏக்கரை மூன்றாக பிரிக்க வேண்டும்.

2. மூன்றில் ஒரு பங்கு பாபர் மசூதி கமிட்டிடம் ஒப்படைக்கப்படவேண்டும்.

3. மற்றொரு பங்கு நிர்மோகி அகாரா அமைப்பிடம் தர வேண்டும்.

3. மூன்றாவது பங்கு ராமர் கோவில் கட்டுவதற்கான புதிதாக அமைக்கப்படும் அறக்கட்டளைக்கு வழங்கப்படும்.

4. மூன்றாக பிரிக்கும் வரை தற்போதை நிலை தொடர நீதிமன்றம் உத்தரவு.

5.சர்ச்சைக்குரிய இடத்திற்கு முழு உரிமைக்கோரிய சன்னி வக்பு நிர்மோகி அகரா மனு நிராகரிப்பு.





சின்ன புள்ளைங்க முட்டாய்க்கு  சண்ட போட்டா  கூறு போட்டு குடுப்போமே .. அதை விட கேவலமாகி விட்டது தீர்ப்பு . அதுலகூட சமமா பிரிச்சி குடுப்போம்.

அநீதியான கட்ட பஞ்சாயத்து  தீர்ப்பை தந்து அசிங்க பட்டு நிற்கிறது இந்திய நீதிதுறை..........

ஆவணத்தின்படியும், அனுபோக பாத்தியதையின் அடிப்படையில் அந்த இடம் முஸ்லிம்களுக்கு உரியது என்பது உலகம் அறிந்த உண்மை.
பள்ளிவாசலில் 1949ல் சிலை வைத்ததையும் , 1992ல் பாபர் மசூதியை இடித்து தள்ளியதையும் இந்த தீர்ப்பின் மூலம்  ஊக்குவித்து உள்ளது நீதிதுறை.

என்னங்க  கொடும இது ? 
உலகமே  பார்த்துகொண்டு இருக்க 400 வருசமா இருந்த ஒரு பள்ளிவாசல் அதுல சிலையை வைப்பார்களாம்  , அத திட்டம் போட்டு ஒரு தீவிரவாத கும்பல் உலக மீடியாக்களின் முன்னிலையில்  இடிப்பார்களாம்..
சரி இடிச்சிட்டாங்க என்று கோர்ட்ல கேஸ் போட்டு ..  
இடித்தவர்களை கைது செய் - பள்ளியை கட்ட அனுமதி தா ? என்றால் ….


ம்ம்ம் அதெல்லாம் முடியாது இடிச்சவனுக்கும் சேர்த்து தான் பங்குபோட்டு தருவோம்  என்றால் என்னத்த சொல்வது.. அதுலையும் மூன்றில் ஒரு பகுதி ?

இதுல தீர்ப்பின் வேடிக்க என்ன வென்றால்…
இதில் மசூதியின் மையப் பகுதி அமைந்திருந்த இடத்துக்குக் கீழே உள்ள இடம் ராமர் பிறந்த இடம் ??  என்பதால், அந்த இடத்தில் கோவில் கட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், (இந்த நிலத்துக்கு உரிமை கோரும் இந்து அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து அறக்கட்டளை அமைத்து இந்த நிலத்தைப் பெற்று கோவில் கட்டிக் கொள்ளலாம்) மீதமுள்ள இடத்தை அங்கு ஏற்கனவே சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகராவிடமும், பாபர் மசூதி கமிட்டியிடமும் பிரித்து வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்…

>பச்சை பொய் என்று சொல்வார்களே அது இது தாங்க... 
ராமர் என்று ஒருவர் வாழ்ந்தாரா  என்பதே ஆதாரம் இல்லாத , உலக வரலாற்றிலே நிரூபிக்க படாத ஒன்று ...
ஒருவேளை ராமர் பிறந்தார் என்று வைத்து கொண்டாலும் .. பாப்ரி மஸ்ஜித் மிம்பர்  இருந்த இடத்தில் தான்  பிறந்தார் என்பதற்கு என்னப்பா ஆதாரம் ?? 
யாராவதுவந்து  ஒரு ஆதாரத்த சொல்லுங்க  பார்போம்??  ..  

சரி தீர்ப்பு மூணு பேரு சேர்ந்து கொடுக்கிறாங்க.
ஒருத்தரு  பாப்ரி மஸ்ஜித் ராமர்கொவிலை  இடித்து கட்டபட்டது என்பதற்கு எந்த  ஆதாரம் இல்லை என்கிறார் ...!!
மற்ற இருவரும் பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில் தான்  ராமர் பிறந்தார் என்கிறார்கள்  .!!
என்ன காமெடி கீமடி பண்ணுகிறார்களா ? 

ஆதாரம் இல்லை என்று ஒருவர் சொல்லும்போது , இதோ இருக்கு எடுத்து போடாமல் எந்த அடிப்படையில் மற்றவர்கள் தீர்ப்பு வழங்குகிறார்கள் ?!!
என்ன இது நாட்டாம தீர்ப்பா ? இதுக்கு எதுக்குப்பா அறுபது வருஷம்...?

முஸ்லிம்கள் நம்பி  இருந்த நீதி துறையே அநீதி இழைத்தால்... வருங்கால நாட்டின் நிலைமை  கேள்வி குறியாகிவிடும்.
இதில் அரசியல் சூழ்ச்சிகள் விளையாடி இருப்பது சந்தேகத்திற்கு இடமில்லாதது.

இருப்பினும் இந்தத் தீர்ப்பே இறுதியானதல்ல..உச்ச நீதிமன்றம் அறிவிக்கும் தீர்ப்பே இறுதியானதாகும். வக்ப் வாரியம் மேல்முறையீடு செய்ய போகிறது இன்ஷால்லாஹ் நீதிக்காக இறுதிவரை  போராடுவோம் புதிய உத்வேகத்தோடு ...

புது சட்டம் :  யாரு வீட்ட வேணாலும் , யாரும் இடிக்கலாம்…

யாராவது  கேஸ் போட்டா ?..நாட்டாம தீர்ப்பு தான்...

நாட்டாம  நீதிபதி :  ஏன்  பா அவன் வீட்ட  இடிச்ச ? 

குற்றவாளி :  நாட்டாம அய்யா ! நாட்டாம அய்யா !  இவன் வீடு கட்டுறதுக்கு முன்னாடி இங்கதான் எங்க தாத்தா ஓட தாத்தா பொறந்தாரு .. மொரப்படி தாத்தா சொத்து பேரனுக்கு தான் சொந்தம் அது தான் இடிச்சேன்.. நீங்க வென அஸ்திவாரத்த நொண்டி பாருங்க !!    இதுக்கு முன்னாடி தாத்தா வீடு இருந்தது தெரியும்.
இதுக்கு சாட்சி இதோ இவருதான் .

நாட்டாம நீதிபதி :  இவரு யாருப்பா !
நாட்டாம  நீதிபதி : இவரும் ஒரு வகைல பேரன் தான் எங்க தாத்தா ஓட தாத்தாக்கு .இவரு இந்த வீட இடிச்சதுக்கு  உதவி செய்தாரு 

நாட்டாம  நீதிபதி : (வீட்டின் உரிமையாளரிடம் )இது உன்னுடைய ஊடு என்பதற்கு என்ன ஆதாரம் பா ? 

கேஸ் போட்டவர் :  இங்க தானுங்க எங்க பரம்பரையே வளந்தது... பல வருசமா இங்க தானுங்க இருக்கோம்.  பதிவு செய்த வீட்டு பத்திரம் இருக்கு அய்யா ! 
  
நாட்டாம நீதிபதி : அப்டியா ! இப்ப உன்னுடைய வீடு , முன்னாடி அவன்  தாத்தா வீடு .. அதனால பிரச்சன வென .. இந்த வீட்ட நீ பாதி, அவன் பாதி, அவன் கூட கூட்டி வந்த அவனுக்கு  ஒரு பாதி  எடுத்துக்குங்க. 
இப்ப யாருக்கும் பிரச்சன இல்லைல... எப்படி நாட்டாம தீர்ப்பு ?!!!
------------------------------------------------------------------------------------------
முன்னால் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ் லிப்ரஹான் அவர்கள் இந்த தீர்ப்பு அரசியல் தனமானது நியாயத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு அல்ல என்றும் மேலும் இந்த தீர்ப்பை பார்க்கும் போது குறங்குகள் தங்களுக்கு பங்கிட்டு கொடுத்து கொள்வதை போன்று உள்ளது என பேட்டியளித்துள்ளார்.லிப்ரான் அவர்கள் பாபர் மஸ்ஜித் இடிப்பு பற்றி விசாரிப்பதற்கு மத்திய அரசாங்கத்தால் கடந்த 16-12-1992 அன்று நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது

Wednesday, September 22, 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பும் - நாம் செய்ய வேண்டியதும் !!

அன்பு சகோதரர்களே....

அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)

இந்தியா முழுவதும் பதட்டம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.. டெல்லி, உத்தர பிரதேசம், குஜராத் , பாம்பே என முக்கிய நகரங்கள் பீதியில் இருந்தன.காரணம் பாப்ரி மஸ்ஜித் விவகாரம் இறுதி தீர்ப்பு சென்ற  வெள்ளிகிழமை வெளியாக இருந்தது.

இந்நிலையில் வெள்ளிகிழமை வழங்கப்படுவதாக இருந்த அயோத்தி தீர்ப்பின் நிலை செப்டம்பர் 28 ல் முடிவு எடுக்கபடும் என்று    உத்தரவிட்டது  உச்சநீதிமன்றம்.
செப்டம்பர் 28ம் தேதி உச்சநீதிமன்றம் தெரிவிக்கப் போகும் உத்தரவைப் பொறுத்தே அயோத்தி தீர்ப்பின் எதிர்காலம் இருந்தது. அதன் படி  இன்று அயோத்தி நில விவகாரத்தில் தீர்ப்பை வெளியிட உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. இதையடுத்து வரும் 30ம் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கவுள்ளது.


60 வருடங்களாக நடந்து வரும் இவ்வழக்கு இப்போதாவது முடிவை எட்டும் என்று பார்த்தல் தள்ளி கொண்டே போகிறது...

நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் முடிவு எட்டுமா அல்லது மீண்டும் பதட்டத்தை கருத்தில் கொண்டு இழுத்தடிக்க படுமா என்று தெரியவில்லை..

எப்போது தீர்ப்பு வந்தாலும் , எப்படி தீர்ப்பு வந்தாலும் முஸ்லிம் சமுதாயம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இதில் யாருக்கு சாதக பாதகமாக இருந்தாலும் பாதிப்பு என்பது இஸ்லாமியராக இருக்கும் நமக்குத்தான் என்பதை கடந்த கால சம்பவங்களில் நாம் கண் கூடாக கண்ட மறுக்க முடியாத உண்மையாகும் .ஆதலால் தீர்ப்புகளின் எதிர் விளைவுகளை நாம் எதிர் கொள்ள ஆயத்தமாகவேண்டும்.

தீர்ப்பை பொறுத்தவரை கீழ்காணும் மூன்று வகைகளில் ஏதாவது ஒரு வகையில் தீர்ப்பு அமையும் என்று எதிர்பாக்கபடுகின்றது

தீர்ப்பு 1 : முஸ்லிகளுக்கு சாதகமான தீர்ப்பு - (மீண்டும் மஸ்ஜித் கட்டலாம் )
தீர்ப்பு 2 : ஹிந்துத்துவ ஆர் .எஸ் .எஸ் போன்ற இயக்கங்களுக்கு சாதகமான தீர்ப்பு. (கோவில் கட்டலாம்)-பெரும்பாலான நடுநிலையான ஹிந்து சகோதர்கள்
இந்த விஷயத்தில் முஸ்லிம்களுக்கு சாதகமாவே சாட்சியம் அளிக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

தீர்ப்பு 3 : இது அரசு சொத்து யாரும் உரிமம் கொண்டாட முடியாது
என நடுநிலையாக பிரச்சனையை கருத்தில் கொண்டு வழங்கப்படும் தீர்ப்பு


இந்த தீர்ப்பு நமக்கு சாதகமா பாதகமா என்பது இறைவன் ஒருவனுக்கே வெளிச்சம் ஆனாலும் இந்த தீர்ப்புக்கு பின் ஒருக்கால் பிரச்சனை என்று வருமேயானால் வரக்ககுடிய விளைவுகளை எதிர் கொள்ள நாம் தயாராக இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

நாம் செய்ய வேண்டியது என்ன :

1 . தீர்ப்பு சத்தியத்தின் பக்கம் இருக்க வேண்டும் என்றும் ,அதனால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வலிமையை முஸ்லிம்களுக்கு தரவேண்டும் என்றும் அல்லாஹ்விடம் நாம் அனைவரும் பிரார்த்திக்கவேண்டும்.தீர்ப்பு வெளியான நிமிடத்தில் இருந்து இதன் பதட்டம் குறையும் வரை நாம் மிக விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

2.தீர்ப்பு அன்று வெளியூருக்கு செல்வதை தவிர்த்து கொள்ள வேண்டும். நமது பிள்ளைகள் வெளியூருக்கு போய்-வந்து படிப்பவர்களாக இருந்தால் அன்று விடுமுறை எடுத்துகொள்வது சிறந்தது. முக்கியமாக பெண்கள் அன்று பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அவசர தேவை இருந்தால் உரிய ஆண் துணையோடு செல்ல வேண்டும்.

3.இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்பட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. இது போன்ற சந்தர்ப்பங்கள் கலவரகாரர்களால் எதிர்பாக்கபடுகின்றன அல்லது ஏற்படுத்தப்படுகின்றன.

4.ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கள் பிரச்சனையை தூண்டும் முகமாக செய்யல்பட்டால் அதை உடனே காவல் துறைக்கு தெரியபடுத்தி முறியடிக்க வேண்டும்.

5 . ஒரு வேலை இதையும் தாண்டி நமக்கு , நம் உடைமைக்கு ஆபத்து நேர்ந்தால்.. தற்காப்பு நடவடிக்கையில் இறங்குவதை தவிர வேறு வழி இல்லை நமக்கு... நம் உயிரை கொடுத்தாவது நம்மை, நம் உடமையை காக்க வேண்டும். ஆனால் ஒருகாலும் நாம் வரம்பு மீறக்கூடாது. இன்ஷால்லாஹ்.

(9:51: ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!)

நாம் செய்ய கூடாதது என்ன :


1 . இரவு நேரங்களில் வீதியில் கூட்டம் போட்டு பேசிகொண்டிருக்க கூடாது. ஏனெனில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் காவல்துறை கைது நடவடிக்கையும் நடக்கும்.

2 . தீர்ப்பு எப்படி வந்தாலும் - நம் சகோதர்கள் யாரும் பிரச்சனையை தூண்டும் முகமாக நடந்து கொள்ள கூடாது. முஸ்லிம் அல்லாதவர்களும் நம் சகோதர்களே ! ஹிந்து என்று சொல்லிக்கொண்டு ஆர் எஸ் எஸ் போன்ற இயக்கங்கள் செய்யும் தீவிரவாத செயல்களுக்கு அப்பாவி ஹிந்துக்கள் பொறுப்பாளிகள் அல்ல..

ஒரு முஸ்லிமான நாம் எந்த நிலையிலும் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். யாருக்காகவும் , எதற்காகவும் கலங்க கூடாது.

அல்லாஹ்வே நமக்கு போதுமானவன் இல்லையா ?

நாம் இஸ்லாத்தை கொண்டு செல்ல வேண்டிய மக்கள் நிறைய இருகிறார்கள் பாப்ரி மஸ்ஜிதை இடித்தவர்களே இஸ்லாத்தில் இணைந்த நிகழ்வுகள் எல்லாம் அல்லாஹ் நிகழ்த்தி காட்டி இருக்கிறான். ஆதலால் தீர்ப்பு எப்படி வந்தாலும் சகிப்பு தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும்.


(விசுவாசிகளே!) உங்களுக்கிடையிலும்,இன்னும் நீங்கள் எவர்களிருந்து விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும், மேலும், அல்லாஹ் பேராற்றலுடையவன்; அல்லாஹ் மிகவும் மன்னிப்வன்; மிக்க கிருபையுடையவன்.(60:7)

மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.( 60:8)


இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது.தீர்ப்பு எப்படி வந்தாலும் , யாருக்கு சார்பாக வந்தாலும் மீண்டும் அது எந்த தரப்பிலாவது மேல் முறைஈடு செய்வார்கள் ஆதலால் இன்னொரு அரை நூற்றாண்டுகளுக்கு கூட இந்த வழக்கை இழுத்தடிப்பு செய்தாலும் ஆச்சரியபடுவதற்கு ஒன்றுமில்லை.

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்;
(ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (திருக்குர்ஆன் 3:200)

சூழ்ச்சிகாரனக்கெல்லாம் சூழ்ச்சிக்காரன் அல்லாஹ்..
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.


NAGOREFLASH

Wednesday, December 16, 2009

பாபரி மஸ்ஜித் இடிப்பு: 68 குற்றவாளிகள் பிரிட்டனுக்குள் நுழைய தடை?

இந்தியாவின் மாண்பை குலைத்து சர்வதேச அளவில் இந்தியர்கள் அனைவரையும் வெட்கித்தலைகுனிய வைத்த அந்த 68 குற்றவாளிகளின் மீதான பிடி இறுகுகிறது.

இந்தியாவின் இறையாண்மை நீதிபரிபாலனம், மதசார்பின்மை, ஹிந்து மக்களின் பெருந்தன்மை அனைத்தின் மீதும் பெரும் நம்பிக்கை வைத்திருந்த முஸ்லிம்களை வேதனைப்படுத்திய அந்த கடப்பாரை கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரிட்டன் முன்னணி மனித உரிமை அமைப்புகள் நாடெங்கும் கோரிக்கை விடுத்து வருகிறது. பாப்ரி மஸ்ஜித் இடிப்புசதி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பரான் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றவாளிகளை மட்டுமின்றி மேலும் பலரை குற்றவாளிப்பட்டியல் சேர்க்க வேண்டுமென்று கோப கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.


லிபரான் சுட்டிக்காட்டிய அந்த அறுபத்தெட்டு அயோக்கியர்களையும் பிரிட்டனுக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என பிரிட்டனின் முன்னணி மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

பாப்ரி மஸ்ஜித் இடிப்புக் குற்றவாளிகள் எதிர்காலத்தில் பிரிட்டனில் நுழைய அனுமதிக்கப்பட்டால் அது அந்த நாட்டின் கவுரவத்திற்கே இழுக்காகும் என பிரிட்டனின் முன்னணி சமூக நல அமைப்புகளில் ஒன்றான கவுன்சில் ஆஃப் இன்டியன் முஸ்லிம்ஸ் அறிவித்துள்ளது.

லிபரான் ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்ட குற்றவாளிகளை பிரிட்டனில் நுழைய ஒரு போதும் அனு மதிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க பாப்ரி மஸ்ஜித் இடித்தசதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் குற்றவாளிகள் என்பதை பரான் அறிக்கை மூலம் உலகம் கண்டது. பரான் கூறிய குற்றவாளிகள் மஸ்ஜித் இடிப்பிற்காக மட்டும் குற்றம் சாட்டப்பட்டவர்களல்ல, முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து கலவரங்களையும் நடத்தி ஆயிரக் கணக்கான அப்பாவி முஸ்ம் களை படுகொலை செய்வதற்கும் மூலகாரணமாக விளங்கிய அவர்களை பிரிட்டிஷ் மண்ணில் வரவேற்க வேண்டாம். அவ்வாறு வரவேற்றால் அது மதவாதத்தை வரவேற்பதாக அமையும் என பிரிட்டிஷ் இந்திய முஸ்லிம் கவுன்சின் தலைவர் முஹம்மது முனஃப்ஷீகா தெரிவித்திருக்கிறார்.

இந்திய அரசும் வேக நடவடிக்கை கள் வாயிலாக உடனடியாக தகர்ப்புக்குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

கவுன்சில் ஆஃப் இந்தியன் முஸ்லிம்ஸ் அமைப்பின் அறிக்கையினைத் தொடர்ந்து பிரிட்டனில் செயல்பட்டு வரும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் மஸ்ஜித் இடிப்புக் குற்றவாளிகளுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டுள்ளன. மஸ்ஜித் இடிப்புக் குற்றவாளிகளை பிரிட்டனுக்குள் நுழைய விடக்கூடாது என்ற போர்க்குரல் எழத் தொடங்கியதைத் தொடர்ந்து கடப்பாரைக்கும்பல் உச்ச கட்டபீதியில் இருப்பதாக தகவல் கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனில் மனித குலவிரோதிகள் நுழைய அனுமதி மறுக்கப்படுவது இது முதல்முறையல்ல 2006-ஆம் ஆண்டே குஜராத் படுகொலைகளின் சூத்ரதாரியான நரேந்திர மோடிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முதல் மோடிக்கு அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் பல தடவை மோடியின் சார்பில் அனுமதிக்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டும் படுகேவலமாக மோடி தரப்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

அதே ஆண்டில் பிரிட்டனும் மோடிக்கு அனுமதி இல்லை என அறைந்து சாத்தியது. கடந்த 2008-ஆம் ஆண்டில் மீண்டும் அமெரிக்கா செல்ல மோடி தரப்பினரால் விசாவிற்கு விண்ணப்பம் கோரிய போதும் அனுமதி மறுக்கப்பட்டது. சமீபத்தில் ஓமனிருந்தும் மோடிக்கு மூக்கறுப்பு அறிவிப்புகள் வெளிவந்தன. இந்நிலையில் பரான் கூறிய குற்றவாளிகளை பிரிட்டனில் நுழையத்தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழத் தொடங்கியிருப்பதால் வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட பயங்கரவாதிகள் வெறுப்பின் உச்சத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே பாப்ரி மஸ்ஜித் உடனடியாக கட்டியெழுப்பப்பட வேண்டும். இடிப்புக் குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்படவேண்டும் என அமெரிக்காவின் முன்னணி சமூகநல அமைப்பான இண்டியன் முஸ்லிம் கவுன்சில் ஆஃப் யு.எஸ்.ஏ. கேட்டுக்கொண்டுள்ளது. அந்த அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர். ஹைதர்கான் இது குறித்து விடுத்த அறிக்கையில் இந்தியாவின் தற்போதைய ஆட்சியாளர்களின் மீது தங்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருப்பதாகவும் குற்றவாளிகள் நிச்ச யம் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார். இவரது அறிக்கை கடப்பாரை கும்பலுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

-ஹபிபா பாலன்//tmmk.in//

Thursday, December 10, 2009

பாபரி மஸ்ஜித் இடிப்பு:குற்றவாளிகளை தப்பவிடாதே! கொந்தளிக்கும் இந்தியா!

பாபரி மஸ்ஜிதை தகர்த்து தரைமட்ட மாக்கி இந்தியத் திருநாட்டை அவமானச் சேற்றில் தள்ளிய குற்றவாளிகளை எந்த விதத்திலும் தப்பவிடக்கூடாது என்ற கோபக் குமுறல்கள் நாடு முழுவதும் எழுந்துள்ளது.

உலகமே கவனித்துக் கொண்டிருந்த இந்த இழிசெயலை செய்த குற்றவாளிகள் எண்ணற்றவர்களாக இருந்தும் வெறும் 68 பேர் மட்டுமே குற்றச் செயலுக்கு உடந்தை என குறிப்பிடப்பட்டிருப்பது நாட்டு மக்களின் கோபத்தையும் வேதனை யையும் அதிகப்படுத்தியுள்ளது.

நரசிம்மராவ் உத்தமரா?

பாபரி மஸ்ஜிதை இடிக்க விட்டுவிட்டு வேடிக்கைப் பார்த்த அன்றைய பிரதமர் நரசிம்மராவையும், அன்றைய அவரது அமைச்சரவை சகாக்களைக் குறிப்பாக அன்றைய உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவான் உள்ளிட்டவர் கள் மீது எவ்வித குற்றச்சாட்டுக்களும் குறிப் பிடப்படாமல் விட்டுவிட்டது ஏன்? என்ற கேள்விகள் நாடெங்கும் எதிரொலிக்கின்றன.

மஸ்ஜித் இடிப்பு ஒரு இழிவான செயல்தான் சங்பரிவார் ஒப்புதல் வாக்குமூலம்

பாபரி மஸ்ஜித் இடிப்பு இழிவான செயல், மனிதகுலம் வெட்கித் தலைகுனிய வேண் டிய செயல். ஒவ்வொரு இந்தியனையும் அவமானத்தில் ஆழ்த்திய செயல் என நீதி மனம் படைத்த ஒவ்வொருவரும் கடந்த 17 ஆண்டுகளாக கருத்து தெரிவித்து வரும் நிலையில் அது குறித்து எவ்வித வருத்தமும் தெரிவிக்காத சங்பரிவார் கூடாரம் முதன்முறையாக தன்னை அறியாமல் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு ஒரு இழிசெயல்தான் எனக் கூறியுள்ளது.

பாபரி மஸ்ஜித் தகர்ப்பு குற்றவாளி களின் வரிசையில் வாஜ்பாயை லிபரான் அறிக்கை பட்டியலிட்டது. வாஜ்பாய், மஸ்ஜித் தகர்ப்பில் தனது பொறுப்பை தட்டிக் கழித்து விட முடி யாது என லிபரான் ஆணையம் கூறியது. வாஜ்பாய் பெயரை லிபரான் ஆணையம் கூறிய தைக் கண்டு மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஆச்சரியமோ அதிர்ச்சியோ ஏற்படவில்லை. ஆனால் இன்னமும் வாஜ்பாயை ரொம்ப நல்லவர் என நம்பிக் கொண்டிருக்கும் சில அப் பாவி ஹிந்து சகோதரர்களுக்கும் வாஜ்பாயை உத்த மர் போல் சித்தரித்துக் காட்டியசில உள்நோக்க ஊடகங்களும் அதிர்ச்சி அடைந்தன.

வாஜ்பாயை சங்பரிவாரின் மிதவாத முகமூடியாக அறிமுகப்படுத்தி பதவிகளில் குளிர்காய்ந்த சங் பிரமுகர்கள் வாஜ்பாயை இழிவுபடுத்தும் செயல் என தாண்டி குதித்தனர்.


தங்களையும் அறியாமல் பாபரி மஸ்ஜிதை தகர்த்தது ஒரு இழிவான செயல்தான் என்பதை ஒப்புக் கொண் டனர். மஸ்ஜிதை இடித்ததற்காக பெரு மைப்பட்டுக் கொண்டவர்கள் இது வாஜ்பாயை இழிவுபடுத்தும் செயல் எனக் கூறியது என நாட்டு மக்களை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்தியது. இருப்பினும் மஸ்ஜித் தகர்ப்பை வாஜ்பாய் ஊக்குவித்தார். உ.பி. தலைநகர் லக்னோவில் இருந்து முக்கிய ஆலோசனைகளை வழங்கினார் என விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் தெரிவித்திருப்பதை ஆர்.எஸ்.எஸ்.சின் அதிகாரப்பூர்வ செய்தி ஏடான ஆர்கனைஸர் குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் கதி லிபரானுக்கு ஏற்பட்டால்...

மும்பை கலவரங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கை செயல்படுத்தப்படவில்லை. மும்பைக் கலவர படுகொலையாளர்கள் பால்தாக்கரே உள்ளிட்ட குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. அதே போன்று ஒரு நிலை லிபரான் அறிக்கைக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது. அத்தகைய நிலை ஏற்பட்டால் நாடு விபரீத விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் எச்சரித்துள்ளது.

இதனிடையே வாஜ்பாயை நடுநிலையானவர், நல்லவர், மிதவாத மதவாதி, மதவாதம் இல்லாத மதவாதி என்று கூறியவர்கள் எல்லாம் லிபரான் ஆணை யக் குற்றச்சாட்டுக்கள் குறித்து வெளிப் படையாக கருத்துகள் கூறவேண்டும். பாஜகவை ஆட்சியில் அமர்த்தியதற்காக அவர்கள் நாட்டு மக்களிடம் தங்களது வருத்தத்தினை தெரிவிக்க வேண்டும் என அறிவுஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

குமுறல்கள் கொந்தளிப்புகள்


பாபரி மஸ்ஜிதை இடித்த மாபெரும் குற்றத்திலிருந்து காங்கிரஸையும், நரசிம்ம ராவையும் விடுவித்து தூய யோக்கிய சிகாமணிகள் என சித்தரிக்கும் லிபரான் ஆணைய அறிக்கைக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

பாபரி மஸ்ஜித் தகர்ப்பு சம்பவ குற்றத் தில் சங் பயங்கரவாதிகளை சேர்த்திருக்கும் லிபரான் ஆணையத் திற்கு 450 ஆண்டுகால மஸ்ஜிதை தரைமட்ட மாக்கிய போது நாட்டின் பிரதமராக இருந்து வேடிக்கைப் பார்த்த நரசிம்மராவை குறிப்பிடாமல் விட்ட தற்கு பாபரி மஸ்ஜித் ஒருங் கிணைப்புக் குழுவின் முக்கியப் பிர முகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சையது ஷஹாபுத்தீன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

பாபரி மஸ்ஜித் தகர்ப்பு விவகாரத்தில் பா.ஜ.க, வி.எச்.பி. உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்தான் முக்கியக் குற்றவாளிகள் என்பது உல கிற்கே தெரிந்த விஷயம்.



இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர் களின் பெயர்களைக் குறிப்பிட்டது சரி யான ஒன்றுதான். அன்றைய பாஜகவின் அகில இந்தியத் தலைவராக வாஜ்பாய் இருந்தார். அன்று நடைபெற்ற இழிசெயல்கள்ஒவ்வொன்றும் வாஜ்பாய்க்கு தெரிந்தே நடந்தது. அவர் ரதயாத்திரையில் கலந்து கொள்ள வில்லை. ஆனால் திட்டமிட்டே லக்னோவோடு தனது பயணத்தை முடித்துக் கொண்டார். குற்றச் செயலிலிருந்து நேரடியாகப் பங்கு பெறுவதிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு தன்னை மிகவும் உத்தமர் போல் பதிவு செய்ய முயன்றார். ஆனால் லிபரான் ஆணையம் அவரைக் குறிப்பிட்டு வாஜ்பாயியின் இமேஜுக்கு வேட்டு வைத்தது.

அத்வானியையும் வாஜ்பாயியையும் ஒரே தட்டில் சமமாக வைக்க முடியாத வர்கள் என்பது தனது கருத்து எனக் கூறிய சையது ஷகாபுத்தீன் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு குற்றத்தில் நம்பர் ஒன் குற்றவாளியை லிபரான் ஆணையம் குறிப்பிடாமல் விட்டுவிட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். 1992 டிசம்பர் 6ஆம் தேதி மஸ்ஜித் தகர்ப்பை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நரசிம்மராவ் தான் முதல் குற்றவாளி. இந்தியப் பிரதமராக இருந்த நரசிம்மராவை லிபரான் ஆணையம் குற்றம் இழைத்தவர்களில் சேர்க்காதது ஏன் என சஹாபுத்தீன் கேள்வி எழுப்புகிறார். பாபரி மஸ்ஜித் இடிக்கப் பட்ட இரண்டாம் நாள் தான் பிரதமர் நரசிம்மராவுக்கு கடிதம் ஒன்றை எழுதியதாகவும், அதில் பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் சங்பரிவார சதிகாரர்களை விட நீங்கள்தான் மிகப் பெரிய குற்றவாளி. ஏனெனில் நீங்கள் நாட்டின் பிரதமராக இருக்கிறீர்கள். பாபரி மஸ்ஜிதை காப்பாற்றுவதற்குரிய அனைத்து அதி காரங்களையும் கொண்ட சக்தி படைத் தவராக நீங்கள் இருந்தீர்கள். நடந்த அக்கிரமத்தைக் குறித்து ஒன்றும் அறியாதவர் போல் இருந்து கொண்டே சங்பரிவாருக்கு உடந்தையாக இருந்தீர்கள். பாபரி பள்ளிவாசலை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு அதனை தேசியச் சின்னமாக அறிவித்திருக்க வேண்டும். ஏனெனில் மஸ்ஜி தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தினுடையது என்று வலியுறுத்திக் கூறியதை பொருட்படுத்தாமல் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்தீர்கள் என தான் அன்றே எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டும் சஹாபுத்தீன், பாபரி மஸ்ஜித் தகர்ப்பு விஷயத்தில் நரசிம்மராவ் சூப்பர் வில்லன் என்பதை மறுக்க முடி யாது என்றார்.

லிபரான் ஆணையம் நரசிம் மராவுக்கு உத்தமர் பட்டம் வழங்கியது ஏன்? என்ற வினாவுக்கு வரலாறு பதில் சொல்லும் என மேலும் குறிப்பிட்டார்.நான்கு ஆண்டுகளுக்கு முன்பே நான்கு ஆண்டுகளுக்கு முன்பே லிபரான் ஆணையம் தனது அறிக் கையை தயாரித்து முடித்துவிட்ட போதும் அதனை இந்த ஆண்டுதான் சமர்ப்பித்துள்ளது. ஏன் இந்த மர்ம இடைவெளி? எனக் கேள்வி எழுப்பிய அவர், முன்பு தயாரிக்கப்பட்டிருந்த அறிக்கையில் நரசிம்மராவ் குற்றவாளி என குறிப்பிட்டிருந்தது. அத்வானி, குற்றத்திற்கு தொடர்பில்லாதவர் போல் குறிப்பிட்டிருந்தது. திரைமறைவில் பல வேலைகள் நடந்துள்ளன என முன் னணி முஸ்லிலிலிம் பிரமுகர்கள் குமுறலுடன் குறிப்பிடுகின்றனர்.

பாபரி மஸ்ஜிதை சங்பரிவார்களுக்காக திறந்துவிட்ட காங்கிரஸ் ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா, பஜ்ரங்தள், பா.ஜ.க. உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பு களை மட்டும் பாபரி மஸ்ஜித் இடிப்பில் குற்றம்சாட்ட முடியாது. காங்கிரசும் குற்றம் செய்தவர்களின்பட்டியலில் சேர்க்க வேண்டும் என அகில இந்திய மஜ்லிஸே முஷாவராத் அமைப்பின் தலைவர் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம் தெரிவித்தார்.

சிலான்யாஸ் என்ற சிலை பூஜைகள் நடத்த அனுமதித்தது யார் என்பதை நாம் அறிவோம். பாபரி மஸ்ஜிதை பொறுப் பில்லாமல், பிரச்சினைகள் ஏற்படும் என தெரிந்தே திறந்து விட்டவர்கள் யார்? என்பதை இந்த நாடே அறியும்.

காங்கிரஸ் மற்றும் அன்றைய பிரதமர் நரசிம்மராவின் துரோகத்தை மறைத் துவிட்டு பாபரி மஸ்ஜித் தகர்ப்பு குற்றம் குறித்த அறிக்கை முழுமையானதாக இருக்காது என்கிறார் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம். நான் அறிந்த வகையில் லிபரான் தனது அறிக்கையை பலதடவை மாற்றியிருக்கிறார். பாஜக ஆட்சி செய்த போது காங்கிரஸை பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் பொறுப்பாளியாக்கியதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் பாஜகவை மட்டும் குற்றவாளியாக்கி அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும் டாக்டர் ஜஃபருல் குறிப்பிட்டார்.

லிபரான் ஆணையத்தின் அறிக்கை முன்பே வெளியாகி இருக்கவேண்டும் எனக் குறிப்பிடும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்தின் பொதுச் செயலாளர் நுஸ்ரத் அலி, லிபரான் அறிக்கை யாருக்கும் ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏனெனில் 1992 டிசம்பர் 6ல் என்ன நடந்தது என் பதை உலகமே அறிந்ததுதான் என்றார். இப்போது தேவை குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதுதான் என்றார்.

குற்றவாளிகளை தண்டிக்க 70 வருடங்கள் ஆகுமா?



குற்றவாளிகளைக் கண்டறிந்து இன் னார் இன்னார் குற்றவாளிகள் என அறிவிப்பதற்கே 17 ஆண்டுகள் ஆகி விட்டனவே... இனி அவர்கள் மீதான தண்டனைகளை செயல்படுத்த எத் தனை ஆண்டுகள் ஆகும் என்ற கேள்விக்கு 70 ஆண்டுகள் ஆகும் என விரக்தியாக பதிலளித்தார். பாபரி மஸ்ஜித் ஒருங்கிணைப்புக் குழுவின் செய்யது சஹாபுத்தீன். சங்பரிவாரின் மிகமுக்கிய தலைவர்களுக்கு எதிரான வழக்குகளின் கதி நாம் அறிந்ததுதான். இதில் அரசுகளை மட்டும் குற்றம்சாட்ட முடியாது. ஐ.பி. என்ற உளவுத் துறைக்கும் இதில் பங்குண்டு. உத்தரப் பிரதேசத்தை ஆட்சி செய்த இரண்டு முதலமைச்சர்கள் மீதும் நாம் குற்றம்சாட்ட முடியும். வழக்குகளை சிதைத்ததில் அவர்களுக்கு முக்கியப் பங்குண்டு. உத்தரப் பிரதேசத்தின் இரண்டு முதல்வர்கள் உண்மையாக நடந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், முக்கியப் பிரமுகர்கள் மீது தண்டனை விதிக்கப்படும் என எந்த நம்பிக்கையில் கூறமுடியும் என சஹாபுத்தீன் தெரிவித்தார்.

மஸ்ஜித் தகர்ப்பு குற்றவாளிகள் இன்று நாட்டின் மிகமுக்கியப் பிரமுகர்கள், நாட்டையே ஆண்டவர்கள். பிரதமராக வும், துணைப் பிரதமராகவும், மத்திய அமைச்சர்களாகவும், முதலமைச் சர்க ளாகவும் இருந்தவர்கள். அவர்கள் அரசுகளின் முக்கிய அங்கமாக விளங்குகின்றனர். நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு அதிக அளவு வலிமை இன்னமும் உள்ளது. யாரும் அவர்களை தொடக்கூட முடியாது. இந்த அறிக்கை இறந்து கொண்டிருக்கும் அந்த இயக் கங்களுக்கு வாழ்நாளை நீட்டிக்க உதவும் ஒரு கருவியாகவே இருப்பதாக ஜஃபருல் உள்ளிட்ட முன்னணி மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

லிபரான் ஆணையம், அறிக்கை வெளியிட நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டது. கோடிக்கணக்கான பணம் வாரி இறைக்கப்பட்டது. இவை அனைத் தும் இந்திய மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை தண்டிப் பதற்கு காலதாமதம் ஏற்படுத் தினால் அது இந்த நாட்டிற்கு நல்லதல்ல என நுஸ்ரத் அலி எச்சரித்தார்.

முஸ்லிம் இயக்கங்களை லிபரான் தனது அறிக்கையில் குற்றம்சாட்டி இருப்பதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

முஸ்லிலிம் தலைவர்கள், பாபரி மஸ்ஜித் ஒருங்கிணைப்புக்குழு, அகில இந்திய பாபரி மஸ்ஜித் செயல் கமிட்டி உள்ளிட்ட அமைப்புகள் அனைத்தும் இந்திய அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டன. சிக்கலான நேரத்தில் நாங்கள் போராட்டத்தை அறிவிக்கவில்லை. நாங்கள் அரசாங் கங்களிடம் ஒவ்வொரு நாளும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டி ருந் தோம். பல்வேறு அரசியல் கட்சிகளி டமும் எங்கள் தரப்பை எடுத்துக் கூறிக் கொண்டிருந்தோம். நாடாளுமன்றத்திலும் ஊடகங்களும் இந்தப் பிரச்சினையை எழுப்பி நாடு முழுவதும் மக்களைத் தட்டி எழுப்பினோம். ஆனால் நாங்கள் அப்பாவி மக்களிடம் பணம் வசூலிக்க வில்லை. ரத யாத்திரை நடத்தி நாட்டை ரத்தக் காடாக்கவில்லை என்றார் சையது சஹாபுத்தீன்.

அரசுகள் அவர்களுக்கே ஆதரவாக இருந்தன. வெகுஜன ஊடகங்கள் சங்பரிவாரின் சிறு அறிவிப்பைக் கூட பெரிதுபடுத்தி பிரபலப்படுத்தின. ஏழு லட்சம் குண்டர்களை அவர்கள் திரட்டினர். அவர்களைத் தடுக்காத அரசு கள், மஸ்ஜித் தகர்க்கப்பட்ட பிறகும் கூட நீதியுடன் நடந்து கொள்ளவில்லை.

பாபரி மஸ்ஜித் தகர்ப்புடன் தொடர்பு டைய ஆர்.எஸ்.எஸ்.ஸை தடை செய்த கையோடு சேவை அமைப்பான ஜமாயத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பையும் தடை செய்தது அன்றைய மத்திய அரசு. இவர்களிடம் எவ்வாறு உறுதியான நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியும்? என்கிறார் ஜஃபருல் இஸ்லாம்.

மஸ்ஜிதை தகர்ப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனை

பாபரி மஸ்ஜித் தகர்ப்பில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண் டும். தேசத்தின் இதயத்தை துண்டு போட்ட வேலையை சங்பரிவார் பயங் கர வாதிகள் செய்தனர். அதற்கு உறு துணையாக இருந்தவர்களும் தண் டிக்கப்பட வேண்டும் என கேரள முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்தார். இனிமேலும் இத்தகைய செயல்கள் நேராத வண்ணம் அழுத்தமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர்மேலும் தெரிவித்தார்.

மேலும் அவர் ரத்தம் கொதிக்கச் செய்யும் ஓர் அதிர்ச்சித்தகவலையும் அவர் அப்போது தெரிவித்தார். அந்த கறுப்பு நாளுக்கு முன்பு முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் ஆகிய இருவர் தலைமையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அன்று பிரதமர் நரசிம்மராவை சந்தித்தனர்.

வன்முறைகள் தவிர்க்கப்பட வேண்டும் பாப்ரி மஸ்ஜித் காக்கப்பட வேண்டும் என உருக்கமுடன் கோரிக்கை விடுத்தனர். அதே வேளையில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் நரசிம்மராவை சந்திப்பதற்காக பல மணி நேரங்கள் காத்துக்கிடந்தனர். அவர்களையும் பிரத மர் ராவ் சந்திக்கவில்லை. மஸ்ஜிதை யும் காப்பாற்ற வில்லை. இன்று ராவும் இல்லை. வி.பி.சிங், ஹரிகிசன் சிங் சுர்ஜித்தும் இல்லை. ஆனால் குற்றாவளி கள் அனைவரும் இன்று உயிருடன் உலாவுகின்றனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மத்திய அரசு விரைவில் தெரிவிக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.

68 பேர் மட்டும் தான் குற்றவாளிகளா?

லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி, கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்து ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழக்கக் காரணமான ஒரு தேசிய அவ மானம் குறித்த விசாரணை அறிக்கையில் வெறும் 68 பேரை மட்டும்தான் குற்றம்சாட்ட முடிந்ததா? ஏனைய குற்றவாளிகள் பட்டியலிடப்படவில்லையே என்ற கேள்வி நாடெங்கும் எழுந்துள்ளது.

அதிகார வட்டாரம் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை தேவை

1986லி-ருந்து மஸ்ஜித் தகர்க்கப்படும் வரை ஒவ்வொரு நாளும் முஸ்லிலிம்களுக்கு எதிராக வெறியூட்டும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றன. நாடு முழுவதும் மூலைக்கு ஒன்றாக செங்கற்கள் கொண்டு செல்லப்பட்டன. அங்கெல்லாம் முஸ்லிலிம் களுக்கு எதி ராகவும், சமூக அமைதியைக் குலைக்கும் வண்ணமும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அனைத்து வெறிச் செயல்களும் வெளிப்படையாகவே நடை பெற்றன. வெறிக்கூச்சல் போட்டுச் சென்ற கூட்டத்தினர் மீதோ, வன்முறை தூண்டும் வண்ணம் மேடையில் பேசியவர்கள் மீதோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

பாஜக 90களின் இறுதியில் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் 80களின் இறுதியிலும், 92ஆம் ஆண்டு வரை வெறியாட்டம் போட்ட மதவெறிக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும் துணிவு எந்த ஒரு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரி களுக்கும் இல்லாமல் போனது ஏன்? என்ற வினாவை சமூகநல ஆர்வலர் எழுப்பி வருகின்றனர்.

சங்பரிவார் மதவாத சக்திகளை மட்டு மல்லாது மஸ்ஜித் இடிப்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய ஒவ்வொருவரும் தண்டிக்கப்படுவது மட்டுமே இந்திய மக்களின் ஆத்திரத் துக்கு அணை போடுவதாக அமையும்.

அதுதான் வேதனை மிகுந்த சூழ்நிலையிலும் இந்த தேசத்தையும் தேச மக்களையும் நாட்டின் உயர்ந்த நீதி பரிபாலனத்தையும் மதித்து பொறுமை காத்து வரும் ஒரு உயர் சமூகத்தின் மனப்புண்ணுக்கு மருந்திடுவதாக அமையும்.

-அபுசாலிஹ்

NAGOREFLASH // THANKS 2 TMMK.IN//
Related Posts Plugin for WordPress, Blogger...